A woman gave birth to child in 108 ambulance | குண்டும் குழியுமான சாலையால் இப்படி ஒரு வசதி: வலியால் துடித்த பெண்ணுக்கு சுகப் பிரசவம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டும் குழியுமான சாலையால் இப்படி ஒரு வசதி: வலியால் துடித்த பெண்ணுக்கு சுகப் பிரசவம்

Updated : ஜூலை 25, 2012 | Added : ஜூலை 24, 2012 | கருத்துகள் (16)
Advertisement
 குண்டும் குழியுமான சாலையால் இப்படி ஒரு வசதி: வலியால் துடித்த பெண்ணுக்கு சுகப் பிரசவம்,A woman gave birth t

கோவை:கோவை அருகே, "108 ஆம்புலன்சில்' அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு, வழியிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.மதுக்கரை அடுத்த, சீரபாளையத்தைச் சேர்ந்தவர், சக்திவேல்; இவர் மனைவி, சுப்புலட்சுமி, 21. நிறைமாத கர்ப்பிணியான இவர், ரங்கசமுத்திரத்திலுள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம், கோவை அரசு மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்குச் சென்றார். ஒரு வாரம் கழித்து வருமாறு, டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் நேற்று காலை, சுப்புலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அருகில் உடனடி வாகன வசதி ஏதும் இல்லாததால், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு, தகவல் தெரிவித்தனர். மதுக்கரையிலிருந்து, ரங்கசமுத்திரம் சென்ற ஆம்புலன்சில், 8.50 மணிக்கு சுப்புலட்சுமியை ஏற்றி, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியில், 9.10 மணியளவில், குமிட்டிபதி அருகே செல்லும்போது, கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் டிரைவர் பாலசுப்ரமணியன், வாகனத்தை சாலையோரத்திலேயே நிறுத்தினார். ஆம்புலன்சில் உடனிருந்த டெக்னீசியன் ஜோதி, சுப்புலட்சுமிக்கு, பிரசவம் பார்த்தார். அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து இருவரும், அரிசிபாளையத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். இருவரும் நலமாக உள்ளனர் என் டாக்டர்கள் தெரிவித்தனர்..

ரோடு மோசம்:சுப்புலட்சுமியின் கணவர் சக்திவேல் கூறுகையில்,"" ரங்கசமுத்திலிருந்து, அரிசிபாளையத்துக்கு, குமிட்டிபதி வழியாகத் தான் செல்ல வேண்டும். இந்த ரோடு, குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. என் மனைவியை, ஆம்புலன்சில் ஏற்றி, 2 கி.மீ., தூரம் தான் வந்திருப்போம். கடுமையான வலி ஏற்பட்டு துடித்தார். ஆம்புலன்சில் இருந்த டெக்னீசியன், பிரசவம் பார்த்தார். நல்ல வேளையாக சுகப்பிரசவம் நடந்து, குழந்தையும் பிறந்தது,'' என்றார்.

ரங்கசமுத்திரம் ரோட்டை சீரமைக்கக்கோரி, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை இதற்கு முன் நடத்தியுள்ளனர். இதுவரை, ரோடு சீரமைக்கப்படவில்லை. அவசர சிகிச்சைக்காக செல்வோர், மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்நிலை தொடராமல் இருக்க, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
03-ஆக-201210:07:09 IST Report Abuse
K.Balasubramanian இது போன்ற சம்பவங்கள் குறைவாக இருப்பது நல்லது , அந்த குடும்பத்தினருக்கு எவ்வளவு அதிர்ச்சி என்று எண்ணினால் நல்ல ரோடுகளும் மருத்துவமனைகளும் தேவை என்பது புரியும்.
Rate this:
Share this comment
Cancel
hariharasudhan - chennai,இந்தியா
30-ஜூலை-201211:03:42 IST Report Abuse
hariharasudhan நம்ம ரோடு எவ்ளோ யூஸ்புள்லா இருக்கு
Rate this:
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
26-ஜூலை-201223:14:39 IST Report Abuse
v.sundaravadivelu ஏதோ வழியில பொறந்ததனால் சுகப்பிரசவம்... ஒழுங்கா ஆசுபத்திரி கீது போயிருந்தா சிசேரியன் தான்... நூற்றியெட்டு புண்ணியத்துல அம்மினி தப்பிச்சிடிசிடோய்..
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
26-ஜூலை-201214:42:29 IST Report Abuse
D.Ambujavalli அடப் பாவிகளா, எங்கள் பிழைப்பில் மண்ணைப் போட்டுட்டீங்களே என சிசேரியன் கைவிட்டுப் போன வயிற்றெரிச்சலில் டாக்டர்கள் சாபம் விடுறாங்க (கார்ப்பரேஷன் ஐயாமாருங்களைத்தான்)
Rate this:
Share this comment
Cancel
Madurai maindan - Madurai,இந்தியா
25-ஜூலை-201223:41:57 IST Report Abuse
Madurai maindan அழகாண குழந்தை. வாத்துக்கள் பெற்றோருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Antony Jerome - chennai,இந்தியா
25-ஜூலை-201219:20:10 IST Report Abuse
Antony Jerome Sweet little angle god bless her and her mother thanks to the Highways dept. for the safe delivery this may be good for the mothe and the little angle but the highways dept.should think if same it was a heart patient what will happen before 20yrs i used to see the highways people working on the road doing the patch work all along but now they are all sleeping i feel pls.wakeup and do your duty this for all the highways engineer&39s also .
Rate this:
Share this comment
Cancel
usha - kumbakonam,இந்தியா
25-ஜூலை-201217:53:51 IST Report Abuse
usha nurse இல்லாத ஆம்புலன்செச. நல்ல வேலை. இந்த ரோட்டால் செலவு எத்தனை மிசம்மஹிஎருப்பதை நினைத்து சந்தோஷ படவும். இனியாவது இதுபோல் நடக்காமல் இருக்க m l a உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-201213:53:51 IST Report Abuse
மதுரை விருமாண்டி கிட்னி ஸ்டோன் உபாதைக்கும் நல்ல வைத்தியம்... கல்லு இருந்தா தவிடு பொடி ஆயிடும்.. எலும்பு பலமா இல்லைன்னா அதுவும் தூளாயி எறங்குறப்போ விபூதி மூட்டையாத் தான் வருவோம்...
Rate this:
Share this comment
Cancel
Haja - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூலை-201213:27:48 IST Report Abuse
Haja technisan ஆணா பெண்ணா ஏன் 108 la nurse இல்லையப்பா
Rate this:
Share this comment
Cancel
பீரங்கி மூக்கன் - இமயமலை ,இந்தியா
25-ஜூலை-201212:53:39 IST Report Abuse
பீரங்கி மூக்கன் விவேக் படத்துல வர்ற comedy மாதிரி ஆகிடுச்சி.ஆனாலும், குழந்தை சூப்பர்.......இதுவே private hospital போக நினசிருந்தாங்கன்ன, கண்டிப்பா operation செஞ்சிருப்பாங்க....great escape...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை