"மத்திய அமைச்சர் பதவியை தயாநிதி தவறாக பயன்படுத்தி, ஏர்செல் நிறுனத்தை மேக்சிஸ் நிறுவனம் வசம் செல்ல வைத்தது உண்மையே. இந்த விஷயத்தில், அண்ணன், தம்பி இருவருமே தீவிரமாக செயல்பட்டு, முறைகேடுகளை அரங்கேற்றியுள்ளனர்.
சிவசங்கரனின் தொழில்களை ஒன்றுமில்லாமல் செய்து, நாசமாக்கியுள்ளனர். குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் அடிப்படை முகாந்திரம் இருப்பதென்பதும் உண்மையே' என, பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு அளித்துள்ள அறிக்கையில், சி.பி.ஐ., சுட்டிக்காட்டியிருக்கிறது.மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தின் தலைவரான சிவசங்கரன், தனக்கு "ஸ்பெக்ட்ரம்' வேண்டி விண்ணப்பித்தார். அவரது கோரிக்கையை கிடப்பில் போட்டு காலம் தாழ்த்திய தயாநிதி, ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்று விடும்படி மறைமுகமாக நிர்பந்தப்படுத்தியுள்ளார். வேறு வழியின்றி, ஏர்செல் நிறுவனம் மேக்சிஸ் கைகளுக்கு மாறியது. இதன்பின், மள மளவென "ஸ்பெக்ட்ரம்' லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. இதற்கு பிரதி உபகாரமாக "சன் டைரக்ட்' நிறுவனத்திற்கு, மேக்சிஸ் நிறுவனம் சார்பில், 550 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின.
அறிக்கை சமர்ப்பிப்பு:
இதையடுத்து சி.பி.ஐ., விசாரணை நடத்தி வந்தது. இந்த சர்ச்சை, கடந்த ஓராண்டாக நீடித்து வரும் நிலையில், தன் விசாரணை அறிக்கையை, கடந்த 12ம் தேதி பார்லிமென்ட் கூட்டுக்குழு முன் சி.பி.ஐ., சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:கடந்த 2004 முதல் 2007 வரை, மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி, தன் பதவியை முற்றிலும், சட்டத்திற்கு விரோதமாக பயன்படுத்தியுள்ளார். ஏர்செல் நிறுவனம் கேட்டிருந்த, "ஸ்பெக்ட்ரம்' லைசென்ஸ்களை தாமதப்படுத்தியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. தாமதப்படுத்துவதற்கான உறுதியான காரணங்கள் எதுவும் இல்லை. ஆனாலும், வேண்டுமென்றே அந்நிறுவனத்திற்கு "ஸ்பெக்ட்ரம்' லைசென்ஸ்கள் வழங்கப்படாமல், இழுத்தடிக்கப்பட்டுள்ளன. ஏர்செல் நிறுவனத்தை, தொலைத் தொடர்பு தொழிலில் இருந்தே விரட்டியடிக்கும் நோக்கில், இவ்வாறு செயல்பட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
நிர்பந்தம்:
ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நாட்டின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்று விடும்படி அந்நிறுவனத்தின் தலைவர் சிவசங்கரனுக்கு நிர்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிவசங்கரனோ தன் நிறுவனத்தை விற்க விருப்பம் தெரிவிக்கவில்லை. அப்போது அமைச்சராக இருந்த தயாநிதியும், அவரது சகோதரர் கலாநிதியும், இப்பிரச்னையில் தாங்களே நேரடியாக களம் இறங்கி, தீவிரமாக நெருக்கடி அளித்துள்ளனர். இவர்களின் தலையீடு அதிகமாக இருந்துள்ளது.அமைச்சரும், அவரது சகோதரரும் ஏர்செல் நிறுவனத்தை, மேக்சிஸ் நிறுவனத்திற்கு செல்ல வைப்பதில், தனி ஆர்வமும், தீவிரமும் காட்டினர் என்பதற்கு அடிப்படை முகாந்திரங்கள் நிறையவே உள்ளன.
விரைவாக லைசென்ஸ்கள்:
இவர்களின் தீவிரமான நெருக்கடி காரணமாக, வேறு வழியின்றி மேக்சிஸ் நிறுவனம் வசம் ஏர்செல் நிறுவனம் போயுள்ளது. அவ்வாறு போன பிறகு, வேக, வேகமாக லைசென்ஸ்கள் மேக்சிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. அதுவரை இழுத்தடிக்கப்பட்டு காலதாமதம் செய்யப்பட்ட லைசென்ஸ்கள், நிறுவனம் கைமாறியவுடன் விரைவாக அளிக்கப்பட்டிருப்பதும் உண்மையே.
இவ்வாறு ஒருபுறம், லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளையில், இன்னொரு புறம் பிரதி உபகாரமாக, லஞ்சப் பணப் பரிவர்த்தனை நடந்து முடிந்துள்ளது. அதாவது, ஆஸ்ட்ரோ என்ற நிறுவனம், மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம். இந்த ஆஸ்ட்ரோ நிறுவனமானது, அமைச்சராக இருந்த தயாநிதியின் சகோதரருக்கு சொந்தமான, சன் குழுமத்தின் பங்குகளை வாங்கியுள்ளது. சாதாரணமாக வெறுமனே வாங்கவில்லை. சன்குழுமத்தின் ஒவ்வொரு பங்குக்கும், பிரீமியமாக 69 ரூபாய் 75 பைசா வரை கூடுதலாக கொடுத்து, வாங்கியுள்ளது.
பங்களிப்பு அதிகம்:
இதே காலகட்டத்தில், மேக்சிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த ரால்ப் மார்ஷல் என்பவர், மத்திய அமைச்சர் தயாநிதி மற்றும் கலாநிதி ஆகிய இருவருடனுடம் தீவிர தொடர்பில் இருந்துள்ளார். இதற்கான ஆதாரங்களும் உள்ளன. ஏர்செல் நிறுவனம், மேக்சிஸ் நிறுவனத்திற்கு கைமாறியதிலும், இழுத்தடிக்கப்பட்ட லைசென்ஸ்கள் வேக, வேகமாக பிறகு வழங்கப்பட்டதிலும், சன் குழுமத்தின் பங்குகளை, கூடுதல் விலை கொடுத்து ஆஸ்ட்ரோ வாங்கியதிலும், தயாநிதி, கலாநிதி ஆகிய இரண்டு பேரின் தலையீடுகள், தீவிரமாகவும் அதிகமாகவும் இருந்துள்ளன. தவிர, ஏர்செல் நிறுவனத்தின் தலைவர் சிவசங்கரனது தொழில் வர்த்தக தொடர்புகளை நாசப்படுத்தி, அவற்றை ஒன்றுமே இல்லாமல் செய்திருப்பதிலும், இந்த இருவரது பங்களிப்புகளும் அதிகமாகவே உள்ளன.
லஞ்சப் பணம்:
ஒட்டு மொத்த முறைகேட்டின் மூலம், பிரதி உபகாரமாக வந்த லஞ்சப் பணம் என்பது 550 கோடி ரூபாய். மிகவும் துல்லியமாக கூற வேண்டுமெனில், 549.96 கோடி ரூபாய். அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியதும், வேண்டுமென்றே ஏர்செல் நிறுவனத்திற்கு லைசென்ஸ் தர மறுத்ததும், காலம் தாழ்த்தி இழுத்தடித்ததும் உண்மையே. இதே காலகட்டத்தில், முழு தகுதி படைத்த டிஷ்நெட் நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, அதற்கு மாறாக மேக்சிஸ் நிறுவனத்திற்கு லைசென்ஸ்கள் தரப்பட்டுள்ளதும் உண்மையே.கலாநிதிக்கு அமைச்சர் தயாநிதி வெறும் சகோதரர் மட்டுமல்ல. கலாநிதியுடன் தொழில் வர்த்தக தொடர்புகளுடையவராக, நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக ஏற்கனவே ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், கடந்த 9.10.2011ம் தேதி சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. அதில் தயாநிதி, கலாநிதி, ரால்ப் மார்ஷல், அனந்தகிருஷ்ணன், சன் டைரக்ட், ஆஸ்ட்ரோ, மேக்சிஸ் மற்றும் பெயர் தெரியாத சில நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.இவ்வாறு சி.பி.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமதமாகுமா குற்றப்பத்திரிகை?
தயாநிதியிடம் கடந்த வாரம், ரகசியமான இடத்தில் வைத்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தியதாக நேற்று செய்திகள் வெளியாகின. விசாரணை அனைத்தும் முடிந்து விட்டதால், விரைவில் குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்யப் போகிறது என, அந்தச் செய்திகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சி.பி.ஐ., வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, "தயாநிதி மற்றும் கலாநிதி ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தியது உண்மையே' என்று தெரிவித்தன. விசாரணை முடிந்து விட்டாலும், இவ்விஷயத்தில் இந்தியா - மலேசிய அரசுகளுக்கு இடையில், ஆதாரப்பூர்வ தகவல்களை திரட்டுவதற்கு விசேஷ நடைமுறைகளைப் பின்பற்றி பெற, அதிகாரப் பூர்வமான கடிதப் போக்குவரத்துகள் தொடர்கின்றன. எனவே, குற்றப் பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து உறுதியாக எதுவும் கூற முடியாது என்றும் கூறின.
பா.ஜ., கடும் புகார்:
ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மேற்கொண்ட முறைகேடு குறித்த சி.பி.ஐ., தகவல், அதிர்ச்சி அளிப்பதாக பா.ஜ., தகவல் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:"2ஜி' விவகாரத்தில், கடந்த 2006ம் ஆண்டில் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, அதற்காக 500 கோடி ரூபாய் லஞ்சம், மற்றொரு கம்பெனிக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏர்செல் - மேக்சிஸ் நிறுவனம், தன் நடவடிக்கைகளை இங்கே முடித்துக் கொள்ள நேரிட்டிருக்கிறது. இம்மாதிரி நடவடிக்கைகளை அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் எப்படி அனுமதித்தார் என்பதை மீண்டும் நாங்கள் பிரச்னையாக எழுப்புவோம். சி.பி.ஐ., அளித்த தகவல் அதிர்ச்சி தருவதுடன், மிக மோசமான செயல் நடந்திருப்பதைக் காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதனிடையே, தயாநிதி மற்றும் அவர் சகோதரர் மீது, எந்த நேரத்திலும் சி.பி.ஐ., குற்றச்சாட்டு பதிவு செய்து, நடவடிக்கை தொடரலாம் என்ற கருத்தில், நேற்று, பங்குச் சந்தையில், சன் "டிவி' குழுமம் மற்றும் "ஸ்பைஸ்ஜெட்' நிறுவனப் பங்குகள் வெகுவாகச் சரிந்தன.
-நமது டில்லி நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது சிறப்பும் இளிப்பும் சேர்ந்து வருது சி பி ஐ ஊழல் விருது கொடுக்க வருது நல்ல மனுஷன் பெரிய மனுஷன் உஷாருனு தின மலர் போஸ்டர் போடுது கஷ்டோ மோ இஷ்டோ மோ நஷ்ட மோ யசோ பிசோ டுசோ இசக்கி பிசக்கி நசுக்கி, தி காரும் ப வாரும் நண்பர்களே அசலும் நகலும் எப்படி நிச்சயம் புதியதொரு அரசியல் சாதி என்று சாதி பிரிவு ஏற்படுத்த படும், இந்த பிரிவில் உள்ளவருக்கு எந்த சி பி ஐ பிரிவிலும் நடவடிக்கை எடுக்க முடியாது என்கிற சட்ட பிரிவை ஏற்படுத்துவோம், உளவு பிரிவு திருடும் வரை விட்டு விட்டார்களாம் கூட்டணி குடும்பத்தில் பிளவு வந்து விடுமோ என்றே இப்பொது சி பி ஐ பிரிவு முடுக்கி விட பட்டுள்ளது, ஒரு ராக்கெட் மேல போக எதனை முன் கவுன்ட் டவுன் அதற்க்கு முன் எத்தனை ஆய்வுகள், ஆனால் கோடி கணக்கில் திட்டம் போடும் முன் தணிக்கை என்ன செய்தது , எல்லாமே முடியும் வரை காத்து இருப்பார்கள் பின் அப்படி இருந் இருக்கலாமே இப்படி அமைத்து இருக்கலாமே என்று கூறுவார்கள், எலா அரசு அலுவலங்ககளும் இப்படியே
காசக் குடுத்தா சுப்ரீம் கோர்ட் ஜட்ஜே சாதகமா தீர்ப்பு சொல்வாரு... சி.பி.ஐ எல்லாம் இவுங்க கைக்குள்ள ராசா... தேவையான நேரத்துல குறிப்பிட்ட தொகையை இவுங்க அவுங்களுக்கு வெட்ட மறுத்து இருப்பாங்க... உடனே இவுங்களைக் குற்றவாளிகளா பொதுமக்கள் கிட்ட போக்கஸ் பண்ணிக் காட்ட வேண்டியது.. அப்புறம் ஒரு தொகையை பேரம் பேசி கொடுத்த பிறகு இந்த மாதிரி எந்த நியூசும் வராது... இவுங்க ரெண்டு பேரும் யோக்கியம் போல எந்த கூச்சலும் இல்லாம இருப்பாங்க... ஒட்டுமொத்தமா எல்லா சைடுமே சீரழிஞ்சு தான் கெடக்குது... இதுல மந்தை ஆடுகள் போல எல்லாவற்றுக்கும் தலையை தலையை ஆட்டுவது சாட்சாத் பொதுஜனம் தான்...
மொத்தத்தில் நிர்வாக சீர்கேடு. சுதந்திரத்திற்கு முன் வின்சென்ட் சர்ச்சில் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. " இந்தியருக்கு இந்தியாவை ஆள தகுதி இன்னும் வரவில்லை. அவர்கள் இந்த நாட்டை சீரழித்துவிடுவார்கள். பொறுக்கிகள் , ரௌடிகள் கைகளில் அதிகாரம் போய்விடும்." அப்படின்னு அவர் சொன்னது அப்படியே உண்மையாகிவிட்டது....
கொரியா வில் லஞ்ச அரசியல்வாதியை தூக்கிலிட்டார்கள். நம் ஜனநாயகத்தைக் காக்க கடுமையான சட்டம் தேவை மேலும் குற்றம் நிருபனமாகும் பட்சத்தில் அந்த சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும். தி மு க காரங்கள் மட்டுமே வாழவேண்டும் மற்ற யாரும் தொழில் செய்ய கூடாது வாழக்கூடாது பிச்சை எடுக்கவேண்டும் அவர்கள் கொடுக்கும் 1 ருபாய் கிலோ அரிசி வாங்கி கஞ்சி குடித்து வாழவேண்டும். நல்ல கொள்கை திராவிடக்கொள்கை
ஜெயலலிதா டான்சி ஊழல் பற்றி என்றாவது விஸ்தார நியூஸ் வெளியிடுமா??? வாய்தா ராணி கேசை ஜவ்வு போட்டு கொண்டுள்ளார் அது பற்றி நியூஸ் வெளியிடுமா. கொள்ளையில் அதென்ன சின்ன கொள்ளை பெரிய கொள்ளை. ஒரு சாமானியனுக்கு ஒரு கோடி என்பது வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் சம்பாதிக்க முடியாத பணம். ஜெயலலிதா ஊழல் கேசில் அஜரகும்போதேல்லாம் இப்படி முழு கதையும் எழுதும் தில் உள்ளதா? ஜாதி துவேசம், தொழில் போட்டி காரணமாக நியூஸ் போடுகிறது என்பதும் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா என்பதும் யாராலும் மறுக்க முடியாத உண்மை.
படித்தவர்கள், இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். வந்தால் தான் அரசியல் சீரடையும், ஊழல் குறையும், நேர்மை உயரும், நன்மை பயக்கும் தீமை விலகும் என்று ஏதேதோ கூறுகிறார்கள். இந்த படித்தவர் அரசியல் செய்யும் லட்சணத்தை பார்த்தீர்களா. ஊழல் கொடி கட்டி பறக்கிறது, அரசாங்கத்தை ஏமாற்றி கோடி கணக்கில் வரி எய்ப்பு, அதிகார துஷ்ப்ரயோகம், அராஜகம் என்று தான் இருக்கிறது இந்த மெத்த படித்த மேதாவிகளின் அரசியல். அவர்களின் படிப்பரிவினை வைத்து மேலும் அரசாங்கத்தையும் மக்களையும் எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்ற அளவில் தான் யோசிப்பார்கள். ஆகவே அரசியலுக்கும் படிப்புக்கும் வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இதிலிருந்து தெளிவாகிறது. இன்றைய அரசியலுக்கு தேவை நல்ல நேர்மையான ஒழுக்கமான சுயநலமில்லாத மனிதர்கள். பணத்தை ஏதோ வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்கள். மனிதர்களை மதிக்க தெரிந்தவர்கள். தீய பழக்க வழக்கங்கள் இல்லாதவர்கள். இத்தகைய தகுதி படைத்தவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள். ஏதாவது உயர்ந்த பதவியில் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ வேலை செய்து நல்ல நிலையில் இருப்பார்கள். அரசியல் ஒரு சாக்கடை. அதில் உழலும் மனிதர்களும் சாக்கடை போன்றவர்கள் தான். இதில் படிப்பென்ன வயதென்ன.
படித்தவர்கள், இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொன்னது நல்ல அரசாங்கம் அமையவேண்டும் என்பதாற்காக. ஆனால் ஆட்சிக்கு வருபவர்கள் பின்னணி என்னவென்று பார்க்கவேண்டும். மாறன் சகோதரர்கள் ஊழலின் ஊற்றுக்கண்ணான தி மு கவிலிருந்து வந்தவர்கள். அவர்களுடைய தலைவரோ விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து சக்காரியா கமிஷனையே திக்கு முக்கடச்செயதவர். எனவே, ஊழல் என்பது அவர்கள் பரம்பரை சொத்து. ஊழல் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர்கள் சமுகத்திலே இன்னும் மரியாதையோடு நட மடிகொண்டிருக்கிரார்கள். விசாரிக்கிறேன் பேர்வழி என்று இத்தனை ஆண்டுகள் காலம் கடத்தி விட்டார்கள். இப்போது சந்தேகத்திற்கு இடமின்றி ஊழல் நடைபெற்றிருக்கிறது என்பது நிருபனமாகிவிட்டது. உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை பாயவேண்டும். வெறும் நடவடிக்கை மட்டுமல்ல உடனடியாக சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்கவேண்டும். இல்லையேல் இந்த அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வராது....
சுதந்திரம் பெற்றதிலிருந்து எந்த ஊழலும், ஊழல் அரசியல்வாதியும் தண்டனை பெற்றதேயில்லை. இதனால் இந்திய அரசாங்கத்தில் லஞ்சம், ஊழலே இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? அப்படியே நீதிமன்றம் தீர்பளித்தாலும் கூட்டணி போட்டு அந்த தீர்ப்பை செல்லாக் காசாகி விடுவீர்கள் . சினிமாவில் வருவது போல் எதிர்க்கட்சின் திட்டமிட்ட சதி என்றும், நீதிமன்றத்தில் நாங்கள் நிரபராதி என நிரூபிப்போம் என்பீர்கள். அதுவும் இல்லை என்றால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பீர்கள். ஆனால் காலம் இப்படியே போய்விடாது. இதைவிட ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருக்கிறார்கள்....
தொலை தொடர்பு துறை ஊழல் இதுவரை நாட்டில் நடந்த ஊழல்களிலேயே பிரம்மாண்டமானது. ஊழல் என்று நிருபனமான உடன் தண்டனை வழங்கவேண்டும். வீணான காலதாமதம் தவறிழைத்தவர்கள் தப்பிக்கவே உதவும். கொடிகளில் கொள்ளை அடித்தவர்கள் நீதியையும் விலை கொடுத்து வாங்கிவிடுவார்கள். எனவே, நீதி மன்ற தீர்ப்புக்கு கூட காத்திராமல், மக்கள் மன்றத்தின் ஆதரவோடு குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க முயலவேண்டும்....
ஆண்டு தோறும் பண்டிகைகளும், திருவிழாக்களும் வருவது போலே, புது புது ஊழல்கள் வெளியாகிக்கொண்டிரு
கின்றன. நீதி மன்றம் இவர்களுக்கு தண்டனை கொடுபதொடு நில்லாமல், மீண்டும் இதுபோன்ற ஊழல் வாதிகள் தேர்தலில் நிற்பதற்கு தடை விதிக்கவேண்டும். அதையும் மீறி அரசியல் கட்சிகள் அவர்களை சிபாரிசு செய்யும
என்றால் அந்த கட்சிகளின் அங்கிகாரத்தை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். அப்போது தான் நாட்டில் நல்லாட்சியை நாம் பார்க்க முடியும்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.