pothu news | சிவப்புத்துணியால் மூடியிருக்கும் புத்தர் சிலை : வரலாற்று ஆர்வலர்கள் அதிருப்தி| Dinamalar

சிவப்புத்துணியால் மூடியிருக்கும் புத்தர் சிலை : வரலாற்று ஆர்வலர்கள் அதிருப்தி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

குடவாசல் அருகே, கண்டிரமாணிக்கத்தில் கிடைத்த, கி.பி., 10, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான, சோழர் கால புத்தர் சிலையை சிவப்புத்துணி போட்டு மூடி வைத்துள்ளதால், வரலாற்று ஆர்வலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் . திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா கண்டிரமாணிக்கம் கிராமம், மேட்டுத்தெருவில் வசிப்பவர் மணிகண்டன். இவர், வீட்டுக்கொல்லைப் பகுதியில் கட்டுமானப் பணிக்காக, சமீபத்தில் அஸ்திவாரம் தோண்டியுள்ளார். பெரிய புத்தர் சிலை உள்ளே புதைந்திருப்பது தெரிந்தது. புத்தர் சிலையை மக்கள் பத்திரமாக மீட்டு, கொட்டகை அமைத்து, வழிபடத் துவங்கியுள்ளனர். பழமையான புத்தர் சிலை கிடைத்த தகவலறிந்தும், ஆய்வாளர்கள் குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சை தமிழ் பல்கலை கண்காணிப்பாளர் ஜம்புலிங்கம் ஆகியோர், நேரில் சென்று ஆய்வு செய்தனர். அந்த சிலை, கி.பி., 10, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்தது. புத்தர் சிலை குறித்து, ஆய்வாளர்கள் குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சை தமிழ் பல்கலை கண்காணிப்பாளர் ஜம்புலிங்கம் ஆகியோர் கூறியதாவது: குடவாசல் தாலுகா, கண்டிரமாணிக்கம் கிராமத்தில் கண்டெடுத்த புத்தர் சிலை, சோழர் காலத்தைச் சேர்ந்த சிற்பம். இது, கி.பி., 10, 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த சிலை, இந்த கிராமத்திலிருந்த பவுத்த பள்ளியில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு இருந்திருக்கலாம். ஒருங்கிணைந்த தஞ்சை, திருச்சி, புதுகை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் காணப்படும், 66வது சிற்பம் இது. பிரமாண்ட புத்தர் சிலை, அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. புத்தர் புன்னகை தவழும் இதழ்களுடன் காணப்படுகிறார். நெற்றியில் திலகக்குறி, நீண்டு வளர்ந்த காதுகள், பரந்த மார்பில் காணப்படும் மேலாடை, இடுப்பில் ஆடை ஆகியவை தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. வான் நோக்கியுள்ள வலதுகையில் தர்ம சக்கரக்குறி உள்ளது. சுருள்முடிக்கு மேல் தீச்சுடர் உள்ளது. இச்சிலையின், மூக்குப்பகுதி சிதைந்து இருப்பது, பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். கண்டிரமாணிக்கம் கிராமத்தில் இருந்து வருவாய்த்துறையினரால், அவசர அவசரமாக எடுத்து செல்லப்பட்ட புத்தர் சிலை, திருவாரூர் தியாகராஜர் கோவிலிலுள்ள அருங்காட்சியக வாயிலில் வைக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் புத்தர் சிலையை வைக்க, கோவில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு காட்டியதால், புத்தர் சிலையை சிவப்பு துணியால் கட்டி மறைத்துள்ளனர். திருவாரூருக்கு இடம் பெயர்ந்த புத்தர் சிலையை, அருங்காட்சியகம் முன் சிவப்பு துணி போட்டு மூடி வைத்துள்ள கலெக்டர் நடராசனுக்கு, எழுத்தாளரும், பேராசிரியருமான மார்க்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ""சிவன் கோவில் வளாகத்தில், புத்தர் சிலையை சிவப்பு துணி போட்டு மூடி வைத்து, வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய முடியாமல், மாவட்ட நிர்வாகம் அவமதித்துள்ளது,'' என்றார். கண்டிரமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஞான ஒளி கூறுகையில், ""புத்தர் சிலையை மீட்டு, மீண்டும் கிராமத்திலேயே வைப்போம்,'' என்றார்.

- நமது சிறப்பு நிருபர்-

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.