'Banks should extend full cooperation to govt welfare schemes' | பணம் பசியை ஏற்படுத்தாது; நல்ல மனம் வேண்டும்: ஜெயலலிதா பேச்சு - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பணம் பசியை ஏற்படுத்தாது; நல்ல மனம் வேண்டும்: ஜெ., பேச்சு

Updated : ஜூலை 27, 2012 | Added : ஜூலை 25, 2012 | கருத்துகள் (73)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோத்தகிரி: ""பணத்தால் சத்தான உணவுகளை வாங்கலாம்; பணம் பசியை ஏற்படுத்தாது,'' என, முதல்வர் ஜெ., பேசினார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கொடநாடு காட்சி முனை பகுதியில், "பாங்க் ஆப் இந்தியா' கிளையின், ஏ.டி.எம்., மையத்தை, மாநில முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்து பேசியதாவது: நாட்டின் பொருளாதாரம் செழிக்கவும், மக்களின் வாழ்க்கை தரம் உயரவும் வங்கிகள் ஆற்றும் பணிகளில் முன்னிலையில் இருப்பது, "பாங்க் ஆப் இந்தியா' என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த ஏ.டி.எம்., சேவை மூலம், இங்குள்ள மக்கள், தங்கள் கணக்கில் உள்ள பணத்தை தங்களுக்கு தேவைப்படும் நேரத்தில், தேவைக்கேற்ற அளவில் எளிதாக எடுத்துக் கொள்ள இயலும். சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள எனது விருப்பமாகும். சிறுதுளி பெரும் வெள்ளம், சிறுக கட்டி பெறுக வாழ் போன்றவை சிறுசேமிப்பின் இன்றியமையாமையை விளக்குகின்றன.


பணம் மட்டுமே வாழ்க்கையில்லை: அதே சமயத்தில், பணம் மட்டுமே வாழ்க்கையாகி விடாது. பணத்தை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் பெற்றுவிட இயலாது. பணத்தால் பெற இயலாதவையும் இந்த உலகத்தில் உண்டு. பணத்தால் நல்ல கட்டில், மெத்தை, தலையணை வாங்கலாம்; அவை மட்டுமே நமக்கு தூக்கத்தை கொடுக்காது. பணத்தால் சிறந்த சத்தான உணவு வகைகளை வாங்கலாம். ஆனால், பணம் பசியை ஏற்படுத்தாது. நோயை சரி செய்ய, மாத்திரைகளை பணத்தால் வாங்கலாம்; அழகு சாதனங்களை பணத்தால் வாங்க இயலும். ஆனால், பணத்தால் உடல் ஆரோக்கியத்தை பெற இயலாது. எனவே, பணத்துடன் நல்ல மனமும் வேண்டும். அதுவே எப்போதும் மகிழ்ச்சியை தரும். இவ்வாறு அவர் கூறினார்.


