Sharad pawar to attend TESO meet | "டெசோ' மாநாட்டில் பங்கேற்க வருகிறார் பவார்: மகிழ்ச்சியில் தி.மு.க.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

"டெசோ' மாநாட்டில் பங்கேற்க வருகிறார் பவார்: மகிழ்ச்சியில் தி.மு.க.,

Updated : ஜூலை 28, 2012 | Added : ஜூலை 26, 2012 | கருத்துகள் (73)
Advertisement

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசை சமீபத்தில் கதிகலங்கச் செய்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், "டெசோ' மாநாட்டில் பங்கேற்க உறுதியளித்துள்ளதால், தி.மு.க., தலைவர் கருணாநிதி மகிழ்ச்சிஅடைந்துள்ளார்.

"டெசோ' அமைப்பின் சார்பில், அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ள தமிழ் ஈழம் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில், மத்திய அமைச்சர் சரத்பவார் பங்கேற்பது உறுதியாகியுள்ளதால் வரும் 11ம் தேதியே அவர் சென்னை வருகிறார். சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. தி.மு.க., மாநாட்டில் அமைக்கப்படும் பிரம்மாண்டமான மேடை, பந்தல் முகப்பு போல, இந்த மாநாட்டிற்கும் அமைக்கப்படுகிறது. மாநாட்டில் பொருளாளர் ஸ்டாலின் வரவேற்கிறார். தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகிக்கிறார்.


சரத்பவார் பங்கேற்பு: சரத்பவார் பங்கேற்க வேண்டும் என, அவரை டில்லியில் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர். சரத்பவாரும் மாநாட்டிற்கு வர ஒப்புதல் அளித்துள்ளார். வரும் 11ம் தேதி சென்னைக்கு அவர் வருகிறார். அன்றைய தினம் தனது இலாகா தொடர்பான பணிகளையும் அவர் மேற்கொள்கிறார்.


பங்கேற்பா? புறக்கணிப்பா? சரத்பவார் வருகை உறுதியாகி விட்ட தகவல் கருணாநிதிக்கு தெரிய வந்ததும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மாநாட்டிற்கு பரூக் அப்துல்லா, சரத்யாதவ், ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோரும் கலந்து கொள்ளக் கூடாது என, சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், அவர்கள் பங்கேற்பார்களா? என்ற எதிர்பார்ப்பு மாநாட்டுக் குழுவினர் மத்தியில் எழுந்துள்ளது.


வெளிநாடு தலைவர்கள்: சரத்பவார், பரூக் அப்துல்லா, சரத்யாதவ், ராம்விலாஸ் பஸ்வான், ராம்கோபால் யாதவ், நைஜீரியா ஓஸிகேனா போய்டொனால்டு, அதுல் ரசாக் மோமோ, சுவீடன் நஸீம் மாலிக், மொராக்கோ டைடா முகம்மது, துருக்கி கெமால் இல்திரிம், மெராக்கோ அபெகோ முபாரக் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. நேற்று வெளியிட்ட அறிவிப்பில் "மாவை சேனாதிராஜா எம்.பி., சுமந்திரன் எம்.பி., யோகேஸ்வரன் எம்.பி., கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா சுஜேந்திரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், விக்கிரமபாகு கர்ணரத்தினே ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் யார்? யார்? வருவர், புறக்கணிப்பர் என்ற விவரமும் வரும் 12ம் தேதி தான் தெரிய வரும்.


- நமது நிருபர் -


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
28-ஜூலை-201202:06:16 IST Report Abuse
Bebeto சரத்பவார், பரூக் அப்துல்லா, சரத்யாதவ், ராம்விலாஸ் பஸ்வான், ராம்கோபால் யாதவ், நைஜீரியா ஓஸிகேனா போய்டொனால்டு, அதுல் ரசாக் மோமோ, சுவீடன் நஸீம் மாலிக், மொராக்கோ டைடா முகம்மது, துருக்கி கெமால் இல்திரிம், மெராக்கோ அபெகோ முபாரக் ஆகிய எல்லோருமே கருணாநிதி ராகம் தான். அதான் இனம் இனத்தோடு சேர்கிறது.
Rate this:
Share this comment
Cancel
ranjith - chennai,இந்தியா
27-ஜூலை-201218:26:23 IST Report Abuse
ranjith மத்தியில காங்கிரஸ் தமிழ் நாட்டுல திராவிட கட்சிகளையும் ஒழிச்சாத்தான் இந்தியா வல்லரசு + நல்லரசாகும் .அதுவரை இந்தியாவிற்கு சனி .
Rate this:
Share this comment
Cancel
Thamizhan - CHENNAI,இந்தியா
27-ஜூலை-201216:45:25 IST Report Abuse
Thamizhan Why Dr.Kalaignar has invited national politcal leaders because they are the ones who will help us to take concrete actions by Indian Government for the peaceful settlement of Srilankan Tamil issue .Otherwise All Tamils atting any conference no use,we need support of Indian government and people of India support,So Kalaignar has the maturity to take forward the srilankan Tamil issue for peaceful settlement.
Rate this:
Share this comment
Cancel
ASHOK KUMAR.S - tiruppur,இந்தியா
27-ஜூலை-201215:50:46 IST Report Abuse
ASHOK KUMAR.S மரியா அல்போன்ஸ் , 40 வருட காலம் துக்ளக் படித்தும் சோ வை ப பற்றி நீங்கள் புரிதுகொள்ளவில்லை .குழப்பம் அவரிடம் இல்லை .அவர் ஒரு நிலை கண்ணாடியை போன்றவர் . நம் அரசியல்வாதிகளின் நிஜ முகங்களை படம் பிடித்து காட்டுகிறார் .நம் நாடு செய்த புண்ணியம் , அவரை போன்ற நேர்மையாளர் நமக்கு கிடைத்தது .
Rate this:
Share this comment
Cancel
Shanmuga Vel - Bangalore,இந்தியா
27-ஜூலை-201215:21:22 IST Report Abuse
Shanmuga Vel சரத் பவார் வர்றார் . செருப்பு போட்டுட்டு வர்ற யாரையும் உள்ள விடாதீங்க
Rate this:
Share this comment
Cancel
Zubair Masood Mohamed Kassim - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூலை-201215:17:29 IST Report Abuse
Zubair Masood Mohamed Kassim தினமலர் - இலவச விளம்பரம் ,,,,
Rate this:
Share this comment
Cancel
Jey Narayanan - Mebourne,ஆஸ்திரேலியா
27-ஜூலை-201215:00:35 IST Report Abuse
Jey Narayanan அது சரி சோழியன் குடுமி சும்மாவா ஆடும்.
Rate this:
Share this comment
Cancel
babu - tiruchi,இந்தியா
27-ஜூலை-201214:34:18 IST Report Abuse
babu இலங்கையில் செத்து கொண்டு இருக்கும் போது சினிமா விழாக்களில் இங்குள்ள நடிகர்கள் கதா ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். செத்தவனுக்கு கருமாரி செய்யவே இப்பொது மா நடி பூசா நடத்த போகிறாங்க, பாதிப்பு வரும்போது அரசியல் பதிப்பு இல்ல முடித்த பின் அரசியல் செய்தால் தானே பிரச்சினை இல்லாமல் மதிப்பு பெற முடியும். இவுங்க எடுக்கிற சினிமாவுல வட நாடு நடிகர் பங்கேற்றால் இவர்களுக்கு பெருமை இவுங்களா நடத்துற உரிமை மாநாட்டுல வட நாடு கார்கள் வந்து இறங்கினால் கூடத்தில இவர்களுக்கு பெருமை, இதை அன்றே முன் வைத்து இருந்தால் எதனை வட நாடு காரன் தமிழனுக்கு ஆதரவாக் இருந்தார்கள், நமது முதல் குடிமகனும் தமிழனுக்கு ஆதரவாக் எதுவும் சொல்ல வில்லையே, இந்தியா அரசாங்க ரீதியாக சர்வேதச அளவில் தோற்று விட்டது, இதற்க்கு தமிழர்களின் பாது காப்பு கவசங்கள் தமிழர்களுக்கு தவசம் கொடுக்க மட்டுமே முடியும், தலைவர்கள் சரி இல்லை என்றால் நாம் தலைவர்கள் என்று கருதியவர்களை கண்டு நாம் தான் வெட்கமும் தலை குனிவும் கொள்ள வேண்டும். எம் ஜி ஆர் ராஜீவ் இருக்கும் போது பெங்களூரிலிருந்து உணவு மூடைகள் யாழ் பானத்தில் விமானத்தில் இருந்து தூவ பட்டன இபோதோ சோப்ளாங்கி பாய்ந்தொன்கொல்லி அரசியல் வாதிகள் மத்தியிலும் மாநிலத்திலும் இருப்ப தனால் அங்கு சண்டை நடந்த போது இங்கு சப்தம் இல்லாமல் பதுங்கி கொண்டனர், சுனாமி வந்தால் சூப்பர் ஆஸ்பத்திரி தானே வந்தால் சரிதானே இன படுகொலைகள் நடந்த போது இன பாதுக்காப்பு இளஞன் நானே என்று இன்று தவறி விட்டோம் என்கிற பழி சொல் வந்த பிறகு நாங்கள் விழித்து கொள்கின்றோம் என்கிற மாநாடு, பழி வரும்முன் விழி, நீங்கள் முன் அழி க்கவும் நாங்கள் பின் கழிக்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
maha - bangalore,இந்தியா
27-ஜூலை-201214:26:43 IST Report Abuse
maha ""பவார் இந்திய அரசியலில் ஒரு முக்கியத்தலைவர்""" .. மரியா திமுகவுக்கும் பவாருக்கும் திடீரேன்று ஏற்பட்டிருக்கும் நெருக்கத்தின் காரணம் என்ன என்று எங்களுக்கு தெரியும் .2g யில் கனிமொழியும் , இவர் மகள் சுப்ரியாவும் கஊட்டு களவாணிகள் . 2g வழக்கில் , கலைஜர் டிவிக்கு """" கடன் "" கொடுத்த எடிச்லாட் என்னும் கம்பனி, சுப்ரியாவின் பினாமி என்பது நீதிமன்ற விவாதங்களில் சொல்லப்பட்டுள்ளது . 2g வழக்கில் தன மகளை காட்டிக் கொடுக்காமல் இருந்த நன்றிக்காக பவார் இந்த சின்ன உதவியை செயாமல் இருப்பாரா? ஒரு காலத்தில் இவர் வளர்ப்பு மகன் கல்யாணத்துக்கு வந்து சிறப்பித்தவர்தான் . இன்று திமுகவின் கொள்லையில் பங்கு கொடுத்த நன்றிக்கு டேசொவுக்கு வருகிறார் . இதற்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rajendiran - CHENNAI,இந்தியா
27-ஜூலை-201214:16:29 IST Report Abuse
Ramesh Rajendiran இன்னமும் சுமார் 20 நாட்கள் இருக்கிறது,,சரத் பவர் கருணநிதியின் இனமா என்பது தெரிந்து விடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை