Cabinet reshuffle: P Chidambaram back as Finance Minister | மத்திய மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றம்: சிதம்பரத்துக்கு நிதி; ஷிண்டேக்கு உள்துறை| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (86)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி: மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் நேற்று மாற்றம் செய்யப்பட்டன. உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், நிதி அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். மத்திய மின் துறை அமைச்சராக இருந்த சுஷில்குமார் ஷிண்டே, உள்துறை அமைச்சராக நியமிக்கப் பட்டுள் ளார். கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு, மின் துறை அமைச்சகப் பொறுப்பு கூடுதலாக வழங்கப் பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, அந்தப் பதவியை விட்டு விலகி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாட்டின் 13வது ஜனாதிபதியாகவும் பதவியேற்றார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சகப் பொறுப்புகளை தற்காலிகமாக கவனித்து வந்தார். இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் நேற்று சிறிய மாற்றம் செய்யப்பட்டது.
கூடுதல் பொறுப்பு: இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நிதி அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். இதனால்,

புதிய உள்துறை அமைச்சராக, மின் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே நியமிக்கப் பட்டுள்ளார். மின் துறை அமைச்சகப் பொறுப்பை, கம் பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூடுதலாக கவனிப்பார்' என தெரிவிக்கப் பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில், நேற்று சிறிய அளவிலேயே மாற்றம் செய்யப்பட்டது. பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் 8ம் தேதி துவங்குகிறது.
ராகுல்: இந்தக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின், அமைச்சரவை பெரிய அளவில் மாற்றம் செய்யப்படலாம் என்றும், அப்போது, ராகுல் உட்பட, மேலும் பலர் அமைச்சர்களாக நியமிக்கப்படலாம் அல்லது பலரது இலாகாக்கள் மாற்றப்படலாம் என்றும், அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

மீண்டும் நிதி: மூன்றரை ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் நிதி அமைச்சகப் பொறுப்பை கவனிக்க உள்ளார். மும்பைத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த 2008ம் ஆண்டில் அவர், உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். "மத்திய அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது, இயற்கையான ஒன்று. பிரதமர் தனக்குள்ள பிரத்யேக அதிகாரத்தின் அடிப்படையில், இந்த மாற்றத்தை செய்துள்ளார். நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதால், இந்த மாற்றம் தேவைபட்டுள்ளது' என, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜனார்த்தன் திவேதி கூறியுள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (86)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
02-ஆக-201206:25:29 IST Report Abuse
Bebeto சிதம்பரத்துக்கு இருக்கும் ஒரே பாயிண்ட் = அவர் ஜெயலலிதாவின் பயங்கர எதிரி. = இது ஒன்று போதும் சோனியா அவருக்கு பிரதமர் பதவி வழங்க. இங்கே சிதம்பரத்துக்கும், சோனியா வுக்கும் கண் மூடித்தனமாக ஆதரவு தெரிவிக்கும் சொம்புகள் இருக்கும் வரை இந்தியா உருபடாது..
Rate this:
Share this comment
Cancel
wintowin - NGL,இந்தியா
02-ஆக-201202:29:26 IST Report Abuse
wintowin 2007 ல இந்தாளு நிதி அமைச்சராவா வேல பாத்தாரு? என்னங்கட இது புது கொழப்பம், நான் என்னமோ இந்தாளு stock market ல managing director வேல தான பாத்துக்கிட்டு இருந்தாருன்னு தப்பா நெனச்சுக்கிட்டு இருந்தேன்.. அந்த வருசத்துல எல்லா தினமும், மும்பை ஸ்டாக் மார்க்கெட்ல காலை 11 மணிக்கு எல்லாருக்கும் கண்ணுல ரத்தம் வரும், உடனே மதியம் 2 மணிக்கு இந்தாளு நிருபர்களுக்கு பேட்டி கொடுப்பாரு... இது சாதாரண ரத்தம் தான், நாங்க மருந்து வச்சுருக்கோம் உங்களுக்கு சரியாயிடும்ன்னு பீலா விடுவாரு... காலைல இவரு மகன் மற்றும் பினாமிகல் எல்லா ஸ்டாக்கயும் வங்கி வைத்து கொள்வார்கள். மாலைல இவரு பேசுவாரு ஸ்டாக் மார்க்கெட் மேல போகும் அப்ப எல்லாரும் வித்க்கிட்டு பணம் சம்பாதிபானுங்க. His son made millions using insider trading information. In America 20 year jail for insider Trading. கடவுளே நீ இருக்கியா என்ன. இந்த பகல் கொல்லைகர்றன விட்டு வச்சிருக.
Rate this:
Share this comment
Cancel
Thamilan-indian - madurai,இந்தியா
01-ஆக-201219:28:57 IST Report Abuse
Thamilan-indian கரை படிந்த இரு துருவங்களை இடபெயர்சி தான் செய்துள்ளார்கள். இக்கறைக்கு அக்கறை பச்சை.
