லண்டன்: ""லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட தயாராக இருக்கிறேன்'' என, ஜமைக்காவின் "மின்னல் வேக' வீரர் உசைன் போல்ட் தெரிவித்தார்.
கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் உசைன் போல்ட் இம்முறையும் 100 மீ., 200மீ., ஓட்டத்தில் அசத்தவுள்ளார். இது குறித்து போல்ட் கூறியது: போட்டியில் விளையாட நான் தயாராகவுள்ளேன். தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயம் சிறிது என்னை பாதித்தது. ஆனால் கடந்த இரண்டரை வாரங்களாக பயிற்சியில் ஈடுபட்டதன் மூலம், தற்போது குணமடைந்து விட்டேன்.
ஒலிம்பிக்கில் தேசியக்கொடியை ஏந்திச் செல்வதை கவுரமாக கருதுகிறேன். என் நாட்டிற்காக எதுவும் செய்வேன். நான் அதிகாலையிலும், சக வீரர் பிளேக் மாலையிலும் பயிற்சியில் ஈடுபடுவதாக மக்கள் சொல்கிறார்கள். ஆனால் இது உண்மையில்லை. ஏனெனில் இருவரின் பயிற்சியில் எந்த மாற்றமும் இல்லை. சூழ்நிலை மட்டுமே மாறியிருக்கிறது. மேலும் மிகப்பெரிய வீரராக உருவெடுப்பது மட்டுமே என் இலக்காகும். இதை அனைவரும் அறிவர். போட்டியின் தொடக்கத்தை பற்றி எந்தவிதமான கவலையும் இல்லை. கடந்த காலங்களில் நல்ல துவக்கம் இல்லாமல்தான் இருந்தது. எனவே போட்டியை பற்றி மட்டும்தான் கவனத்தில் கொள்கிறேன். நெருக்கடிக்கு உட்படாமல் இருந்தால், உறுதியாக வெற்றி பெறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.