Rs. 300 crore allot for purify water ways in Tamilnadu | நீர்வழி தடங்களை சுத்திகரிக்க ரூ.300 கோடி நிதி: கூவம் ஆற்றில் நீச்சல் சாத்தியமாகும்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர்வழி தடங்களை சுத்திகரிக்க ரூ.300 கோடி நிதி: கூவம் ஆற்றில் நீச்சல் சாத்தியமாகும்?

Updated : ஜூலை 28, 2012 | Added : ஜூலை 26, 2012 | கருத்துகள் (30)
Advertisement

சென்னை: சென்னையின் பிரதான நீர்வழி தடங்களான அடையாறு, கூவம் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, 300 கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை நகரின் பொருளாதார மற்றும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, கட்டமைப்பு வளராததால், இயற்கை ஆதாரங்களில் கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால், கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் "செத்து'விட்டதாக அண்ணா பல்கலை, கடந்த வாரம், அரசிடம் அறிக்கை கொடுத்தது. அதன்படி, இந்த நீர்வழிகளில், கலக்கும் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதி கழிவுநீரால், ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து, எந்த வகை உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த ஆய்வு நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த நீர்வழிகளின் நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப் படுகிறது.


துவங்கவில்லை: முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது, அடையாறு, கூவம் ஆறுகள் சுத்தப் படுத்தப் படும் என்று, அறிவிக்கப் பட்டது. ஆனால், அதற்கான முதல்கட்ட பணிகள் கூட துவக்கப் படவில்லை. ஆய்வின் பேரில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சில "மாஜி'க்கள் சிங்கப்பூர் பயணம் மட்டும் மேற்கொண்டனர். இந்த நிலையில், சென்னையின் பிரதான நீர்வழி தடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, 337 இடங்களில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.


அரசு உத்தரவு: இது குறித்து,நேற்று, அரசு வெளியிட்ட அறிக்கை விவரம்: சென்னை நகர நீர்வழி பாதைகளில் கழிவுநீர் கலக்க கூடிய, கூவம் ஆற்றில், 105 இடங்கள்; பக்கிங்ஹாம் கால்வாயில், 183 இடங்கள், அடையாறில், 49 இடங்கள் என, 337 இடங்களில் கழிவுநீரை சுத்திகரிக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக, 150 கோடி ரூபாயை தவணை முறையில் சென்னை பெருநகர் குடிநீர் வாரியத்திற்கு விடுவிக்கவும் உத்தரவிடப் பட்டு உள்ளது. இதன்படி, பிரதான கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், சிறிய அளவிலான குழாய்களை அகற்றி, அதிக லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் உந்து குழாய்கள் அமைத்தல், சாலையோரம் சிறிய கழிவுநீரேற்றும் நிலையங்கள் அமைத்தல், ஏற்கனவே உள்ள கழிவுநீரேற்றும் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றம் ஏற்கனவே உள்ள சிறிய அளவிலான கழிவுநீர் குழாய்களை பெரிய குழாய்கள் கொண்டு மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படும். இதன் மூலம் சென்னையில் சுத்திகரிக்கப் படாத கழிவுநீர் ஆறுகளுடன் கலப்பது தடுத்து நிறுத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vramanujam - trichy,இந்தியா
27-ஜூலை-201216:52:50 IST Report Abuse
vramanujam எங்க வீட்டில் அந்த பத்து விதமான சரும பிரச்சனை வராது .ஏன் என்றால் நாங்கள் தினமும் கூவத்தில் குளிக்கிறோம் .
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
27-ஜூலை-201214:53:21 IST Report Abuse
g.s,rajan "Mudhalvar ninaithaal Mudiyum". Chief minister Jayalalitha can do it,but it will be a great challenge like Veeranam Project. g.s.rajan,chennai
Rate this:
Share this comment
Cancel
T.G.BALASUBRAMANIAN - Chennai,இந்தியா
27-ஜூலை-201210:34:01 IST Report Abuse
T.G.BALASUBRAMANIAN நல்ல முயற்சி. நிறைவேறினால் நன்றாக இருக்கும். கையூட்டு இன்றி நேர் வழியில் சென்று முன்னேற்றத்திற்கு உழைத்தால் நிச்சயம் கூவம் மணக்கும். முடியாது என்பது முட்டாள்களின் வாதம்.
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
28-ஜூலை-201207:56:09 IST Report Abuse
மதுரை விருமாண்டிமுடியாது என்பது முட்டாள்களின் வாதம்..இது இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் முடியும் என்று சொல்வது பகல் கனவு, விதண்டாவாதம் .. ஆளுங்கட்சியும், அரசுத் துறையும் மூச்சு விடாமல் கூட இருந்திடுவான் .. கையை நீட்டாமல் இருந்தால் செத்துப் போய் விடுவான்......
Rate this:
Share this comment
Cancel
Ramalakshmi Srinivasan - chennai ,இந்தியா
27-ஜூலை-201210:22:52 IST Report Abuse
Ramalakshmi Srinivasan தி மு க ஆட்சியில் கூவம் மணக்கிறது என்று மூன்று முறை பல கோடிகளை கொட்டி மணக்க வைத்தார்கள். இப்பொழுது அ தி மு க முறை. முன்நூறு கோடியில் கூவம், பாகின்ஹாம் கால்வாய், அடையாறு எல்லாம் இன்னும் ஒருமுறை சென்னையில் மணக்கப்போகிறது. கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை என்று ஒரு பழமொழி உண்டு. அந்த கணக்காக வேறு வழி இல்லாமல் மக்கள் ஜெ..வை தூக்கி ஆட்சியில் வைத்து விட்டார்கள். எல்லா ஆட்சியும் ஊரை அடித்து உலையில் போட்ட ஒரே லட்சணம் தான்.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
27-ஜூலை-201208:58:14 IST Report Abuse
Pannadai Pandian செம்மொழி மாநாட்டின் ஆய்வின் போது கோவையில் பல மில்கள், பரூக் பான்ட், தொண்டாமுத்தூர், வெள்ளிங்கிரி, அவினாசி ரோட் போன்ற இடங்களில் நிலம், சொத்துக்களை பறித்தனர். சிங்கப்பூரில் ஆய்வு மேற்கொண்டபோது புது புது பினாமிகளை உருவாக்கினர்.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
27-ஜூலை-201208:55:12 IST Report Abuse
Pannadai Pandian கூவம்-பக்கிம்ஹாம் கால்வாய் திட்டம் நிறைவேற அதில் முதலில் வேண்டிய அளவு தண்ணீர் வேண்டும். தற்போது ஓடுவதோ கழிவு நீர். இந்த நீரையும் கூவத்தில் கலப்பதை நிறுத்திவிட்டால் கூவம் வறண்டு சிறுவர்கள் கிரிக்கெட் ஆட ஆரம்பித்து விடுவார்கள். ஆந்திர அரசு ஒத்துழைத்து வேண்டிய நீரை கொடுத்தால் காக்கி நாடாவில் இருந்து சென்னை வரை நீர்வழித்தடத்தை அழகாக ஆரம்பிக்கலாம். இந்த நீர்வழித்தடம் ஆங்கிலேயர்கள் காலத்தில் நன்றாக நடந்து கொண்டிருந்தது என்பதை நாம் மறக்க கூடாது. கூவத்தில் பெரிய பார்ஜஸ் மூலம் லோடுகள் அதிகம் உள்ள சிமென்ட், கட்டுமான பொருட்கள், இரும்பு கம்பிகள், குழாய்கள், மணல் போன்றவற்றை எடுத்து செல்லலாம். இதனால் நில தரைவழி போக்குவரத்தில் உள்ள நெரிசல்கள் குறைக்கப்பட்டு செலவும் குறைக்க செய்யலாம். ஆனால் ஒன்று, இதனை ஆந்திர -தமிழ்நாடு அரசுகள் ஒப்பந்தம் போட்டு நிறைவேற்ற வேண்டும். கூவத்தின் கரைகள் ஒழுங்கு செய்யப்பட்டு ரிவித்மென்ட் கட்ட வேண்டும். அப்படி ரிவித்மென்ட் கட்டினால்தான் சிறு கப்பல்கள், பார்ஜஸ் கரை ஓரத்தில் வரமுடியும் சரக்குகளை இறக்க முடியும். தற்போது இருக்கும் குப்பை கூளங்கள், மணல் திட்டுக்கள், கூவம் ஓரத்தில் இருக்கும் குடிசைகளை அகற்றி நதியின் இரு பக்கங்களிலும் பூங்காக்கள் 30 அடி அகலத்துக்கு அமைக்க வேண்டும். நகரம் முடிவுறும் இடத்தில் இருந்து இரு பக்கங்களிலும் மரங்களை வளர்க்க வேண்டும். சில முக்கிய இடங்களில் கரை ஓரங்களில் கிரேன்கள் அமைக்கப்பட்டு கட்டுமான பொருட்களை லாரியில் தூக்கி லோட் செய்யும் வகையில் சிந்தித்து செயல் பட வேண்டும். இதெல்லாம் நமது மக்கள், அரசின் சிந்தனைகளில் வருமா என்றால் கண்டிப்பாக வராது. இதுதான் தோல்வியின் தொடக்கம். நமது நாட்டை நேரு மொழிவாரி ராஜ்யங்களாக பிரித்து எல்லாவிதத்திலும் ஒருவித தடையை ஏற்ப்படுத்தி விட்டனர். நம் நாட்டுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு அரசுகளிடம் இருக்கும் புரிந்துணர்வுகள் கூட இல்லாமல் தவிப்பது ஒரு கேலிக்கூத்து.
Rate this:
Share this comment
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
27-ஜூலை-201211:53:40 IST Report Abuse
பாமரன்பாண்டியன்...நீங்கள் கூறிய அனைத்தும் சாத்தியமானவைதான். அதற்கான உதாரணம், நீங்கள் இருக்கும் சீனா. உங்களுக்கே தெரியும், இன்று 3 Gorges அணையிலிருந்து ஷாங்காய் வரை தடையில்லாத நீர் வழி போக்குவரத்து சுலபமாக நடந்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் Lift shift மூலம் ஷாங்காய் ல் புறப்படும் கப்பல் 168 மீட்டர் உயரமான 3 Gorges அணையை கடந்து மேலும் செல்ல முடியும். இதெல்லாம் அங்கே செய்ய முடிந்ததற்கு காரணம் இரும்பு கரம் கொண்டுள்ள அரசாங்கம். ஏறத்தாழ 3 கோடி மக்களை இருப்பிடத்தை மாற்றவைத்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் இந்த மாபெரும் திட்டத்தை முடிக்கும் அந்த அரசு எங்கே, சில நூறு பேரின் சுயநலத்துக்கு துணை போய் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இணைப்பு சாலை திட்டத்தை நிறுத்தி வைத்துள்ள உங்க புரட்டு தலைவலி அரசு எங்கே???? இங்கே யாருக்கும் வெக்கமில்லை, தைரியமும் இல்லை.......
Rate this:
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
27-ஜூலை-201216:04:04 IST Report Abuse
ஆரூர் ரஙஒரு விஷயம் தெரியுமா? கூவத்தின் அழுக்கு புராணம் என்ன/ . சென்னை துறைமுகம் விரிவாக்கப்பட்டபோது, கூவம் அடையாரின் முகத்துவாரம் மண்மேடிட்டுவிட்டது. அதாவது நதி கடலில் போய் சேருவது கடினம்.கடல் நீர் மட்டம் ஏறும் நாட்களில் மட்டும் உப்புநீர் உள்வரும். மற்றபடி கூவத்தில் சேரும் மழை நீர் மிகக் குறைவு. அதுவும் கடலுக்குப் போகமுடியாது. கூவக் கரையில் வசித்து வரும் மக்கள் சுமார் 300000 மக்களை அப்புறப்படுத்துவதென்பதை எந்தக் கட்சியும் விரும்பாது, பெரும் வாக்குவங்கியாயிற்றே தொழிற்சாலைக் கழிவுகள் மிகக் குறைவு.,பாதாளசாக்கடை நீரும் பெருமளவு சுத்திகரிகப்பட்டே கூவத்தில் விடப்படுகிறது.அதிகரித்துவிட்ட மக்கள் நெருக்கமும், அவர்கள் போடும் குப்பைக் கூளங்களால் கால்வாய்கள் அடைபட்டதும்தான் முக்கிய பிரச்னைகள். வாக்கு வங்கி பயத்தில் எந்தக் கட்சியும் அவற்றில் கைவைககாது. மற்றபடி ஆந்திரா நீர் கானல்நீர். தெலுங்கு கங்கையில் ஒப்புக்கொள்ளபட்ட்ட 15 TMC கூட வந்ததேயில்லை. ஆறு TMC தான் அதிக பட்சம். மென்மேலும் நீர் கேட்டால் பாலாற்றில் இன்னும் பத்து அணை கட்டி உள்ளத்துக்கும் வேட்டு வைப்பர் மற்றபடி அம்பத்தூர் போன்ற குடிநீர் ஏரிகளில் தட்டிக் கேட்கவே ஆளில்லாமல் மாடு குளிப்பாட்டி துணி துவைக்கும் சென்னை மாநகரவாசிகள் நல்ல நீர் பெற தகுதியானவர்களா? ...
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
27-ஜூலை-201216:13:09 IST Report Abuse
Pannadai Pandianகடைசியில நல்லா விளக்கெண்ணையை முதுகில தடவி சுளுக்கேடுத்துட்டியே ...
Rate this:
Share this comment
K.Sugavanam - salem,இந்தியா
27-ஜூலை-201223:13:54 IST Report Abuse
K.Sugavanamஅங்கே லஞ்சம் நம்ப ஒரைவிட ரொம்ப கம்மி.மாட்டினால் பர லோகம் தான்.இங்க மேற்றோதிட்டமே தள்ளாடுது.கட்டுமானம் பற்றி எவனும் கவலை படுவதில்லை.மாட்டினாளும்கொடிக்கனக்கில் தள்ளிவிட்டுட்டு ஹாய்யா போயிடறாங்க.அப்புறம் த்ரீ கார்ஜெஸ் எல்லாம்கன்வுல கூட நினைக்க முடியாது. ...
Rate this:
Share this comment
Cancel
subailangovan - muscat,ஓமன்
27-ஜூலை-201208:46:16 IST Report Abuse
subailangovan இதுவரை இருந்த அரசுகள் தொலைநோக்கோடு சிந்திக்காமல் செய்ததின் பலன்தான் இது நீர் மேலாண்மை என்பது பண்டைய தமிழர்களின் வாழ்வம்சம் தண்ணீர் சிக்கனம் நமக்கு தெரியாது கழிவுநீரை மறு சுழற்சி மூலம் குடிநீர் அல்லாத இதர உபயோஹங்களுக்கு பயன் படுத்தலாம் அப்போது குறைந்த அளவு திடக்கழிவு மிஞ்சும்.திடக்கழிவை எரித்து அழிக்கலாம் அனால் நம்மவர்கள் பாதாள சாக்கடை திட்டம் என்று சொல்லி மொத்தத்தையும் கொண்டுபோய் கூவத்தில் விட்டால் பின் என்னவாகும்? கால்வாய்கள் பெருகிவரும் மக்கள் தேவைகேற்ப பெரிதாக இருக்க வேண்டும். இருபது வருசத்துக்கு முன் சென்னையின் மக்கள்தொகைக்கேற்ப வடிவமைக்கப்பட கால்வாய்கள் இப்போது எப்படி தாங்கும்? சென்னையில் இருந்த நீர் ஆதாரங்களை எல்லாம் ஏரி scheme என்று சட்டபூர்வமாக பிளாட் போட்டு விற்றுவிட்டார்கள்.மீதமுள்ள இடங்களில் ஆக்கிரமிப்பின் பிடியில் அரசுகளை நடத்தியவர்கள் நீர் மேலாண்மை குறித்து தங்களது கடமையை கண்டுகொள்ளவில்லை சரியாக திட்டமிட்டு செயல்படுத்தி இருந்தால் தண்ணீருக்கு பிறரிடம் கையேந்தவேண்டியதில்லை, இப்போதும் கூட பாதாள சாக்கடை திட்டம் மூலம் நகராட்சிகளில் வேலை நடக்கிறது ஆனால் எந்த அளவு கழிவுநீர் வெளியேறும் என்பது சந்தேகம், ஏனென்றால் நாம் மேட்டிலிருந்து பள்ளத்திற்கு நீரைக்கடத்தும் புராதனமான முறையை பயன்படுத்துகிறோம்,உறிஞ்சு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை திண்டுகல்லில் பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு தண்ணீரை ஏற்றுகிறார்கள். இப்படித்தான் எல்லா நகராட்சிகளிலும் இருக்கும், நகராட்சி பொறியாளர்கள் நிலத்தை சர்வே செய்து எது பள்ளம் மேடு என்று பார்க்காமல் குழிதோண்டி பைபை போட்டு மூடிவிட்டார்கள் ஒரு மணிநேர கனமழைக்கு தாங்காது நம்முடைய வடிவமைப்பு தொழில்நுட்ப ரீதியாக நிறைய மாற்றம் செய்தாலொழிய அரசின் திட்டங்கள் பயன்பெறாதுஇது ஊழலையே ஊக்குவிக்கும் சுப இளங்கோவன். மஸ்கட்.
Rate this:
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
27-ஜூலை-201208:32:39 IST Report Abuse
Indiya Tamilan கூவம் ஆற்றில் நீச்சல் எல்லாம் சாத்தியமாகாது எல்லா திட்டங்களிலும் ஊழல்தான் சாத்தியமாகும்.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
27-ஜூலை-201208:02:29 IST Report Abuse
rajan எல்லோரும் பணத்த மக்கள் கொட்டி நீச்சலடிச்ச இடம். கொட்டுங்கோ நீங்களும் உங்க பங்குக்கு.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
27-ஜூலை-201206:58:00 IST Report Abuse
ஆரூர் ரங முதலில் கூவம் மணக்கிறது என்று கூறி பல கோடிகளை அதில் வீணடித்தவரை அதே கூவத்தில் தளளிவிடுங்கள். அவரே ஒரு கட்டுமரம். தப்பிக்கிறாரா பார்ப்போம்
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
27-ஜூலை-201210:11:20 IST Report Abuse
Pannadai Pandianகேக்கறவன் கேணையனாய் இருந்ததால கூவம் மணக்கிறது என்றார். கூவத்தில் படகு, பூங்காக்கள் என்று நிறைய பணத்தை ஆட்டையை போட்டார். காசு கொடுத்தவன் கேட்டபோது ரெண்டு மூணு முதலைகளை விட்டு, கூவம் பக்கமே தலை வைத்து படுக்காமல் செய்தார். தற்போது மக்கள் பலம் குறைந்ததினாலும் நக்கல் வியாக்கியானம் ஆகிவிட்டதாலும், வாலை கொஞ்சம் சுருட்டி கொண்டிருக்கிறார்....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
27-ஜூலை-201212:34:40 IST Report Abuse
Pannadai Pandianமக்கள் வியாக்கியானம் ஆகிவிட்டதாலும்.........................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை