ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்தும், எல்லை பிரச்னை குறித்தும், மீண்டும் கர்நாடகா பிரச்னை கிளப்பி இருப்பதோடு, இது குறித்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடகா மனு தாக்கல் செய்ய இருப்பதாக, அம்மாநில நீர் வளத்துறை அமைச்சர் பசவராஜ் தெரிவித்துள்ளார். எல்லை பிரச்னைக்கு ஏற்கனவே முடிவு எட்டிய நிலையில், மீண்டும் பிரச்னை கிளப்புவது, தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி, இரு மாநில உறவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான, ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி, இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதியில் அமைந்துள்ளது. ஒகேனக்கல் சிறுமலை மற்றும் சினிபால்ஸ் உள்ளிட்ட பகுதிகளை, 2005ல் கர்நாடக வனத்துறையினர் தங்களுக்குரிய பகுதி என, கூறி பிரச்னையை கிளப்பினர்.
சர்வே: பின் இரு மாநிலங்களுக்கும் இடையில் சர்வே செய்யப்பட்டது. அதன் பின் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு, கர்நாடக அரசு ஆரம்பத்தில் இருந்தே பிரச்னை எழுப்பி வருகிறது. கடந்த, 25ம் தேதி கர்நாடக மேலவையில் கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர் அஸ்வத் நாராயணன் கேள்விக்கு, பதில் அளித்த, அம்மாநில அமைச்சர் பசவராஜ் பொம்மை, "ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் மாற்றம் செய்திருப்பதாகவும், எல்லைகள் அதிகப்படுத்தபட்டுள்ளது. இத்திட்டத்துக்குரிய இடம் விவாதத்துக்குரியது. மத்திய அரசு கூட்டு சர்வே செய்ய அக்கறை காட்டவில்லை. எனவே சட்ட முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறியுள்ளார். எல்லை பிரச்னைக்கு, 2005ம் ஆண்டு இரு மாநில வனத்துறையினர் கூட்டாக சர்வே பணி முடித்துள்ளனர். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணி நடக்கும் பகுதி முழுவதும் தமிழக எல்லைக்குள் வருகிறது. தமிழகத்தில் காவிரி நுழையும் பிலிகுண்டுலு பகுதியில் இருந்து, 64 கி.மீ., தூரம் தமிழக, கர்நாடகா எல்லை வனப்பகுதி உள்ளது. ஒரு கரைப்பகுதி தமிழக பகுதியான ராசிமணல், பிலிகுண்டுலு, ஊட்டமலை, கூத்தப்பாடி, ஒகேனக்கல் ஆகிய பகுதிகள் உள்ளன. மறு கரைப்பகுதியில் கர்நாடக மாநில கிராமங்களான மாறுகொட்டாய், ஜம்புபட்டி, செங்கம்பாடி ஆகிய கிராமங்கள் உள்ளன. காவிரியின் ஒரு கரைப்பகுதி தமிழகத்துக்கும், மறு கரைப்பகுதி கர்நாடக மாநிலத்துக்குமாக பிரித்து, பிரிட்டிஷ் அரசு வன நீர் பரப்பு எல்லையாக வரையறுத்துள்ளது.
பிரிவினை: நீர் பரந்து விரிந்து வரும் கரைக்கு இடைப்பட்ட பரப்பு, இரு மாநிலத்துக்கும் சரி சமமாக பிரிக்கப்பட்டுள்ளது. இரு கரைக்கும் இடைப்பட்ட நீர் பரப்பு பகுதியானது, 50 கி.மீ., தூரத்தில், 500 மீட்டர் முதல், 2,000 மீட்டர் இடைவெளியில் உள்ளது. இந்த பரப்பும் சரிசமமாக இரு மாநிலங்களுக்கும் பிரித்து, பிரிட்டிஷ் ஆட்சியில் வனத்துறை வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஊட்டமலையில் இருந்து வரும் காவிரி நீர் பெரிய நீர்வீழ்ச்சி அருகே, இரு பிரிவாக பிரியும் மையப்பகுதியில் பாறை பரப்பாக உள்ளது. கடந்த, 2005ம் ஆண்டு இரு மாநில வனத்துறையினர், பிரிட்டிஷ் வனத்துறை சர்வே அடிப்படையில் ஆய்வு செய்து, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில், மீண்டும் கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறும் தகவல்கள் முரண்பாடாக உள்ளன. பிரிட்டிஷ் வரைபட அமைப்பு படியும், உபயோக அடிப்படையிலும், கர்நாடக மாநில அமைப்புகள் உரிமை கோரும் பகுதி அனைத்தும் தமிழக எல்லையில் உள்ளது. ஆனால், தேவையற்ற எல்லை பிரச்னையை, கர்நாடக மாநில அமைச்சர் பசவராஜ் பொம்மை கிளப்பி வருவது, இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற சர்ச்சையை கிளப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குடிநீர் திட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை: கர்நாடக அரசு கூறுவது போல், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணியில் எந்த மாற்றமும், விரிவுப்படுத்தவும் இல்லை. பணி துவங்கப்பட்ட போது திட்டமிட்டப்படியே பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தால், கர்நாடக மாநிலத்துக்கு எந்த பாதிப்பும் கிடையாது.கடந்த, 1998ம் ஆண்டு பெங்களூரு குடிநீர் திட்டமும், ஒகேனக்கல் குடிநீர் திட்டமும், இரு மாநில அரசுகளால் ஒப்பு கொள்ளப்பட்டவை. 2002ம் ஆண்டு, பெங்களூரு குடிநீர் திட்டத்தை, உலக வங்கி நிதியுதவியுடன் கர்நாடக அரசு நிறைவேற்றியது. கடந்த, 1998ம் ஆண்டு மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியின் போது, பொக்ரான் அணுகுண்டு பரிசோதனை காரணமாக, ஜப்பான் பன்னாட்டு வங்கி நிதியுதவி தடைபட்டதால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் ஆய்வு பணியோடு நின்றன. குடிநீர் பெறுதல் என்பது அடிப்படை மனித உரிமை. இதை தடுப்பது மனிதநேயமற்ற செயல். சர்வதேச சட்ட மரபுக்கும், இந்திய அரசியல் சாசனத்துக்கும் மாறானது. மேலும், காவிரி நதி நீர் பங்கீடு குறித்த பிரச்னையுடன், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை அணுக கூடாது. குடிநீர் பிரச்னை வேறு, நதி நீர் பங்கீடு வேறு என்பதை கர்நாடக அரசு உணர வேண்டும்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நன் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவன் .இந்த திட்டத்தை நிறைவேற்றி வரும் (TWAD board) தமிழ் நாடு குடி நீர் வடிகால் வாரியத்தில் என் அப்பா இந்த மாவட்டத்தில் இரண்டாவதாக ரெஜிஸ்டர் செய்த contractor இதில் தலைவரகவும் சில காலம் இருந்தார். இந்த திட்டத்தின் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு நன் இன்று IT companyil வேலை செய்தலும் இதற்காக சில ஆய்வுகள் செய்தேன் . இந்த திட்டத்தின் நோக்கம் , பின்னணி விவரம் இங்கு விவரிக்க முடிய விட்டாலும் , இரு DMK/ADMK அரசுகளும் முழு வேகத்துடன் செயல் படுத்தின இந்த திட்டத்தை . யாரையும் குறை கூற வேண்டாம் . இங்கு கருத்து தெரிவிப்பவர்கள் ஒன்றை நினைவு கொள்ள வேண்டும் . காவேரி ஆற்றின் நீர் ஆதராம் , நீர் செல்லும் ஆற்று வழி பதை , அவர்கள் எப்படி வேண்டுமெனினும் control கை ஆளலாம் . உங்களுக்கே தெரிந்த ஒன்று நம் மத்திய அரசு/ உச்ச நீதி மன்றம் வழங்கும் தீர்ப்புகளை இந்தியாவின் அணைத்து மாநிலமும் எந்த அளவில் மதிப்போம் என்று, ஏன் நம்மையும் சேர்த்துதான் . நம் தமிழகத்தின் அரசும் மிகவும் தெளிவாக இருந்தது , முதலில் உச்ச நீதி மன்றம் தீப்று வழங்க வேண்டும் இன்றும் நம் போராடுவது இதை மதிய அரசு ஆணையாக வெளி இட வேண்டும் என்று . இன்றைக்கே நீங்களே அறிவீர் அரசியல் சூல்நிழை எப்படி என்று , மத்திய அரசு இதை அரசு ஆணையில் இப்போதைக்கு வெளியிட வாய்ப்பில்லை . கர்நாடகவுக்கு தெரியும் அவர்கள் செய்வது தவறு என்று , அவர்கள் பயம் எல்லாம் தமிழகம் for manufacturing and export /heavy industries , நம் மாநிலத்தின் அமைப்பு மிகவும் உகந்தது . பல தொழில் நிறுவனங்கள் ஹோசூர் , கிருஷ்ணகிரி , தர்மபுரி , குறிப்பாக ஹோசூர்/hosur பகுதிக்கு தொழில் நிறுவங்கள் வரும். எனெனில் சென்னை டு பெங்களூர் highway is a industrial belt. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் வேலை தேடி மற்ற மாநிலம் /மாவட்டம் குடி பெயர்வது குறையும். இது குடி நீருக்காக ஏற்படுத்த பட்ட திட்டம் என்றாலும் கண்டிப்பாக தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை . ஒன்ர்டு மற்றும் மனதில் கொள்ள வேண்டும் , அமெரிக்காவில் 1930 /1940, சீனாவில் 1960/1970 இது போன்ற திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன, அங்கு மக்கள் நாட்டின் முன்னேற்றிதிட்கான திட்டம் என்றும் தியாக மனப்பான்மையுடன் இரவு பகலாக உழைத்தார்கள் , லாப நோக்கத்தை என்ன வில்லை .நம் நாட்டில் மக்களை முட்டாளாக வைத்திருக்கவே அரசு எண்ணுகிறது , மேலும் சம்பாதித்த சொத்தை நம் உள்/வெளி நாட்டிலும் பாதுகாக்கவும் , அந்நிய நாட்டவருடன் சேர்ந்து கொள்ளை அடிக்கவே குறிக்கோளாக உள்ளனர் . நகரங்கள் மட்டுமே வளர்கின்றன கிராமங்கள் தேய்கின்றன . நமக்கு ஜப்பான் அரசு, பண உதவி மட்டுமன்றி தொழில் நுட்ப உதவியும் இந்த திட்டத்திக்கு தருகிருது , லாப நோக்கில்லாமல் பின் தங்கிய தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் .
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் திமுக ஆட்சி காலத்தில் எந்தவித இடையூறுமின்றியே நடந்து வந்தது. ஆட்சிமாற்றம் ஏற்படாமிருந்திருக்கும் பட்சத்தில் ராமநாதபுரம் குடிநீர் திட்டம் போல் திட்டமிட்டதற்கு முன்னதாகவே நிறைவேற்ற வாய்ப்பாக இருந்தது. இப்போது எல்லா திட்டங்களையும் போல இதற்கும் எதிர்ப்புகள் முளைத்து விட்டது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.