பிரான்சில் ரூ.566 கோடிக்கு கறுப்பு பணம் பதுக்கிய இந்தியர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:இந்தியாவைச் சேர்ந்தவர்களால், பிரான்சில் 566 கோடி ரூபாய் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய நேரடி வரி வாரிய அதிகாரிகள் கூறியதாவது:இந்தியாவை சேர்ந்தவர்களால், வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற கறுப்பு பணத்தை கண்டறியவும், அவற்றை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வரவும், மத்திய அரசு சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காகவே, சிறப்பு புலனாய்வு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளுடன், மத்திய அரசு செய்து கொண்டுள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் மூலம், பிரான்சில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்த, முக்கிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் உள்ள சில விதிமுறைகளின்படி, பிரான்சில் உள்ள சில வங்கிகளில், இந்தியர்களால், 565 கோடி ரூபாய், கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தகவலை, பிரான்சு அரசு, மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் வரி விவரம் தொடர்பான தகவல்களை விசாரிக்கும்போது, சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்த, 30 ஆயிரத்து 765 தகவல்கள் கிடைத்துள்ளன. பிரான்சில் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள தகவல் குறித்து, பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவிடம், மத்திய நேரடி வரி வாரியத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

விசாரணை:இதற்கிடையே, வருவாய் உளவுப் பிரிவு இயக்குனரக வட்டாரங்கள் கூறுகையில், "நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களால், கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட 11 ஆயிரம் நிதிப் பரிமாற்றங்கள் குறித்து, சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, இந்த நிதிப் பரிமாற்றங்கள் குறித்து, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் சம்பந்தபட்ட நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து, தகவல்கள் கோரப்பட்டுள்ளன' என்றன.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
basha - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜூலை-201214:57:33 IST Report Abuse
basha ethellam oru amounta
Rate this:
Share this comment
Cancel
hameed - riyadh,சவுதி அரேபியா
30-ஜூலை-201213:27:00 IST Report Abuse
hameed என்னப்பா amount கம்மியா இருக்கு...அதையும் போட்டாச்சா??????????
Rate this:
Share this comment
Cancel
Lightning View - Fahaheel,குவைத்
30-ஜூலை-201211:34:38 IST Report Abuse
Lightning View ஹவாலா மூலம், இந்தியாவில் வரி ஏய்ப்பு, ஊழல் செய்த பணம் வெளி நாடுகளில் பதுக்கி வைக்க படுகிறது உலகம் அறிந்த உண்மை. புலன் ஆய்வுத்துறை, வருமான வரி உளவு துறை இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். இந்தியாவில் யார் இடம் வாங்கினாலும் அந்த பணம் எப்படி வந்தது என்று வருமான வரி துறையிடமிருந்து சான்றிதல், பெற்ற பின் சார் பதிவாளர் பதிவு செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Dhana Sekar - Chennai,இந்தியா
30-ஜூலை-201210:00:08 IST Report Abuse
Dhana Sekar சுவிஸ் வங்கி நிரம்பியிருக்கக் கூடும். எனவே இப்போது பிரான்ஸ் பக்கம் பார்வையை திருப்பியிருக்கின்றனர். கண்ணுக்கெதிரே கோடி பேர் கஞ்சிக்கே வழியில்லாமல் அல்லல் படுகிறார்கள். இது போன்ற அயோக்கியர்கள் நிச்சயமற்ற நாளைக்காக சொத்து சேர்க்கின்றனர். ஒரு வேலை நரகம் இருந்தால் சத்தியமாக இவர்களுக்குத்தான் முன்னுரிமை கிடைக்கும்......
Rate this:
Share this comment
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜூலை-201209:57:45 IST Report Abuse
Sriram V Let the Congress government there names and also publish the names of Black money holders earlier given by Germany. Let them check in Italy, Sicille and some Island nations, I am sure lot of Congress Politicians will be in trouble.
Rate this:
Share this comment
Cancel
g.k.natarajan - chennai,இந்தியா
30-ஜூலை-201208:53:03 IST Report Abuse
g.k.natarajan எல்லாருடைய பெயர்களையும், பத்திரிகைகளில் வெளியிட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளி வந்தது 0.001% கூட இல்லை நடராசன்.
Rate this:
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
30-ஜூலை-201208:26:39 IST Report Abuse
Kankatharan  566 ஆயிரம் கோடி டாலர், அல்லது யூரோவா இருக்கக்கூடும். வெளிநாட்டுக்காரன் ரூபா என்று போடுவதற்கு நியாயமேயில்லை. நம்மாளும் சின்ன தொகையெல்லாம் டிப்பாசிட் பண்ண மாட்டாங்க. பத்திரிக்கையில் அச்சு மிஸ்டேக் காரணமாக ரூபா என்று தப்பா போட்டத்துக்கு மன்னிப்பு கோருவாங்க அப்பதான் நம்பளோட வீரியத்த புரிஞ்சுக்குவாங்க.
Rate this:
Share this comment
Cancel
Sar Bar - chennai,இந்தியா
30-ஜூலை-201208:25:05 IST Report Abuse
Sar Bar முதலில் சுவிஸ் பேங்க் கில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டும், அல்லது இந்தியா வில் பேங்க் கொள்கை மாற்றப்பட வேண்டும், கருப்பு பணம் இந்தியாவிலேயே இருக்கும் அளவுக்கு செயல்பாடுகள் மற்ற பட வேண்டும், சுவிஸ் பேங்க் கில் இருக்கும் பணம் இந்த சூழ்நிலையிலும் இந்திய அரசாங்கதிர்க்கோ, அல்லது அங்கே டெபொசிட் செய்த வருக்கோ கிடைக்க போவதில்லை, அங்கே பணம் போட்டவன் ஏழை இல்லை, மேலும் போட்ட பணத்தை எடுப்பது சுலபமில்லை, எடுத்து செலவு செய்ய வேண்டிய நிலையில் போட்டவனும் இல்லை, மொத்தத்தில் நம் பணத்தால் சுவிஸ் வாழ்கிறது, பணம் கொள்ளை அடிப்பவன் சிந்திக்க வேண்டும், இந்தியா ஒரு நாள் வறுமையில் தள்ளப்படும் போது, சுவிஸ் பணம் போட்டவனுக்கே உதவாது. திருந்துபவன், திருந்தி பணத்தை அரசு வசம் ஒப்படைத்தால், தண்டனை கிடையாது என்று அறிவிக்க வேண்டும், அப்படியாவது பணம் கிடைத்தால் சரி, மேலும் நமது தண்டனை முறை பணம் இருந்தால் போதும் ஹோட்டலில் தங்குவது போல்தான். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் தனிப்பட்டவர்கள் அல்லது கம்பனி பெயர்களில் உள்ள சொத்து நிலவரங்களை வெளியிடவேண்டும், மேலும் புதியதாக கட்டும் கட்டிடங்கள் யார் பெயரில், எவ்வளவு தொகையில் காட்டபடுகிறது போன்ற விவரங்கள் வெளிப்படையாக இருக்க கருப்பு பணம் குறையும்,
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
30-ஜூலை-201207:13:03 IST Report Abuse
villupuram jeevithan வெளிநாட்டில் இருப்பது கருப்பு பணம் இல்லை என்று சான்றதழ் வழங்கினாரே அப்போது இப்போதய ஜனாதிபதி
Rate this:
Share this comment
Kodhai - Vaduvoor,இந்தியா
30-ஜூலை-201215:42:57 IST Report Abuse
Kodhaiஅவருக்கே இருக்கும்... அதான்......
Rate this:
Share this comment
Cancel
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜூலை-201205:13:30 IST Report Abuse
Sivakumar Manikandan தொகை கம்மிய இருக்கு............நம்ம நாட்டு காரங்களா இருக்காது............நம்மாளுக எல்லாரும் ஒரு லட்சம் கோடி .....ரெண்டு லட்சம் கோடி தான் வெளி நாட்டுல போடு வாங்க ..........................
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
30-ஜூலை-201210:06:48 IST Report Abuse
villupuram jeevithanஒரே நாட்டிலா பதுக்கி வைப்பார்கள்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்