5 lives losses because of unexperience driver | அனுபவம் இல்லாத டிரைவரால் ஐந்து உயிர்கள் போனது| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (17)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

விக்கிரவாண்டி:வெளிநாட்டில் பணி முடிந்து சந்தோஷமாய் திரும்பியவர்களின் பயணம், அனுபவம் இல்லாத டிரைவரால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சோகத்தில் முடிந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 55. தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கல கோட்டையைச் சேர்ந்தவர் உத்திராபதி, 45. திருச்சி அம்பிகாபுரத்தைச் சேர்ந்த காஜாஷெரீப், திருச்சி கருமண்டபம் அருகே உள்ள உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 33. இவர்கள் நான்கு பேரும் சவூதி அரேபியாவிலுள்ள ஜத்தா, துறைமுகத்தில் கஸ்டம்ஸ் அலுவலகத்திலுள்ள, "ரெட் சீ கேட் வே டெர்மினல்' கம்பெனியில் கான்ட் ராக்ட் அடிப்படையில் வேலை செய்தனர். பணி முடிந்து நேற்று முன் தினம் சந்தோஷமாக தாங்கள் சம்பாதித்த பொருட்களோடு தம் குடும்பத்தினரை பார்க்க வீடு திரும்பினர். இவர்களை வரவேற்க ஆறுமுகம் குடும்பத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி, மகன்கள் சரவணகுமார், கார்த்திக் ஆகியோர் டிராவல்சில் இருந்து குவாலிஸ் காரை வாடகைக்கு எடுத்துச் சென்றனர்.
இடைவிடாத பயணம்:காரை அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது, 22, என்பவர் ஓட்டிச் சென்றார். 27ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்ட கார், 28ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தை அடைந்துள்ளது. மொத்தம் 450 கி.மீ., தூரம் பயணம் செய்த டிரைவர், ஓய்வு எடுக்காமல் விமான

நிலையத்தைச் சுற்றி பார்த்துள்ளார். காலை 8 மணிக்கு சென்னை வந்தடைந்த சவூதி விமானத்தில், ஆறுமுகம் உள்ளிட்ட 4 பேரும் தங்கள் உடைமைகளைச் சரி பார்த்து காலை 10 மணிக்கு வெளியே வந்தனர். தாங்கள் கொண்டு வந்த பொருட்களைக் காரில் ஏற்றி கட்டியுள்ளனர்.
அனுபவம் இல்லாத டிரைவர்:அப்போது தஞ்சாவூர் பகுதியிலிருந்து வந்திருந்த டிராவல்ஸ் டிரைவர்கள், குவாலிஸ் காரில் வந்த அனுபவமில்லாத டிரைவரை பார்த்தவுடன், "உன்னை யார் இவ்வளவு தூரம் இந்தச் சாலையில் வரச் சொன்னது' என கேட்டனர். அதற்கு, டிரைவர், "நான் சமாளித்து கொண்டு செல்வேன்' என கூறியுள்ளார். காலை 10.30 மணிக்கு 8 பேருடன் குவாலிஸ் கார், விமான நிலையத்திலிருந்து தஞ்சாவூரை நோக்கி புறப்பட்டது.பகல் 12.30 மணிக்கு கார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலைக்கு வரும் போது, டிரைவரின் அஜாக்கிரதை காரணமாகவும், அதிவேகம் காரணமாகவும் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி, பின்னர் லாரியின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்துள்ளனர்.
விபத்தின் பின்னணி என்ன?அனுபவம் இல்லாத டிரைவரால் கோர விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் தங்கள் உயிர்களை இழந்தனர். நீண்ட தூர பயணத்தைச் செய்பவர்கள் அனுபவமிக்க, வயது முதிர்ச்சியடைந்த டிரைவர்களை அழைத்துச் சென்றால் அவர் விமான நிலையம் சென்றடைந்தவுடன் வண்டியிலேயே படுத்து தூங்கி,

Advertisement

பயண களைப்பை போக்கியிருப்பார். அனுபவம் இல்லாத டிரைவர் ஆகையால், தூங்காமல் வண்டியை எடுத்துள்ளார். இதனால் சாலையை தொடர்ந்து கவனிக்காமல் வண்டியில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள் ளார். டிரைவரின் அனுபவமின்மையால் 5 மனித உயிர்கள் அநியாயமாக போனது. நான்கு வழிச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்காக, நகாய் அமைப்பினரும், போக்குவரத்து போலீசாரும், விதிமுறைகளையும், விபத்து படங்களையும் டிஜிட்டல் போர்ட்டில் ஆங்காங்கே விளம்பரபடுத்தியுள்ளனர். இதை டிரைவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

மரண பயணமானது :
தமிழகத்திலிருந்து பிழைப்பு தேடி தங்களது குடும்பத்தை விட்டு பிரிந்து, வெளிநாடு சென்று உழைத்து, நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகு சந்தோஷமாக வீடு திரும்பி, தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாய் இருக்கலாம் என பெரும் கனவுகளுடன் ஊர் திரும்புவர். இவர்களை அழைத்து வர, அனுபவமில்லாத டிரைவர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு சந்தோஷமான பயணம் மரணப் பயணமாக மாறி விடுகிறது. டிராவல்ஸ் நிறுவனங்களும், நீண்ட தூரம் செல்லும் வண்டிகளுக்கு, அனுபவம் மிக்க ஓட்டுனர்களை அனுப்பி வைக்க வேண்டும். விபத்தில் இறந்தவரை நம்பி எத்தனையோ பேர் உள்ளனர். அனுபவம் இல்லாத டிரைவரின் தவறால் காரில் பயணம் செய்தவர்களின் குடும்பம் ஒட்டு மொத்தமாக சின்னா பின்னமாகி விடுகிறது. இதனை ஓட்டுனர்கள் நன்கு உணர்ந்து விதிமுறைகளை மீறாமல், அதிவேகத்துடன் செல்லாமல் வாகனங்களை ஓட்ட வேண்டும்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kamal - chennai,இந்தியா
01-ஆக-201201:49:32 IST Report Abuse
Kamal இதை ஏன் அனைவரும் ஒரு பாடமாக எடுத்து கொள்ள கூடாது??? இனிமேல் ஏர்போர்ட் வந்தால், தயவு கூர்ந்து அங்கிருதோ அல்லது அந்த சிட்டி வழியாக ஒரு டாக்ஸி புக் செய்து கொள்ளவும். Up and down ஒரே வண்டி வேண்டாம். மிக கவனமாக டிரைவர் ரெஸ்ட் எடுத்தாரா என்பதை அறியவும். இல்லையென்றால் உறங்க சொல்லி, பின் வண்டியை எடுக்க சொல்லவும். நான் ஒரு முறை பெங்களூர் டு குருவாயூர் சென்ற பொது டிரைவரை உறங்க சொன்னேன். treat them as a human .
Rate this:
Share this comment
Cancel
venkatesan.p - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஆக-201200:34:21 IST Report Abuse
venkatesan.p ரொம்ப கஷ்டமாய் இருக்கு
Rate this:
Share this comment
Cancel
hameed - riyadh,சவுதி அரேபியா
31-ஜூலை-201214:03:47 IST Report Abuse
hameed வருடங்களை தொலைத்து வாழ்வதற்காக வந்தபோது வாழ்கையும் தொலைந்ததே?
Rate this:
Share this comment
Cancel
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜூலை-201213:37:28 IST Report Abuse
Yaro Oruvan மிகவும் வருத்தமான செய்தி. நல்ல அனுபவம் உள்ள டிரைவர்களை ஏற்பாடு செய்வது நல்லது. கடைசி நிமிசத்தில் புறப்பட்டு ஏர்போர்ட் வந்து உடனே மீண்டும் திரும்பி நீண்ட தூரம் டிரைவ் செய்வது கடினம். கொஞ்சம் முன்பாக கிளம்பி வந்து டிரைவரை நன்றாக ரெஸ்ட் எடுக்க சொல்லி பயணத்தை தொடங்கினால் இது போன்ற துயர சம்பவங்களை குறைக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel
S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா
31-ஜூலை-201213:16:00 IST Report Abuse
S.M.Noohu பல கனவுகளோடு ஊர் சென்றவர்களின் நிலைமை இம்மாதிரியாகிவிட்டதே ... பகைவனுக்கும் இம்மாதிரி ஒரு நிகழ்வு நடக்காமலிருக்க இறைவனை வேண்டுவோம்... இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தினமலர் வாசகர்கள் சார்பாக இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்...
Rate this:
Share this comment
Cancel
Balakumar Velayutham - Riyadh,சவுதி அரேபியா
31-ஜூலை-201212:27:59 IST Report Abuse
Balakumar Velayutham மிகவும் சோகமான ஒரு விபத்து. ஒரு மோசமான டிரைவரால் பலர் வாழ்க்கை சோகமானது.
Rate this:
Share this comment
Cancel
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-201211:39:38 IST Report Abuse
mk டிராவல்சை நம்பி பயணம் செய்யவே பயமாக இருக்கே... எத்தனை கனவுகளும் சங்கடங்களும் அழிந்தது, இந்த தடுக்க பட்டிருக்க வேண்டிய விபத்தி்ல்...!!!
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
31-ஜூலை-201210:39:22 IST Report Abuse
மதுரை விருமாண்டி "எங்கேயும், எப்போதும்.. " விபத்து விபத்து விபத்து தான்... இன்று உனக்கு, நாளை எனக்கு என்ற பயம் இருந்தால் தவிர்க்கலாம்..
Rate this:
Share this comment
Cancel
Nagaraj - Doha,கத்தார்
31-ஜூலை-201210:11:01 IST Report Abuse
Nagaraj மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புனடர்வோடும் செய்தியை வெளியிட்ட தினமலருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Rate this:
Share this comment
Cancel
gummanguthu gopi - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜூலை-201209:05:12 IST Report Abuse
gummanguthu gopi முதலில் தமிழன் இந்த வெட்டி பந்தாவை நிறுத்தவேண்டும். இங்கே கழிவறை சுத்தம் செய்பவன் கூட அங்கு வந்தால் டாட்டா சுமோ வண்டியில் தான் வீடு வந்து சேருவான்.
Rate this:
Share this comment
Bala - Doha,கத்தார்
31-ஜூலை-201213:23:00 IST Report Abuse
Balaஏன் engineer மட்டும் தான் கார் ல போகணும்னு ஏதாவது சட்டம் இருக்கா, எந்த வேலை செஞ்சாஎன்ன உழைச்சு தானே சம்பாதிக்கிறான், கருத்து சொல்லும்போது நம்ம அங்கே என்ன பன்றோம்னு நினைக்கணும்...
Rate this:
Share this comment
Rafiudeen - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-ஜூலை-201213:35:24 IST Report Abuse
Rafiudeenகழிவறை சுத்தம் செய்பவன் வசதியாக வாழக்கூடாதா? இதுபோல் சிந்திக்கும் தமிழனே முதலில் உன்னை திருத்திக்கொள்....
Rate this:
Share this comment
Bala - NY,யூ.எஸ்.ஏ
01-ஆக-201200:31:11 IST Report Abuse
Balaகோபியின் கருத்து உண்மையிலே இந்தியனின் (பெரும்பாலான) புத்தியை பிரதிபலிக்கிறது. நமக்கெல்லாம் செய்யும் வேலைக்கு dignity தரத் தெரியாதா? ஏன் கழிவறை சுத்தம் செய்பவன் காரில் போகக் கூடாதா? என்ன ஒரு மனப்பான்மை. தயவு செய்து இதை மாற்றிக்கொள்ளுங்கள். மனிதனை மனிதனாக நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்....
Rate this:
Share this comment
Jose - Columbus,யூ.எஸ்.ஏ
01-ஆக-201201:29:52 IST Report Abuse
Joseதவறாக சிந்திக்கிறிர்கள். இறந்தவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்காமல் இதுபோன்ற கருத்து எழுதுவது அநாகரிகம்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.