சென்னை: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வசிக்கும் சென்னை வீட்டை அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் திடீர் முற்றுகையிட்டனர். ஊழல் எதிர் நடவடிக்கைகள் தாமதம் ஏற்படுத்துவதாகவும், ஹசாரேயை விமர்சித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் இந்த போராட்டம் நடந்தது. அமைச்சர் வீட்டு முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய ஊழல் எதிர்ப்பு அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
மீண்டும் ஹசாரே உண்ணாவிரதம்: ஊழல் ஒழிக்கும் லோக்பால் மசோதா மற்றும் கறுப்பு பணம் இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வருதல், ஊழல் அமைச்சர்களை விசாரிக்க வலியுறுத்தல் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து சமூக ஆர்வலரும், தியாகியுமான அன்னா ஹசாரே இன்று டில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார்.
டில்லி ஜந்தர்மந்தரில் ஹசாரே ஆதரவாளர்கள் கடந்த 25 ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹசாரேயின் உடல்நலம் தொடர்பாக அவர் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என ஆதரவாளர்கள் கேட்டதற்கிணங்க விரதம் துவக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் டில்லியில் தாம் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போதவதாக அறிவித்தார். இதற்கென இன்று காலை மைதானத்திற்கு வந்தார் ஹசாரே. இவர் போராட்டத்தில் இறங்கி இருப்பதால் மேலும் இவரது ஆதரவு அமைப்பினர் ஆயிரக்கணக்கில் குவியத்துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த தியாகத்துக்கும் தயார் : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது: நாட்டில் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் தான் பல்வேறு ஊழல்களை வெளி கொண்டுவர காரணமாக இருந்துள்ளது. ஊழலை ஒழிக்க வலுவான ஜன்லோக்பால் மசோதாவுக்காக என் எதையும் தியாகம் செய்ய தயார் லோக்பால் மசோதா பார்லிமென்டில் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டேன். அவ்வாறு மசோதா கொண்டுவந்தால் எனது உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிட தயார். லோக்பால் மசோதா , அதிகாரம் மக்களுக்குத்தான் இருக்க வேண்டுமே தவிர மக்கள் பிரதிநிதிகளுக்கு அல்ல என்றார்.
நேற்று பிரதமர் வீட்டு மீது இவரது ஆதரவாளர்கள் கல்வீசியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த போராட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் மக்கள்ளகிய நாம் பணம் , பொருள் , கொடுத்து காரியம் சாதிக்க மாட்டோம் என உறுதி கொள்ள வேண்டும் , இந்தியா சுந்தந்திர போராட்டத்தில் நாம் வெற்றி பெற்டது அப்படித்தானே ? அன்னா ஹசாரே முதலில் மக்களை சென்று அடைய வேண்டும் . பணம் கொடுப்பவர்கள் இருப்பதினால் பணம் வாங்குபவர்கள் உள்ளார்கள். முதலில் மக்கள் திருத்தவேண்டும். அல்லது திருத்த வேண்டும் அல்லது திருத்த பட வேண்டும்
Want to eradicate corruption? Let the peoplejoin hands and march to Delhi to stage a dharana before Parliament. Should courageously face police action. Fast unto death till the present politicians charged with corruption are forthwith tried in the court and punished. No bail should be allowed in these cases. Their bank accounts and all other assetsshould be sealed.
remember Kalanidhimaran flying to Switzerland the next day Dayanidhimaran&39s corruption charges were out?People like Chidambaram, Karunanidhi all should be investigated. Truth about 2G scandal should be reported everyday to the public thru media.Corrupt politicians are a gang by themselves irrespective of party affiliations. Break their bones. Curroption will become less. Dorai. Chicago.
ஹசாரே வின் தலை எழுத்து ...பாவம் நாட்டின் "குடி" மக்கள் திருந்தும் வரை அவர் நடத்தும் போராட்டம் வீண். கமென்ட் அடிப்பவன் எவனாவது முறைப்படி ஒட்டு போட்டான என்பது சந்தேகம் அனைவரும் இதை டைம்பாஸ்ஆக எடுத்துகொள்ளும் போது வேறு என்ன சொல்வதற்கு முதலில் நாம் தனக்குரிய ஒட்டு உரிமையும் ஜநாயக உரிமையும் விட்டு கொடுக்ககூடாது. நாம் செய்யும் தவறு இதுவே, இன்னும் ஆயிரம் காந்தியும் ஹசாரேவும் வந்தால் சமாளிக்க முடியாது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.