ஒலிம்பிக் அணிவகுப்பு; பெண் அடையாளம் தெரிந்தது !
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

லண்டன்: ஒலிம்பிக் துவக்க விழாவில் இந்திய அணியினருடன், வந்த பெண் இந்திய நாட்டை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. ஒலிம்பிக் துவக்க விழாவில் இந்திய அணியினருடன் அடையாளம் தெரியாத "மர்ம பெண் ஒருவர் வந்தார். இது குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானதும் பரபரப்பானது. இந்தியா சார்பில் மொத்தம் 40 வீரர், வீராங்கனைகள், 11 நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்திய அணிக்கு மல்யுத்த வீரர் சுஷில் குமார் தலைமை தாங்கினார். இவர் மூவர்ண கொடியுடன் முன்னால் வர, சானியா மிர்சா உள்ளிட்டவர்கள், பின் தொடர்ந்து வந்தனர். அதேநேரம், இந்திய அணிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத, சிவப்பு "சர்ட், நீல நிறத்தினால் ஆன "பேண்ட் அணிந்த பெண் ஒருவர், எவ்வித அடையாள அட்டையும் இன்றி, சுஷில் குமார் அருகில் நடந்து வந்தார். இவர் யாரென்று இந்திய வீரர், வீராங்கனைகள் யாருக்கும் தெரியவில்லை. இந்த அணியில் வந்த அனைத்து பெண்களும் மஞ்சள் ஆடை அணிந்திருந்தபோது அவர் மட்டும் சிவப்பு நிறத்தில் டிக்கென அணிந்து வந்த ஆடை அனைவரையும் ஈர்த்தது. இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் இவர் இந்திய திருநாட்டின் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், அவர் ஒரு முதுகலை பட்டதாரி என்றும் தெரியவந்துள்ளது. இவரது பெயர் மதுராஹனீ என்றும் அதே நேரத்தில் அவர் அடிக்கடி லண்டன் வந்து தங்குவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் பேஸ்புக் மூலம் அறியப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் சிறிது நேரத்தில் அவரது பேஸ்புக் விவரம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்னும் இந்தப்பெண் குறித்து மர்மம் நீடிக்கிறது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ansar - Abu Dhabi,இந்தியா
29-ஜூலை-201223:56:03 IST Report Abuse
Ansar சரி விடுங்க பாஸ். இந்தியாவை ஆட்டிவைக்கும் அதிகாரத்தில் இருக்கும் அம்மிணியே இந்தியாகாரி இல்லை.... யார் வேணா எங்கு வேணா நடந்து போகட்டும்....
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
29-ஜூலை-201222:51:03 IST Report Abuse
Sami பொண்ணு நல்லா இருக்கா. அதனால நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி கொடுங்க. அதவிட்டுட்டு குற்றம், வழக்கு, தண்டனை என்று நம்ம ஊரு வரிப்பணத்தை வீணடிக்காதீங்க.
Rate this:
Share this comment
Cancel
pancha - Tampa ,யூ.எஸ்.ஏ
29-ஜூலை-201221:34:13 IST Report Abuse
pancha No Big Deal, we even does not know the mistery of Sonia Ghandhi and her activities
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - salem,இந்தியா
29-ஜூலை-201221:01:01 IST Report Abuse
K.Sugavanam அதுசரி,அந்த குழுவுடன் வந்த அதிகாரிகள் எந்த ஆணிய புடுங்கிகிட்டு இருந்தானுவ.கூடவாறது நம்ப குழு ஆளுதானேன்னு கூட தெரியாத அதிகாரிகள்.ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருந்தால்?அட ஒலிம்பிக் செக்கூரிட்டி இவ்வளவு தானா?அதுவும் அந்த பெண்ணுடன் படித்தவர் பார்த்து சொன்னதால் தான் யார் என்று தெரிந்தது.இல்லாவிட்டால் தேடிக்கொண்டே இருந்து இருப்பார்கள்.வெட்கக்கேடு.
Rate this:
Share this comment
Cancel
அன்வர்-ஹல்வானி - திருவாரூர்.,,இந்தியா
29-ஜூலை-201220:51:48 IST Report Abuse
அன்வர்-ஹல்வானி அவள் ஒரு மனித வெடிகுண்டா இருக்கலாம் நல்லா பாருங்க. எல்லாத்திலும் நம் நாடு அசட்டை தான். இத்தனை இலகுவாக அந்தப்பெண் நுழைந்திருக்கிறாள். இது நம் நாட்டின் பாதுகாப்பு, மற்றும் நிர்வாக திறனற்ற தன்மையை காட்டுகிறது.. கொஞ்சம் கூட மாட்ச் ஆகாதா ஒரு உருவம் என்ட்ரி ஆகும்போதே தூக்கி இருக்கவேண்டும். என்ன லட்சணம். இத்தனை ஆட்கள் வளம் வர நிர்னைத்து இருக்கும்போது, இப்படி அடையாள அட்டை கூட இல்லாமல் என்ன லட்சணம்?
Rate this:
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
29-ஜூலை-201219:35:01 IST Report Abuse
Srinath இந்தப் பெண் யாராக இருந்தாலும், இவர் மீது புகார் அளிக்கப்பட்டு கைது செய்வதே சரி என்பேன். ஆர்வக்கோளாறு காரணமாக தெரிந்தே ஒரு நாட்டையும், அதன் குடிமக்களையும் தலைகுனிய வைத்துள்ளார். இந்தப் பெண்மணியைக் காணவில்லை என்று யாரும் அழவில்லை. இதுபோன்ற பைத்தியங்களின் குடியுரிமையை ரத்து செய்தாலும் தவறில்லை. வாயில் அசிங்க அசிங்கமாக வருகிறது. இருப்பினும் பலரும் வந்து செய்தி, கருத்துக்களைப் படிக்கும் பகுதி என்பதால் கண்ணியம் காக்கவேண்டியிருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
S Madhavan - chennai,இந்தியா
29-ஜூலை-201218:05:42 IST Report Abuse
S Madhavan செக்யூரிட்டி கவனக் குறைவு..
Rate this:
Share this comment
Cancel
Daniel Joseph - SANAA,ஏமன்
29-ஜூலை-201217:21:47 IST Report Abuse
Daniel Joseph பாதுகாப்பு குறை பாடு தான் இந்த விஷயத்தில் அந்த பெண்ணை குறை சொல்ல ஒன்றுமில்லை உங்கள் பாதுகாப்பு தான் காரணம் ஒரு இந்திய பெண் உங்கள் காவல் துறையையே மட்டம் தட்டிவிட்டாள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்