TESO to adopt resolution against attacks on TN fishermen: DMK | "கை' விடப்படவில்லை: சொல்கிறார் கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

"கை' விடப்படவில்லை: சொல்கிறார் கருணாநிதி

Updated : ஜூலை 24, 2012 | Added : ஜூலை 23, 2012 | கருத்துகள் (123)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
"கை' விடப்படவில்லை: சொல்கிறார் கருணாநிதி,TESO to adopt resolution against attacks on TN fishermen: DMK

சென்னை:""தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கை கைவிடப்பட வில்லை'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

அவரது பேட்டி:ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில், தி.மு.க, மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் கலந்து கொள்கின்றனர். மத்திய அரசின் வலியுறுத்தலை, இலங்கை கடற்படை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது, தாக்குதல் நடத்தி வருவது குறித்து, "டெசோ' மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றுவோம். ஐ.மு., கூட்டணி அரசில், கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பு அளிப்பதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கூறியிருப்பது அவர்களுடைய கருத்து. எங்கள் கருத்து என்று எதுவும் சொல்ல முடியாது.

காவிரி ஆணையத்தை அன்றைய பிரதமர் வாஜ்பாய் ஏற்பாடு செய்து அமைத்தபோது, ஜெயலலிதா அந்த ஆணையத்திற்கு வரமாட்டேன்; அது பல்லில்லாத ஆணையம் என்றார். இப்போது அந்த ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்கிறார். அதை நான் வரவேற்றிருக்கிறேன். அந்த அம்மையாரே திருந்தி, அந்த ஆணையத்திற்கு பல் முளைத்து விட்டது என்று சொல்லி ஆணையத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

"டெசோ' மாநாடு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழ் ஈழம் என்பதிலிருந்து எங்கே நாங்கள் பின் வாங்கியிருக்கிறோம்? தனி ஈழம் கோரிக்கை அப்படியே இருக்கிறது. தி.மு.க.,வைப் பொருத்தவரையில் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்ற அந்தக் கோரிக்கை கைவிடப்படவில்லை. கைவிடப்பட்டு விட்டது என்று யாராவது சொன்னால், அவர்கள் மக்களால் கைவிடப்பட்டவர்கள்.

