சென்னை மாநகராட்சியின் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலர் மீது, முதல்வர் ஜெயலலிதா நேரடியாக குற்றப்பத்திரிகை வாசித்து, அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், சில கவுன்சிலர்கள் திருந்தாமல் மீண்டும், அதே தவறுகளை செய்துள்ளனர். இதனால், முதல் கட்டமாக, வட சென்னை, தென் சென்னையைச் சேர்ந்த இரு கவுன்சிலர்களிடமிருந்து, பகுதி செயலர் பதவிகளை பறித்து, முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரையும் சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதா நேரடியாக சந்தித்தார். அப்போது, பல்வேறு புகார்களில் சிக்கிய, 71 கவுன்சிலர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தார். "ஒரு மாத காலத்திற்குள் கவுன்சிலர்கள் திருந்தவில்லை என்றால், மாநகராட்சியை கலைத்து விடுவேன்' என, முதல்வர் ஜெயலலிதா எச்சரித்தார்.இதை தொடர்ந்து, ஆளுங்கட்சியின் கவுன்சிலர்கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். துறைமுகம் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் ஆவின் அருள், சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் அலிகான் பஷீர் ஆகியோர், வகித்து வந்த பகுதி செயலர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் இருவரும், ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா வாசித்த புகார் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. துறைமுகம் பகுதியில், வட மாநில பிரமுகர்கள் கட்டி வரும் கட்டடங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வைத்து, அவர்களிடம் கறாராக நடந்து கொண்டதாக, கவுன்சிலர் அருள் மீது மீண்டும் புகார்கள் எழுந்தன.சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியில், மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், கார் நிறுத்துமிடம் நடத்தி வந்தது உள்ளிட்ட புகார்கள், அலிகான்பஷீர் மீது குவிந்துள்ளன. இதையடுத்து, இருவரும் வகித்து வந்த, பகுதி செயலர் பதவிகளை, முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக பறித்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், ""வட சென்னை தெற்கு மாவட்டம், துறைமுகம் பகுதி செயலர் அருள்வேல் என்ற ஆவின் அருள், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். துறைமுகம் அ.தி.மு.க., பகுதி செயலராக சம்பத் நியமிக்கப்படுகிறார். தென் சென்னை வடக்கு மாவட்டம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி செயலர் பொறுப்பிலிருந்து அலிகான்பஷீர் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக, அப்துல்கரீம் நியமிக்கப்படுகிறார்,'' எனத் தெரிவித்துள்ளார்.
கவுன்சிலர்களின் கட்சிப்பதவி பறிப்பு மூலமாக, அடுத்த கட்ட எச்சரிக்கையை, முதல்வர் ஜெயலலிதா வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதவி பறிப்பு அறிவிப்பு, கவுன்சிலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஆண்டவா இந்த ரெண்டு திராவிட கட்சிகளிடத்திலிருந்து என்னிக்கு தான் என் தமிழ் நாட்டு மக்களை காப்பாத்த போற. இப்போவே அத தரேன் இத தரேன்னு நம்மளை பிச்சைக்காரங்க அளவுக்கு கொண்டு வந்துட்டாங்க. நாமளும் சூடு சொரணை எதுவுமே இல்லாதது போல இருக்கிறோமே தமிழன் தன் மானம் இது தானா ???. இழந்த தன்மானத்தையும் வீரத்தையும் என்னைக்கு மீட்டேடுக்கிரோமோ, என்னைக்கு இவங்கே ரெண்டுபேரையும் ஓட ஓட விரட்டுரோமோ அப்போதான் நாம் தன் மான தமிழர்கள். அதுவரை மானம் போன தமிழர்கள் தான். இவர்கள் செய்யும் அரசியல் நாடகங்களில் நம் ஈழ தமிழர்களை கொன்று குவித்ததை தவிர வேறொன்றும் செய்ய வில்லை.
திரு. N. புருஷ் பாரத்வாஜ் முதலில் கூறிய கருத்தை நான் முழு மனதுடன் ஆமோதிக்கிறேன். யார்..தப்பு, மற்றும் சட்டங்களுக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகிரார்களோ, சட்டப்படி நடவிடிக்கை எடுத்துத்தான் தீரவேண்டும் அதில், பேரம் இல்லை. இல்லாவிட்டால், நிறைய குழப்பங்களுக்கு வித்தாகிவிடும். எப்போதும், சட்டம் தன் கடமையைச் செய்ய, ஊக்குவிக்க வேண்டும். சென்னை கார்பொரேஷன் நடைமுறைகளை, விதிமுறைகளை நன்கு தெரியாவதர்களை ஏன் கவுன்சிலர் ஆக நிற்கவைத்து தேர்ந்தடுக்கவேண்டும். பொதுவாக, கவுன்சிலர் ஆக நிற்பதற்கே ஒரு தகுதி பரிக்ஷை அமுல் படுத்தியாக வேண்டும்....நம் ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்தாக ஆகாமல் இருக்க. இம்மாதிரியே சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும், நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும், மந்திரிகளுக்கும் அமுல் படுத்தினால் தான் எல்லா விதமான கேலிக்கூத்துக்களில்
இருந்து தமிழ் நாடு, மற்றும் இந்தியா தப்ப முடியும். இதை செய்வார்களா? இதற்கும் ஒரு அன்னா ஹசாரே தேவையா?
சிந்தியுங்கள். இதை எந்த கட்சி பாகுபாடு இன்றி சொல்ல விழைகிறேன். வாழ்க இந்தியா. வாழ்க நம் தமிழகம்.
"மணியன்"
இத்தனை பெரிய குமுரளுக்கும் ஒரே பதில் ,,வெற்றி பெற்ற அணைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்,மேயர்,நகராட்சி தலைவர் ,,மற்ற தலைவர்கள் என அனைவரும் மனுதக்களில் இருந்து வெற்றி பெரும் வரை தினம் டாஸ்மார்க் செலவு ,,வோட்டுக்கு பணம் ,,பேனர் நோட்டீஸ்,சாப்பாட்டு செலவு ,பூத்து செலவு இதெல்லாம் யார் கணக்கு ,,கருத்து சொன்ன அனைவரும் அப்படியா திரும்பி நம்ம ஊர் உறவுகல்ட்ட பணம் கவனிப்பு இல்லாமல் ஒட்டு போட்டு ஒரு வேட்பாளரே வெற்றி பெற செய்தால் சபாஷ் உங்களுக்குதான் ,,விஜயகாந்த் தி.மு.காவும் அதன் வெற்றி வேட்பாளர்களும் ரொம்பவே உசாரா கரந்தரகலாம் காரணம் இவர நம்பி போறது மண் குதிரையே நம்பி ஆத்துல போறமாதிரி என்று ,விட்டத இந்த அஞ்சு வருசா சட்ட மன்ற உறுபினர இருக்கும் போதே கைல காசு பாத்தா தான் உண்டு என்று ..தி.மு.கா வ பற்றி சொல்லி தெரியனுமா ,,தமிழக கட்சி தலைவர் யாரவது அம்மா அளவுக்கு தைரியமா நடவடிக்கை எடுத்ததுண்ட ,,விஜகாந்த் அவர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மேல் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் தவறே செய்ய வில்லை என்று கூற முடியுமா
\\\\ சென்னை மாநகராட்சியின் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலர் மீது, முதல்வர் ஜெயலலிதா நேரடியாக குற்றப்பத்திரிகை வாசித்து, அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், சில கவுன்சிலர்கள் திருந்தாமல் மீண்டும், அதே தவறுகளை செய்துள்ளனர். //// அவனுங்களுக்குத் தெரியாதா இதெல்லாம் அம்மா உளுளாக்கட்டிக்கு-த்தான் எச்சரிக்கிறாங்க-ன்னு அம்மா கால்ல (பெத்த அம்மா காலில் ஒருதடவையாவது விழுந்திருப்பானுன்களா?) விழுந்து புரளுற அளவுக்கு பயபக்தி உள்ளவனுங்கோ மிரட்டினாலே ......... போகணுமே அது ஏன் நடக்கலை????

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.