சுங்கச் சாவடி மையங்களில், கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலிப்பதால், லாரி உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், சீரான சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என, லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்கும் உரிமம், மத்திய தரை வழி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்தால் வழங்கப் படுகிறது. உரிமம் பெறும் தனியார் நிறுவனத்தினர், தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்கின்றனர். இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலையில் பயணிக்க, வாகனங்களுக்கு தகுந்தாற் போல் கட்டணமும் நிர்ணயம் செய்கின்றனர்.
இங்கு அதிகம்:
அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், 184 சங்கச் சாவடி மையங்கள், தனியார் நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த சுங்கச் சாவடிகளின் கட்டுப்பாட்டில், 4,832 கி.மீ., தூரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்து உள்ளன. தமிழகத்தில் அதிகளவில், 28 சுங்கச்சாவடி மையங்கள் உள்ளன.இந்த மையங்கள் ஒவ்வொன்றுக்கும், கட்டணங்கள் மாறுபடுகின்றன. தவிர, 2011ம் ஆண்டு சுங்கச் சாவடி மையங்களில், கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, புதிய சட்ட வடிவம் ஒன்று, மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத் துறை அமைச்சகம் மூலம் நிறைவேற்றப் பட்டது.
எதிர்ப்பு ஏன்?
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மாற்றத்தின் அடிப்படையில், சுங்கக் கட்டணம் மாறும் என்பது, அச்சட்ட முன்வடிவத்தின் சாராம்சம். அந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, சுங்கச் சாவடி மையங்களில், சுங்கக் கட்டணம் உயர்த்தப் பட்டது.இது, லாரி, பஸ் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. லாரி போக்குவரத்துக்கு செலவாகும் டீசல் கட்டணத்தைக் காட்டிலும், சுங்கக் கட்டணம் அதிகம் என்பதே, லாரி உரிமையாளர்களின் எதிர்ப்புக்கு முக்கிய காரணம்.
போராட்டம்:
சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்தும்; சுங்கச் சாவடி மையங்களில், சீரான சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த காலங்களில், நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.போராட்ட சமயங்களில் மட்டும், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, கோரிக்கை நிறைவேற்றப்படும் என, மத்திய அரசு உறுதி அளிக்கும். அதன்பின், லாரி உரிமையாளர்களது கோரிக்கையை கண்டு கொள்வதில்லை என, லாரி உரிமையாளர்கள் கடும் அதிருப்தி கொண்டிருக்கின்றனர்.
விதிமுறையில் மாற்றம்:
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி கூறியதாவது:முன்பு, சுங்கச் சாவடி மையத்தில் கட்டணம் செலுத்தி, ரசீது பெற்றால், அந்த ரசீதைக் காட்டி, சம்பந்தப்பட்ட சுங்கச் சாவடி வழியாக நாள் முழுவதும் பயணம் செய்யலாம். தற்போது, நாட்டின் பொருளாதார வசதி, வளத்திற்கு ஏற்ப, சுங்கக் கட்டணம் மாறும் என்ற விதிமுறை கடைபிடிக்கப் படுகிறது.இந்தச் சட்டம், மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்தபோது, கொண்டு வரப்பட்டது. உலக அளவில், இந்தியாவில் மட்டுமே, சுங்கக் கட்டணம் வசூல் செய்ய, இம்முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஒவ்வொரு பயணத்திற்கும், கட்டணம் செலுத்த வேண்டும்.மேலும், லாரி, பஸ் போன்ற இரு "ஆக்சில்' வண்டிகளுக்கு, 1 கி.மீ.,க்கு, 2.20 ரூபாய் வசூலிக்கப் படுகிறது. இது, லாரி தொழிலில் ஈடுபடுவோருக்கு, பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
தீர்வு ஏற்படுமா?
மேலும் அவர் கூறியதாவது:இதற்கு தீர்வு காணும் வகையில், 30 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும், ஓராண்டு வரை செல்லலாம் என்ற நடைமுறையை ஏற்படுத்தலாம். உள்ளூர் வாகனங்களுக்கு, ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், கட்டணமின்றி செல்லலாம்.மற்ற வாகனங்களுக்கு, சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு என்ற ஆலோசனை, திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மாண்டோ சிங் அலுவலியாவிடம் ஏற்கனவே தெரிவிக்கப் பட்டு உள்ளது. இது, எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெரியவில்லை.
இவ்வாறு நல்லதம்பி கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
I DONT UNDERSTAND. WHY THESE CHARGES. YEARS TOGETHER THEY ARE COLLECTING THIS TOLL. IF SO???? WHEN THEY WILL STOP THESE CHARGES. THAT MEANS LIFE LONG DO WE HAVE TO PAY THIS. AFTER A CERTIAN PERIOD OF TIME, FROM TOLL THEY MIGHT HAVE COLLECTED ALL THE MONEY THEY SPENT ON IT. BUT THERE IS NO SIGN OF THAT. COLLCET COLLECT COLLECT. SO THIS COLLECTION MONEY WILL BE GIVEN TO SOME IMPORTANT PERSON WHO IS CONTROLING THE TRANSPORTATION SECTOR. NO BODY IS ASKING WHEN ARE THEY GOING TO STOP??????????????????. SO PLEASE ... IF THE MONEY IS RECOVERED BY TOLL THEN PLEASE STOP COLLECTING THIS CHARGES FROM THE PEOPLE. IT UNFAIR. TO ENJOY ONE MAN WE ALL HAVE TO SUFFER.
there is nothing more illegal than this toll collection at our so called national highways which are no where equal to the expressways abroad. stopping the vehicles every 50-60 kms and making us wait for anywhere between 5 mins to half an hour to drive on roads which are always under state of disrepair at some sector or other makes driving so tedious. as some one has already mentioned the govt. has no business to collect road tax and deny us the right to travel. toll roads should be separate. roads like GNT n GST road have existed since long and the govt has taken our right to use these roads by collecting toll on these traditional roads. it is criminal but if the govt itself does it, who is to bell the cat? frankly I do not understand why the public crusaders do not fight PILs on this issue.
இப்போதுள்ள மேம்படுத்தப்பட்டுள்ள சாலைகள் என கூறப்படுபவை சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் நாம் சாலை வரி செலுத்தி பயன்படுத்தி வந்தவை, இவர்கள் வேறு இடங்களில் புது சாலைகள் அமைத்து சுங்கம் வசூல் செய்தால் செலுத்தலாம் ஆனால் இருந்த இடத்தில் சாலைகள் அமைத்து சுங்கம் அதுவும் பன்மடங்கு நாம் செலுத்த சாலை வரி எதற்கு அரசு எதற்கு??? அனைத்தையும் தனியாரிடமே ஒப்படைக்கலாமே
Sir,
There will be a share to the union surface transport minister. So Govt will not throw light on it, it will show a blind eye. EVeryone in Tamil Nadu knows very well, how T R Balu earned money through these Toll gates. To one&39s surprise, there was one tollgate, in which the license for renewal has expired long back but still they were charging the tolls only to forward suitcase full of currencies to this minister. This was detected by an IAS officer who only signed the termination of contract an year back and when he passed through, the same toll gate guys charging the tolls from him as well. That sort of tem is being followed in this country. Even now T R Balu wants that ministry and when Pranab came to Mk&39s house, a recommation was made to him in this regard as well.
Anonymous,
கோயமுத்தூர்ல இருந்து, ஹோசூர் வெளியில இருக்கற அத்திப்பள்ளி டோல்கேட் வரை காரில் செல்ல, சுங்க வரி மட்டுமே ரூபாய் 300 வரை கட்ட வேண்டிஉள்ளது. மொத்த தூரமே 310 KM . அதில் முதல் 60 KM வரை பனி நிறைவு பெறவில்லை. ஆகா கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் இருபது காசுக்கு மேல் கட்டவேண்டயுள்ளது. இப்பொழுது பவர் ச்டீரிங்கு வந்த பின்னால டயர் லைப் 30000 km தாண்டுவதில்லை. டயர் தைமானமே கிலோமீட்டருக்கு நாற்பது பைசா ஆகிவிடுகிறது. வண்டியை சர்வீஸ் விடப்போன அங்க வேற கதை. முன்னடியல்லாம், ஐயாயிரம் கிளோமீட்ர்ல சர்வீஸ்னா, நாம நேக்கா ஒரு சர்வீஸ் கட் பண்ணா, ஒரு சர்வீஸ் காசு மிச்சமாகும். இப்பல்லாம் அப்படியில்ல, போன சர்வீஸ் எத்தனை கிலோமீட்டர்ல பண்ணது, இப்போ என்ன ஓடியிருக்குன்னு பாத்து, கிலோமீட்டருக்கு ரெண்டு ரூபாயாச்சும் வர மாதிரி பில் தீட்டுனாத்தான், அந்த சர்வீஸ் இஞ்சினியர் வண்டி ஓடும். இது மாதிரி, FUEL செலவு சேர்த்தாமலேயே கிலோமீட்டருக்கு நான்கு ரூபாய் பக்கமா ஆயிடுது. இது போக FUEL செலவு வண்டியப்போருத்து கிலோமீட்டருக்கு, மூணு ரூபாயிலிருந்து ஏழு ரூபாய் வரை ஆகிறது. , இதுக்கு மேல இன்சூரன்ஸ் செலவு வேற. என்னத்தை பண்றது. புலம்பலாம்..அவ்வளவு தான்.
It is absolutely right Mr. Vivasayi. Moreover the toll roads are not maintained .. Especially at Thoppur section, roads are very bad due heavy load lorries. It should be maintained properly when they are collecting toll fees. and Also too much of cross roads . Bike riders, Lorries are not bothered at cross road whey they are crossing. All should considered when they collect the toll fee....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.