TESO: Success or circus? | "சக்சஸ்' மாநாடா... "சர்க்கஸ்' கூடாரமா...? "டெசோ' பரபரப்பு ஆரம்பம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

"சக்சஸ்' மாநாடா... "சர்க்கஸ்' கூடாரமா...? "டெசோ' பரபரப்பு ஆரம்பம்

Updated : ஜூலை 30, 2012 | Added : ஜூலை 28, 2012 | கருத்துகள் (94)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சர்வதேச அரங்கில் அழுத்தம் கொடுக்கக் கூடிய நாடுகளின் பிரதிநிதிகளை அழைக்காமல், சிறிய நாடுகளின் பிரதிநிதிகளை, "டெசோ' மாநாட்டிற்கு தி.மு.க., அழைத்துள்ளது; இதனால், எவ்வித பலனும் இருக்காது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு' (டெசோ) சார்பில், "ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு' ஆய்வரங்கம், அடுத்த மாதம் 12ம் தேதி, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ., மைதானத்தில் நடக்கிறது. இந்த மாநாட்டில், இலங்கை தமிழர் தலைவர்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழர் அமைப்பு பிரதிநிதிகளை ஒன்று திரட்ட தி.மு.க., ஆசைப்பட்டது. வெளிநாடு வாழ் தமிழ் பிரதிநிதிகளை, சென்னைக்கு அழைத்து வரும் பணிகளில் சுப.வீரபாண்டியன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஜின்னா போன்றவர்கள் ஈடுபட்டனர். இவர்கள் வீசிய தூண்டிலில், நைஜீரியா, மொராக்கோ, துருக்கி போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டுமே சிக்கியுள்ளனர். இது குறித்து, "முரசொலி' நாளிதழில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, மாநாட்டின் செயல்பாட்டை பறைசாற்றியுள்ளது தி.மு.க., தலைமை. நைஜீரிய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ஒசிகேனா போய் டொனால்டு , அந்நாட்டை சேர்ந்த எம்.பி., அப்துல்ரசாக் மோமோ, சுவீடன் நாட்டிலிருந்து நசிம் மாலிக், மொராக்கோ எம்.பி., டைடா முகம்மது, பன்னாட்டு மனித உரிமை ஆணையத்தின் கிழக்கு ஐரோப்பா துருக்கியின் தூதர் கெமால் இல்திரிம், மொராக்கோ நாட்டின் தேசிய கவுன்சிலர், உண்மை மற்றும் நீதிக்கான ஆணையத்தின் தலைவர் அபெகா முபாரக் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்பதாக "டெசோ' அமைப்பு தெரிவித்துள்ளது. இவர்களின் பெயர்களோடு, நாடு குறித்து மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களது பதவிகள் குறித்து எந்த தகவலும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சம். "டெசோ மாநாடு ஒரு ஷோ' என,ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ ஏற்கனவே வர்ணித்துள்ள நிலையில், தற்போதைய பங்கேற்பாளர்கள் பட்டியல் குறித்து, ம.தி.மு.க., பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: "டெசோ' மாநாடு வெற்றி பெற வேண்டும் என்றால் பிடல் காஸ்ட்ரோ, நெல்சன் மண்டேலா, ஆங்சாங் சூகி போன்ற தலைவர்களை அழைத்திருக்கலாம். அவர்கள் தான் உண்மையான புரட்சியாளர்கள். சுய சார்பு இல்லாத, சிறிய நாடுகளின் எம்.பி.,க்களை அழைத்ததில் எந்த பிரயோஜனமும் இல்லை. இவர்களால் சர்வதேச அளவில் எந்த அழுத்தத்தையும் தர முடியாது. குறைந்தபட்சம், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் எம்.பி.,க்களை அழைத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். முன்னணி நாடுகளின் பிரதிநிதிகள், தமிழர் அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்காததன் மூலம், தி.மு.க.,வின் வேடம் குறித்து அவர்களும் தெரிந்து வைத்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது. சர்க்கஸ் கூடாரம் போல், சம்பந்தமில்லாதவர்களை நிறுத்தி, "ஷோ' நடத்தப் போவதைத்தான் இந்த அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raju Perur Coimbatore - Coimbatore,இந்தியா
29-ஜூலை-201218:01:24 IST Report Abuse
Raju Perur Coimbatore இதை பற்றி யாரும் யோசிக்கவில்லையே - "நைஜீரிய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ஒசிகேனா போய் டொனால்டு , அந்நாட்டை சேர்ந்த எம்.பி., அப்துல்ரசாக் மோமோ, சுவீடன் நாட்டிலிருந்து நசிம் மாலிக், மொராக்கோ எம்.பி., டைடா முகம்மது, பன்னாட்டு மனித உரிமை ஆணையத்தின் கிழக்கு ஐரோப்பா துருக்கியின் தூதர் கெமால் இல்திரிம், மொராக்கோ நாட்டின் தேசிய கவுன்சிலர், உண்மை மற்றும் நீதிக்கான ஆணையத்தின் தலைவர் அபெகா முபாரக் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்பதாக "டெசோ&39 அமைப்பு தெரிவித்துள்ளது. " - பாவம் இவங்க எல்லாம். தமிழர்களையே மஞ்ச துண்டு காமடி பீசா பகுத்து, இவங்களுக்கு தமிழ் தெரியாதே, பாவம். மஞ்ச துண்டை நம்பி வந்த இவர்களுக்கு தமிழர்கள் சார்பில் என்னுடைய ஆழ்த்த வருத்தங்கள்.(ஒரு வேல அங்கயும் 2Gல இருந்து ஷேர் போயிருக்குமோ. சார் அவங்களுக்கு தமிழ் தான் புரியாது, 2G + மஞ்ச துண்டு கொள்ளை எல்லாம் தெரியும்) :p
Rate this:
Share this comment
Cancel
Raju Perur Coimbatore - Coimbatore,இந்தியா
29-ஜூலை-201218:00:56 IST Report Abuse
Raju Perur Coimbatore "நைஜீரிய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ஒசிகேனா போய் டொனால்டு , அந்நாட்டை சேர்ந்த எம்.பி., அப்துல்ரசாக் மோமோ, சுவீடன் நாட்டிலிருந்து நசிம் மாலிக், மொராக்கோ எம்.பி., டைடா முகம்மது, பன்னாட்டு மனித உரிமை ஆணையத்தின் கிழக்கு ஐரோப்பா துருக்கியின் தூதர் கெமால் இல்திரிம், மொராக்கோ நாட்டின் தேசிய கவுன்சிலர், உண்மை மற்றும் நீதிக்கான ஆணையத்தின் தலைவர் அபெகா முபாரக் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்பதாக "டெசோ அமைப்பு தெரிவித்துள்ளது. " - பாவம் இவங்க எல்லாம். தமிழர்களையே மஞ்ச துண்டு காமடி பீசா பகுத்து, இவங்களுக்கு தமிழ் தெரியாதே, பாவம். மஞ்ச துண்டை நம்பி வந்த இவர்களுக்கு தமிழர்கள் சார்பில் என்னுடைய ஆழ்த்த வருத்தங்கள்.(ஒரு வேல அங்கயும் 2Gல இருந்து ஷேர் போயிருக்குமோ. சார் அவங்களுக்கு தமிழ் தான் புரியாது, 2G + மஞ்ச துண்டு கொள்ளை எல்லாம் தெரியும்) :p
Rate this:
Share this comment
Cancel
K. Rajan - Tirunelveli ,இந்தியா
29-ஜூலை-201214:35:33 IST Report Abuse
K. Rajan படிப்படியாகத்தான் கால் எடுத்து வைக்க வேண்டும். இங்குள்ள சில தலைவர்களின் கிண்டல்களை கவனிக்கும் போது, போர் நடக்கும் போது எப்படி ஒற்றுமையின்றி சிதறி இருந்தார்களோ, அதே எண்ணத்துடன் அதாவது கருணாநிதியால் ஈழம் மலரக்கூடாது என்பதில் தான் இவர்களுக்கு முழு அக்கறையே தவிர, ஈழம் மலர வேண்டும் என்று சிறு துளி நினைப்பும் இவர்களுக்கு இல்லை. கருணாநிதி சரியான பாதையிலேயே செல்லுகிறார். இதில் ஆ ஊ வென்று கர்ச்சிக்க வேண்டிய காங்கிரஸ் மௌனமாக இருக்கிறது, ஆனால் இலங்கையை பற்றி தினம் தமிழ்நாட்டுக்குள்ளேயே முண்டு கட்டிக்கட்டி கொள்ளும் கட்சிகள்தான் கர்ச்சிக்கின்றன. ஒருவர் ஈழம் மலர வேண்டுமென்று கூட்டம் போட்டால் இவர்களுக்கு என்ன? இவர்களை மாநாடுக்கு வர அழைத்தார்களா? இவர்களை எட்டப்பர்கள் என்று சொல்லுவதை தவிர வேறு என்ன சொல்ல?
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
29-ஜூலை-201220:44:10 IST Report Abuse
villupuram jeevithanஆமாம், கருணா தவிர மற்றவர்கள் எட்டப்பர்கள் தான்? நல்லா இருக்கு?...
Rate this:
Share this comment
Sathesh Pandian - Chennai,இந்தியா
29-ஜூலை-201223:03:55 IST Report Abuse
Sathesh Pandianநண்பர் சொல்வது போல் ஒருவேளை கருணாநிதிக்கு அக்கறை இருந்தால் அவர் ஏன் அடிக்கடி அவரின் கொள்கையை மாற்றி கொள்கிறார்? ஈழத்தை வாங்கி கொடுக்க தான் இவர் முயற்சி செய்கிறார் என்றால் இலங்கை தமிழர்கள் ஏன் இவரை நம்ப மறுக்கிறார்கள்?...
Rate this:
Share this comment
Cancel
Zubair Masood Mohamed Kassim - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜூலை-201214:03:58 IST Report Abuse
Zubair Masood Mohamed Kassim தினமலர் வாழ்க : டெசோ மாநாடுகு விளம்பரம் இலவசமாக ??? நீங்க ரொம்ப நல்லவங்க ???
Rate this:
Share this comment
Cancel
Jebasingh Jeyapaul - Coimbatore,இந்தியா
29-ஜூலை-201214:02:11 IST Report Abuse
Jebasingh Jeyapaul இந்த கருணாநிதியை மாநாடு நடத்தி சட்டம் ஒழுங்கை சீர் கெட வழிவகை செய்கிறார் என்று இரவோடு இரவாக அர்ரெஸ்ட் பண்ணி இழுத்துக்கிட்டு போகோணும். உள்ளபோட்டு லாடம் கட்டோணும். அப்பத்தான் இந்த ஆளு retired ஆவார்போலே. தோசை வகை வகைய போடுவது எப்படி என்று &39தோச&39 மாநாடு நடதவேண்டியவங்கல்லாம் தமிழ் ஈழத்திற்காக கிளிக்கப்போரானுவலாம்.
Rate this:
Share this comment
Cancel
Santha Kumar - ramanathapuram,இந்தியா
29-ஜூலை-201213:22:47 IST Report Abuse
Santha Kumar அய்யா பெரியவரே நீங்கள் செய்த பாவங்கள் போதும் உங்கள் காலம் முடியும் தருவாயில் உள்ளது எனவே ஆண்டவனிடம் பாவமன்னிப்பு கூறுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
saravanan - erode,இந்தியா
29-ஜூலை-201213:14:15 IST Report Abuse
saravanan தமிழ் நாடக கலைஞரே தனித் தமிழ் ஈழ கோரிக்கை தீர்மானம் இல்லை, ஆனால் கைவிடப்படவில்லை. பின்னர் வலியுறுத்தப்படும். எப்போ? ஒன்றிரண்டு தமிழனும் செத்த பிறகா அல்லது மிச்சம் இருக்கும் மத்திய மந்திரி சுகத்தை அனுபவித்த பிறகா. அடே மகா நடிகா..........
Rate this:
Share this comment
Cancel
Kanagu - Pollachi,இந்தியா
29-ஜூலை-201212:51:47 IST Report Abuse
Kanagu கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்........ மனசாட்சியே இல்லாத ஆளு...........
Rate this:
Share this comment
Cancel
hameed - riyadh,சவுதி அரேபியா
29-ஜூலை-201212:14:57 IST Report Abuse
hameed காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்.......................
Rate this:
Share this comment
Cancel
devasheron - Male,மாலத்தீவு
29-ஜூலை-201212:07:53 IST Report Abuse
devasheron எல்லோரும் இலங்கை தமிழர்கள் விஷயத்தை பற்றி பேசுகிறீர்கள். இதில் முக்கால் வாசி பேருக்கு உண்மையான செய்திகள் தெரியாது. இந்திய அரசு இலங்கை தமிழர்களை காப்பாற்ற வில்லை என பேசுகிறீர்கள். உண்மையில் கரணம் என்னவென்றால் இந்தியாவின் மிக பெரிய எதிரி பாகிஸ்தான் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள் ஆனால் சீனா தான் உண்மையான எதிரி. சீனா ஏற்கனவே பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, ஸ்ரீலங்கா போன்ற எல்லா நாடுகளிலும் (இந்த நாடுகள் அனைத்தும் இந்தியாவை சுற்றி உள்ளன)பலமாக காலுன்றி உள்ளது. இதில் ஸ்ரீலங்கா, மாலத்தீவு போன்ற நாடுகள் இந்தியாவை நம்பி தான் பெரிய அளவில் உள்ளது. இவர்களின் பாதுகாப்பும் இந்தியாவை நம்பி தான் உள்ளது. . ஜெயலலிதா, கருணாநிதி, மன்மோகன் சிங், அத்வானி யார் வந்தாலும் இதுதான் நடக்கும். வைகோ இந்தியாவின் பிரதமர் ஆனாலும் இது தான் நடக்கும். அதுபோல ஜெயலலிதா, கருணாநிதி இரண்டு பேரும் ஊழல் செய்தவர்கள் தான் இதில் யார் ஆட்சி செய்தால் மக்கள் பயன் பெறுவார்கள் என்பதை உணர்ந்து அவர்களை ஆதரியுங்கள். வாழ்க இந்தியா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை