திருச்சி:திருச்சி கலைஞர் அறிவாலயத்துக்காக, நிலத்தை அபகரித்த வழக்கில், தி.மு.க., முன்னாள் துணைமேயர் அன்பழகன், மாவட்ட துணைச் செயலர் குடமுருட்டி சேகர் ஆகியோரின் கார் ஓட்டுனர்களை, நேற்று போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், தி.மு.க., ஆட்சியில், திருச்சி மாவட்ட, தி.மு.க., தலைமையகமான கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
நிலஅபகரிப்பு புகார்:
அ.தி.மு.க., ஆட்சி மாறிய சில மாதங்களில், "முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், துணைமேயர் அன்பழகன், குடமுருட்டி சேகர் உள்ளிட்டோர் தன்னை மிரட்டி, தன் நிலத்தை அபகரித்து, கலைஞர் அறிவாலயம் கட்டினர்' என, சீனிவாசன், போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.அதையடுத்து, நிலஅபகரிப்பு மீட்புப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தி.மு.க., "மாஜி' அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், அன்பழகன், குடமுருட்டி சேகர் ஆகியோரை கைது செய்து, பல்வேறு சிறைகளில் அடைத்தனர். உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று, நேரு உள்ளிட்டோர் சிறையில் இருந்து வெளியே வந்தனர். அதன்பின்னர், இவ்வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருந்து வந்தது.
ஓட்டுனர்கள் கைது:
நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடைய, தி.மு.க., முன்னாள் துணைமேயர் அன்பழகன் கார் ஓட்டுனர் துளசி மற்றும் மாவட்ட துணைச்செயலர் குடமுருட்டி சேகரின் கார் ஓட்டுனர் விஸ்வநாதன் ஆகியோரை, நில அபகரிப்பு மீட்புப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் நீதிபதி ராஜாராம், 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இருவரும் திருச்சி மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
"மாஜி'க்கு சிக்கல்:
அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், திருச்சி, தி.மு.க.,முன்னாள் அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம், "ஆட்டம்' போட்ட நிர்வாகிகள் காஜாமலை விஜய், குடமுருட்டி சேகர் உள்ளிட்டோர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தன. தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்த நேரு, உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்று வெளியே வந்தார்.இந்நிலையில், அவரது தம்பி ராமஜெயம் மர்மமான முறையில் கொல்லப்பட்ட பின், நேரு மீது புதிய வழக்குகள் தொடரப்படவில்லை. இந்நிலையில், நில அபகரிப்பு வழக்கில் தற்போது, தி.மு.க., நிர்வாகிகளின் ஓட்டுனர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக மீண்டும் நேருவுக்கு சிக்கல் ஆரம்பமாகியுள்ளதாக, திருச்சி தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அது சரி, ராசாத்தி அம்மாள் நடத்திய FURNITURE கடையில் வேலை செய்யும் ஆள் சென்னையில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை வாங்கும் தகுதி படைத்திருக்கிறார். கருணாவின் வீட்டில் வேலை செய்பவர்கள் கூட திமுகவின் ஆட்சியில் கோலோச்சி கொண்டிருந்தார்கள். கருணாவின் சக்கர நாற்காலியை தள்ளி கொண்டு செல்பவர் கூட செல்வாக்குடன் இருந்தார்கள். அவரை போல தானே அவர்களது கட்சி காரர்களும் இருப்பார்கள். திருச்சி திமுகவினரின் அராஜகம் தான் சில மாதங்களுக்கு முன்னால் செய்திகளில் அடிப்பட்டதே. இதே நேருவை பார்த்து கருணா "உச்சி பிள்ளையாரின் கோவிலை விட்டு வையப்பா" என்று அவரது நில வளைப்பு மற்றும் அபகரிப்பு திறமையை கண்டு உச்சி முகர்ந்தாரே. அந்த கட்சியில் உள்ளவர்களது ஓட்டுனர்கள் கூட சோடை போக மாட்டார்கள் என்பதற்கு இதை விட என்ன அத்தாட்சி வேண்டும். DMK ROCKS ,, ALWAYS . .
