Advertisement
பார்லிமென்ட் மழைக்கால தொடருக்கு பின் ராகுலுக்கு முக்கிய பொறுப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜூலை 28,2012,23:31 IST
மாற்றம் செய்த நாள் : ஜூலை 30,2012,05:39 IST

புதுடில்லி: ""காங்கிரஸ் கட்சியின் அனைத்து விவகாரங்களிலும் தலையிடவும், முடிவு எடுக்கவும், ராகுலுக்கு அதிகாரம் தரும் வகையில், அவருக்கு முக்கிய பொறுப்பு அளிக்க வேண்டும்,'' என, காங்கிரஸ் கட்சிக்குள் கோரிக்கை வலுத்துள்ளது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடருக்குப் பின், ராகுலுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.

"காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும், ராகுலுக்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும்' என, கட்சியில் உள்ள ஒரு தரப்பினர், நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், இதுகுறித்து வெளிப்படையாக பேட்டி அளித்து வருகிறார். முக்கிய பொறுப்பை ஏற்க, ராகுல் தயங்குவதாக, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் விமர்சித்திருந்ததும், கட்சிக்குள் ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தின. இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவரும், பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தவருமான பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளதை அடுத்து, ராகுலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை, காங்., கட்சிக்குள் வலுத்துள்ளது.


துணை தலைவர்? பிரணாப் முகர்ஜி, லோக்சபாவில் சபை முன்னவராக பதவி வகித்து வந்தார். அந்த பதவி காலியாக இருப்பதால், அதை, ராகுலுக்கு வழங்க வேண்டும் என, கட்சி எம்.பி.,க்கள் வலியுறுத்தியுள்ளனர். பத்து எம்.பி.,க்கள், இதுகுறித்து, சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது தவிர, காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் அல்லது செயல் தலைவர் ஆகிய இரண்டில், ஏதாவது ஒரு பதவியை ராகுலுக்கு அளிக்க வேண்டும் என்றும், ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பதவியை ராகுலுக்கு கொடுப்பதில், ஒரு சிக்கல் உள்ளது. கட்சி தலைவராக சோனியா, தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், துணை தலைவர் பதவிக்கு ராகுலை நியமிப்பது, தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும் என, மூத்த தலைவர்கள் சிலர் கருதுகின்றனர். இதற்கு முன், காங்கிரஸ் கட்சிக்கு துணை தலைவர்கள் நியமிக்கப்பட்ட போது, அப்போது தலைவராக இருந்தவர்கள், கூடுதல் பொறுப்புகளை கவனித்து வந்தனர்.


சரியாக இருக்காது: குறிப்பாக, கட்சியின் தலைவராக இந்திரா இருந்த காலத்தில், கட்சி செயல் தலைவராக, கமலாபதி திரிபாதி நியமிக்கப்பட்டார். அப்போது, இந்திரா பிரதமராக பதவி வகித்ததால், கட்சியை நடத்திச் செல்ல, அதுபோன்ற பதவி தேவைப்பட்டது. அதே காரணத்தால், ராஜிவ் பிரதமராக இருந்தபோது, கட்சி துணை தலைவராக அர்ஜுன் சிங் நியமிக்கப்பட்டார். எனவே, தற்போது சோனியா, கட்சி தலைவராக மட்டுமே இருப்பதால், துணை தலைவர் பதவியை ராகுலுக்கு அளிப்பது சரியாக இருக்காது என்பதும், ஒரு தரப்பினரின் வாதமாக உள்ளது.


அதிகாரம்: இதையடுத்து, கட்சியின் அனைத்து மாநில விவகாரங்களில் தலையிடுவதற்கும், முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும், தகுந்த வகையில், ராகுலுக்கு, கூடுதல் அதிகாரம் தரும் விதமாக, தனிப் பொறுப்புடன் கூடிய, பொதுச் செயலர் பதவி வழங்க வேண்டும் என, கட்சியில் உள்ள அவரது விசுவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடருக்கு பின், மத்திய அமைச்சரவையிலும், காங்கிரஸ் கட்சியிலும் மாற்றங்கள் நிகழ்வது உறுதி என்றும், அப்போது, ராகுலுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும், காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (16)
Daniel Joseph - SANAA,ஏமன்
29-ஜூலை-201217:40:38 IST Report Abuse
Daniel Joseph இனி எதிர்கட்சிகள் பயப்படவேண்டிய அவசியம் இல்லை காங்கிரஸ் தானே அழிந்துவிடும் எடுத்துக்காட்டு உத்திரபிரதேசம் மாநில தேர்தல்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
29-ஜூலை-201215:21:17 IST Report Abuse
Pugal மத்தியில் ஆளும் கட்சியில் அந்தக் கட்சியின் தலிவகழி ஒருவருக்கு முக்கிய பொறுப்பு தரப் போவது சாதாரணமான நிகழ்வு. இதில் தலையிடவோ கருத்து சொல்லவோ பிற கட்சியினருக்கு எந்த உரிமையும் இல்லை அவருக்கு கூடுதல் பொறுப்பு கொடுத்து கட்சி நன்றாக ஆனாலும், நாசமாப் போனாலும் அது அந்தக் கட்சியின் இஷ்டம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Lingam - Jubail,சவுதி அரேபியா
29-ஜூலை-201214:17:49 IST Report Abuse
Lingam பச்ச புள்ளைய இப்பிடி படுத்துறீங்களே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Kvv Gandhi - Tirupur,இந்தியா
29-ஜூலை-201213:13:30 IST Report Abuse
Kvv Gandhi ஒன்றும் மாற போவதில்லை ...... காங்கிரஸ் ஐ வீட்டுக்கு அனுப்பு........ எல்லாம் மாறும்.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Sankaran - Chennai,இந்தியா
29-ஜூலை-201212:16:22 IST Report Abuse
Sankaran மழை காலம், வெயில் காலம், ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின் ஐயோ,ஐயோ தாங்க முடியலை. இவன் ஒரு நாளும் எதுக்கும் சரிப் பட்டு வர மாட்டாத கேஸ். கீரி பாம்பு சண்டை விடப் போறேன் என்பவன் கூட கை தவறி விட்டாலும் விடுவான், இந்த ஆள் "பொறுப்புக்கு" வர மாட்டன். ஏன் வரணும்? பொறுப்பே இல்லாமல் எல்லா முக்கிய விஷயங்களிலும் மூக்கை நுழைத்து வேண்டியவரை தூக்கி விட்டு வேண்டாதவரை ஒழித்துக்கட்டும் அதிகாரம் இருப்பவனுக்கு பொறுப்பு எதற்கு பொறுப்பு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
VIVASAYI - Salem,இந்தியா
29-ஜூலை-201211:35:47 IST Report Abuse
VIVASAYI பிரணாப் போயிட்டாரு, பிரணாப் போயிட்டாரு, ராகுலுக்கு கொடுன்னு இது என்ன புலம்பல். பிரனாபுக்கு இணையானவரு இவருன்னா, இவரையே ஜனாதிபதி ஆக்கியிருக்க வேண்டியதுதானுன்களே?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
PR Makudeswaran - madras,இந்தியா
29-ஜூலை-201210:07:06 IST Report Abuse
PR Makudeswaran ஆங்கில மேதை ஒருவரின் கூற்றுப்படி அந்தஸ்து ஒருவரை தேடிப் போகிறது.மற்றவர் அந்தஸ்தை தேடிப் போகிறார்.மூன்றாமவரிடம் அந்தஸ்து திணிக்கப்படுகிறது அதில் நமது இளம்புயல் கடைசி ரகம் தானேஇந்தியாவை ஒழித்துக்கட்ட காங்கிரஸின் கடைசி பாசுபத அஸ்திரம்.நடக்கட்டும்.நல்லது எப்பொழுது நடக்குமோ இறைவா கச்சி ஏகம்பனே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vaigai Selvan - Chennai,இந்தியா
29-ஜூலை-201207:24:36 IST Report Abuse
Vaigai Selvan ராகுலுக்கு முக்கிய பொறுப்பு.... ஏதாவது இந்தி பட தயாரிப்பாளரிடம் கேளுங்கள்.. காமெடி ரோல் ஏதாவது இருக்கும்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
29-ஜூலை-201206:59:36 IST Report Abuse
ஆரூர் ரங baajaka kaattil mazhai
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
N.Purush Bharatwaj - Cuddalore,இந்தியா
29-ஜூலை-201206:27:59 IST Report Abuse
N.Purush Bharatwaj ஒரு ஐடியா .......காங்கிரஸ்ல்ல "கஞ்சி குடிப்பவர்ன்னு" ஒரு பதவியை ஏற்படுத்தி அதற்க்கு தலைவரா இவரை போடலாம்.....அதுக்கு தான் சரியாய் இருப்பார்.....எப்புடி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.