Advertisement
லாசாவில் தூதரகம் அமைக்க இந்தியாவுக்கு சீனா அனுமதி தருமா?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

24 ஜூலை
2012
00:35
பதிவு செய்த நாள்
ஜூலை 23,2012 23:49

புதுடில்லி:சென்னையில் தூதரக அலுவலகம் திறக்க ஆர்வம் காட்டி வரும் சீனாவிடம், இந்திய அரசு பேரம் பேசி வருகிறது. சென்னையில் சீன அரசு தூதரக அலுவலகம் திறக்க அனுமதித்தால், அதற்குப் பதிலாக, திபெத் தலைநகர் லாசாவில், தங்கள் தூதரக அலுவலகத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் என, சீன அரசை வலியுறுத்தி வருகிறது.

இதுதொடர்பாக, தூதரக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:தைவான் தனி குடியரசு நாடாக கருதப்பட்டாலும், சீனா, அதை தங்கள் நாட்டின் ஒரு அங்கமாகவே கருதுகிறது. இந்நிலையில், தைவான் அரசு, சென்னையில் துணை தூதரகம் ஒன்றை துவக்க, இந்திய அரசு அனுமதி அளித்தது. அதே போல், தென் கொரிய அரசுக்கும், சென்னையில் துணை தூதரகத்தை துவக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதையெல்லாம் சீனா விரும்பவில்லை
.
அனுமதி மறுப்பு:அதேநேரத்தில், தங்கள் தூதரக அலுவலகத்தை சென்னையில் திறக்க இந்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. அப்படி அனுமதி கேட்ட சீனாவிடம், திபெத் தலைநகரான லாசாவில், தாங்கள் தூதரகத்தை துவக்க அனுமதிக்க வேண்டும் என, இந்திய அரசு கேட்டு வருகிறது. ஆனால், இதற்கு சீனா அனுமதி மறுக்கிறது. லாசாவில், இந்திய அரசு தூதரக அலுவலகம் துவக்க சீனா அனுமதித்தால், அது, இந்தியாவுக்கு பெரிய வெற்றியாக இருக்கும். திபெத் புத்த மத தலைவர் தலாய் லாமா, லாசாவில் இருந்து, 1959ம் ஆண்டில், இந்தியாவுக்கு வந்து தஞ்சம் புகுந்தார். அவருக்கு, இந்திய அரசு அடைக்கலம் கொடுத்தது. இதனால், சீன அரசு கடும் கோபம் அடைந்தது. சீன அரசு கொடுத்த நெருக்கடி காரணமாகவே, லாசாவில் செயல்பட்டு வந்த தூதரக அலுவலகத்தை, அந்த ஆண்டில் மூட வேண்டிய கட்டாயம், இந்திய அரசுக்கு ஏற்பட்டது.லாசாவில், இந்திய தூரதக அலுவலகம் செயல்பட்ட போது, அங்கு கடைசி துணை தூதராக பணியாற்றியவர் பி.என்.மேனன். இவர், தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனின் தந்தை. தலாய்லாமாவை நன்கு அறிந்தவர்.

பின்னடைவு:தலாய்லாமா இந்தியாவுக்கு தப்பி வந்த பின், இந்திய - சீன உறவில், பெரும் பின்னடைவு ஏற்பட்டது. 1962ல், எல்லைப் பிரச்னையும் உருவானது. இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளும் பாதிக்கப்பட்டு, 1970ம் ஆண்டுகளின் மத்தியில் தான், மீண்டும் தூதரக உறவுகள் துவங்கின.தற்போது, லாசாவில், தூதரக அலுவலகத்தை துவக்க வேண்டும் என, இந்திய அரசு கோரி வந்தாலும், அதுபற்றி பேச, சீன நிர்வாகத்தினர் மறுக்கின்றனர் .

இப்போது உருவானதல்ல:லாசாவில், தூதரக அலுவலகத் திறப்பு பிரச்னை, இப்போது, திடீரென உருவானதல்ல. ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே, இந்தப் பிரச்னை துவங்கி விட்டது. அப்போது, இந்திய - சீன அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இரு நாடுகளும், அந்தந்த நாட்டின் தலைநகர் தவிர, மற்றொரு இடத்திலும், தூதரக அலுவலகத்தை திறப்பது என, முடிவு செய்யப்பட்டது.சீன அரசு, இந்தியாவில் தலைநகர் டில்லிக்கு அடுத்ததாக, கோல்கட்டாவில் தூதரக அலுவலகத்தை திறக்க, விருப்பம் தெரிவித்தது. இதற்குப் பதிலடியாக, இந்திய அரசு, திபெத் தலைநகர் லாசாவில், தூதரக அலுவலகம் திறக்க ஆசைப்பட்டது. 2005-06ல், இதுபற்றி பேசிய போது, லாசாவில் இந்திய அரசு தூதரக அலுவலகத்தை திறக்க, சீன நிர்வாகத்தினர் அனுமதிக்கவில்லை.அதற்குப் பதிலாக, சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வர்த்தக நகரமான குவாங்ஜூவில் திறக்கும்படி கேட்டுக் கொண்டது. ஆனால், இந்திய அரசு மட்டும், வேறு வழியில்லாமல், கோல்கட்டாவில் தூதரக அலுவலம் திறக்க, சீனாவிற்கு அனுமதி கொடுத்தது.இவ்வாறு, தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

நடக்காத ஒன்று:லாசாவில், தூதரக அலுவலகம் திறக்க வேண்டும் என்பதில், இந்திய அரசு அதிக தீவிரம் காட்டினாலும், அது, இன்று வரை நடைபெறாத ஒன்றாகவே உள்ளது. சில வாரங்களுக்கு முன் கூட, லாசாவில் தூதரக அலுவலகம் திறக்கும் தன் விருப்பத்தை, சீனாவிடம் இந்திய அரசு தெரிவித்தது. சீன அரசின் அழைப்பை ஏற்று, திபெத் தன்னாட்சிப் பகுதியில், பெரிய அளவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட, சீனாவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர், இதுதொடர்பாக, சீன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.ஆனால், இதற்கு, சீன அதிகாரிகள் சம்மதம் தெரிவிக்கவில்லை. கைலாச யாத்திரை மேற்கொள்வோர் பயணிக்கும் பாதை கூட, இப்பகுதியில் உள்ளது. தவிரவும், முன்னர், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது , லாசாவில் தூதரகம் அமைப்பதில், அதிக முக்கியத்துவம் காட்டி, சீனாவுடன் பேசியதும் உண்டு.

தொடரும் கதை: இதனால், சென்னை மற்றும் லாசாவில் தூதரக அலுவலகங்கள் திறப்பு தொடர்பாக, இந்திய - சீன வெளியுறவு அமைச்சகங்கள் இடையே, பூசல்கள் உருவாகியுள்ளன. அதே நேரத்தில், வெளிநாட்டு விவகாரங்களைக் கவனிக்கும், சீன கம்யூ., தலைவர் டாய் பிங்குவோ, லாசாவில் இந்திய அரசு தூதரகம் திறக்க ஆதரவு காட்டாதவர். அவரும், அடுத்த ஆண்டு பதவி விலகுகிறார். அந்தப் பதவிக்கு வாங்க் இ என்ற தலைவர் வரவுள்ளார். ஆங்கிலம் நன்கறிந்த அவரின் வருகை, லாசாவில் தூதரகம் திறக்க உதவும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DAMODARAN K - chennai,இந்தியா
28-ஜூலை-201200:53:20 IST Report Abuse
DAMODARAN K தூதரகத்திற்கு என்றால் இடம் கொடுப்பார்கள், அதே நேரம் பதிலுக்கு தன ராணுவத்திற்கு இந்தியாவில் இடம் கேட்பார்கள் பரவாயில்லையா ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
M KARTHICK M KARTHICK - singapore,சிங்கப்பூர்
27-ஜூலை-201205:10:22 IST Report Abuse
M KARTHICK M KARTHICK சீனா கபடம் நிறைந்த நாடு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
24-ஜூலை-201213:36:04 IST Report Abuse
maran சீனனுக்கு தெரியும் ....தமிழன் அறிவில் சிறந்தவன் என்று ....நம்ம அரசியலை கற்றுக்கொள்ள வருவான் போல ......தமிழன் ஒருவன்தான் இலங்கை விசயத்தில் ஒற்றுமையாக உள்ளான் ..அதை குழப்பி கும்மாளம் அடிக்க வர்றான் போல ....விழிப்புடன் இருக்கணும் .....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
maran - riyadh,சவுதி அரேபியா
24-ஜூலை-201213:32:12 IST Report Abuse
maran எப்படி ...எப்படி ....அனுமதியா ?.....எங்கள் தமிழ் நாட்டு அமைச்சருகிட்ட அனுமதி வாங்குநீங்களா....?அப்புறம் அந்த அமைச்சரை அம்மா வருது எடுத்து விடுவார் ......ஆமா நம் அமைச்சர்களுக்கு இந்த துறை யாரிடம் உள்ளது முதலில் தெரியுமா .....? எப்பா கேட்டு சொல்லுங்களேன்.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
24-ஜூலை-201213:01:11 IST Report Abuse
Ashok ,India சீனாவின் உளவு வேலைக்கு சென்னையா?? ஏற்கனவே இலங்கையில் இருந்து தென் தமிழகத்தை உளவு பார்க்கும் சீனாவின் வாலை நறுக்கி விட வேண்டும். தரமற்ற சீனாவின் மொபைல்,பொம்மைகளை அனுமதிக்க தமிழகம் சட்டம் கொண்டு வந்தால் தமிழகத்தில் சீனரின் பிளாஸ்டிக் குப்பைகள் சேராமல் தடுக்க முடியும். ச.அசோக்,madurai
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
PRAVEENKUMAR - chennai,இந்தியா
24-ஜூலை-201209:07:49 IST Report Abuse
PRAVEENKUMAR எத்தனை நாளைக்கு இந்த சீனாவிடம் ஏமாந்து கொண்டு இருப்போம்.... இந்த அரசின் வெளியுறவு கொள்கை படு மோசம்..எதையுமே ஒழுங்கா செய்ய முடியாத இந்த அரசு, ராஜா தந்திரம் என்று நினைத்து கொண்டு ஏமாற போவது நிஜம்.. . பாகிஸ்தானின் தோள் மீது கை போடலாம். சீனாவின் நிழல் மீது கூட கவனமாக இருப்பது நல்லது.. ..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Navaneetha Krishnan - sydney,ஆஸ்திரேலியா
24-ஜூலை-201208:15:06 IST Report Abuse
Navaneetha Krishnan சீனர்கள நம்ப வேண்டுமா வேண்டாமா? அது ஒரு புறம் இருக்கட்டும் சீனா பொருள்களை விட இந்திய பொருள்களை அதிகமா விற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
24-ஜூலை-201206:33:07 IST Report Abuse
Srinath சீனர்களை எந்த காலத்திலும் நம்புவது மிகப் பெரிய முட்டாள்தனமாகவே இருக்கும் என்பது வரலாறு நமக்கு கற்றுத் தந்த பாடம். "இந்தோ-சீனி பாய் பாய்" என்று இந்தியில் உளறிவிட்டு பின்னால் வந்து நம்மையே தாக்கிய அயோக்கியக் கூட்டம். தில்லி தவிர்த்து வேறெங்கும் சீனத் தூதரகம் தேவையில்லை. சீனாவுடன் எந்தவொரு உடன்படிக்கை மேற்கொள்ளும் முன்பாகவும், அவர்கள் வசம் உள்ள காஷ்மீரத்தை திரும்பப் பெறுவதையும், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களை அங்கீகரிக்கவும் வற்புறுத்தி அதனைச் செயல்வடிவம் பெற வைக்கவேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
24-ஜூலை-201200:34:55 IST Report Abuse
Thangairaja சீன வர்த்தகம் நம் பட்டிதொட்டிகளிலெல்லாம் ஆக்கிரமித்து விட்டது. அதை வளப்படுத்த விளைகிறார்கள். தோதாக இலங்கைக்கு பக்கத்திலும் வந்தாற்போல் இருக்கும். எப்படி இருந்தாலும் நம் கோரிக்கை ஏற்கப்படும் வரை அவர்கள் கோரிக்கை நிராகரிக்க பட வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.