புதுடில்லி:முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக அரசுக்கு முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. அணையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்வதற்கு, தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் நேற்று அனுமதி அளித்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களின் ஜீவாதாரமாக விளங்கி வரும் முல்லை பெரியாற்றில் உள்ள பழைய அணையை இடித்து விட்டு, புதிய அணையை கட்டுவதற்கு கேரள அரசு முயற்சித்து வருகிறது. பழைய அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அதை இடிக்கப் போவதாக கேரள அரசு கூறி வருகிறது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும் கேரளா மறுத்து வருகிறது. இதற்கு, தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக, முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில், ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர், பல்வேறு ஆய்வுகளை நடத்தி, கடந்த ஏப்ரல் மாதம், சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், அணை உறுதியாக இருப்பதாகவும், நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசு மனு:இந்நிலையில், தமிழக அரசு சார்பில் சுப்ரீம்
கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "முல்லை பெரியாற்றில்,
பராமரிப்பு பணியை மேற்கொள்வதற்கு, தமிழகத்தின் சார்பில் முயற்சி
மேற்கொள்ளப்பட்டால், அதற்கு கேரள அரசு இடையூறு ஏற்படுத்துகிறது. பராமரிப்பு
மற்றும் பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்வதற்காக செல்லும் தமிழகக்
குழுவினர், கேரள போலீசார், வனத் துறையினர் மற்றும் அதிகாரிகளால் தடுத்து
நிறுத்தப்படுகின்றனர். கேரள அரசின் இந்த நடவடிக்கை, சுப்ரீம் கோர்ட், கடந்த 2009 நவம்பர் 10ல் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் உள்ளது. எனவே, முல்லை பெரியாற்றில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்ள, எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனுமதி:இந்த மனுவை, நீதிபதிகள் டி.கே.ஜெயின், ஆர்.எம்.லோத்தா, தீபக் வர்மா, சி.கே.பிரசாத், அனில் ஆர் தேவ் ஆகிய ஐந்து பேர் கொண்ட பெஞ்ச், நேற்று விசாரித்தது. அப்போது, நீதிபதிகள்
பிறப்பித்த உத்தரவு:முல்லை பெரியாறு அணையில், தமிழக அரசு மேற்பூச்சு பணிகளை மேற்கொள்ளலாம். அணையிலிருந்து, நீர், எந்தவித இடையூறுமில்லாமல் செல்லும் வகையில், கால்வாய் மற்றும் சுரங்கப் பாதைகளில் உள்ள கழிவுகள், இடிபாடுகள், குப்பை
கூளங்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை அகற்றும் பணிகளையும் தமிழக அரசு
மேற்கொள்ளலாம். இந்த பணிகளை, கேரளாவின் கண்காணிப்பு பொறியாளர் மற்றும்
மத்திய நீர் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் ஆகியோரின் மேற்பார்வையில், தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.முல்லை பெரியாற்றில் இருந்து, வல்லக்கடவு வரை செல்வதற்கான சாலையை அமைக்கும் பணிகளையும், தமிழக அரசு மேற்கொள்ளலாம். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பின், இந்த பணியை மேற்கொள்ளலாம். மேலும், நீர் வழித் தடத்தில் தேங்கியுள்ள வண்டல் மண் படிவங்களை அகற்றுவது உள்ளிட்ட குறிப்பிட்ட வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை, அடுத்த மாதம் 31ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தங்கை ராஜா.....ரிப்பேர் ஆன பஸ்ஸை நிறைய பேர் தள்ளுகிறார்கள். அதில் ஒருவர் மட்டும் தள்ளுவது போல பாசாங்கு செய்து பின்னுக்கு இழுக்கிறார். வெளியே கூக்குரல்,"ஐஸா கொஞ்சம் போட்டுக்கொடு இன்னும் கொஞ்சம் தள்ளிவிடு" நிஜத்தில் உள்ளடி வித்தை. உள்ளுக்குள் நமட்டு சிரிப்பு வேறு சிரித்து கொள்கிறார், பக்கத்தில் இருக்கும் அல்லன்கையோ "நீ சாணக்கியன்" என்கிறது..
அப்படி போடுங்க.... இப்பவாவது ஒவ்வொரு சேட்டன்களுக்கும் உரைக்கட்டும்..... ஆனா இவனுங்க அந்த தீர்ப்ப மதிபாங்கலான்னு தெரியல.... அதனால உச்ச நீதி மன்றமே கொஞ்ச நாளைக்கு armed force ஒன்னு ஏற்பாடு பண்ணனும்..... தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்.... நேத்து பிரனாப்பு வெற்றி செய்திய விட, இந்த வெற்றி செய்தி தான் தமிழர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கொள்ள செய்யும்.....
Rate it: 87 36Share this comment
வழித் தடத்தில் தேங்கியுள்ள வண்டல் மண் படிவங்களை அகற்றுவது உள்ளிட்ட குறிப்பிட்ட வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.சாலையை அமைக்கும் பணிகளையும், தமிழக அரசு மேற்கொள்ளலாம்.மேற்பூச்சு பணிகளை மேற்கொள்ளலாம். அணையிலிருந்து, நீர், எந்தவித இடையூறுமில்லாமல் செல்லும் வகையில், கால்வாய் மற்றும் சுரங்கப் பாதைகளில் உள்ள கழிவுகள், இடிபாடுகள், குப்பை கூளங்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை அகற்றும் பணிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளலாம். நீதி தேவன் நம் பக்கம். முல்லை பெரியார் பாசன பகுதி விவசயிகள்கு வாழ்த்துக்கள் .
அதே வேளயில் இந்த பணிகள் தமிழகத்தில் உள்ள குளம் குட்டை வரத்து கால்வாய் களுக்கும் பொருந்தும்வண்டல் அகற்றி வரத்து கால்வாய் சீர் செய்தால் தமிழகம் வரட்சி வெள்ளம் இவை இரண்டில் இருந்தும் தப்பும். அடுத்த மாநிலதோர் ஏற்படுத்தும் தடைகளை நம் நீர் நிலைகள் மீது நம்மவர்கள் ஏற்படுத்துவது மிக கொடுமை . வெளிமாநிலத்தோரை விட நம் மாநிலதில் இருந்து கொண்டு நம் அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டு போட்டு கொண்டு செய்யும் கொடுமை வெகு விரைவில் தமிழகத்தை பாலை ஆக்கிவிடும். அடுத்த மாநிலத்தில் இருந்து தண்ணீர் கேட்கும் அளவுக்கு இங்குள்ள நீர் நிலை ஆறுகள் பேணுவது அவசியம் . குப்பை பிளாஸ்டிக் கொட்டிகிடக்கும் நம் நீர் நிலைகள் சுத்த படுத்த பட வேண்டும் . வரும் நீரை , மழையை சேர்த்தால்தான் வளம் இல்லை நீர் இல்லாமல் ஒரு உலக போர் மூளும் . நீருக்கு எதிராய் உள்நாட்டில் அண்டை மாநிலத்தில் நடக்கும் இரு போர்கள் மனிதனை அழித்து விடும் . சாக்கடை எடுக்க போகும் போது அதில் வாழ்ந்து பழகி விட கூடாது .
தமிழக அரசு நிச்சயம் சாதித்திருக்கிறது சந்தேகமில்லை ஆனால் இது பயணத்தின் முடிவல்ல முல்லைப் பெரியாறு அணையை இடிப்பது பற்றியோ, புதிய அணை கட்டுவது குறித்தோ கேரளா சிந்திக்கவும் தயங்க / அச்சப்படவேண்டும் அதுவே தமிழக அரசின் நோக்கமாக இருக்க வேண்டும் புலம்பல் ரீதியில் அல்லது வழ வழா, கொழ கொழா என்ற ரீதியில் திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ. தனது அறிக்கையோ, கேள்வி பதில் அறிக்கையோ வெளியிட்டால் அதற்குப் பதில் தந்து நேரத்தை வீணாக்க வேண்டாம் ஆட்சிக் காலத்தில் பொறுப்பு மிக்க முதல்வர் பதவி வகித்த ஒருவருக்கு தொலைக்காட்சிப் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நேரிலேயே பார்த்துப் பரவசமடைய இயல்கிறது,,,, திரைப்படங்களுக்கு வசனம் எழுத இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்குச் செல்ல முடிகிறது என்றால் அவர் வெறும் எம்.எல்.ஏ. வாக இருந்தால் எவ்வளவு நேரம் கிடைக்கும்? பொழுது போகாதவர்களுக்கேல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்
இது என்ன தீர்ப்பு இதற்கு வெற்றி என்று பெருமை வேறு இந்தமாதிரி தீர்ப்பு மூன்று முறை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த காலங்களில் கொடுத்து விட்டார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் கேரளா அதை மதிப்பதில்லை. சுப்ரீம் கோர்ட்டும் அதை தட்டிக்கேட்பது இல்லை. இது நாடா இல்லை காடா? வெற்றி என்று போட்டுக்கொண்டு அரசியல்வாதிகளை குஷி படுத்தவேண்டும் என்றால் இது உதவும் மற்றபடி இதனால் எந்த பயனும் இல்லை.
. அணையிலிருந்து, நீர், எந்தவித இடையூறுமில்லாமல் செல்லும் வகையில், கால்வாய் மற்றும் சுரங்கப் பாதைகளில் உள்ள கழிவுகள், இடிபாடுகள், குப்பை கூளங்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை அகற்றும் பணிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளலாம். இந்த பணிகளை, கேரளாவின் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் மத்திய நீர் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் ஆகியோரின் மேற்பார்வையில், தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.முல்லை பெரியாற்றில் இருந்து, வல்லக்கடவு வரை செல்வதற்கான சாலையை அமைக்கும் பணிகளையும், தமிழக அரசு மேற்கொள்ளலாம். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பின், இந்த பணியை மேற்கொள்ளலாம். மேலும், நீர் வழித் தடத்தில் தேங்கியுள்ள வண்டல் மண் படிவங்களை அகற்றுவது உள்ளிட்ட குறிப்பிட்ட வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இது ஒரு வெற்றியா? அணையின் நீர் மட்டத்தை உயர்த்த அனுமதி தந்திருந்தால் அது வெற்றி? வெறும் டுபாக்குர்.
பாராமரிப்பு பணிகளை இதுவரை தமிழக அரசுதான் செய்து கொண்டிருந்தது. சமீபத்தில்தான் கேரளா தடுக்க ஆரம்பித்தது. அவ்வாறு தடுக்க கூடாதென்று உச்ச நீதிமன்றம் இப்போது தீர்ப்பு கூறியுள்ளது. அதாவது, பராமரிப்பை தொடர்ந்து தமிழக அரசே நடத்தலாம் என்று தான் தீர்ப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதி தீர்ப்பு வரும்போது பாருங்கள்.... முல்லை பெரியார் அணைக்கு தண்ணீர் வரத்து பாதிப்பு இல்லாதவகையில் கேரளா புதிய அணை கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.