"பலமான லோக்பால் கொண்டு வாங்க, இல்லை வெளியேறுங்க: அன்னா ஹசாரே எச்சரிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:""பலமான லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் அல்லது ஆட்சியிலிருந்து விலக வேண்டும்,'' என, டில்லியில் உண்ணாவிரதம் இருந்து வரும், சமூக சேவகர் அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்.

பலமான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தரில், அன்னா ஹசாரே குழுவினர் கடந்த வாரம் உண்ணாவிரதம் துவங்கினர். இந்த உண்ணாவிரதத்தில், நேற்று முன்தினம் முதல், அன்னா ஹசாரேயும் பங்கேற்றுள்ளார். உண்ணாவிரதத்தின் இரண்டாவது நாளான நேற்று காலையில் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால், மதிய நேரத்தில் அதிகரித்தது.

உண்ணாவிரத மேடையில் ஹசாரே குழுவினர் பேசுகையில், ""பிரச்னையை தீர்க்க மத்திய அரசு விரும்பினால், அன்னா ஹசாரேயிடம் பேச, தூதுவரை அனுப்ப வேண்டும். வட மாநில மின் தொகுப்பை சீர் குலைந்து, பல மாநிலங்களில் இன்று (நேற்று) மின் தடை ஏற்பட்டதற்கு, சதியே காரணம். ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பதால், அந்த விவகாரத்தை திசை திருப்ப, மின் தடை பிரச்னையை ஏற்படுத்தியுள்ளனர்,'' என்றனர்.

அலை அதிகரிப்பு:
பின்னர் ஹசாரே பேசுகையில், ""நாட்டில் ஊழலுக்கு எதிரான போராட்ட அலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பலமான லோக்பால் மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவேண்டும். இல்லையெனில், ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும்,'' என்றார்.

ஹசாரே குழுவைச் சேர்ந்த குமார் விஸ்வாஸ் பேசுகையில், ""அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், மக்கள் துணிச்சலாக வெளியே வந்து, ஹசாரேயின் இயக்கத்திற்கு ஆதரவு தருவர். அரசு மின் தொகுப்பை துண்டிக்கலாம். மின்சாரத்தை துண்டிக்கலாம். மெட்ரோ ரயில் சேவைகளை நிறுத்தலாம். பஸ், ஆட்டோ சேவைகளைக் கூட நிறுத்தலாம். ஆனாலும், ஹசாரே இயக்கத்தில் மக்கள் இணைவர். அரசு அராஜக முறையிலும், சர்வாதிகாரமாகவும் செயல்படுகிறது.

இந்த முறை ஹசாரேயின் உண்ணாவிரதம் தொடரும் வரை, டில்லியில் புதிது, புதிதாக பல விஷயங்கள் நடக்கும்,'' என்றார்.

வாழ்வா, சாவா:இதற்கிடையில், ஹசாரேயின் நெருங்கிய உதவியாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய வலைதளத்தில், "இந்த முறை நடப்பது வாழ்வா அல்லது சாவா போராட்டம். இந்த வாரத்தை நாட்டிற்காக அர்ப்பணம் செய்யுங்கள். மக்கள் தங்களின் பணிக்கும், மாணவர்கள் கல்லூரிக்கும் செல்வதை விடுத்து, தெருவிற்கு வந்து போராட வேண்டும். மேலும், ஊழல் இல்லா இந்தியா உருவாக பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்தியா அந்த நிலையை நிச்சயம் அடையும். எனக்கு அபார நம்பிக்கையுள்ளது. எதிர்காலம் இந்தியாவினுடையது தான். விரைவில் அது நிகழும்' என, தெரிவித்துள்ளார்.

பவாரின் வீட்டிற்கு முன் போராட்டம்
அன்னா ஹசாரே ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர், நேற்று டில்லியில் மத்திய விவசாய அமைச்சர் சரத்பவாரின் வீட்டிற்கு முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அந்த சம்பவத்திற்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என, அன்னா ஹசாரே குழுவினர் கூறியுள்ளனர்.

நேற்று மதியம் சரத்பவாரின் வீட்டிற்கு சென்ற, 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அவரது வீட்டிற்குள் நுழைய முயன்றனர். இருந்தாலும், பாதுகாப்பு அதிகாரிகள், அவர்களை தடுத்து நிறுத்தி விட்டனர். விரைவில் போலீசாரும் அங்கு வந்து, அவர்களை பிடித்துச் சென்றனர். கடந்த சனியன்றும், பிரதமர் மன்மோகன் சிங் வீட்டின் முன், இதேபோல் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (49)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan K - chennai,இந்தியா
31-ஜூலை-201220:12:49 IST Report Abuse
Murugan K பெரிவரே , நீங்கள் போராடும் பலம் உள்ளவர். உங்கள் வெற்றி மக்களின் வெற்றி. கடமை செய். பலனை எதிர்பாராதே
Rate this:
Share this comment
Cancel
ice reuben - ice,ஐஸ்லாந்து
31-ஜூலை-201217:55:43 IST Report Abuse
ice reuben ஒன்றும் புரிய வில்லை நண்பர்களே. குடித்து விட்டு வாகனம் ஓட்ட கூடாதாம் சரி. ஆனால் குடிகாரர்கள் ஒட்டு போடுவது மட்டும் சரியா? அது போல தவறு செய்தவனுக்கு மட்டும் சட்டம் தன கடமையை செய்யுமாம் ..ஆனால் அரசியல் வாதிகளுக்கு மட்டும் விசாரணை கமிசனாம்
Rate this:
Share this comment
Cancel
senthilmurugan - chennai,இந்தியா
31-ஜூலை-201215:55:24 IST Report Abuse
senthilmurugan ஹசாரேவ கேவல படுத்தி கமென்ட் பண்ற நண்பர்களுக்கு ஒன்னு சொல்லிகிறேன், அரசாங்கத்த குறை சொன்னதற்கு வக்காலத்து வாங்கும் நண்பர்களின் உறவினர்கள் நேற்றைய ரயிலில் வந்திருந்தாலோ, நாள் முழுசும் உழைச்சி குடும்பத்துல உள்ளவங்க பட்டினி கிடக்குரவங்களோட வலி தெரிஞ்சாலோ, நல்லா படிச்சும் லஞ்சம் கொடுக்க முடியாம மேல படிக்க முடியாம இருகுரவன்களோட வலியும் வேதனைகளுக்கும் உன்னால முடிஞ்சா போராடு இல்லையா ............... போய்டுங்க..... தயவு செய்து போராடுற அந்த பெரியவர கேவல படுத்த வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Goram - Chennai,இந்தியா
31-ஜூலை-201215:13:03 IST Report Abuse
Goram அரசியல்வியாதிகள் இருக்கும் வரை இந்த ஊழல் தொடரும்... திரு மகாத்மா காந்திஜி அவர்கள் வந்தால் கூட அவ்வளவு சுலபமாய் ஊழலை ஒழிக்க முடியாது... திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது... இன்றைய இளைஞர்கள் நாளைய அரசியல்வாதிகள் .... அதனால் இன்றைய இளைஞர்கள் மனது வைத்தால் நாளை நமது நாடு ஊழல் இல்லா நாடாகும்... இதற்கு அன்னா ஹசாரே வித்திடுகிறார் ... Its late only but its not too late... he is trying to do something .... lets not oppose him... lets join our hands against corruption....
Rate this:
Share this comment
Cancel
hameed - riyadh,சவுதி அரேபியா
31-ஜூலை-201213:27:03 IST Report Abuse
hameed BJP யோட அக்ரீமென்ட் போட்டு அடுத்த தேர்தல்ல ஜெயிச்சு சட்டத்த நிறைவேத்துங்க ......சும்மா எதுகெடுத்தாலும் உண்ணாவிரதம் இருக்காதிங்க....அலுப்பா இருக்குது .........
Rate this:
Share this comment
Cancel
maha - bangalore,இந்தியா
31-ஜூலை-201212:28:35 IST Report Abuse
maha நமது ஜனநாயகம் அந்த அளவுக்கு இன்னும் வளர வில்லை . இன்று ஒரு நல்லவர் தேர்தலில் நிற்பதற்கு ஓராயிரம் தடைகள் உள்ளது . முதலில் பணம் , பின் ஜாதி ,மதம் . ஆனால் ஒன்றை மட்டும் சொல்வேன் , ஓட்டு ஜனநாயகத்தில் spoilers என்று ஒரு பதம் உண்டு . நிச்சயம் அண்ணா டிமால் ஒரு effective spoiler ஆக இருக்க முடியும் . இன்று உழல குற்றம் சாட்டப்பட்டுள்ள பல அமைசர்களுக்கு ஒட்டு போடாதீர்கள் என்று பிராசாரம் செய்ய முடியும் . ஹரியானாவில் அதை ஒரு பாராளுமன்ற இடை தேர்தலில் செய்தார்கள் , காங்கிரஸ் deposit வாங்க வில்லை . அது போல் இன்று அவர்களால் ரேபரேலி ,அமேதி போன்ற இடங்களில் செய்ய முடியும் . இன்று நார்த் இந்தியாவில் காங்கிரசுக்கு உள்ள வெறுப்பில் , ராகுலும் , சோனியாவும் பாரளுமன்றத்திக்கே ஜெயித்து வர முடியாது ,
Rate this:
Share this comment
Cancel
Daniel Joseph - SANAA,ஏமன்
31-ஜூலை-201212:19:47 IST Report Abuse
Daniel Joseph கண்டிப்பா இவர் கேட்பது கிடைக்காது
Rate this:
Share this comment
Cancel
maha - bangalore,இந்தியா
31-ஜூலை-201212:15:28 IST Report Abuse
maha அன்னா டீம் என்பது லோக்பால் என்னும் ஊழல் தடுப்பு சட்டத்தை கொண்டு வருவதற்காக , போராட , சில சமுக சேவகர்கள் சேர்ந்து செய்யும் முயற்சி . அவர்களிடம் எல்லா விசயத்திலும் கருத்தொற்றுமை எதிர் பார்காதிர்கள் .
Rate this:
Share this comment
Cancel
maha - bangalore,இந்தியா
31-ஜூலை-201212:02:51 IST Report Abuse
maha திமுக வினர் ஒரு போராட்டத்தை எதிர்கிறார்கள் என்றால் , அந்த போராட்டம் நிச்சயம் , நேர் வழியில் ஊழலுக்கு எதிராக நடக்கும் போராட்டம் என்று வாசகர்களுக்கு எளிதில் புரிந்து விடும் .
Rate this:
Share this comment
Cancel
jeppi s - chennai,இந்தியா
31-ஜூலை-201212:02:10 IST Report Abuse
jeppi s இந்தியா வல்லரசு நாடு ஆகும் என்பது வெறும் கனவாகவே உள்ளது இந்த அரசில்வாதிகள் ஒளிஞ்சி புதிய தலைமுறை நன்றாக படித்த இல்லைன்கர்கள் வரவேண்டும் பொலிடிகல் சேர அட்லீஸ்ட் மாஸ்டர் டிகிரி படித்தவன் தேர்வு செய்யவேண்டும் எதோ அண்ணா ஹசாரே நம்ம நாட்டுகாக போராடுறாரு நாமளும் சேர்ந்து போராடினால் தன நம்முடைய நாட்டை காப்பாற்ற முடியும் நம்ம நாடு உலகத்திலேயே வலிமைமேக்க நாடக மாற்றலாம் வாருங்கள் தோழர்களே ஜெய் ஹிந்த்............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்