நில அபகரிப்பு வழக்கை பொறுத்தவரை இன்றைக்கும் ரெகார்ட் பிரேக் டான்சி நில பேர உழல்தானம், அதுல போட்ட கையெழுத்தையே போடலன்னு சாதித்த புரட்சியும் இதுதானாம். டிரைவரை கைது பண்ணிட்டோம் , கிளினரை கைது பண்ணிட்டோம் வாட்ச்மேனை கைது பண்ணிட்டோம்னு ஒரு அறிவிப்பு அதுக்கு வரிந்து கட்டி வக்காலத்து வேற. இந்த ஒருவருட கொலை கொள்ளை கற்பழிப்பு கலவரம் துப்பாக்கி சூடு இதில் எதையுமே கண்டுபிடிக்க வக்கில்ல இதுல டிரைவர் வாட்ச்மேனுனு போட்டு கையாலகாததனத்தை மூடி மறைக்க ஏற்பாடு ச்சே.. இதெல்லாம் ஒரு பொழப்பு
ஆகாச அலைவரிசை கொள்ளையடிச்ச ஆராசா, ஆகாசவாணி கணிமொழி, ஆந்திர சரத் குமார் றொட்டி, ஆகியோரை ஆறு மாசம் ஒரு வருஷம் என்று அடைச்சும் பாத்தாங்கதானே ஆராச்சும் கிறுங்கினாங்களா கலைஜர் ஆதரவுடன் வெளியே வந்து தியாகி ரேஞ்சுக்கு வரவேற்பு கிடைக்கல்லியோ, நில அபகரிப்பு என்ன தப்பா?? அறிவை வளர்க்க அறிவாலயம் கட்டுறதே தப்புன்னா அத ஆரிடம் முறையிட முடியும்?? சென்னை அண்ணா அறிவாலயத்து பேரிலேயும் நில அபகரிப்பில் கேசு போடப்போறதாக அறிவிப்பு வந்தது. ஐயன் என்ன பயந்தா போனாரு புள்ளி விபரம் எடுத்து விடலியோ?? இப்போ தலைவர் உடல் உளநிலை பாதிக்கப்பட்டிருக்கும் தருணம் பார்த்து கைத்தடிகளை உள்ள போட ஆளுங்கட்சி சந்தற்பம் பார்த்து திட்டமிட்டு சதி செய்கிறது, இது டெசோ மாநாட்டின் எழுச்சியை மழுங்கடிக்க எடுக்கும் சதி என்பதை ஒவ்வொரு உடன்பிறப்பும் அறிவான் இதுபற்றி டெசோ குடும்ப எழுச்சி மாநாட்டில் உயர் மட்ட தீர்மானம் நிறைவேற்றி நண்பன் குடியரசு தலிவர் மூலம் சோனியாஜியிடம் கொடுத்து கேசு முழுவதையும் சிபிஐ க்கு மாத்தி வெளியே வந்திட மாட்டோமா என்ன???
ஆகாச அலைவரிசை கொள்ளையடிச்ச ஆராசா, ஆகாசவாணி கணிமொழி, ஆந்திர சரத் குமார் றொட்டி, ஆகியோரை ஆறு மாசம் ஒரு வருஷம் என்று அடைச்சும் பாத்தாங்கதானே ஆராச்சும் கிறுங்கினாங்களா கலைஜர் ஆதரவுடன் வெளியே வந்து தியாகி ரேஞ்சுக்கு வரவேற்பு கிடைக்கல்லியோ, நில அபகரிப்பு என்ன தப்பா?? அறிவை வளர்க்க அறிவாலயம் கட்டுறதே தப்புன்னா அத ஆரிடம் முறையிட முடியும்?? அண்ணா அறிவாலயத்து பேரிலேயும் நில அபகரிப்பில் கேசு போடப்போறதாக அறிவிப்பு வந்தது. ஐயன் என்ன பயந்தா போனாரு புள்ளி விபரம் எடுத்து விடலியோ?? இப்போ தலைவர் உடல் உளநிலை பாதிக்கப்பட்டிருக்கும் தருணம் பார்த்து கைத்தடிகளை உள்ள போட ஆளுங்கட்சி சந்தற்பம் பார்த்து திட்டமிட்டு சதி செய்கிறது, இது டெசோ மாநாட்டின் எழுச்சியை மழுங்கடிக்க எடுக்கும் சதி என்பதை ஒவ்வொரு உடன்பிறப்பும் அறிவான் இதுபற்றி டெசோ குடும்ப எழுச்சி மாநாட்டில் உயர் மட்ட் தீர்மானம் நிறைவேற்றி நண்பன் குடியரசு தலிவர் மூலம் சோனியாஜியிடம் கொடுத்து கேசு முழுவதையும் சிபிஐ க்கு மாத்தி வெளியே வந்திட மாட்டோமா என்ன???

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.