பிரதமர் மடலில், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரின் பெயர் பிழையாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது பள்ளி மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக மத்திய அரசு கடந்தாண்டு அறிவித்தது.
இந்த நாளை, ஆண்டுதோறும் கல்வி உரிமை நாளாகக் கொண்டாட வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் தனது கையொப்பத்துடன் ஒரு மடல் அனுப்பினார்.
தமிழில் மடல்:இந்த மடல் ஆங்கிலத்திலும், அந்தந்த மாநில மொழியிலும் இருந்தது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு, தமிழில் அனுப்பிய மடல், பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.புதுச்சேரி அரசு பிரதமரின் மடலை நகலெடுத்து அனைத்து அரசு துறைகள், பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தது. இந்த மடலில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரின் பெயர், "மவுலானா அபுல் கலாம் ஆசாத்' என்பதற்குப் பதிலாக, "மவுலானா அப்துல் கலாம் ஆசாத்' என, தவறுதலாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
பதில் சொல்ல முடியவில்லை:இந்த பிழை கல்வித் துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும், பிரதமரின் கையெழுத்திட்டு வந்திருப்பதால் மடலில் எந்த மாற்றமும், திருத்தமும் செய்யாமல், அப்படியே பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.வரலாறு பாடத்தில் மவுலானா அபுல் கலாம் ஆசாத் என குறிப்பிடப்பட்டுள்ள வேளை யில், பிரதமரின் மடலில் "மவுலானா அப்துல் கலாம் ஆசாத்' என, எழுதப்பட்டுள்ளது ஏன்?இரண்டில் எது சரி என, ஆசிரியர்களை கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கின்றனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதில் பிரதமர் ஒன்றும் செய்ய முடியாது.writer , reviewer ,approver ,oser என்று பல நிலைகளை தாண்டிதான் ஒரு டாகுமென்ட் தயாராகிறது.பிரதமர் அனைத்தையும் படிபதில்லை.படிக்கவும் முடியாது.இதில் பெரிய கூத்து என்னவென்றால் இதற்கு ஆசிரியர்கள் பதில் சொல்ல தினருவதுதான்.அப்துல் கலாம் என்பது 1988 மேல் தான் பிரபலம்.என்னத்த சொல்ல.
பிரதமருக்கு எப்படி ஐயா ஒன்றும் செய்ய முடியாமல் போகும்???? ஒரு டாகுமெண்டில் நீங்கள் கையெழுத்திட்டால் என்ன அர்த்தம் தெரியுமா? \\\\ பிரதமர் அனைத்தையும் படிப்பதில்லை.படிக்கவும் முடியாது. //// என்று குறிப்பிட்டுள்ளீர்கள் ""படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போட்டுவிட்டேன்"" என்று சொன்னால் சிரிக்க மாட்டார்களா? சிரித்தாலும் நிச்சயம் வாயால் சிரிக்க மாட்டார்கள் நமது கல்வித்துறை அதிகாரிகள் அதைப் படித்துப் பார்த்து தவறினை உரிய கடிதப் போக்குவரத்து மூலம் பிரதமர் / பிரதமர் அலுவலகத்திற்குக் கொண்டு சென்றிருந்தால் (மாநில அரசின் கல்வித்துறைத் தலைமைக்கு நகல் அனுப்ப வேண்டும்) தாமதமாகவேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் அதைச் செய்ய நமது அதிகாரிகளுக்குச் சோம்பேறித்தனம்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.