ஊட்டி : ஊட்டியில், 20 ஆண்டுகளாக உள்ள மான் பூங்காவை மூடி, அங்கு வரையாடு இனப்பெருக்க மையம் அமைக்க, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி படகு இல்லம் அருகே, முதுமலை புலிகள் காப்பக கட்டுப்பாட்டில் மான் பூங்கா செயல்படுகிறது. ஆறு ஹெக்டேர் பரப்பளவில் புள்ளி மான், கட மான்களின் உறைவிடமாக இப்பூங்கா உள்ளது. தட்பவெப்ப சூழ்நிலை ஒத்துவராததால், புள்ளிமான்களின் இனப்பெருக்கம் குறைந்தது. பல புள்ளி மான்கள் நோய்வாய்பட்டன. இதனால், அவை, முதுமலை வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. தற்போது பூங்காவில் கடமான், குரைக்கும் மான்கள் உள்ளன. ஊட்டி ஏரியை ஒட்டி பூங்கா அமைந்துள்ளதால், ஏரி காற்று மான்களுக்கு, உடல் உபாதையை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இறக்கும் மான்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவற்றின் மார்பில் அதிகளவு சளி இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே, மான் பூங்காவில் உள்ள கடமான்களை, வண்டலூர் பூங்காவுக்கு இடமாற்றம் செய்து, பூங்காவை மூட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இடத்தில், மாநில விலங்கான வரையாடு, இனப்பெருக்க மையம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. முதுமலை புலிகள் காப்பக உதவி இயக்குனர் அமீர் ஹாஜா கூறுகையில், "கட மான்கள் வாழ ஏற்ற சூழ்நிலை, ஊட்டியில் உள்ளது. இருப்பினும், ஊட்டி மான் பூங்காவில் கட மான்கள் தனித்து உள்ளன. அங்குள்ள மான்கள், பிற வன உயிரியல் பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கு வரையாடு இனப்பெருக்க மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது,' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.