Rate this:
Share this comment
Cancel
rhari prasad - Marthandam,இந்தியா
01-ஆக-201218:41:48 IST Report Abuse
rhari prasad சிதம்பரம் அண்ணா விடாதிங்க இந்த மக்களை விட்டால் திருந்திடுவாங்க மறுபடி நமக்கு ஓட்டு போடமாட்டங்க வரிய கூட்டுங்க குறிப்பா டாலர் விலை இறங்காம பார்த்துகோங்க இறங்கினால் என்னைமாதிரி வெளிநாட்டுல வேலை பார்கிரவன்களுக்கு நஷ்டம் துன்பம்
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
01-ஆக-201219:20:53 IST Report Abuse
villupuram jeevithanமக்கள் ஓட்டு போட்டுதான் பசி ஜெயிச்சாரா? இதென்ன புது கதை?...
Rate this:
Share this comment
Cancel
sadhanandan palani - toronto,கனடா
01-ஆக-201217:57:55 IST Report Abuse
sadhanandan palani இருட்டில (டெல்லில மின்வெட்டு ) அமைச்சரவை மாற்றம் .திருட்டு தனம் பண்ண இப்படிதான்
Rate this:
Share this comment
Cancel
M Viswanathan - Madurai,இந்தியா
01-ஆக-201217:34:56 IST Report Abuse
M Viswanathan சிதம்பரம் என்ன வருமான வரி கட்டவில்லையா? அவர் மீது மற்ற எம்.பிகள் மாதிரி கொலை கொள்ளை வழக்கு உள்ளதா? சுப்ரமணியன் சுவாமி தொடுக்கப்பட்ட வழக்கு ஆதாரம் இல்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டது. சிதம்பரம் தவறு செய்து இருந்தால் பி.ஜே.பி ஐந்து வருட ஆட்சியில் வழக்கு தொடர்ந்து இருக்கலாமே?
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
02-ஆக-201201:12:08 IST Report Abuse
Nallavan Nallavanசிதம்பரம் வருமான வரி கட்டவில்லையா என்று கேட்கிறீர்கள் எனது கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்,,,, சிதம்பரம் மக்களவைத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது தனது சொத்துக் கணக்கையும் தாக்கல் செய்திருப்பார் இல்லையா? அந்த அளவு சொத்துதான் அவரிடம் உள்ளதாக அவர் அடித்துக் கூற தயார் அதைத் தவிர எந்த சொத்தையும் அவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ (பினாமி பெயரில்) வைத்திருக்கக் கூடாதே அப்படித்தான் உண்மை நிலவரமா? அவர் மீது மற்ற எம்.பி.-க்கள் மாதிரி கொலை கொள்ளை வழக்கு உள்ளதா என்று கேட்கிறீர்கள் கொலை,,,, கொள்ளை,,,, வழக்குகள் இருந்தால்தான் அவரை எதிர்க்க வேண்டுமா? ஊழல் வழக்கு இருக்கிறதே ஐயா சுவாமி தொடுத்த வழக்கு இன்னமும் நடந்து கொண்டுதான் உள்ளது நீங்கள் குறிப்பிடுவது போல தள்ளுபடி செய்யப்படவில்லை (நிராகரிக்கப்படுவது எந்த வழக்கிலும் நடக்காது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற வார்த்தைதான் கேள்விப்பட்டுள்ளோம்). அந்த வழக்கில் சி.பி.ஐ. சிதம்பரத்தின் மீது வழக்கின் நிழல் கூடப் படாமல் அவரைக் கேடயம் போலப் பாதுகாப்பதை நீங்கள் செய்திகள் மூலமாக அறியவில்லையா???? அதே சி.பி.ஐ. துணை இருக்கும் நிலையில் பாஜக வழக்குத் தொடர்ந்து ஜெயிக்க முடியுமா????...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
01-ஆக-201216:15:14 IST Report Abuse
Natarajan Ramanathan பிராடு பண்ணி ஜெயிச்சவனுக்கு நிதி மந்திரி பதவி. வெளங்கிடும். இந்தியாவின் பொருளாதாரம் சோமாலியாவுக்கு கீழே சென்றுவிடும்...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
01-ஆக-201215:50:30 IST Report Abuse
Nallavan Nallavan """"பரம்பரைப் பணக்காரன் சுரண்ட மாட்டான்"""" என்று இங்கே கருத்துப் பாதிக்கும் வாசகர்கள் நேரு குடும்பத்தையும் எண்ணிப்பார்க்க வேண்டும். அப்படியென்றால் வாரிசு அரசியலுக்கு என்ன அர்த்தம்? என்ன அவசியம்? காமராஜர் மற்றும் கக்கன் போன்ற பழைய காங்கிரஸ்காரர் அல்லர் சிதம்பரம்
Rate this:
Share this comment
Cancel
Indran Tirupathi - Pudukottai,இந்தியா
01-ஆக-201215:25:54 IST Report Abuse
Indran Tirupathi நிதி அமைச்சராக மீண்டும் பொறுப்பு ஏற்றுள்ள ப. சிதம்பரம் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். ஏற்கனவே நலிவடைந்து இருக்கும் இந்திய நிதி நிலையை மேலும் சிறப்புடன் நலிவடைய செய்து ஒரே அடியாக ஒழித்து காட்டுவார் என்பதில் துளி அளவும் ஐயம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Vamanan Nair - சான் ஹோஸே , கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
01-ஆக-201214:23:12 IST Report Abuse
Vamanan Nair பெட்ரோல் விலையை ஆயிரம் ரூபாயா ஆக்கினா நல்லது. அண்ணன் சிதம்பரம் கண்டிப்பா செய்வார். அடுத்த நூறு வருஷம் பெட்ரோல் விலை ஏறாது அல்லவா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.