ARASIYAL NEWS | பள்ளி பேருந்துகளில் அமைச்சர் ஆய்வு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பள்ளி பேருந்துகளில் அமைச்சர் ஆய்வு

Added : ஜூலை 28, 2012 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பள்ளி பேருந்துகளில் அமைச்சர் ஆய்வு

கரூர்:சென்னையில், பள்ளி மாணவி பலியான சோக சம்பவத்தையடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தன் சொந்த மாவட்டத்தில், பள்ளி பேருந்துகளில் ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்ட பள்ளிகளில் இயக்கப்படும் பேருந்துகளில், ஒவ்வொரு பேருந்தாக ஏறி அமைச்சர் ஆய்வு செய்தபோது, ஒரு பள்ளி பேருந்தில் படியின் உயரம் அதிகமாக இருப்பதாகக் கூறிய அமைச்சர், "டேப்' மூலம் அதை அளந்து பார்க்க உத்தரவிட்டார். படியின் உயரம் 45 செ.மீ.,க்கும் அதிகமாக இருந்ததால், அந்த பள்ளிக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார். மொத்தம் 32 பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி, விதிமுறைகளை பின்பற்றாத 16 பேருந்துகளுக்கு அபராதம் விதித்தார்.ஆய்வின்போது, கலெக்டர் ஷோபனா மற்றும் போக்குவரத்து, கல்வித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - salem,இந்தியா
29-ஜூலை-201213:34:32 IST Report Abuse
K.Sugavanam பாதிக்கும் மேற்ப்பட்ட பள்ளி கல்லூரிகள் அரசியல்வாதிகளின் கட்டு பாட்டில்.அப்புறம் படம் தான் காட்டுவாங்க.அமைச்சரின் மகன் தலைக்கவசம் அணியாமல் நள்ளிரவு விபத்தில் உயிர் இழந்ததும்,ஹெல்மெட்டை கட்டாய படுத்து கின்றனர்.இப்போ உயர் நீதிமன்றம் தானே தலையிட்டு கடுமையாக கண்டித்ததால்,இப்ப வண்டிகளை வரிசைகட்டி பிரிச்சு மேய்கிறார்கள்.மாமூல் ஒழிந்தால்தான் இந்த மாதிரி நடப்புகள் குறையும்.மக்களின் வலுவான எதிர்ப்பே இந்த வழக்கு இந்த நிலை அடைய காரணம்.முடிச்சூர் மக்களுக்கு "ஒ"போடுங்க.
Rate this:
Share this comment
Cancel
APJ - Madurai,இந்தியா
29-ஜூலை-201213:23:12 IST Report Abuse
APJ நான் பள்ளியில் படிக்கும்போதும் இப்படிதான் ஒரு சம்பவம் நடந்தது. எல்லாரும் ஏறி விட்டார்களா என கவனிக்காமல் டிரைவர் வண்டியை எடுத்து விட்டார். ஒரு குழந்தை வண்டி கிளம்பி விட்டதே என அவசரமாக ஓடி வந்து ஏற , தவறி விழுந்து விபத்து நேரிட்டது. நீண்ட நாள் அந்த சம்பவம் எங்களுக்கு வருத்தமாக இருந்தது. பள்ளி வாகன ஓட்டுனர்கள் கொஞ்சம் அல்ல நிறைய பொறுப்புடன் நடந்து கொண்டால் ௯௯% விபத்துகளையும் , இம்மாதிரியான இழப்புகளையும் தவிர்க்க முடியும் . அருண்
Rate this:
Share this comment
Cancel
vithuran - Chennai,இந்தியா
29-ஜூலை-201211:34:26 IST Report Abuse
vithuran ரொம்ப ஓவர் இவ்வளவு நாளா இவர் எங்க இருந்தார்?
Rate this:
Share this comment
Cancel
Muthusamy - sankaran koil,இந்தியா
29-ஜூலை-201210:47:37 IST Report Abuse
Muthusamy ஒரு டிரைவிங் லைசென்ஸ் வாங்க வளைகுடா நாட்டுல அதிலும் துபாயில என்ன பாடு பட வேண்டியிருக்கு தெரியுமா ??? 12 தடவ பெயிலாவனேல்லாம் இருக்கான். ஒழுங்கா சிக்னல் போடா தெரியலை, ஒழுங்கா மிர்ரர் பாக்கலைன்னு சொல்லி எங்களை எத்தன தடவை பெயிலாக்கி இருப்பாங்க தெரியுமா. இவ்வளவுக்கும் நான் நம்ம ஊரு ஹெவி லைசென்ஸ் வச்சிருக்கேன். இங்க லைசென்ஸ் எடுக்கும் போது தான் எப்படி வண்டி ஒட்ற்றதுன்னே தெரியுது. குறைந்த பட்சம் ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் லைசென்ஸ் எடுக்க. நம்ப முடியுமா ?. நம்ம ஊருல பர்ஸ்ட் கியர் ல ஆப் ஆகாம வண்டி எடுத்தா பாஸ். அட பாவிங்களா?? என்ன கொடுமைடா சாமி
Rate this:
Share this comment
Cancel
Ravanan Ramachandran - Chennai,இந்தியா
29-ஜூலை-201207:06:19 IST Report Abuse
Ravanan Ramachandran கண் கெட்டபின்பு சூரிய நமஸ்காரம் எதற்கு? எதையும் முன்னதாக ஆராய்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது இந்த அரசின், அதிகாரிகளின் மெத்தனபோக்கு காரணம்.
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
29-ஜூலை-201205:42:14 IST Report Abuse
s.maria alphonse pandian அமைச்சர் செய்தது ஆய்வு அல்ல..ஸ்டன்ட்....
Rate this:
Share this comment
29-ஜூலை-201208:40:43 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்கஉங்க ஆட்சியில் எப்படி அதே stunt தானா இல்லை நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் என்று வீண் ஜம்பம் அடித்துகொண்டிருகிரார்களா?...
Rate this:
Share this comment
babu - tiruchi,இந்தியா
30-ஜூலை-201200:06:09 IST Report Abuse
babuஅமைச்சரானவே அப்படி தான், இதில் என்ன அரசியல் போட்டி சாக்கடைக்கு கல் சரியாக் வைக்க வில்லை கொத்தனார் என்பதால் கொத்தனார் வேலையில் அமைச்சர் கல் வைத்து சரி பார்கிறார், எப்படி , வேலை செய்தவர்கலின் வேலை எப்படி என்று வேலை பாய்ச்சி வேலையை காட்டி இருந்தால் இப்படி வேலையை எலாம் அவசரத்துக்கு செய்ய முடியாது, ஒரு வேலை எபோதும் நடக்காத ஒன்று இப்படி இப்பொது நடப்பது என்றால் நாட்டில் சதி வேலைகள் ஆரம்பித்து விட்டன என்று தான் அர்த்தம், கட்சி க்கு கட்சி அரசு ஊழியர்கள் எல்லா அரசு ஊழியர்களும் வாகுவது இல்லை என்று தெரியும் ஸ்கூல் பஸ் என்று தெரிந்தும் துரோகி எப்படி ஓகே பண்ணான் அவனது பிள்ளைக்கு இப்படி ஆனால் எப்படி,...
Rate this:
Share this comment
Cancel
M Kannan - Trichy,இந்தியா
29-ஜூலை-201204:30:59 IST Report Abuse
M Kannan இவர்தான் கரூர், திருச்சி பகுதிகளில் நடந்த மணல் கொள்ளைகளை தடுத்த நேர்மையான அதிகாரி ஆர்.டி.ஓ சாந்தியை தூக்கி அடித்தவர். இவர் கிட்ட என்னத்த எதிர்பார்க்க முடியும்? இது ஒரு கண் துடைப்பு நாடகம்
Rate this:
Share this comment
Loverboy Secret - salem,இந்தியா
29-ஜூலை-201223:03:29 IST Report Abuse
Loverboy Secretஇது வெறும் விளம்பரமே மக்கள் எனும் முட்டாள்கள் நம்புவதற்காக அம்மாவின் கருணை பார்வைக்கும் அரங்கேற்றப்பட்ட நாடகம்...
Rate this:
Share this comment
Cancel
T Veeramani - London,யுனைடெட் கிங்டம்
29-ஜூலை-201204:02:15 IST Report Abuse
T Veeramani இவர் தன் மந்திரி பதவி போய் விடும் என்று ஸ்டண்ட் அடிக்கிறார் என்று நினைக்கிறேன். கோர்ட் இந்த விவகாரத்தை கையிலெடுக்கா விட்டால் இந்த நேரத்துக்கு இந்த விவகாரம் மண்ணில் குழி தோண்டி புதைக்கப்பட்டு இருக்கும். சமீப ஒரு வருட அளவில் தமிழ் நாட்டில் சாலை விபத்துகள் எக்கசக்கம் ஆகி விட்டது. இவர் அமைச்சராக என்ன செய்து கொண்டிருக்கிறார். பாட்டி அமைச்சரவையில் எந்த ஒரு அமைச்சரும் தண்டம்தான். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இருப்பவர் திரு ஓ. பன்னீர் செல்வம்தான். இவர் நிதி அமைச்சராக இருந்து என்ன சாதனை செய்துள்ளார்? சீனியர் அமைச்சரே இப்படின்னா அப்புறம் மத்த அமைச்சர்கள் கிட்ட என்ன எதிர்பார்க்க முடியும்?
Rate this:
Share this comment
Cancel
R Shopana - Chennai,இந்தியா
29-ஜூலை-201203:47:40 IST Report Abuse
R Shopana எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். என் மகள் ஸ்கூல் பஸ்ஸில் பயணம் செய்கிறாள். என் மகன் டூ வீலரில் காலேஜ் போகிறான். என் கணவர் காரில் வேலைக்கு போய் வருகிறார். இவர்கள் ஒவ்வொரு நாள் வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும் வரை மனம் பக் பக் என்று இருக்கும். சமீபத்தில் தாம்பரத்தில் பஸ் விபத்தில் இறந்த குழந்தைகளில் மனம் பாடுபடும் என்பதை அறிவேன். இதற்கு காரணம் பள்ளி நிர்வாகமும், வட்டார போக்குவரத்து அதிகாரியும்தான். என் மகனை அவர் அப்பா சாலை விதிகள் முழுமையாக தெரியும் வரை வாங்க விடவில்லை. ஆனால் இவன் சரியாக டூ வீலர் ஓட்டி என்ன பயன்? ரோட்டில் தொன்னூற் சதவீதம் எப்படி வாகனம் ஓட்டுவது எப்படி என்றே தெரியாமல் வரும்போது, அடிக்கடி சாலை விபத்து நடக்கிறது. பெரும்பாலானவர்கள் பணம் கொடுத்து லைசென்ஸ் வாங்குவதுதான் காரணம். முதலில் வண்டிகளை பரிசோதனை ஆர்.டி.ஓ அலுவலகம் ஒழுங்காக இருக்க வேண்டும். அங்குதான் பிரச்சினைகள் உருவாகிறது. தவறான வண்டிகளை அனுமதிப்பது, வண்டி ஓட்ட தெரியாதவனுக்கு லைசென்ஸ் கொடுப்பது என்று பல ஊழல்கள் நடை பெறுகிறது. அமைச்சர் இதெயெல்லாம் தடுப்பாரா? பெரும்பாலான ஆர்.டி.ஓக்கள் அமைச்சருக்கு பணம் கொடுத்து விட்டுதான் அந்த இடத்துக்கு வருவதால் இது மாதிர் தவறுகளுக்கு அமைச்சர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
29-ஜூலை-201207:43:43 IST Report Abuse
Pannadai Pandianசாலை விதிகளை மதிப்பது என்பது நமது நாட்டில் சுத்தமாக கிடையாது. நான் கோவை விமானநிலையம் அருகே இருக்கும் சிக்னலில் பல தடவை பார்த்திருக்கிறேன். அங்கு இருக்கும் காவல்காரரை மதிக்காமல், அவருடன் சண்டை போட்டு கொண்டு லாரிகள் நகரின் உள்ளே லோடுகளுடன் செல்வதை. இத்தனைக்கும் 9 மணி முதல் இரவு 7 வரை லோடு லாரிகளுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு பண முதலைகள், அரசியல் வாதிகள் செல்வாக்கு உண்டு. வெளிநாடுகளில் ஓட்டுனர்கள் இரவு இரண்டு மணியானாலும் சிகப்பு லைட் சிக்னலில் எரிந்தால், ஒரு வாகனங்களும் இல்லாவிட்டாலும் பச்சை லைட் எரியும் வரை காத்திருந்து தான் பயணிப்பர். அப்படி மீறி சென்றாலும் இவர் டாக்ஸி வீட்டுக்கு செல்லும் முன் அவரது வீட்டில் அபராத கட்டணத்துக்கான ரசீது ஒட்டப்பட்டிருக்கும். மற்றொரு முக்கிய விஷயம் - நான் பல டேக்சிகளில் ஒரே இடத்துக்கு பல முறை சென்றுள்ளேன். இவர்கள் டேக்ஸியில் பொருத்தப்பட்டுள்ள மீட்டர்கள் அரசால் பரிசோதிக்கப்பட்டு முத்திரை இடப்பட்டு சீல் வைக்கப்பட்ட டிஜிடல் மீட்டர்கள். கட்டணம் ஒரு பைசா வித்யாசம் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சூடு வைக்கும் நமது திருடர்கள் எங்கே உழைத்து சம்பாதிக்கும் வெளிநாட்டினர் எங்கே...
Rate this:
Share this comment
Cancel
Raju Ravi - riyadh,சவுதி அரேபியா
29-ஜூலை-201201:39:46 IST Report Abuse
Raju Ravi 10 நாளைக்கு மாத்திரம் அல்லாமல் மதத்திற்கு ஒருமுறையாவது செய்தால் இந்த மாதிரி அசம்பாவிதம் நடக்காமல் இருக்கும். அமைச்சருக்கு நன்றி
Rate this:
Share this comment
raja - karaikudi,இந்தியா
29-ஜூலை-201208:17:37 IST Report Abuse
rajaகடமைய செய்ய எதுக்கப்பா நன்றி ? அதுதான் அவோரோட வேலை?...
Rate this:
Share this comment
அன்வர்-ஹல்வானி - திருவாரூர்.,,இந்தியா
29-ஜூலை-201210:08:58 IST Report Abuse
அன்வர்-ஹல்வானிபள்ளிக்கட்டணத்தை வேறு கோர்ட்டை வைத்து வரையறுத்துவிட்டீர்கள்.. ஆசிரியர் தகுதி தேர்வில் தேறியவர்கள் வேறு கூடுதல் சம்பளம் கேட்டு வேலைக்கு சேர்கிறார்கள். இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் வேறு ஆய்வு ஆய்வு என்று பணத்தை அள்ளிக்கொண்டு போகிறார்கள், நாங்கள் எப்படி கல்வி வியாபாரம் செய்வது இதில் தேர்ச்சி சதவீதத்தை வேறு காட்டனும். எங்க பில்டிங் வாடகையே கெடக்க மாட்டேன்குதுபா, இப்படி ஓட்ட ஒடசல் பஸ்ஸ வெச்சி பிள்ளைகளுக்கு மாதம் முன்னூறு வீதம் வசூல் பண்றதில தான் கொஞ்சம் வரும்படி கெடச்சுது. இதுலும் ஆப்பா.. நாங்க எப்படி தான் சம்பாதிப்பது.. பேசாமே வாடகை காலனி கட்டிவிட்டாலாவது நல்ல வரும்படி வரும் இனி புராகூடு மாதி முன்னூறு பிளாட் கட்ட வேண்டியாதுதான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை