ஆமதாபாத்: ""குஜராத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களுக்காக, நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன். அதேநேரத்தில், நான் குற்றவாளி எனில், என்னை தூக்கிலிடுங்கள்,'' என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உருது வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது:
மன்னிப்பு கோர மாட்டேன்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின், குஜராத் மாநிலத்தில் வன்முறைகள் நிகழ்ந்தன. அந்த நேரத்தில், நான் என்ன சொன்னேன் என்பதை, நீங்கள் சரி பாருங்கள். 2004ம் ஆண்டில், பத்திரிகை ஒன்றுக்கு நான் பேட்டி அளித்தேன். அதில், "வன்முறைகளுக்காக நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும். வன்முறைகளுக்கு எனது அரசு காரணம் எனில், என்னை பொது இடத்தில் தூக்கிலிடலாம்' எனக் கூறியிருந்தேன். அதையே இப்போதும் சொல்கிறேன். குஜராத் வன்முறைகளுக்காக நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் குற்றவாளி என்றால், என்னைத் தூக்கிலிடுங்கள். அதேநேரத்தில், நான் அப்பாவி என நிரூபிக்கப்பட்டால், எனது கவுரவத்தை சீர்குலைத்ததற்காக, ஊடகங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். அரசியல் நிர்பந்தங்களுக்காக என்னை குற்றவாளியாக்கினால், அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது. நான் குஜராத் மாநிலம் மற்றும் அதன் வளர்ச்சியில் மட்டுமே அக்கறை காட்டி வருகிறேன். பிரதமர் ஆவதைப் பற்றி நினைக்கவில்லை. இவ்வாறு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
எப்.ஐ.ஆர்., தேவை: நரேந்திர மோடியின் பேட்டி தொடர்பாக, மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறுகையில், ""குஜராத் வன்முறை சம்பவத்தில், தனக்கு எதிராக விசாரணை நடைபெற வேண்டும் என, முதல்வர் நரேந்திர மோடி விரும்பினால், அவர் அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். 12 ஆண்டுகளாக, முதல்வராக இருக்கும் மோடி மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியவில்லை எனில், அவரை எப்படி நீங்கள் குற்றவாளி என நிரூபிக்க முடியும். யார் அவரை தூக்கிலிட முடியும்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எல்லா அரசியல் வாதிகளும் ஒன்றுதான் ஆரம்பித்துவைத்தது காங்கிரஸ். என்றைக்கு எல்லாரும் சமமாக மதிக்கபடுகிரார்களோ அன்றுதான் விடிவு. காஷ்மீரில் இருந்து ஹிந்துக்கள் விரட்டப்பட்டபோடு காங்கிரஸ் தான் கை கட்டிக்கொண்டு இருந்தது. இந்திரா காந்தி இறந்தபோது சீக்கியர்கள் கொல்லப்பட்டபோது கை கட்டி கொண்டிருந்தது மட்டுமில்லாமல் ராஜீவ் சொன்ன வார்த்தை ஒரி பெரிய மரம் விழுந்தால் பூமி அதிரும் என்று. அதையேதான் மோடி சொல்லி இருக்கிறார். நாளைக்கு அஸ்ஸாம் முதல்வரும் சொல்வார். பிரதமர் உயிரும் தனி மனிதன் உயிரும் எப்போது சமமாக மதிக்கபடுகிறதோ அன்றுதான் விடிவுகாலம். மோடி ஆட்சியில் நடந்த விஷயம் தப்பு என்றாலும் அதைப்பற்றி பேச காங்கிரெஸ் க்கு துளியும் அருகதை இல்லை. இதுபோன்ற விஷயங்கள் நடந்ததிற்கும் நடப்பதற்கும் முழுமுதல் காரணம் காங்கிரஸ் தான்
2G / ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் ப.சிதம்பரமும் ""என் மீது தவறிருந்தால் என் நெஞ்சில் குத்திவிடுங்கள்"" என்று சொன்னார் இரு மாதங்களுக்கு முன்பு அப்போது அவருக்கு இந்த அளவு கண்டனக் கணைகள் கிட்டவில்லை ஆகவே ப.சிதம்பரத்தை விட மோதி அதிக முக்கியத்துவம் உள்ளவர் இனி அனைவராலும் நிச்சயம் விரும்பப்படுவார் சரிதானே திரு. புதியவன் ராஜ்?
நாலு மணிநேரம் லேட்டா வண்டி வந்திருந்தாலும்,,,, அதே கொலைவெறி தணியாம எரிச்சுக் கொலை பண்றதுக்கு என்ன ஒரு கொடூர மனம் வேண்டும்???? (அதிலும் வெளியே குழந்தைகளுடன் தப்பிக்க முயற்சித்த தாய்மார்களை மீண்டும் உள்ளே தள்ளி, தப்பிப் பிழைத்தவர்கள் உள்ளே இருக்க வாய்ப்புக் குறைவு என்று உறுதி செய்துகொண்ட பின்னரே அங்கிருந்து அகன்றுள்ளனர்).
Dear Editor
What I cant understand is no uniformstand is taken by the readers. KK utters similarly but no reaction except a few. Modi said it. OK. You have all the evidence and u are capable of holding evidences and charge sheet ,so why dont u prove and hang him? Today 27th Morning in One FM morning broad , a youth jockey was expressing the inability of certain impossibility, which can be called LAMENTING OVER THE SPLIT MILK. mEDIA SHALL THINK AND EXPRESS. If I want my son to become the PM, Iwill have to displace on some pretext people who might become hindrence. Who is the reak black sheep. What public is doinfg unaware ? Why media speaks without confirmation and steps to initiate?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.