Nobody watch tamil mistake in Toll gate bill | தமிழை கொலை செய்வதை யாரும் கண்டுகொள்ளவில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழை கொலை செய்வதை யாரும் கண்டுகொள்ளவில்லை

Updated : ஜூலை 26, 2012 | Added : ஜூலை 24, 2012 | கருத்துகள் (99)
Advertisement

தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களிடம் தரப்படும் பராமரிப்பு வரி ரசீது, பெரும் அச்சுப் பிழையுடன் காணப்படுகிறது.தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு, தனியார் சுங்கச் சாவடிகள், பராமரிப்பு வரி வசூலிக்கும் நடைமுறை உள்ளது.

ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில், இதற்கான ரசீது அச்சடிக்கப் பட்டு இருக்கும்.ஆங்கிலம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில், எந்த பிழையும் இன்றி அச்சடிக்கப் பட்டு உள்ள அந்த ரசீதில், தமிழில் உள்ள வார்த்தைகள் மட்டும், பொருள் புரியாத வகையில், பிழையுடன் அச்சடிக்கப் பட்டு உள்ளது.சென்னை தாம்பரம் அருகில் உள்ள சுங்கச் சாவடியில் வழங்கப்படும் ரசீது, பெரும் பிழையுடன் காணப்படுவதால், அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அது என்ன "ஸ்தலம்?'
"இடம்' என்ற நடைமுறை சொல் பழக்கத்தில் இருக்கும் போது, அதற்கு பதிலாக அந்த ரசீதில், "ஸ்தலம்' என்ற வார்த்தையை அச்சடிக்க முயற்சி செய்துள்ளனர். அதுவும், "ஸ்தளம' என, பிழையுடன் அச்சடிக்கப் பட்டு உள்ளது.கிலோ மீட்டரை சுருக்கமாக, கி.மீ., எனப் பயன்படுத்துவது வழக்கம். அதையும், "கி மி' என, பிழையுடன் அச்சடித்துள்ளனர். வாகனம் எந்த இடத்திலிருந்து, எந்த இடம் செல்கிறது என அறியும் இடத்தில், "அதுர டொல ப்லாஜா' என்ற புரியாத மொழி வார்த்தைகள் உள்ளன."பிரிவு' என்ற இடத்தில், "தாம்பரம் முதல் திண்டிவனம்' என, எழுதப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், எந்த பொருளும் இல்லாத வண்ணம், "தம்பரம, திடிவநம' என, அச்சடிக்கப்பட்டு உள்ளது. "வாகனத்தின் வகை' என்ற இடத்தில், "காரு, வ்யாந்த், ஜூப்' என உள்ளது.இப்படி, தப்பும் தவறுமாக உள்ள ரசீதில், பணம் பெற்றுக் கொண்டதற்கான ரசீது என்ற வார்த்தையும்; கட்டணம் பற்றிய இதர தகவல்களும், பிழை இல்லாமல் அச்சடிக்கப் பட்டு உள்ளன.முன்பு, தேசிய சேமிப்பு குறித்த மத்திய அரசு விளம்பரங்கள், நாக்பூரில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். அங்கு பணிபுரியும் யாராவது ஒரு தமிழர், தனக்குத் தெரிந்த தமிழில், அந்த மொழிபெயர்ப்பைச் செய்வது உண்டு.

அக்கறையின்மை
ஆனால், இப்போது கணினி காலம். தமிழ் மொழியில் கட்டண ரசீதைத் தெளிவாக அச்சடிக்க முடியாதா அல்லது அக்கறையின்மையா? கட்டணம் வசூலிப்பதில் இருக்கும் அக்கறையை, நெடுஞ்சாலைத் துறை இதில் ஏன் காட்டவில்லை. கட்டணம் செலுத்துவோர், விதிக்கப்பட்ட தொகையை மட்டும் கவனிப்பர்; மற்றவற்றை பொருட்படுத்தமாட்டார்கள் என நினைக்கின்றனரா?சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட, பெரும் குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் கண்களில் இது படவில்லையா அல்லது தங்கள் கார் டிரைவர்களே பணத்தைக் கட்டி ரசீது வாங்குவதால், இந்த விஷயம் அவர்கள் கண்களில் படவில்லையா?

வாகன ஓட்டிகள் புகார்
இங்கு மட்டும் அல்ல, பெரும்பாலான சுங்கச் சாவடிகளில் வழங்கப்படும் ரசீது, பிழையுடனே காணப்படுவதாக, வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர். இவ்வாறு எழுத்துப் பிழையுடன் ரசீது வழங்கும் சுங்கச் சாவடிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், மற்ற சுங்கச் சாவடிகள், பிழையின்றி ரசீது வழங்கும்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thesaapimaani - chennai ,இந்தியா
26-ஜூலை-201200:24:54 IST Report Abuse
thesaapimaani நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த மதி கெட்ட ஆட்சியாளர்களை நினைத்தால் ............................ தமிழை வளர்க்க என்று சொல்லி தமிழ் வளர்ச்சி துறை என்று ஒரு துறை அதற்கு ஒரு மந்திரி வேறு, அந்த துறையின் வெப் சைட் போய் பாருங்கள் இரண்டே இரண்டு வார்த்தை மட்டும் தான் தமிழ் மற்றவை அனைத்தும் ஆங்கிலம் தான் அதன் பாலிசி நோட் அனைத்தும் ஆங்கிலத்தில் தான். எதை செய்கிறார்களோ இல்லையோ முருகன் துணை, பிள்ளையார் துணை என்பது போல அம்மா என்றால் அம்மா துணை அல்லது ஐயா துணை, அதை மட்டும் வரிக்கு வரி மாற்றம் செய்கிறார்கள் தவிர வேறு உருப்பிடியாக எதுவும் இல்லை. எதற்க்காக அந்த துறை என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் அதற்கு ஒரு மந்திரி, துறையின் தலைவர் அதுவும் தமிழ் நாட்டில், வெட்க கேடு... நெடுஞ்சாலை துறையின் ரசீதில் தப்பு தப்பாகவாவது தமிழில் அச்சடிக்க பட்டுள்ளதே என்று சந்தோசப்படுங்கள். தமிழை எப்பிடி வளர்க்க முடியும் என்று தெரிய வில்லையென்றால் அந்த துறையை இழுத்து மூடினால் நல்லது. நரிகளும், மொள்ளமாரி கயவர்களும் சேர்ந்து தமிழை வளர்கிற அழகே அழகு.
Rate this:
Share this comment
Cancel
Jayakumar Kumar - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூலை-201221:45:54 IST Report Abuse
Jayakumar Kumar நம் தொலைக்காட்சிகள் தமிழை வளர்கிறதா மக்கள் தொலைக்காட்சியை தவிர
Rate this:
Share this comment
Cancel
harikrishnan - chennai,இந்தியா
25-ஜூலை-201221:04:00 IST Report Abuse
harikrishnan ஆதித்யா சேனலில் வரும் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சி மட்டமான ஒன்று, அவர்களே தவறாக சொல்ல சொல்லி நம்மை கேட்பார்கள். இதில் நம் மக்களின் தவறு ஒன்றும் இல்லை, அந்த நிகழ்ச்சி இன் தவறு
Rate this:
Share this comment
Cancel
YASIR - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூலை-201219:12:46 IST Report Abuse
YASIR சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியில் பாரதியார் யார்? கேட்கப்பட்டபோது முன்னால் ஜனாதிபதி என்று பதில் வருகிறது அப்படிஇருக்க இதல்லாம் மக்கள் பார்க்கவா போறங்க என்கிற எண்ணம்தான்
Rate this:
Share this comment
Mohanadas Murugaiyan - Ras al Khaima,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூலை-201221:00:00 IST Report Abuse
Mohanadas Murugaiyanபொதுவாகவே நிறைய தமிழர்கள் தமிழை தவறாக உச்சரிக்கின்றனர்..மேலும் தமிழ் என்பது ஒரு கேவலமான மொழி. ஆங்கிலமும் இந்தியும்தான் சிறந்தது என்ற நினைப்பும் இருக்கிறது. பிறகு மற்றவர்கள் எப்படி தமிழை மதிப்பார்கள்...???முதலில் தமிழன் தமிழையும்,சக தமிழனையும் மதிக்க வேண்டும். தமிழின் சிறப்புகளை அறிந்துகொள்ள வேண்டும் . பிறகு எல்லாம் சரியாகும்........
Rate this:
Share this comment
R N - Tiruchi,இந்தியா
26-ஜூலை-201220:00:30 IST Report Abuse
R Nஇங்கு விமர்சனம் செய்பவர் தாய் மொழி உருது, தமிழ் அல்ல. வீட்டில் வேறு மொழி பேசும் போலி தமிழர்கள் இட ஒதுக்கீடு பெறுவதில் வல்லவர்கள், ஆனால் தமிழ் மொழியை மதிக்க விரும்பாதவர்கள். இதில் தெலுங்கு பேசும் அரசியல் வாதிகளும் அவர்களின் vaarisugalum அடங்கும்....
Rate this:
Share this comment
Cancel
VEERU - cherai,இந்தியா
25-ஜூலை-201215:27:23 IST Report Abuse
VEERU தமிழ் படும் பாடு, ஆதித்யா சேனல் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நேற்று இரவு 9 pm - 10 pm இதில் தமிழ் தாய் வாழ்த்து பாட்டு பட்ட சிரமத்தை என்ன சொல்வது ?
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - riyadh,சவுதி அரேபியா
25-ஜூலை-201215:16:51 IST Report Abuse
balakrishnan வருத்தம் தரும் செய்தி ...... இவை போன்ற செய்திகள் எண்ணிலடங்காதவை ....
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
25-ஜூலை-201214:55:54 IST Report Abuse
villupuram jeevithan குறளோவியம் எழுதி விளக்கம் கொடுத்தவர் ஒரு குறள் படியாவது நடக்காமல் இருப்பது எல்லாவற்றையும் விட மிக மோசமான கொலை இல்லையா?
Rate this:
Share this comment
sriram - chennai ,இந்தியா
25-ஜூலை-201218:15:05 IST Report Abuse
sriramகுறளோவியம் எழுதியது நமக்காக..அதுவம் பொருளை பிற புத்தகங்களை வைத்து எழதியது ......
Rate this:
Share this comment
Cancel
S.R. MURALIDHARAN - Bangalore,இந்தியா
25-ஜூலை-201214:30:44 IST Report Abuse
S.R. MURALIDHARAN ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழுக்கு செய்யாத தொண்டையா இந்த தமிழ் தமிழ் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் கும்பல் செய்தது? தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறிய ஈ. வெ. ராமஸ்வாமி நாயக்கரின் (அவருக்கு இது மாதிரி பெயர் போட்டு கடிதம் எழுதினால்தான் விடை கிடைக்கும் என்று திருச்சியில் ஒரு சொல்வழக்கு உண்டு.) பெயரில் சாதி, கடவுளின் பெயர் வைத்துக் கொண்டு நாத்திகம் பேசி பணம் பண்ணிய பேர்வழியின் கொள்கையை பின்பற்றும் கூட்டம், தமிழுக்கு உழைக்கின்றனர் என்று கூறி தமிழின மக்களை ஏமாற்றாதீர்கள். இவர்கள் எல்லாம் நாட்டு மக்களை சுரண்டுவதற்காக தமிழின் பெருமையை அடகு வைத்த கொள்ளையர்கள். கருணாநிதி, தயாநிதி, கலாநிதி, ஸ்டாலின் இவையெல்லாம் எந்த தமிழ் இலக்கியத்தில் இருந்து எடுத்த பெயர்கள் என்று எந்த அறிவாளியாவது கூறுவார்களா?
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
25-ஜூலை-201214:22:46 IST Report Abuse
Rangiem N Annamalai மத்திய அரசின் விளம்பரத்தில் ஆங்கிலத்திலே தவறு வரும். PM's LEH வெள்ள நிவாரண நிதிக்கு வந்த விளம்பரத்தில் பின்கோடு தவறாக வந்திருந்தது . Post office & Pincode match ஆகவில்லை .
Rate this:
Share this comment
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
25-ஜூலை-201218:14:26 IST Report Abuse
பாமரன்அண்ணாமலை....இதுதான் இந்தியா. ஒரு காமெடிக்காக...சென்னையில் பழவந்தாங்கல் என்ற தபால் நிலையம் உள்ளது. அதன் பின் கோடு 600114 . ஆனால் இந்த தபால் நிலையம் அமைந்திருப்பது சென்னை 600061 மையப்பகுதியில், அதாவது நங்கநல்லூரில்.....அதனால்தான் சொன்னேன்...இதுதான் இந்தியா..........
Rate this:
Share this comment
Cancel
ippave kanna kattuthe - திருச்சி ,இந்தியா
25-ஜூலை-201213:42:28 IST Report Abuse
ippave kanna kattuthe கொஞ்ச நாளைக்கு கொலைவெறி பாட்டுக்கு வெறிபுடுச்சு ஆடுன தமிழ் காவலர்கள் எங்கே போனார்கள் ?கடைகளில் ஆங்கிலமும் தமிழும் கலந்து இருப்பதை பார்க்கும் பொது இவர்கள் எங்கே போனார்கள் ??இவர்கள் சினிமா துறையை எதிர்பதாக நடித்தால் தானே இவர்கள் popularity அடைவார்கள் அன்புள்ள தினமலர் அவர்களே இவர்கள் தங்களை தமிழ் காவலர்களாக கூறுபவர்கள் இப்போது வாய் திறக்க மாட்டார்கள் அவர்கள் தமிழ் காவலர்கள் இல்லை தமிழ் துரோகிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை