நேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கியது
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, பூந்தமல்லி சாலையில், நேரு பூங்கா ரயில் நிலையத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி துவங்கியது. இப்பணியை, மெட்ரோ ரயில் திட்ட தலைவர் சுதிர் கிருஷ்ணா நேற்று துவங்கி வைத்தார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, 14, 500 கோடி ரூபாய் செலவில், 45 கி.மீ., தூரம் மெட்ரோ ரயில் பாதை, இரண்டு வழித் தடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பாதை, 24 கி.மீ., சுரங்கப்பாதையிலும், 21கி.மீ., தரைக்குமேல், மேம்பாலத்திலும் அமைக்கப்பட்டு வருகிறது.சுரங்கம்சுரங்கப்பாதையில், 20 ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தரையிலிருந்து 9.5 மீட்டர் ஆழத்திற்கு கீழ், 5.8 மீட்டர் உள் விட்டமும், 6.2 மீட்டர் வெளி விட்டமும் கொண்டதாக சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.இத்திட்டத்தில், 931 கோடி ரூபாய் செலவில், நேருபூங்கா, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி அருகே மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கும், இந்நிலையங்களுக்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பதற்கும், மெட்ரோ டனல் லிங்,, சென்னை எல் அண்ட் டி., எஸ்.யு.சி.ஜி., ஜெவி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிறுவனங்கள் சார்பில், நேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில், 200 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 23 மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு, அதில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் (டனல் போரிங் மிஷின்) இறக்கிவைக்கப்பட்டு, சுரங்கம் தோண்டும் பணி நேற்று துவங்கியது. இப்பணியை, நேற்று மதியம், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் தலைவர் சுதிர் கிருஷ்ணா துவங்கி வைத்தார். மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குனர் ராஜாராம், தலைமைப் பொது மேலாளர் (மக்கள் தொடர்பு) கிருஷ்ணமூர்த்தி உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமும் 10 மீட்டர்நேரு பூங்காவிலிருந்து எழும்பூர் வரை சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. தினமும் 10 மீட்டர் முதல் 17 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நேரு பூங்கா - எழும்பூர் இடையே, 939 மீட்டர் தூரம், சுரங்கப் பாதை அமைக்கும் பணி ஐந்து மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.சீன இன்ஜினியர்கள்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள டனல் போரிங் மிஷின்கள், சுரங்கம் தோண்டும் பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், சுரங்கப்பாதை அமைப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த சீனாவை சேர்ந்த 20 இன்ஜினியர்கள் உட்பட 200 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுரங்கம் தோண்டும்போது, அதில் சுற்றுச் சுவர் அமைப்பதற்கான வட்டவடிவ கான்கிரீட் வார்ப்புகள் 1.2 மீட்டரிலிருந்து 1.6 மீட்டர் வரை தேவையான அகலத்தில், சென்னை அருகே உள்ள வயலநல்லூரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவைகளிலிருந்து 1, 400 கான்கிரீட்கள் சுரங்கப்பாதையில் பொருத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன. திருநீர்மலையில் மண்சுரங்கம் தோண்டப்படும்போது வெளியேற்றப்படும் மண், உடனுக்குடன் டிப்பர் லாரிகள் மூலம் திருநீர்மலையில் கொட்டப்பட உள்ளது. பணி நடந்து கொண்டிருக்கும்போது, நீர்கசிவையும், மழை நீரையும் வெளியேற்றுவதற்கு ராட்ஷச மோட்டார்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதனால் மழை காலத்தில் இப்பணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.பாதுகாப்பு கருவிகள் :சுரங்கம் தோண்டும்போது, அப்பகுதிகளில் உள்ள கட்டடங்களை கண்காணிப்பதற்கு, இப்பாதையில் உள்ள பெரிய கட்டடங்கள் குறித்த பட்டியல் தயாராக உள்ளது. இவைகளின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்படும்போது, இக்கட்டட நிலைகள் குறித்து, பாதுகாப்பு கருவிகள் மூலம் கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatachalam Janarthanan - Singapore,சிங்கப்பூர்
29-ஜூலை-201217:16:19 IST Report Abuse
Venkatachalam Janarthanan Normally it takes around 3 to 4 years to complete a Metro Station Construction. The traffic diversion are required to complete a station, if it is situated exactly under the existing traffic roads. So you can expect the traffic congestion for atleast another 3 years and once the station works are completed, traffic would be realigned and reinstated to have normal traffic flow.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
29-ஜூலை-201207:10:44 IST Report Abuse
ஆரூர் ரங மெட்ரோ திட்டத்துக்காக அண்ணா சாலையில் பெரும்பாலான இடங்கள் ஒரு வழிப் பாதைகளாகப்பட்டுள்ளன. இவற்றை சரி செய்து மாமூலான போக்குவரத்து துவங்குவது எப்போது என்பதை அதிகாரிகள் இப்போது தெரிவிப்பார்களா ? அல்லது வருடக்கணக்கில் ஆகுமா? புகை மாசு நெரிசல் ஆளைக் கொல்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்