தி.மு.க.,வைப் பொருத்தவரையில், தனி ஈழம் வேண்டுமென்பதை எங்களுடைய குறிக்கோளாக வைத்திருக்கிறோம். அந்தக் குறிக்கோள் நிறைவேறும் நிலை ஏற்படும்போது, படிப்படியாக நாங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். இலங்கை ராணுவத்தினருக்கு மேற்கு வங்களாத்தில் பயிற்சி அளித்தால் நாங்கள் எதிர்ப்போம்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bala - channai,இந்தியா
24-ஜூலை-201223:03:04 IST Report Abuse
bala கருணாநிதி பல தடவை மக்களைஐ ஆமற்று உள்ளார், ி தன பாமிலி வளர்ச்சிக்க , மற்றும் பாமிலி இ பாதுகாத்து ி கொள்வதற்காக தமிழ் ஈழ மக்களை மண்ணில் புதைத்துள்ளார் .. எனியும் தமிழ் மக்கள் அவரை நம்ப மாட்டார்கள் ... இனி அவர் ஆட்சியில் அமர்வது முடியாத விஜயம்..தமிழ் மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம் ...
Rate this:
Share this comment
Cancel
saravana kumar - chidambaram,இந்தியா
24-ஜூலை-201222:39:03 IST Report Abuse
saravana kumar இப்ப நீ பாக்கறது ஒரு ரூபம் ..உள்ள பல ரூபங்கள் ..ஒன்னு - டெசோ ங்கும்.அடுத்தது தமிழ் ஈழம் நும் ..அடுத்தது தமிழ் ஈழம் இப்போதைக்கு இல்ல சாரி நும் அடுத்த ரூபம் வந்து , அப்டியாபா பேசினன்?..அதை கைவிடவில்லை.. வந்தா சந்தோஷம் ஆன்னா இப வராது..( டைப் பண்றபவே தல சுத்துதுடா சாமி..) ஆகவே நான் என்ன சொல்ல வந்தேன் நா ..சர்பம்தான் கற்பம் தரிக்கும ?..குருவி கட்டும் கூண்டுக்குள்ளே குண்டு வைக்கலாமா? ..ஆஹவே இத்துடன் என் அறிக்கையை நிறைவு செய்ஹிரேன்..கழக கண்மணிகள் என் முன்னே அமர்ந்திருந்தாலும் ..கட்சி (?)அலுவல்கள் என் பின்னே (சி.ஐ .தி காலனி யில் ) இருப்பதால்- ஆமா மாநாடு சென்னை ல தானே..?- இத்துடன் நான் விடை பெற்றுகொள்கிரேன்..ஆஹைய மார்கமாக வந்திருக்கும் (வேலை இல்லாத சொம்ம்புகள்) அறிஞர் பெருமக்கள் இனி பேசுவார்கள்.. .
Rate this:
Share this comment
Cancel
கனல் கங்கு - Dallas,யூ.எஸ்.ஏ
24-ஜூலை-201221:14:12 IST Report Abuse
கனல் கங்கு போய்யா போ. என்ன பண்ண உன் பேச்சை நம்பி இன்னும் கேட்க ஒரு கூட்டம் இருக்கத்தானே செய்யுது.
Rate this:
Share this comment
Cancel
maravn - belfast,அயர்லாந்து
24-ஜூலை-201221:13:50 IST Report Abuse
maravn இவரை பற்றி எதாவது செய்தி தினந்தோறும் வர வேண்டும். இல்லை என்றால் மக்கள் இவரை மறந்து விடுவார்கள். அதனால் கேள்வி பதில் என்று ஏதாவது பிதற்றுவார்...எனக்கு தெரிந்து உலக மக சுயநலவாதி இவர்தான்...மறவன். ..belfast
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - riyadh,சவுதி அரேபியா
24-ஜூலை-201219:28:51 IST Report Abuse
balakrishnan கையை காலாக நினைத்து நீங்கள் வீழ்ந்துகிடப்பதை நாடறியும். அவர்களின் காலடியில் வீழ்ந்துகிடப்பதால் சிறந்த குடும்பத்தலைவர் மட்டும் ஆகலாம். ஒரு இனம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் வேளையில் நீங்கள் நடந்துகொண்ட விதம்தான் அனைவரையும் உள்ளக்கொதிப்படையசெய்தது. தமிழின தலைவர் என உங்களை நீங்களே கூறிக்கொள்ள செய்தாலும் லட்சக்கணக்கான தமிழர் சதை பிண்டங்களாக பிய்தெறிந்த வேளையில் நீங்கள் செய்த அரசியல் நாடகங்கள்தான் உலக தமிழர்களின் உள்ளத்தை இன்றுவரை ஆறாத ரணமாக்கி கொண்டிருக்கிறது. இழந்த லட்சக்கணக்கான சாபமோ என்னவோ நீங்கள் அரசியலில் அநாதை ஆஹிக்கொண்டிருக்கிரீர்கள். தமிழரின் உள்ளத்தில் மீண்டும் குடியமர, சேராத இடம் சேர்ந்து, கூடாத செயல் புரிந்து, வந்துவிட்ட வழக்குகளுக்காக அடிமைப்பட்டுப்போநீர். அரசியல் இடம் தேடி மீண்டும் கேலிக்கூத்தான நாடகத்திற்கு கதைக்களம் அமைதுவிட்டீர். அவர்களை வைத்து இனியும் அரசியல் செய்யாதீர் ., அவர்கள் ஆத்மாவவாது நிம்மதியடையட்டும்........
Rate this:
Share this comment
Cancel
makesh - Bangalore,இந்தியா
24-ஜூலை-201218:03:16 IST Report Abuse
makesh அந்தக் குறிக்கோள் நிறைவேறும் நிலை ஏற்படும்போது, படிப்படியாக நாங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம். - எதற்கு காக்கை உட்கார பனம் பழம் விழுந்தது என்பதற்கா? - முயற்சி செய்தால் பல் குறிக்கோள் நிறைவேறும் ஆனால் இங்கு குறிக்கோள் நிறைவேறும்போது தான் முயற்சி செய்வார்களாம். தமிழன் என்ன இதனை கூட அறிய இயலாத மனிதனா?
Rate this:
Share this comment
Cancel
Siva kumar - Tripoli,லிபியா
24-ஜூலை-201218:02:48 IST Report Abuse
Siva kumar ஆண்டபோது இன்று சொன்னதேயே ஜாடை மாடையாகக் கூட கூறாதவர்தான் இவர். என்னி துனிக கருமம் துனிந்த பின் என்னுவதென்பதிழுக்கு, குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சுன்னு சொல்வாங்க இப்ப அதையும் மாத்தி கருணானிதி பேச்சு, கண நேரத்துக்கு அப்புறம் போச்சுன்னு மாத்திக்கலாம் இன்னைக்கு நேத்தா இவர் பின் வாங்குகிரார்,இவரால் தமிழர் அனைவரும் பின்னைடைவை சந்திகிரோம் இதை நினைக்கும் போது,முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக மத்திய அரசை எதிர்த்து மதுரையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்து, அதை கேரள அரசுக்கு எதிரான போராட்டமாக மாற்றி,கடைசியில் அதையும் கைவிட்ட நிகழ்ச்சிதான் நினைவிற்கு வருகிறது. ஆனால் தனக்கும்,தன் குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் மத்திய அரசை மிரட்டி சாதிக்கும் திறமை படைத்த கருணாநிதி,
Rate this:
Share this comment
Cancel
B.S.SUBASH CHANDAR - madurai,இந்தியா
24-ஜூலை-201217:24:25 IST Report Abuse
B.S.SUBASH CHANDAR திமுக ஆட்சிகாலத்தில் தமிழ் ஈழ போரில் இருந்து மக்களுடைய கவனத்தை திசை திருப்ப இவர் நடத்திய நாடகம் பல....அதில் ஒன்று மூன்று மணி நேர உண்ணாவிரதம்,மத்திய அரசை எச்சரிக்கும் விதமாய் தன் அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை தானே பெற்றுக்கொண்டது என்பது அடங்கும்.இவருடைய இரண்டாம் தர அரசியலை பார்க்க இங்கு யாரும் தயாரில்லை.சோனியாஜி அவர்களின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி கிடக்கும் இந்த கருணா மற்றும் அவருடைய சகாக்களை மக்கள்தான் கை விட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
tamilanda - khandahar,ஆப்கானிஸ்தான்
24-ஜூலை-201217:23:35 IST Report Abuse
tamilanda என்னய்யா வெய்யில் தான் கொரஞ்சிடுத்தே அப்புறம் ஏன் இந்த உளறல் ?
Rate this:
Share this comment
Cancel
natrajan - chennai,இந்தியா
24-ஜூலை-201216:25:29 IST Report Abuse
natrajan இவன் பின்னால் ஜால்ரா தட்டும் கூட்டமும் , பணத்திற்காக தன் மானத்தை இழந்து ஆமாம் சாமி என்று கூப்பாடு போடும் கூட்டமும் உள்ளவரை இந்த muthiyavar இப்படி பேசி கொண்டு தான் இருப்பார் , இப்படி பட்டவர்கள் முதலில் கருணாவை கை விட்டால் மட்டுமே தமிழகம் இவரிடம் இருந்தும் இவர் குடும்பத்தினரிடம் இருந்தும் காக்கப்படும் .
Rate this:
Share this comment
Puthiyavan Raj - New Delhi ,இந்தியா
24-ஜூலை-201217:12:57 IST Report Abuse
Puthiyavan Raj1991 -ல் கலைஞர் இலங்கை தமிழருக்கு ஆதரவாக இருந்தார் என்று அதிமுக தயவால் பிரதமராக இருந்த சந்திரசேகருக்கு சுப்பிரமணிய சாமி மூலம் நெருக்கடி கொடுத்து 2 வருடங்களில் திமுக ஆட்சியை ஜன நாயக படுகொலை செய்து வந்த தேர்தலில் மக்கள் திமுகவிற்கு நன்றியை காட்டினார்களா? அதிமுகவை தான் அமோக வெற்றி பெற வைத்தார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை