இருப்பதை இல்லாமல் செய்வதிலா பெருமை? கேட்கிறார் கருணாநிதி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: "அ.தி.மு.க., ஆட்சியில் மேலும் ஐந்து பல்கலைக் கழகங்களை உருவாக்கினோம் என்றால் பெருமையா? தி.மு.க, ஆட்சியில் உருவாக்கிய ஐந்து பல்கலைக் கழகங்களை இல்லாமல் செய்தது பெருமையா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை: ஐந்து அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களையும், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துடன் ஒருங்கிணைத்து, ஒரே பல்கலைக் கழகமாக மாற்ற, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழகத்தில் அப்படி என்ன பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை அதிகமா? 27 கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்ட, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 2,500 பல்கலைக் கழகங்களும், 12 கோடியே 70 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஜப்பானில் 726 பல்கலைக் கழகங்களும், 8 கோடியே 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஜெர்மனியில் 350 பல்கலைக் கழகங்களும், ஆறு கோடி மக்கள் தொகை கொண்ட இங்கிலாந்தில் 125 பல்கலைக் கழகங்களும் உள்ளன. ஆனால், 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், 415 பல்கலைக் கழகங்கள் உள்ளன. அவற்றில் ஏழு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில், 28 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் உட்பட மொத்தம் 53 பல்கலைக் கழகங்கள் உள்ளன.


இப்படி செஞ்சா என்ன? ஜெயலலிதாவின் கருத்து ஏற்கத்தக்க ஒன்று என்றால், சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் தான், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் இடம் பெறும் என்ற அறிவிப்பை அல்லவா செய்ய நேரிடும்? தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கலெக்டர்கள் தேவையில்லை. அனைத்தும் தலைமைச் செயலரின் நேரடிப் பார்வையிலே இயங்கும் என்றும், மாவட்டங்களில் உள்ள போலீஸ் துறை எஸ்.பி.,க்கள் அலுவலகங்களை எல்லாம் ரத்து செய்து விட்டு, நேரடியாக டி.ஜி.பி., தலைமையில் ஒருங்கிணைத்து இயங்கும் என, ஜெயலலிதா அறிவிக்கப் போகிறாரா?


நிர்வாகச்சுமை: ஒரு பல்கலைக் கழகத்துடன் 100 கல்லூரிகள் வரையில் இணைக்கப்படலாம் என்று தான் பல்கலைக் கழக மானியக்குழு கூறியுள்ளது. ஆனால், தற்போது ஜெயலலிதா எடுத்துள்ள முடிவின்படி, 571 கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படவுள்ளன. இதனால், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நிர்வாகச் சுமை அதிகரிக்கும். அங்குள்ள ஆசிரியர்கள் ஆராய்ச்சிப் பணியில் கவனம் செலுத்த முடியாது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். அ.தி.மு.க., ஆட்சியில் ஐந்து பல்கலைக் கழகங்களை புதிதாகக் கொண்டு வந்தோம். அ.தி.மு.க., ஆட்சியில் மேலும் ஐந்து பல்கலைக் கழகங்களை உருவாக்கினோம் என்றால் பெருமையா? தி.மு.க, ஆட்சியில் உருவாக்கிய ஐந்து பல்கலைக் கழகங்களை இல்லாமல் செய்தது பெருமையா? இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (138)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gogulaa - Thiruthuraipoondi,இந்தியா
26-ஜூலை-201223:24:06 IST Report Abuse
Gogulaa ஒன்றை நாலக்கினால் அதன் பெயர் சில்லு ஒன்றாக இருந்தால் தான் பானை. பானையே உபயோகப்படும். சில்லு ஒன்றிற்கும் உதவாது .
Rate this:
Share this comment
Cancel
singamthree - singa pore,சிங்கப்பூர்
26-ஜூலை-201222:26:26 IST Report Abuse
singamthree இ கோ மு சி புயலென புறப்பட்டது, அர்த்தம் புரியாதவர்கள் மன்னிக்கவும். அதாவது இரும்பு கோட்டை கிழட்டு சிங்கம் புறப்பட்டது, மறு படியும் மன்னிக்கவும், முரட்டு சிங்கம் கை தவறி வந்து விட்டது. இந்த மு சிங்கம் ( மு என்றால் முரட்டு வேறு ஏதாவது அர்த்தம் எடுத்து கொள்ள கூடாது ). இது வரை ஆரிய திராவிட பிரச்சினைகளை பேசி வந்த மு சிங்கம் இப்பொழுது ஐரோப்பிய இந்திய பிரச்சினைகளை பேச ஆரம்பித்து விட்டது. மறு படியும் மன்னிக்கவும் ஐரோப்பிய தமிழர் பிரச்சினை. அய்யா மு சிங்கமே ஐரோப்பாவில் மற்றும் ஜப்பானில், அமெரிக்காவில் அரசியல் கட்சிகள் முழு நேர அரசியலில் தொண்டு ஆற்றும் தொண்டர்களுக்கு கட்சி நிதியில் இருந்து எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் தெரியுமா? அய்யா இது போல் கட்சி தொண்டர்கள் கேட்டால் என்ன செய்ய முடியும்?. ஒன்றரை வருடங்களாக என்ன செய்தாலும் தேற மாட்டேன்கிறது மு சிங்கம் இளமையாக சிந்திக்கின்றது? ஆனால் எங்களால் முடிய வில்லை? சிங்கம் எப்பொழுது கர்ஜிக்கும், வயிறு நிரம்பி இருக்கும் பொழுது? அது அணைத்து சிங்கங்களுக்கும் பொதுவானது
Rate this:
Share this comment
Cancel
vetri - karaikudi,இந்தியா
26-ஜூலை-201220:22:11 IST Report Abuse
vetri எங்க தலைவருக்கு புள்ளி விவர கணக்கு நல்லா தெரயும்க அதா. கலெக்டர் DGP பத்தில்லாம் பேசுறார் .கொலபுரர் நல்லா கொலப்புரர் . தலைவா போதும் தலைவா TAKE REST.
Rate this:
Share this comment
Cancel
Rajan - Coimbatore,இந்தியா
26-ஜூலை-201219:25:25 IST Report Abuse
Rajan படிப்பறிவில்லாத முட்டாள்கள் உருவாகும் கழகங்களுக்கு பெயர் பல்கலை கழகம் அல்ல இது படித்தவர்கள் உருவாக்கும் கழகம். தி.மு.க வுக்கு பல்கலைகழகம் என்றால் அர்த்தம் வேறு.
Rate this:
Share this comment
Mohanadas Murugaiyan - Ras al Khaima,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜூலை-201220:58:51 IST Report Abuse
Mohanadas Murugaiyanஒரு ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் என்பதால் மட்டும் அதை மாற்றுவது நல்லதில்லை ,தி.மு .க. ஆட்சியில் பதவிக்கு வந்த அரசுப் பணியாளர்களை எல்லாம் நீக்கி விடுவார்களா...??? மாற்றி மாற்றி அப்படிசெய்தால் குழப்பம்தான் மிஞ்சும் . எண்ணித் துணிக கருமம் என்ற குறளை மறந்தால் கஷ்டம் மக்களுக்குத்தான் ....
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
26-ஜூலை-201221:25:07 IST Report Abuse
Karam chand Gandhi நாட்டை சுரண்டி அழித்துவிட்டு பல்கலை கழகத்தை பற்றி பேசுகிறார் . வெட்கம், சூடு , சொரணை என்ற எதுவுமே இந்த அரசியல்வாதிகளுக்கு இல்லையா?...
Rate this:
Share this comment
Cancel
Logarasu Rangasamy - namakkal,இந்தியா
26-ஜூலை-201218:11:40 IST Report Abuse
Logarasu Rangasamy .Engineering college´-இல் பணிபுரியும் நான், முதலமைச்சர் செய்தது சரிதான்.ஒரே syllabus and same method question paper.I am asking to our Ex.C.M , how to school are maintaining and conducting exams and other education relevant works.DON&39T worry sir , we are accepting the method( include student community and parents, staffs),previously the politician earned lot of money for rent the university building and university jobs.
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
26-ஜூலை-201217:58:02 IST Report Abuse
s.maria alphonse pandian பள்ளிக்கல்வியை இலவசமாக்கினார் காமராஜர். அதை பட்டக்கல்வி வரை நீட்டித்தார் கலைஞர். ஜேப்பியாரையும் தம்பிதுரையையும் ஜகத்ரட்சகனையும் ஏ.சி.சண்முகத்தையும் உருவாக்கி கல்லூரிகளை நடத்தும் பொறுப்பை அரசியல்வாதிகள் கையில் ஒப்படைத்தார் எம்.ஜி.ஆர். அவைகளை சீல் இடாமல், தனது கட்சியினர் வேலு, பொன்முடி போன்றோருக்கு கல்லூரி நடத்த அனுமதி அளித்து அந்த தவறை தொடர்ந்தார் கலைஞர். விளைவு கல்வியின் தரம் கீழே...
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
26-ஜூலை-201220:56:46 IST Report Abuse
villupuram jeevithanபொன்முடி, வேலு மட்டும் தான் தெரிகிறதா? மற்ற திமுக மந்திரிகள், எம்பிக்கள், மற்ற திமுக பிரமுகர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?...
Rate this:
Share this comment
Murali - Ettayapuram,இந்தியா
26-ஜூலை-201222:44:50 IST Report Abuse
Muraliஏது, இது மரியா அவர்கள்தானா, அவர் கருத்துதானா, நம்பவே முடியவில்லை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்களது உண்மையான, உறுதியானக் கருத்துக்கு... ...
Rate this:
Share this comment
Murali - Ettayapuram,இந்தியா
26-ஜூலை-201222:48:26 IST Report Abuse
Muraliஎன்று கல்வி நிர்வாகம் அரசியல்வாதிகள் கரங்களுக்குச் சென்றதோ, அன்றே ஆரம்பமானது தரத்தின் அழிவுக் காலம்......
Rate this:
Share this comment
Cancel
ksjagan1 - chennai,இந்தியா
26-ஜூலை-201215:56:59 IST Report Abuse
ksjagan1 அண்ணா பல்கலைக்கழகம் என்றால், சென்னை என்ற விலாசத்தில் மட்டுமே இருந்தது . வெளி நாட்டு நிறுவனங்களும் பன்னாட்டு இந்திய நிறுவனங்களும், மாணவர்களை பணிக்கு தேர்ந்தெடுக்கும்போது, குழப்பம் இராது. அதை விடுத்து, திருச்சியில் ஒரு அண்ணா, மதுரையில் ஒரு அண்ணா என்று தொடங்கினால், சென்னையில் உள்ள அண்ணாவின் தரம் தாழ்ந்து விடாதா? உலக தரத்தை எட்டியுள்ள நிலையில் கிண்டி அண்ணா பொறியியல் கல்லூரியை தரம் தாழ்த்த நினைப்பது இவரின் முட்டாள் தனம். அப்படியே இருந்தாலும், மற்ற அண்ணா பல்கலை கழக கிளைகளில் தரமான ஆசிரியர்களும், கட்டமைப்பும் ஏற்படுத்தினாரா? எத்தனை மாணவர்கள் அதிலிருந்து பயனடைந்தார்கள்? இதை விட தனியார் கல்லூரிகளே மேல் என்று சொன்னவர்கள் தான் அதிகம். ஏதாவது செய்துவிட்டு தமிழர்களின் வாழ்வில்தான் விளையாடினீர்கள். மாணவர்களாவது உருப்படட்டும் பெரியவரே....இவருக்கு, மக்களுக்கு நல்லது செய்தாலே பிடிக்காது. உங்கள் கட்சி எதிர்கட்சியாகக்கூட இல்லை. கேப்டன் எதிர் கட்சியாக இருந்தும், சில சமயம் உளறுகிறார், நீர் சற்று சும்மா இருக்கலாமே...
Rate this:
Share this comment
Poompattinaththaan - KaveriPoompattinam,இந்தியா
26-ஜூலை-201220:22:12 IST Report Abuse
Poompattinaththaanமெத்தப் படித்த மேதாவிபோல் கருத்து என்ற பெயரில் இங்கே உளறிக்கொட்டுகிறார்கள். மு.க. மீது அவரது அரசியல் சார்ந்தவைகட்கு எதிர்ப்பு இருப்பதில் தவறில்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் அவர் செய்த அனைத்துமே எதிர்ப்புக்குரியவை என்றால் அவை அவர்மீது காட்டும் காழ்ப்புணர்ச்சி என்பதைத்தவிர வேறென்னவாக இருக்க முடியும்?...
Rate this:
Share this comment
Mohanadas Murugaiyan - Ras al Khaima,ஐக்கிய அரபு நாடுகள்
26-ஜூலை-201221:02:03 IST Report Abuse
Mohanadas Murugaiyanசென்னை இந்தியாவில் தானே இருக்கிறது..? பிறகு ஏன் தமிழ்நாடு,ஆந்திரா குஜராத் என்று மாநிலங்கள்..????தனித் தனி மாநில அரசுகள்....?...
Rate this:
Share this comment
Cancel
Moorthi - Coimbatore,இந்தியா
26-ஜூலை-201215:38:35 IST Report Abuse
Moorthi அண்ணா பல்கலைகழகங்களை இணைத்தது தவறு. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் கல்வி வளர்ச்சி பொறுத்தது. சிறைச்சாலைகள் இல்லாமல் கல்வி சாலைகள் பெருகுவதுதான் ஒரு நாட்டுக்கு பொற்காலமாகும். எனவே இது போன்ற நாட்டின் வளர்ச்சியை பொறுத்து கல்வி கூடங்கள் பெருக வேண்டும். எனவே அண்ணா பலகலைக்கழகங்கள் ஒன்றுக்கு பத்தாக பெருக வேண்டும். கோவை அண்ணா பலகலைக்கழக துணை வேந்தர் உள்ளிட்ட அணைத்து கல்வியாளர்கள் போல எளிமையான நல்ல உள்ளங்களை காண்பது இனி எப்போது என்று தெரியவில்லை இறைவன் தான் துணை. ஊட்டி மூர்த்தி.
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
26-ஜூலை-201221:29:07 IST Report Abuse
Karam chand Gandhi கல்வி என்பதையே ஒழித்து விட்டு மக்கள் அனைவரையும் தற்குறியாக ஆக்கி விட்டால் சமத்துவம் அடைந்து விடலாம்....
Rate this:
Share this comment
Cancel
புஸ் இன் பூட்ஸ் - Penang,மலேஷியா
26-ஜூலை-201214:37:26 IST Report Abuse
புஸ் இன் பூட்ஸ் தலைவரே.. இந்த வயசுல எதுக்கு வாயை குடுத்து ... புண்ணாக்கி கொள்கிறீர்கள்? ஜம்முன்னு சண் டிவி, கலைஞர் டிவி பார்த்து மான் ஆட்ட, மயில் ஆட்ட பார்த்து ரிலாக்ஸ் பண்ணுங்களேன்?
Rate this:
Share this comment
Cancel
gurubhai - cochin,இந்தியா
26-ஜூலை-201214:27:32 IST Report Abuse
gurubhai ஹலோ மிஸ்டர்.கருணா தயவுசைது அறிகை விடாதிக நான் அப்பறம் ஏதாவது அசிகமா சொல்லிட போறேன் ...இந்த கொசுதொள்ள தங்கள்பா ...கடுபதுறாரு மை லார்ட்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்