பதிவு செய்த நாள் :
கருத்துகள் (13)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

மும்பை:மத்தியில், ஆளும் ஐ.மு., கூட்டணிக்கு, தேசியவாத காங்கிரஸ் ஏற்கனவே கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் முதல்வர் பிருத்விராஜ் சவானுக்கு எதிராக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 42 பேர் அதிருப்தி தெரிவித்து, போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய விவசாய அமைச்சருமான சரத் பவாருக்கு, மத்திய அமைச்சரவையில் இரண்டாவது இடம் அளிக்கப்படாதது, பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. சரத் பவாரும், அவரது கட்சியை சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சருமான பிரபுல் படேலும், அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர். மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவையும், மகாராஷ்டிராவில், பிருத்விராஜ் சவான் தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவையும், தேசியவாத காங்., வாபஸ் பெறும் என்ற, பேச்சு எழுந்துள்ளது.
ஆபத்து:இந்நிலையில், மகாராஷ்டிராவில் முதல்வர் பிருத்விராஜ் சவானுக்கு, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்தக் கட்சியைச் சேர்ந்த 42 எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பிருத்விராஜ் சவானின் செயல்பாடுகளை எதிர்த்து, கட்சித் தலைவர் சோனியா, கட்சியின் மாநில தலைவர் மாணிக் ராவ் தாகூர் ஆகியோருக்கு, கடிதம் எழுதியுள்ளனர்.அந்த கடிதத்தில், "அரசின் தற்போதைய செயல்பாடுகளை மாற்றவில்லை எனில், அடுத்து வரும் தேர்தலில் நாம் வெற்றி பெறுவது சிரமம் என, முதல்வருக்கு ஏற்கனவே அறிவுறுத்தினோம். ஆனாலும், அவர் அதை கண்டுகொள்ளவில்லை' என, கூறியுள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தங்கள் தொகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, முதல்வர் அனுமதி மறுப்பதாக, இவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

காரணம் என்ன?
ஆனால், முதல்வர் பிருத்விராஜ் சவான், கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசை, ஊழல் நிறைந்த கட்சியாக படம்பிடிக்கும் முயற்சியில் இறங்கியதே, தற்போது ஏற்பட்ட பிரச்னைகளுக்குஅடிப்படைக் காரணமாக உள்ளது. சரத்பவாரின் மருமகன் அஜீத் பவார் வகிக்கும் நீர்ப்பாசனத் துறையில், கடந்த சில ஆண்டுகளாக நடந்த ஊழலை, வெளிக் கொண்டு வரும் வகையில் வெள்ளை அறிக்கை தயாரிக்க முற்பட்டது, அதிக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் நடந்த முறைகேடுகள் பற்றியும் விசாரிக்க முற்பட்டதும், இரு கட்சிகளிடையே அதிருப்தி அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தது. மகாராஷ்டிராவில், தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படுவதை சிறிதும் அனுமதிக்க விரும்பாத, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர், சாமர்த்தியமாக, மத்திய அரசு கூட்டணிக்கு நெருக்கடி தரத் துவங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. அதே சமயம், மத்தியில் பவார் கூட்டணியில் தொடர வேண்டும் என்றும், மாறுபட்ட முடிவுகளை எடுத்து விடாமல் சமாளித்தாக வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் மேலிடம் உள்ளது.மகாராஷ்டிர அரசு கூட்டணிக் கட்சி அதிருப்தியில் தவிக்கும் போது, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி தெரிவித்திருப்பது அந்த அரசின் தள்ளாட்டத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
காங்., மாநில தலைவர் மாணிக் ராவ் தாகூர் கூறுகையில்,
""முதல்வருக்கு எதிராக

Advertisement

, எம்.எல்.ஏ.,க்கள் எந்தக் குற்றச்சாட்டையும் கூறவில்லை. அவர்கள், வேறு பிரச்னை குறித்து கடிதம் எழுதியுள்ளனர்,'' என்றார்.
மத்திய அரசுக்கு கெடு:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐ.மு., கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்காக, ஒரு குழுவை அமைக்க வேண்டும் என, ஏற்கனவே கோரிக்கை விடுத்தோம். இதுவரை, அரசு தரப்பில் இருந்து, இதற்கு பதில் இல்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான கெடு, நாளையுடன் (இன்று) முடிவடைகிறது. அதற்குள் கோரிக்கைளை நிறைவேற்றா விட்டால், மத்திய அரசுக்கும், மகாராஷ்டிராவில் காங்., அரசுக்கும், அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanagu - Pollachi,இந்தியா
25-ஜூலை-201216:44:54 IST Report Abuse
Kanagu இங்கபருங்கப்பா, அடுத்த முறையும் காங்கிரஸ் ஆட்சி தான், ஊழல் செய்கிறவர்களை தப்பிக்க வைக்கும் ஒரே கட்சி காங்கிரஸ். அவர்களுக்குத்தான் எல்லோரும் சப்போர்ட் செய்வார்கள். இந்த நாடகம் அவர்கள் பாக்கெட் மனி நிரப்பத்தான்...
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
25-ஜூலை-201215:16:56 IST Report Abuse
T.C.MAHENDRAN மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் எப்போதோ தள்ளாட ஆரம்பித்து விட்டது. சில சுயநலவாதிகளின் ( கருணாநிதி, மம்தா, முலாயம் சிங், மாயாவதி, சரத்பவார் ) துணையோடுதான் காங்கிரஸ் கட்சி இந்த இந்திய திருநாட்டை கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறது .
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
25-ஜூலை-201209:47:26 IST Report Abuse
Tamilan சரத் பவார் ஒரு அரசியல் சாணக்கியன்................ ஊழலை மறைக்கவே இந்த நாடகம்..................... இந்த முதல்வர் நன்றாகதான் செயல்படுகிறார்
Rate this:
Share this comment
Cancel
praba karan - sINGAPORE,சிங்கப்பூர்
25-ஜூலை-201207:57:21 IST Report Abuse
praba karan இந்த சவான் ஒரு நல்ல மனிதர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இவர் தன்னுடைய கட்சி ஊழல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடும் சவாலாக இருக்கிறார். அதனை இந்த ஊழல் பவார் பயன்படுத்திக்கொண்டு விளையாடிகொடிருக்கிறார். இந்த சவான் முதல்வராக வரும்போதே நான் இவர் கொஞ்ச காலம்தான் பதவியில் இருக்க முடியும் என்று நினைத்திருந்தேன். அதுதான் நடக்க போகிறது. மேலும் ஊழல்வாதிகள் இருக்கும் இந்த சட்டமன்றத்தில் சவான் போன்ற நல்ல முதல்வர்கள் அனைத்து மாநிலங்களிலும் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
25-ஜூலை-201207:47:01 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் மூழ்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கப்பலிலிருந்து எவ்வளவு சீக்கிரம் கழட்டிக் கொள்வது என எல்லா கூட்டணிக் கட்சிகளும் முயற்சிக்கின்றன. பவார் லேசுப்பட்ட ஆளா? காங்கிரசை நம்பி அடுத்த தேர்தலில் டெப்பாசிட் இழக்கத் தயாரில்லை
Rate this:
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
25-ஜூலை-201206:57:23 IST Report Abuse
T.R.Radhakrishnan கர்நாடகாவில் பா.ஜ.காவின் தள்ளாட்டத்தை காங்கிரஸ் கேலி செய்தது. இப்போது, அவர்களுக்கே ஆப்பு.
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
25-ஜூலை-201206:21:46 IST Report Abuse
s.maria alphonse pandian காங்கிரஸ் கூட்டணியில் இருந்து யாரும் வெளியேற மாட்டார்கள்....கடைசி நேரத்தில் சிலர் ஜெயா போல வெளியேறலாம்....
Rate this:
Share this comment
saravanan - Dares Salaam,தான்சானியா
25-ஜூலை-201210:58:59 IST Report Abuse
saravananநீங்க வெளியேற மாட்டீங்க..... ஏன்னா உங்களுக்கு பழமொழி (பழம் என்றால் கனி) பிரச்னை........ பவார் பெண்ணுக்குமா பிரச்னை இருக்கு???...
Rate this:
Share this comment
Cancel
A R Parthasarathy - Chennai,இந்தியா
25-ஜூலை-201205:59:47 IST Report Abuse
A R Parthasarathy இது ஏற்கனவே திட்டமிடப்பட்டது. எப்படியும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து கழன்றுகொள்ள வேண்டும் என்று பவார் முடிவெடுத்தே இரண்டாவது இடம் பிரச்சனையை எழுப்பியுள்ளார். மகாராஷ்ட்ராவில் எப்படியும் தேசீய வாத காங்கிரஸ் கட்சியின் ஊழல் நடவடிக்கைகளை thuruva ஆர்ம்பித்துவிட்டார் முதல்வர். எப்படியும் பிரச்னை வெடிக்கும் என்று தெரியும். எனவேதான் இரண்டாம் இடம் என்ற சாக்கு கையில் எடுக்கப்பட்டுள்ளது. கேவலம் ஒன்பது இடங்களை வைத்துள்ள இந்த கட்சி மிரட்டுகிறது என்றால், அதற்க்கு காரணம் மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் அபாயம ஏற்பட்டுவிட்டது என்று அருத்தம். அதனால் தான் காங்கிரஸ் பவாரிடம் கெஞ்ச துவங்கிவிட்டது. பவாரும் . உள்ளடி வேளைகளில் இறங்கிவிட்டார். அதனால் தான் காங்கிரஸ் எம் எல் எ களே போர்க்கொடி பிடிகின்றனர். போதாகுறைக்கு சிவசேன வேறு பவாருக்கு ஆதரவு தர துணிந்துவிட்டது. எப்படியும் பவாரின் மிரட்டலுக்கு காங்கிரஸ் பணியைத்தான் போகிறது. வேடிக்கை பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
vaaimai - Appleton, WI ,யூ.எஸ்.ஏ
25-ஜூலை-201203:11:41 IST Report Abuse
vaaimai ஒரு விஷயத்தில் ஸ்ரீமான். பவாருக்கு மேலே இந்தியாவில் ஒருவர் தான் உண்டு.
Rate this:
Share this comment
Cancel
blackcat - Chennai,இந்தியா
25-ஜூலை-201202:25:56 IST Report Abuse
blackcat தினமலரே... நாங்க ஏமாற மாட்டோம்.... பவாரை பார்த்தாலும் நம் தானை தலைவர் மாதிரி தான் இருக்கிறார்... அதனால சொல்ல முடியாது... ஆதரவை வாபஸ் வாங்கிடுவோம் வாபஸ் வாங்கிடிவோம்ன்னு சொல்லி, கடைசியில் வாபஸை தான் வாபஸ் வாங்கிடுவார்... அதனால காங்கிரஸ் ஆட்சி திவால்ன்னு நீங்க செய்தி போடும் வரை நாங்க ஏமாற மாட்டோம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.