Electrical allotment increased to slum | விளக்கு முதல் கிரைண்டர் வரை... :குடிசை வீடுகளுக்கு மின் வரையறை அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விளக்கு முதல் கிரைண்டர் வரை... :குடிசை வீடுகளுக்கு மின் வரையறை அதிகரிப்பு

Updated : ஜூலை 26, 2012 | Added : ஜூலை 24, 2012 | கருத்துகள் (23)
Advertisement
 விளக்கு முதல் கிரைண்டர் வரை... :குடிசை வீடுகளுக்கு மின் வரையறை அதிகரிப்பு,Electrical allotment increased to slum

ஒரு விளக்கு திட்டத்தின் கீழ், குடிசை வீடுகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரத்திற்கான வரையறை, தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், நஷ்டத்தில் தள்ளாடும் மின் வாரியம், மேலும் நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியம் ஏற்கனவே, ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால், தனியாரிடம் பெறும் மின்சாரத்திற்கு கூட, பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. மின் திருட்டு, மின் இழப்பு; மின் உற்பத்தி திட்டங்கள் தாமதம் போன்ற பல காரணங்களால், வாரியம் தட்டுத் தடுமாறுகிறது.

மானிய அளவு:
இந்நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு, குத்து மதிப்பாக வழங்கப்படும் மானியத் தொகையைப் போலவே, குடிசைகளுக்கான (40 வாட்) ஒரு விளக்கு திட்டத்தின் கீழும், குறிப்பிட்ட ஒரு தொகையை மானியமாக, தமிழக அரசு பெற்று வருகிறது.முன்பு ஒரு விளக்கு திட்டத்தின் கீழ், எவ்வளவு மானியத் தொகை அளிக்கப்பட்டதோ அதே அளவுக்கே தற்போதும் மானியம் வழங்கப் படுகிறது. இத்தகைய குடிசை வீடுகளில் பெரும்பாலானவற்றில், கூடுதல் மின் விளக்குகள் மற்றும் மின் சாதனங்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் உள்ளது. அனைத்து குடும்பதாரர்களுக்கும், விலையில்லா தொலைக்காட்சிப் பெட்டியை (70 வாட்) தமிழக அரசு வழங்கியதால், குடிசை வீடுகளுக்கான இலவச மின்சாரப் பட்டியலில், அதுவும் சேர்க்கப்பட்டது.

அதிகரிக்குமா?
தற்போது, மாநிலம் முழுவதும், மின் விசிறி, மாவு அரவை இயந்திரம், கலவை அரவை இயந்திரம் ஆகியவற்றை, தமிழக அரசு, இலவசமாக வழங்கி வருகிறது. இவைகளை உபயோகிக்க கூடுதல் மின்சாரம் தேவை என்பதால், அவற்றையும் குடிசைகளுக்கான இலவச மின்சார வரையறைப் பட்டியலில் சேர்க்க உத்தரவிடப் பட்டு உள்ளது. ஆனால், அதற்கேற்ப மானியம் எப்போது அதிகரிக்கப்படும் எனத் தெரியவில்லை. இதனால், ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளால் தள்ளாடும் தமிழக மின் வாரியத்தின் சுமை அதிகரிக்கும். எனவே, குடிசைகளுக்கான இலவச மின்சாரத்தை, தமிழக அரசு முறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

வாரியம் முன்வருமா?
மின் கட்டணம் வசூலிக்கும் வாரிய அலுவலகங்களில், குடிசை வீட்டிற்கு தரப்படும், ஒரு விளக்குக்கு 40 வாட் மற்றும் இலவச "டிவி' பயன்பாட்டிற்கு 70 வாட் என்ற குறிப்பு தற்போது, ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக்கிறது. இனி, எவை எல்லாம் இலவசம்; அதற்குரிய "வாட்' அளவு என்ன என்பது குறிக்கப்பட வேண்டும். அதைத் தாண்டி பயன்படுத்தும் நுகர்வோருக்கு, எந்த அடிப்படையில் கட்டணம் முறைப் படுத்தப் படும் என்பது தெரியவில்லை.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்வர்-ஹல்வானி - திருவாரூர்.,,இந்தியா
25-ஜூலை-201220:20:38 IST Report Abuse
அன்வர்-ஹல்வானி மின் மீட்டர் சரியாக இருந்து நுகர்வோரின் யூனிட் கணக்கை சரியாக காட்டினால் மூன்று தடவைகள் குறைத்து உபயோகித்து கட்டணத்தை குறைத்து காட்டி அடுத்த மாதம், மீட்டர் மேல் சுக்கு கட்டையால் அடித்து உடைத்து மீட்டர் பழுது , சென்ற மூணு தடவை பகிர்மானத்தை கணக்கிட்டு எனக்கு குத்து மதிப்பாக ஒரு கட்டணத்தை போடுங்கள் என்று சொல்லாமலே, மீட்டர் பார்க்க வருபவர் ஒரு சிறிய தொகையை போடுகிறார். அவ்வளவு தான் அடுத்த நாள் முதல் ஒரு நாளைக்கு அறுவது யூனிட் ஒட்டி வீட்டு காரர் கின்னஸ் சாதனை படைக்கிறார் படைத்து வருகிறார்... ஒத்த லைட் காரர்கள் செய்யும் அட்டூழியம் சொல்லவேண்டியதே இல்லை.. காத்தாடியை ஓட விட்டு விட்டு தான் கலை எடுக்க செல்கிறார். மீட்டரும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.அறிவுகெட்ட அரசியல்வாதிகளும், சோற்றால் அடித்த பிண்டங்களும் அதிகாரியா இருந்தால் வேறு மின் துறை லாபத்தையா வாரி இறைக்கும்.. மேலும் இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ள அனைவர்களும் கொள்ளை பணக்காரர்கள்., பண்ணையார்களும், பட்டாமநியார்களும், நில பிரபுக்களும், மிட்டா மிராசுகளும் மட்டுமே இலவச மின்சாராத்திர்க்கு உரியவர்கள்... பெயருக்கு ஒரு மீட்டரை பொருத்தி விட்டு அந்த கிணத்து கொட்டகைலே சின்னவீட்டை செட் அப் பண்ணி வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துகிராணுங்கள், நாதாரிகள். இதேர்க்கெல்லாம் நடுத்தர மக்கள் ஈடு கொடுக்க வேண்டும். யார்வீட்டில் சாவு ஏற்ப்பட்டாலும், ஒப்பாரி நடுத்தர மக்களின் வீடுகளில் என்ற நிலைமை ஆக்கிவிட்டார்கள்..ராணுவ புரட்ச்சி ஏற்ப்பட்டு அரசியல் வாதிகளை வேரோடு அழித்துவிட்டு கொஞ்ச காலம் கர்னல் கள் நாட்டை கையில் எடுத்தால் நலம்.. அல்லது மீண்டும் தயவு கூர்ந்து ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டாள் சரியாக வந்துவிடும்... அவர்கள் கட்டிய கட்டடமும், இருப்பு பாதையும், அவர்கள் வெட்டிய ஆறு குளங்களும், அவர்கள் கட்டிய டேம் களும் தான் இன்று பேர் சொல்லிக்கொண்டிருக்கிறது. இந்த அரசியல் நாய்கள் வந்து இருவது தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்து குடித்து கும்மாளம் அடித்ததை தவிர எதுவுமில்லை...
Rate this:
Share this comment
Cancel
Radheshyam - Chennai,இந்தியா
25-ஜூலை-201217:38:31 IST Report Abuse
Radheshyam சுப்ரீம் கோர்ட் தடுத்தாலே ஒழிய இலவசங்கள் கொடுப்பது முடிவுக்கு வர வழி இல்லை. அரசு ஊழியர் தவிர யாருக்கும் பென்சன் கிடையாது. இதையும் நிறுத்தி விட்டு, மக்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டம் கொடுத்தால் போதும்.
Rate this:
Share this comment
Cancel
tamilaa thamila - chennai,இந்தியா
25-ஜூலை-201216:34:24 IST Report Abuse
tamilaa thamila அம்மாவும் மோடியும் மிகவும் நெருக்கமாசே. இலவசத்தை ரத்து செய்யலாமே. செய்வாரா?
Rate this:
Share this comment
Cancel
Oosi - Port Said,எகிப்து
25-ஜூலை-201212:40:41 IST Report Abuse
Oosi ஏமாளிகளான நடுத்தர மக்கள் இருக்கும் வரை என்ன கவலை. இதே இயந்திரங்களை அவர்கள் உபயோகித்து அதன் மூலம் மின் கட்டணம் என்ற பெயரில் இதற்க்கெல்லாம் சேர்த்து தானே அவர்கள் கட்டுகிறார்கள். 30 % வருமான வரி, கூடுதல் மின் கட்டணம், பஸ் கட்டண உயர்வு, பெட்ரோல் காஸ் விலை உயர்வு ... இன்னும் எத்தனை வழிகளை கண்டுபிடிப்பார்களோ இந்த அரசியல் வாதிகளும், அவர்களின் பொருளாதாரப் புலிகளும். ஒன்று மட்டும் நிச்சயம், எல்ல வருமானத்தையும் அரசாங்கத்துக்கும், லஞ்சத்திற்கும் கொடுத்துவிட்டு, எந்த வசதியும் இல்லாமல் வெறுமனே புலம்பிக் கொண்டிருக்கும் இந்தியாவின் நடுத்தர மக்களை போன்ற தியாகிகள் உலகில் எங்கும் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
Taslima Akter - jeddah,சவுதி அரேபியா
25-ஜூலை-201212:14:23 IST Report Abuse
Taslima Akter பல கோடி மக்களின் மடியில் கைவைத்து சில லட்சம் மக்கள் சுக போகமாக வாழ அரசு செய்கிறது... நல்லதுதான்...ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட அரசே உரிய நடவடிக்கை எடுத்துக்கொண்டதற்கு நன்றி.. கட்சி காணாமல் போக தீவிர நடவடிக்கை தான் இது..
Rate this:
Share this comment
Cancel
saraathi - singapore,சிங்கப்பூர்
25-ஜூலை-201209:37:54 IST Report Abuse
saraathi அத்தியாவசியங்கள் அனாவசியங்கலாகிவருவதே பல பிரச்சனைகளுக்கு காரணம்.விருப்பமான பாடலை வேண்டியபொழுது கேட்க விஞ்ஞான வசதியிருந்தும் தொலைபேசியில் அழைத்து தொலைகாட்சியில் அப்பாடலை பார்ப்பதை வழக்கமாக கொண்டவர்கள் அனைவரும் தொலைபேசி முதல் மின்சாரம் வரை தனது நேரம் உட்பட அனைத்தையும் விரையம் செய்வதைப்பற்றி அக்கறை இல்லாதவர்களாகவே உள்ளனர். பெட்ரோல் முதல் மின்சாரம் வரை எதையும் உரிய பயன்பாடிற்கு பயன்படுத்த தெரியாதவர்களுக்கு அவற்றை மலிவான விலையில் முறையாக கொடுப்பதால் மட்டும் என்ன நன்மை விளைந்துவிடப்போகிறது?ஆனால் இத்தகைய பொறுப்பற்றவர்களால் நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படுகிறது என்பது ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு புரியும்.எரிபொருள் விலை குறைவாக இருந்தால் அதை முறையாக பயன்படுத்தினால் சுற்றுப்புற சீர்கேடு முதல் விலைவாசிவரை அனைத்தும் கட்டுக்குள் இருக்கும்.ஆனால் நடைமுறையில் பெட்ரோல்,டீஸல் விலை மலிவாக இருந்தால் ஒன்னுக்கு போவதற்கு கூட வாகனத்தில் தான் போகும் வெட்டி தனம் தான் அதிகரித்துவருகிறது.பொறுப்பும்,நாட்டுப்பற்றும் நம் ஒவ்வொருவரிடமிருந்தும் வந்தால் தான் நாடு நலம்பெற முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
25-ஜூலை-201208:55:11 IST Report Abuse
Pannadai Pandian ஒரு காலத்தில் குடிசையில் வாழும் மக்களுக்கு ஒரு லைட் போதும். அதுவும் கிராமத்தில் வாழும் மக்களுக்கு அந்த ஒத்த லைட் போதுமானது. ஆனால் தற்போது அதுவும் நகரத்தில் வாழும் மக்கள் படித்து முன்னேறிவிட்டாலும் இன்னமும் குடிசையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தேவைகளும் அதிகரித்து விட்டது. டிவி, கிரைண்டர், கணணி, ஸ்டவ் போன்றவற்றை மின்சாரத்திலேயே பயன்படுத்துகிறார்கள். எனவே ஒருகாலத்தில் இந்த இலவச மின்சார திட்டம் குறைந்த செலவில் நடைமுறை படுத்தப்பட்டது இன்றோ விஸ்வரூபம் எடுத்துள்ளது. மக்களின் வாழ்க்கை தரமும் கூடிவிட்ட இந்நாளில் பொது மக்களே முன் வந்து 50 % கட்டணத்தை செலுத்த முன் வரவேண்டும். விவசாயிகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்றால் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் அதற்க்கேற்றார்போல விவசாய பொருள்களுக்கும் தகுந்த விலையை நிர்ணயிக்க வேண்டும். மெல்ல மெல்ல இலவசம் ஒழிந்தால் நல்லது.
Rate this:
Share this comment
Govind - Delhi,இந்தியா
25-ஜூலை-201213:03:23 IST Report Abuse
Govindஇலவச மின்சாரம் மற்றும் ஏனைய இலவச திட்டங்கள் யாவும் தமிழனுக்கு இன்று ஒரு போதை ..அதிலிருந்து அவன் மீள்வது என்பது ஆட்சியாளர்கள் கையில் மட்டும் இருக்கிறது....
Rate this:
Share this comment
Cancel
adiyamaan - Athipatti,இந்தியா
25-ஜூலை-201208:39:33 IST Report Abuse
adiyamaan என்னத்தனு சொல்றது.. பட்டும் திருந்தாதவர்கள் நடக்கட்டும்.. நடக்கட்டும்.. அடுத்த ஆண்டு வருவதற்குள் இலவச இன்வேர்ட்டர் வழங்கினால் நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
25-ஜூலை-201208:08:43 IST Report Abuse
krishna இலவச மிக்சி கிரைண்டர் இவை போன்ற இலவச திட்டங்கள் தேவையா.ஒட்டு வாங்க இது போன்ற பயனற்ற திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மீதுதான் கட்டண சுமைகளை திணிக்கிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
RAMALINGAM MANI - Chennai,இந்தியா
25-ஜூலை-201208:04:07 IST Report Abuse
RAMALINGAM MANI ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு வெளியே உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள குடிசை மின் இணைப்புகளிலும் 99 சதவிதம் இணைப்புகளில் குறைந்த பட்சம் மூன்றாயிரம் முதல் நான்காயிரம் வாட்ஸ் மின்சாரம் உபயோகம் ஆகிறது என்று தகவல் வருகிறது. அந்த மின் இணைப்புகளை மின் வாரிய மின் திருட்டு தடுப்பு அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை ,மேலிட உத்தரவு என்ன செய்வது ??? என்ற தகவலும் வருகிறது இப்படி இருந்தால் மின் வாரியம் எப்படி நஷ்டத்தில் இருந்து மீளும்? மின் திருட்டை முதலில் முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ,மின் திருட்டை முழுமையாக கண்டுகொள்ளாத மின் திருட்டு தடுப்பு படை அலுவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை [இதில் கையூட்டு பெறுவது தனி] அதிரடியாக நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்வது ,பதவி இறக்கம் செய்வது ,இவர்கள் மூலம் மின் வாரியத்திற்கு ஏற்ப்பட்ட நஷ்டத்தை [அபராத தொகையை கையுட்டின் மூலம் குறைத்து போடுவது] இவர்களிடமே வசூல் செய்ய வேண்டும் . நூறு சத வீதம் மின் கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் ,அதற்க்கு ஆட்களை நியமனம் செய்ய வேண்டும் [தற்போது மின் வாரியத்தில் ஐம்பதாயிரம் பேர்கள் மட்டுமே நிரந்தர பணியாளர்கள் உள்ளார்கள் ] இலவசம் என்பது இருக்கும் வரை மின் வாரியம் நஷ்டத்தில் இருந்து மீளவே முடியாது???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை