E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மன்மோகன் வீடு முதல் சிதம்பரம் வீடு வரை பிரதிபலிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

31 ஜூலை
2012
00:25
பதிவு செய்த நாள்
ஜூலை 29,2012 23:52

புதுடில்லி:ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம், சூடுபிடிப்பதற்கான அறிகுறி ஏற்பட்டுள் ளது. ஊழலுக்கு எதிராக ஒன்று திரண்டு, ஹசாரே ஆதரவாளர்கள் நடத்தி வரும் போராட்டம், பிரதமர் மன்மோகன் சிங் வீடு முதல், உள்துறை அமைச்சர் சிதம்பரம் வீடு வரை பிரதிபலித்துள்ளது. டில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் அன்னா ஹசாரே குழுவினர், கடந்த ஐந்து நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். "லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்; ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள, 15 மத்திய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும்' என்ற, கோரிக்கைகளை வலியுறுத்தி, அரவிந்த் கெஜ்ரிவால், மனீஷ் சிசோடியா, கோபால் ராய் ஆகிய மூன்று பேரும், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். கெடு:ஹசாரே குழுவினருக்கு, பொதுமக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாகவும், அதனால், உண்ணாவிரதம் நடக்கும் இடத்தில், மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான், பொதுமக்கள் உள்ளதாகவும், மீடியாக்களில் தகவல் வெளியானது. இந்நிலையில், "லோக்பால் மசோதா தொடர்பான, என்னுடைய கோரிக்கைக்கு, ஜூலை 28க்குள் பதில் அளிக்கவில்லை எனில், நானும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வேன்' என அன்னா ஹசாரே, மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் விதித்திருந்த கெடு, முடிவடைந்ததை அடுத்து, நேற்று அவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் களமிறங்கினார்.
கூட்டம்:
நேற்று காலை 10.30 மணிக்கு உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து, உண்ணாவிரதத்தை துவக்கினார். அப்போது, "பாரத் மாதா கி ஜே' என, அங்கு கூடியிருந்தவர்கள் கோஷம் எழுப்பினர். கடந்த நான்கு நாட்களாக கூட்டம் குறைவாக இருந்தாலும், நேற்று 8,000க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டிருந்தனர். இது, ஹசாரே ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

உண்ணாவிரத மேடையில் அன்னா ஹசாரே பேசியதாவது:உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என, என் ஆதரவாளர்கள் கூறியதை பொருட்படுத்தாமல், உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளேன். நாட்டிலிருந்து ஊழலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதும், அதற்காக லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பது தான், என் கோரிக்கை. இந்த மசோதாவை நிறைவேற்றும் வரை, எங்களின் போராட்டம் தொடரும். லோக்பால் மசோதா நிறைவேறும் வரை, நாட்டு மக்கள், என்னை சாக விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது.இவ்வாறு அன்னா ஹசாரே பேசினார். இதற்கிடையே, அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர், ஊழலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி, இந்தியா கேட் அருகே நேற்று பிரமாண்ட பேரணியையும் நடத்தினர். இது, ஹசாரே மேற்கொள்ளும் முயற்சிகள் இனி சூடுபிடிக்கும் அறிகுறி என்ற கருத்தை அவர் ஆதரவாளர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமர் முதல்...:குறிப்பாக, ஆட்சியாளர்கள் மீது, மக்களின் கோபம் திரும்பியுள்ளது. இதற்கு அறிகுறியாக, நேற்று முன்தினம், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் வீடு முன், ஹசாரே ஆதரவாளர்கள் போராட்டத்தில்ஈடுபட்டனர். பிரதமர் வீட்டின் மீது கல் வீச்சும் நடந்தது. இது, மக்கள் கோபத்தின் பிரதிபலிப்பு என்று ஹசாரே தெரிவித்தார்.சிதம்பரம் வீடு முன்:இதைத்


தொடர்ந்து, நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள உள்துறை அமைச்சர் சிதம்பரம் வீட்டை, அன்னா ஹசாரே குழுவின் சார்பில் 100 பேர், திடீரென முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர் ரஞ்சன்குமார் தலைமையில், இளைஞர் காங்கிரசார் 50 பேர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் அன்னா ஹசாரே குழுவினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களை, போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். பின்பு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (85)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adheeshkumar - ooty,இந்தியா
30-ஜூலை-201223:31:23 IST Report Abuse
adheeshkumar சுதந்திர போராட்டம் பகுதி2 ............. ௧) தேச தந்தை - அன்னா ஹசாரே 2 ) ஈறும்பு பெண் கிரண் பேடி 3 ) இரண்டாம் சுதந்திர பின் பாரதம் அழகுடியவர்கள்-பிஜேபி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Tamilkizham - கன்னியாகுமரி,இந்தியா
30-ஜூலை-201222:06:45 IST Report Abuse
Tamilkizham இப்படி அகிம்சையை நம்பி இருந்தால் இன்றைக்கு நம் கண் முன்னால் சின்ன சின்ன நாடுகளெல்லாம் எப்படி சுதந்திரம் அடைந்திருக்கும். ஜி உங்ககிட்ட 8000 பேர், நான் தமிழ்நாட்ல இருந்து ஒரு 1000 பேர் (அவ்வளோதான் தேரும்) கூட்டிட்டு வரேன். இதற்கு வன்முறை தான் தீர்வு. இந்த போருக்கு நான் தலைமை தாங்குறேன். வெற்றி அல்லது வீரமரணம்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
sekar - TIRUPPUR,இந்தியா
30-ஜூலை-201220:43:40 IST Report Abuse
sekar அவரும் மக்களில் ஒருவர் தானே. ஹசாரே தன் கடமையை சரியாக செய்கிறார். நன்றி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30-ஜூலை-201219:11:51 IST Report Abuse
Pugazh V கட்சி பின் பலத்தில் நின்றாலே ஜெயிக்க முடிவதில்லை. இனி அண்ணா சொல்பவருக்கு ஒட்டு போடா எவ்ண்டுமாம் இவர் என்ன சர்வாதிகாரியா? இவரது ஆணைப்படி எல்லோரும் நடக்க வேண்டுமா? வேலை செய்பவர்களை சோம்பேறிகளாக்கும் ஹஜாரே ஒழிக அதென்ன உண்ணாவிரதப் பந்தலில், பார்வையாளர்களுக்கு சமோசா, டீ, சப்பாத்தி தருவது? கூட்டத்தினருக்கு லஞ்சமா இது?? நம் இலவச விரும்பிகள் இந்த ஓசி உணவிற்குப் போவதால் வேலைக்கு ஆள் இல்லாமல் போகிறது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Jenil. - Nagercoil,இந்தியா
30-ஜூலை-201217:43:21 IST Report Abuse
Jenil. என்ன பைதியகாரதனமான கருத்துக்கள். பொழுது போகவில்லை என்று போராட்டமோ என்று நினைக்க தோன்றுகிறது. மின் தடை என்பது எங்கு வேண்டும் என்றாலும் ஏற்படலாம். பொறுப்பபற்ற முறையில் பேச ஆரம்பித்தால் தற்போதைய அரசின் அணுகு முறைக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Nanmai Nanmaigal - tuticorin,இந்தியா
30-ஜூலை-201217:28:23 IST Report Abuse
Nanmai Nanmaigal உண்ணாவிரதம் இருந்து லோக்பால் கொண்டு வரட்டும். அது மட்டும் போதாது. ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் அதிகாரிகளின் கண்களுக்கு முன்பாகவும் மக்களின் கண்களுக்கு முன்பாகவும் 10 நல் வார்தைகள எழுதி வைக்க வேண்டும் 1 .உண்மையுள்ளவர்கள் உயர்வும் நல் மதிப்பும் அடைவர் 2 அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும் நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம் 3 . பரிதானம் லஞ்சம் பறித்தல் சட்டப்படி குற்றமாகும் .இப்படி 10 . வார்த்தைகள் எழுதிவைத்தால் நிச்சயமாக மாற்டம் வரும் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
PALANISWAMY - COIMBATORE ,இந்தியா
30-ஜூலை-201217:13:33 IST Report Abuse
PALANISWAMY முதலில் ஒன்றை சிதம்பரம் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் இருக்கும் கட்சி தொண்டர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அண்ணா ஹசாரே எந்த ஒரு கட்சியை எதிர்த்தும் போராட்டம் செய்யவில்லை. நம் சந்ததிகளுகாவது நல்ல ஆட்சியாளர்கள் கிடைக்கட்டும். ஊழல் இல்லா இந்தியா கிடைக்கட்டும் என்றுதான் பாடு படுகிறார். வோட்டு கேட்க மக்களிடம் வெட்கமில்லாமல் வரும் அரசியல் வாதிகள் அதே மக்கள் தங்களது வீட்டுக்கு வந்து ஏதும் கேட்கவில்லை. குறைந்த பட்சம் எதற்காக வோட்டு வாங்கினீர்களோ அந்த வேலையை ஒழுங்காக செய்யுங்கள் என்றுதான் கேட்கிறார்கள். இதற்கு ஏன் காசு வாங்கிகொண்டு நாட்டை காட்டிகொடுத்த துரோகிகள் போல காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைகிறார்கள். தற்பொழுது மீடியா கூட அண்ணா விற்கு முன்பு இருந்த அளவிற்கு ஆதரவு தருவது இல்லை. வியப்பாக இருக்கிறது. அரசியல் வாதிகள் கையில் தானே 75% மீடியாக்கள் இருகின்றன. வாழ்க பாரதம். அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
saravan - Coimbatore,இந்தியா
30-ஜூலை-201217:06:15 IST Report Abuse
saravan ஊழலை ஒழிப்பது நல்ல விஷயம்தான். அது ஏன் ஒரு கட்சிக்கு எதிராக மட்டுமே இருக்கிறது? இதே தாத்தா சென்னை வந்தபோது கூட்டமே இல்லை. அப்படி என்றால் தமிழ் நாட்டில் ஊழல் இல்லாத நல்லாட்சி நடக்கிறதா இல்லை நடந்ததா? காந்திய வழி என்று சொல்லிக்கொண்டு ஒரு மக்களை திசை திருப்ப நடுக்கும் ஒரு முயற்சியாகவே தெரிகிறது? அரசியல்வாதிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டு சொல்லி அதற்க்கு விசாரணை வேண்டும் என்று சொல்வது சரியானதே? அதேசமயம் இவருடைய ஆட்கள் மேல் குற்றம் சொன்னால் மட்டும் எப்படி வீண் பழியாக மட்டுமே இருக்கமுடியும்? இவருடைய ஆட்கள் பெரும்பாலும் வக்கீல்களும், அதிகாரிகளும் தான். இவர்கள் யோக்கியம் என்று எப்படி நம்புவது தன்னுடைய தவறை மறைக்க இவர்கள் முயற்சி செய்யாதவர்கள் என்று நம்ப முடியவில்லை. மேலும் கூட்டம் குறைந்து விட்டது என்று கடுப்பில் வன்முறையில் இறங்கி இருக்கிறார்கள். காந்தி வழி வந்ததாக கூறிகொள்ளும் தாத்தா, அவர்களை கட்டுபடுதாமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறாரா இல்லை இவரை கைப்பாவையாக காட்டி அரசியல் செய்பவர்களும் தன்னுடைய தவறை மறைக்க நினப்பவரகளும் விளையாடுகின்றனர? மகாத்மா காந்திக்கு மட்டுமே வெளிச்சம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
30-ஜூலை-201216:22:06 IST Report Abuse
Nallavan Nallavan அன்னா ஹசாரே டீமில் பலர் முழுத் தூய்மை இல்லாதவர்களாக இருக்கலாம். புத்தர், இயேசு ( வயதுக்கு வராத சிறுமியை மணந்தவரை நான் இங்கு குறிப்பிட மாட்டேன் ) போல அணுவளவும் களங்கம் அற்றோர் வாழும் பூமியல்ல இது ஆனால் ஊழலில் தேசமே கொள்ளை போய் வருகிறது என்ற உண்மையை உணராதோர், மறுப்போர் தேச விரோதிகளே எனினும் ஹசாரே குழுவைத் தொடர்ந்து குறை கூறுபவர்கள் ஒரு குறப்பிட்ட பிரிவினரே ஆவர் பல வாசகர்களும் அதைக் கவனித்திருப்பார்கள் புரியாதவர்கள் குறை கூறி எழுதியுள்ள வாசகர்களின் பெயரை மட்டும் பார்க்கக் கேட்டுக்கொள்கிறேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
maha - bangalore,இந்தியா
30-ஜூலை-201215:55:04 IST Report Abuse
maha ஒரு 75 வயதான மனிதர் உயிருக்கு துணிந்து ஊழலை ஒழிக்க வேண்டும் என்று போராடினால், எவ்வளவு சல்லிசா கமென்ட் எழுதிட்டு போயிடரிங்க . ஐயா சரி. அண்ணா விளம்பரத்துக்கு செய்கிறார் என்று வைத்து கொள்வோம் , அவர் அதனால் அடையும் பயன் என்ன . அவர் ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவர் இல்லை . இதன் மூலம் எலக்சனில் நின்று ஒட்டு வாங்கி ஆதாயம் அடைய . அதற்கு அவருக்கு வயதும் இல்லை , இயற்கை அவருக்கு அனுமதிக்க போவது இன்னும் 5 ஆண்டுகள் . அவருக்கு பேரன் ,பேத்தி ,இணைவி ,துணைவி , மனைவி என்று பெரிய குடும்பம் இல்லை . அவர் ஒன்றும் மக்கள் காசில் திருவளுவர் சிலை வைத்து , அரசு காசில் செம்மொழி மாநாடு நடத்தி, உழல் காசில் ஆரம்பித்த டிவியில் நான்தான் தமிழை காத்தேன் , நான்தான் கட்டுமரம் என்று டெய்லி சுயபுராணம் பாடுபவர் அல்ல . , பேரன் பேத்தி , மனைவி , துணைவி , இணைவி என்று இங்கே ஒரு மாளிகை , அங்கே ஒரு மாளிகை என்று சுக போகங்களை அனுபவிப்பவர் அல்ல . அவர் வாழ்க்கை கடந்த இருபது வருடங்களாக ஒரு திறந்த புத்த்தகம் . ஒரு கிராம கோயிலில் ஒரு சிறிய வாழ்க்கை வாழ்கிறார் . அரவிந்த் கேஜ்ரிவலை எடுத்து கொள்வோம் . அவர் IRS அதிகாரியாய் இருந்தவர் . இன்றைக்கு இந்தியாவின் அனைத்து உழல் வழக்குகளும் வெளியே வர காரணமாய் இருக்கும்" தகவல் அறியும் சட்டத்தை" அவர்தான் போராடி கொண்டு வந்தார் . அவர் ஏன் இத்தனை ஏச்சுகளை வாங்கிகொண்டு , சுகரை வைத்து கொண்டு நாலு நாலா உண்ணா விரதம் இருக்க வேண்டும் . இதை எழுதும் நானும் சுகர் பேசன்ட். நான் ஒவ்வொரு நாளும் எப்படி பார்த்து பார்த்து சாப்பிட்டு , பயந்து பயந்து வாழ்க்கை ஓட்டுகிறேன் என்று எனக்குத்தான் தெரியும் . ஒரு சுகர் பேசன்ட் இப்படி சாப்பிடாமல் இருந்தால் , உறுப்பு ஏதாவது கேட்டு விடும் அபாயம் உள்ளது ,நேற்று தினத்தந்தியில் சேலம் இன்ஸ்பெக்டர் லட்சுமனின் வீட்டை பார்த்தேன் . மூன்று அடுக்கு பங்களா. ஒரு லோக்கல் இன்ஸ்பெக்டர் இவ்வளவு சம்பாதிக்க முடியும் என்றால் , நிதி துறை அதிகாரியான் அரவிந்த் கேஜ்ரிவளால் எவ்வளவு சம்பாத்து இருக்க முடியும் , அவர் ஏன் இந்த டெல்லி வெய்யிலில் ,சுகரை வைத்து கொண்டு போராட வேண்டும் . அரவிந்த் கேஜ்ரிவாளின் வாழ்க்கை அவர் மனைவி சம்பாதியத்தில்தான் ஓடுகிறது என்பதை அறிவிர்களா ? .பிரசாந்த் புஷனை எடுத்து கொள்ளுங்கள் . அவருடைய தந்தை மிக பெரிய லாயர் . அவருக்கு தேவையான பணத்தை அவர் தந்தை அவர் விரல் ஸூப்பும் போதே சம்பாதித்து விட்டார் . அவரும் மணிக்கு லட்சங்களில் வாங்கும் பெரிய லாயர் . 2g கேசை தான்தான் கொண்டு வந்ததாய் சுபிரமணியம் சாமி பீற்றி கொள்கிறார் , அனால் பிரசாந்த் புஷன் தான் 2g யை கேஸ் போட்டு முதலில் வெளியே கொண்டு வந்தவர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் . உங்களில் எத்தனை பேருக்கு சந்தோஷ் ஹெக்டே பற்றி தெரியும் . அவர் முன்னால் கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி . நான் இங்கு பெங்களூரில் , அவர் நடத்தும் போராட்டங்களில் எனது , வேலை அனுமதிக்கும் நேரங்களில் கலந்து கொண்டு வருகிறேன் . அவர்தான் பிஜேபியின் ஊழல் சாம்ராஜ்யத்தை அசைத்து காண்பித்தவர் . மிக பெரிய மக்கள் செல்வாக்கை இன்றும் வைத்து உள்ள எட்டியுரப்பாவை சிறைக்கு அனுப்பியவர் . இங்கு பாஜக அரசையே தனது பண பலத்தால் கைக்குள் வைத்திருந்த ஜனார்த்தன் ரெட்டி இன்று ஆறு மாதமாய் சிறையில் . இவர்களை போன்ற உத்தமர்களை தேசம் புறக்கணிக்கலாம் . ஆனால் நஷ்டம் இவர்களுக்கு அல்ல . அண்ணா எந்த ஆசையும் இல்லாத ஒரு மனிதர் , தன மீதி வாழ்க்கையை தனது கிராம மக்களுக்கு சேவை செய்து ஓட்டி விடுவார் . அரவிந்த் கேஜ்ரிவால்லை IRs தேறியவர் . அவரால் இன்றும் , எந்த ஒரு தனியார் கம்பனியிலும் சில லட்ச சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்து தன் குடும்பத்தை கவனிக்க சேலா முடியும் . சந்தோஷ் ஹெக்டே இன்று நாடறிந்த சட்ட மேதை . அவரால் இன்றும் பல லட்சங்கள் சட்ட ஆலோசனை செய்து சம்பாதிக்க முடியும் . இவர்களில் யாரும் திருட்டு ரயில் ஏறி , புரட்டு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் . அய்யா இறுதியாக ஒரு வேண்டு கோள். என போன்றவர்கள் , எங்கள் பணி அனுமதுக்கும் நேரத்தில் , அன்னா போரட்டத்துக்கு எங்களால் ஆன நேரத்தை செலவிடுகிறோம் . எங்களால் முடிந்த பணத்தை கொடுக்கிறோம் . இங்கு பெங்களூரில் பீரிடம் பார்க்கில் நடக்கும் உண்ணா விரதத்துக்கு , முதல் நாள் பந்தல் ,இடம் போன்ற செலவுகளுக்கு 1 .5 லட்சம் ஆகி உள்ளது . இந்த பணம் இரண்டே நாளில் இங்கு வந்த பார்வையாளர்கள் , 100 , 500 ]donation கொடுத்து விட்டார்கள் . இப்படி இந்த நாடு நல்ல இருக்கனும் என்கிற நல்ல உள்ளங்கள் , தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர் . இதற்க்கு நீங்கள் ஏதும் நல்லது செய்யா விட்டாலும் , உங்களுடைய , எடுத்தேன் கவிழ்த்தேன் போன்ற கமெண்டுகளால் தீயது செய்யாதீர்கள் . இதை நான் , இந்த தேசத்தில் ,தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் சார்பாகவும் , டிராபிக்கில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் சார்பாகவும் உங்கள் காலில் விழுந்து கேட்டு கொள்கிறேன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.