6 member committe to frame new law for school buses | பள்ளி வாகனங்களுக்கான விதிமுறைகளை வகுப்பதில் அரசு கிடுக்கிப்பிடி: அதிகாரிகள் குழு நியமனம்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (33)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க புதிய விதிகளை வரையறுக்க, போக்குவரத்து இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில், ஆறு பேர் கொண்ட குழு ஒன்றை போக்குவரத்துத் துறை அமைத்துள்ளது. சென்னை, தாம்பரம் அடுத்த முடிச்சூர் அருகில், கடந்த இரு தினங்களுக்கு முன், சீயோன் பள்ளி பேருந்திற்குள் இருந்த, ஓட்டை வழியாக இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதி, 7, கீழே விழுந்தாள். அதில், பின் சக்கரத்தில் சிக்கி ஸ்ருதி சம்பவ இடத்திலேயே பலியானாள். இந்த சம்பவத்தில், பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டது. ஐந்து பேர் கைது: இது தொடர்பாக, ஸ்ருதி படித்த பள்ளியின் தாளாளர் விஜயன், பஸ் ஓட்டுனர் சீமான், கான்ட்ராக்டர் யோகேஷ், கிளீனர் சண்முகம், அந்த பஸ்சிற்கு கடந்த 20 தினங்களுக்கு முன் தகுதிச் சான்று வழங்கிய, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பாக, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரனுடன், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பட்டப்பச்சாமியும், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ஐகோர்ட் உத்தரவு: இது குறித்து, பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில், ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் பெஞ்ச், தானே முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. கல்வித் துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகளை ஆஜராகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், பள்ளி கல்விச் செயலர் சபீதா, போக்குவரத்து கமிஷனர் பிரபாகர் ராவ் தலைமையில் அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். முடிவில், "பள்ளி பேருந்துகளில் செல்லும் குழந்தைகளைப் பாதுகாக்க, வாகனங்களின் பராமரிப்பு, தகுதி குறித்து புதிதாக விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்க, தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும்; 15 நாட்களுக்குள் வரைவு விதிகளை கோர்ட்டில்

தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். குழு அமைப்பு: இந்த உத்தரவைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறையின் சார்பில் பள்ளி பேருந்துகளுக்கு, புதிய விதிகளை வரையறுப்பதற்கான குழுவை அமைப்பது குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டது. முடிவில், போக்குவரத்துத் துறை விதிகள் பிரிவு இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்து, போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில், போக்குவரத்து துணை கமிஷனர் (திருநெல்வேலி) பாலன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (சென்னை கிழக்கு) பாஸ்கரன், மாநில போக்குவரத்துக் குழும உதவி செயலர் பாஸ்கரன், அதே குழுமத்தின் அலுவலர் லட்சுமிபதி, பூந்தமல்லி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சம்பத்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விரைவில் புதிய விதிகள்: இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான இந்த குழு, பள்ளி வாகனங்கள் விஷயத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், புதிய விதிகளை உருவாக்குவர். இதில், பள்ளி வாகனங்களின் ஆயுட்காலம், ஓட்டுனர்கள் தகுதி, வாகனங்களின்

Advertisement

பராமரிப்பு இவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், பள்ளிகளுக்கு தகுதிச்சான்று வழங்கும் விதிகள் தொடர்பாகவும் பிரதான மாற்றங்கள் இருக்கும் எனவும் போக்குவரத்துத் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. புதிய விதிகள் உருவாக்கப்பட்டு, விரைவில் போக்குவரத்து கமிஷனர் பிரபாகர் ராவிடம், இக்குழுவினர் அளிப்பர். அதன் பின்னர் அறிக்கையை அரசு பரிசீலிக்கும். பின்னர், வரைவு விதிகள், ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, நீதிபதிகள் உத்தரவின் பேரில் அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (33)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
faleel - chennai,இந்தியா
29-ஜூலை-201223:38:35 IST Report Abuse
faleel இவர்களை மனித ஜென்மமாக கருத கூடாது. ஒரு திரைப்பட கதையை உண்மையாக்கி இருக்கிறார்கல்.அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் தான் இவர்களுக்கு தண்டனை கொடுகவண்டும்.சமூகத்தில் மதிப்பான பதவியை அதிகார துஸ்பிரயோகம் செயும் இவர்களை போல எல்லா துறைகளிலும் பலர் இருந்துகொண்டு தான் இருகிறார்கள்.இறைவன்தான் மக்களை காப்பாற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Karthikeyan Rajamuthu - Penang,மலேஷியா
29-ஜூலை-201220:34:22 IST Report Abuse
Karthikeyan Rajamuthu Is that some one need to die in public.. in order to government officer for doing their duty correctly for future Shame of gov folks. no more words to scold the top head who is managing...
Rate this:
Share this comment
Cancel
R.SIVA Sundaram - Theni,இந்தியா
29-ஜூலை-201217:37:44 IST Report Abuse
R.SIVA Sundaram எந்த ஒரு சட்டம் போட்டாலும் .... அரசுக்கு வருமானம் தான் ...... வருமானத்திற்கு தான் சட்டம் ... 1 . மது அருந்தி வாகனம் ஓட்டினால் RS : 3000 . ( காவல் துறை அருகில் மதுக்கடை ) அடுத்து பள்ளி பேருந்து மூலம் வருமானம் ......... சட்டம் மக்களை திருத்தவே இருக்க வேண்டும் ... மக்களிடம் பணம் பறிக்க இல்லை என்பதை உணர வேண்டும் . இனி வரும் சட்டம் மக்களை திருத்த பயன் படட்டும் .. இது போன்று மனித உயிர்களை பறிக்காமல் இருக்கும் என்று எதிர் பார்ப்போம் .... குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
Rate this:
Share this comment
Cancel
Daniel Joseph - SANAA,ஏமன்
29-ஜூலை-201217:33:41 IST Report Abuse
Daniel Joseph பேருந்து கட்டணம் மட்டும் தாறுமாறா ஏற்றியாச்சு ஆனால் பேருந்து மட்டும் மாறவேயில்லை முதலில் அரசு பேருந்துக்கும் முக்கியத்துவம் கொடுங்க அது மட்டுமல்ல இந்த குழு எப்போதும் ரோந்து வந்து கொண்டிருக்கணும் அப்போது தான் உருப்படும் ஒரு பத்து நாள் நடத்திகிட்டு அப்படியே விட்டால் மழை நீர் சேமிப்பு திட்டம் போல் தான் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
????????????? - Vietnam,வியட்னாம்
29-ஜூலை-201216:24:23 IST Report Abuse
????????????? இத சொல்லி இனி நிறைய சம்பாதி பங்க போக்கு வரத்து அதிகாரிகள்
Rate this:
Share this comment
Cancel
Kannan R - Karur,இந்தியா
29-ஜூலை-201214:14:42 IST Report Abuse
Kannan R the issue is not relating to lack or non existance of any law. We have enough laws and regulations available. But the problem is implementation with spirit. Just ask any one who owns a vehicle or driving license. They certainly should have paid "something" to get the work done. Like wish Fittness certificate also holds a price. That&39s all. These exercises with only help in diverting the issue from the minds of people and would do any good, if at all if they want any thing to happen (which they don&39t want)...
Rate this:
Share this comment
Cancel
Oruvan - Toronto,கனடா
29-ஜூலை-201213:42:43 IST Report Abuse
Oruvan எல்லா வாகனங்களுக்கும் இந்த சட்டம் தேவை அண்ணா மேம்பாலத்தில் சிட்டி பஸ் விழுந்தது ஞாபகம் இல்லையா நிறைய பஸ்களில் சட்டை பான்ட் மற்றும் காலை கூட கிழிக்கும் ஆணி கிழிந்த தகரங்கள் உண்டு
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Yanbu-Al-Bahr,சவுதி அரேபியா
29-ஜூலை-201212:51:34 IST Report Abuse
Ramesh Sundram இங்கே கருத்து கூறுபவர்கள் ஒன்று கவனிக்க வேண்டும் பஸ்சை கொளுத்தியது யார் பள்ளி நிர்வாகமோ அல்லது பஸ் முதலையாக தான் இருக்க முடியும் யாரோ ஒரு இளை காண் வண்டியில் இருந்து பெட்ரோலை எடுத்து பஸ்சை கொளுதினானம் இது பொது மக்களின் கோபம் என்று எல்லா செய்தி தாள்களில் வருகிறது தமிழ்நாட்டு மக்கள் ரஜினிகாந்த் கட் அவுட் இற்கு பால் அபிஷேகம் செய்வார்களே அன்றி இது போன்ற வீர செயல்களில் இடு பட மாட்டார்கள். ஒரு அப்பாவியை நூறு பெயர் அடிப்பார்கள் , ஒரு திருடனை பார்த்து பயந்து ஓடுவார்கள் இது தான் நமது தமிழர்களின் வீரம் இதை கேஸ் ஊத்தி மூடப்படும் என் என்றால் பஸ் பூர எரித்து விட்டது சாட்சிகள் இல்லை ஆனால் பஸ்சை கொளுதியவனை பிடித்து விசாரித்தல் உண்மை விளங்கிவிடும் இது பள்ளி நிர்வாகத்தின் சதியே அல்லது பஸ் முதலாளியின் சதியே தவிர வேறு ஓன்றும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
SURESH GOPALAN - maputo.,மொசம்பிகா
29-ஜூலை-201210:47:19 IST Report Abuse
SURESH GOPALAN எல்லா ஸ்கூல் பஸ்லயும் fc எடுத்த தேதி,முடியும் தேதி,பேருந்தின் உரிமையாளர் பெயர்,முகவரி,அலைபேசி எண்,வட்டார போக்குவரத்துக்கு ஆபீஸ்,fc கொடுத்த அதிகாரி பெயர் ,அலைபேசி எண்,ஆகியவற்றை அச்சிட்டு முன்பக்க கண்ணாடியில் ஓட்ட வேண்டும்.ஓட்டுனர் பெயர்,உதவியாளர் பெயர் அலைபேசி ,முகவரி ஆகியவையும் அதில் இருக்க வேண்டும்..முக்கியமாக ஓட்டுனர் போட்டோ இருக்க வேண்டும்.அரசு கவனிக்குமா? அந்த குழந்தையின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்.இறைவன் அவர்களுக்கு துணை இருப்பான்.
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
29-ஜூலை-201210:14:05 IST Report Abuse
Sundeli Siththar விடுங்க சாரே... கொஞ்ச நாளில் மக்கள் மறந்துவிடுவார்கள்... அரசும் மறந்துவிடும்... இந்த சட்டம் நூற்றில் ஒன்றாக இருக்கும்.. இதை வைத்து இன்னும் கொஞ்சம் கூட கல்லா கட்டுவாங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.