நிலமும், கட்டடமும் இலவசம்! நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில், பாங்க் ஆப் இந்தியாவின் ஏ.டி.எம்., மையம், புதுப்பிக்கப்பட்ட ஈளாடா கிளை ஆகியவை, முதல்வரால் நேற்று திறக்கப்பட்டது. இந்த ஏ.டி.எம்., மையத்திற்கான இடத்தை, கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் இலவசமாக அளித்ததுடன், கட்டடத்தையும் கட்டிக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Snake Babu - Salem,இந்தியா
26-ஜூலை-201214:04:57 IST Report Abuse
Snake Babu புதிய பொன்மொழி பத்தாயிரத்து பத்து................................
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
26-ஜூலை-201213:30:29 IST Report Abuse
T.C.MAHENDRAN பணம் பசியை ஏற்ப்படுத்தாது ,ஆனா பணம் "சசி" போன்றவர்களை உங்களுக்கு நண்பிகளாக ஏற்படுத்தும்(கொடுக்கும் ).
Rate this:
Share this comment
Cancel
Arasan - chennai,இந்தியா
26-ஜூலை-201212:44:42 IST Report Abuse
Arasan ஒரு ATM கட்டுறதுக்கு மிஞ்சி மிஞ்சி போனா எவ்வளவு நிலம் தேவை படும்.... அஞ்சுக்கு அஞ்சு சதுர அடி நிலம் இருந்தா போதும்ன்னு நினைக்கறேன்..... இவ்வளவு பெரிய நிலத்தை இந்தம்மா இலவசமா குடுப்பாங்களாம்..... ஆனா திருமண மண்டபம், பூங்கா, வங்கிகள் கட்டுவதற்கான சிறிய இடத்தை மக்கள் தரணுமாம்.... ரொம்ப நல்லா இருக்குங்க........ நான் உமி கொண்டாறேன் நீ அரிசி கொண்டுவா ரெண்டுபேரும் ஊத்தி ஊத்தி சாரி ஊதி ஊதி திம்போம் ...
Rate this:
Share this comment
Cancel
Arasan - chennai,இந்தியா
26-ஜூலை-201212:42:15 IST Report Abuse
Arasan இப்பத்தான் இந்தம்மாவுக்கு மனதின் (குணத்தின்) அருமை புரிந்துள்ளது.. இவ்வளவு நாள் பணம், பணம் என்று அலைந்து, திரிந்து, இப்போ அது இருக்கு இது இல்லை என்ற நிலைமை வந்த பின் புத்தி வந்து என்ன பயன், கண் கெட்ட பிறகு சூரிய நமஷ்க்காரம்... போல் இருக்கு இந்தம்மாவுடைய வியாக்கியானம்.
Rate this:
Share this comment
Cancel
Surya Mad - Mascow,ரஷ்யா
26-ஜூலை-201212:34:24 IST Report Abuse
Surya Mad என்னப்பா கதை மட்டும் தானா? குச்சி மிட்டாய் குருவி ரொட்டி இல்லையா? ரொம்ப வருத்தமா இருக்கு
Rate this:
Share this comment
Cancel
umarfarook - dindigul,இந்தியா
26-ஜூலை-201212:28:59 IST Report Abuse
umarfarook அப்போ உங்களுக்கு பசியே இல்லையா ?
Rate this:
Share this comment
ANBE VAA J.P. - madurai,இந்தியா
27-ஜூலை-201211:30:43 IST Report Abuse
ANBE VAA J.P.எந்த பசிய சொல்றீங்க? பாரூக் ...
Rate this:
Share this comment
Cancel
umarfarook - dindigul,இந்தியா
26-ஜூலை-201212:26:24 IST Report Abuse
umarfarook மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை ன்னு என்னைக்கோ வைரமுத்து சொல்லி விட்டார்
Rate this:
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
26-ஜூலை-201210:58:03 IST Report Abuse
ANBE VAA J.P. தினம் தோறும் உங்க செய்தி பத்திரிகைகள் ல வரணும்னு நீங்க நினைக்கிறது சரிதான் அதுக்காக கவுன்சிலேர்களோட அல்லகைகள் போன்ற ஆட்கள் திறந்து வைக்கின்ற வங்கி ATM மையத்தகூட நீங்க திறந்து வைக்கின்ற நிலைமையா ? அடுத்து எதாவது கழிப்பிடம், திறப்புவிழா எதுவும் உண்டா ?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-ஜூலை-201210:15:21 IST Report Abuse
Pugazh V "பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது"..என்றும், "மெத்த வாங்கினேன் தூக்கத்த வான்கள" என்றும் திரைப்பாடல்கள் வந்து வெகு காலம் ஆகிறதே ஆமாம், தமிழ் நாட்டில் இப்போ யாருக்காவது "பசிக்கவே இல்லை என்ன பண்றது" என்று ஏதாவது பிரச்னையா? "ஒரு வேளை உணவில்லை" என்பது தான் பலரின் பிரச்னை பணம் பசியை ஏற்ப்படுத்தாது - ஒரு கட்டிங் போட்டா கப கப-ன்னு பசிக்கும்
Rate this:
Share this comment
Cancel
Murugu - Nellai,இந்தியா
26-ஜூலை-201210:04:21 IST Report Abuse
Murugu யம்மா .. பேசியது நீயா ? பண பசி இல்லை என்றால் ஏன் பெங்களூரு கோர்டுக்கு நீங்களும் உடன் பிறந்த தங்கையும் நடக்கிறீர்கள். அங்கு என்ன வழக்கு நடக்கிறது ? மறந்து விட்டதா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை