மதுரை: ""கிரானைட் வெட்டி எடுத்தலில் கனிமவளத்துறை அதிகாரிகள் பெரும் நிதி ஆதாயம் அடைந்துள்ளனர்'' என, மதுரை முன்னாள் கலெக்டர் சகாயம் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை: கிரானைட் வெட்டி எடுத்தல், கடத்தலை கண்டுகொள்ளாமல் இருக்க, கனிமவளம், வருவாய்த்துறை அலுவலர்கள் பெரும் நிதிஆதாயம் அடைந்துள்ளனர். இதன் விளைவாக, எத்தனை முறை அறிவுறுத்தியும், சமூகம், தேசத்திற்கு எதிரான மோசடியை கண்டும், காணாத மவுன சாட்சியாக இருந்துள்ளனர். இம்முறைகேடுகளின் முழுமை அறிந்து, நடவடிக்கை எடுக்க முயற்சித்தபோது, கனிமவளத்துறை அலுவலரிடமிருந்து முழுமையான தகவலை என்னால் பெற முடியவில்லை என்பதே உண்மை. நானே ஆய்வுக்குச் செல்ல முயற்சிக்கும்போது, முன்கூட்டியே கிரானைட் உரிமையாளர்களுக்கு சிலர் தகவல் தெரிவிக்கும் நிலை இருந்தது வருத்தத்திற்குரியது. இருப்பினும், கலெக்டர் என்ற முறையில், அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை தடுக்க எண்ணினேன். விலைமதிப்புள்ள கனிமவளம் சமூக சொத்து. பொதுவான சமூக சொத்தை தனி நபரும், நிறுவனமும் சுரண்டி சூறையாடுவதை, நாம் அனுமதிக்க முடியாது. அதுவும், பல ஆயிரம் ஏழை விவசாயிகள், கிராமத்து மனிதர்களின் வாழ்வாதாரங்களை அழித்து, தனியார் நிறுவனங்கள் பெரும் பலனை அடைவதை ஒருபோதும் அனுமதிக்க இயலாது. மேலூர் பகுதி குவாரிகளை விஞ்ஞான பூர்வமாக, தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்து, பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம்.
* கனிமவளத்துறையில், பிறமாவட்டம், தலைமையிடத்தில் உள்ள நேர்மையான அலுவலர்களை கொண்டு நவீன கருவிகளை பயன்படுத்தி, குவாரிகளை துல்லியமாக அளவை செய்ய வேண்டும். நிதியிழப்பை கண்டறிந்து, கிரானைடை வெட்டி கடத்திய தனியார் நிறுவனங்களிடம் தொகையை வசூலிக்க வேண்டும். விதிமீறலுக்காக, எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும், குவாரி உரிமையை ரத்து செய்ய வேண்டும்.
* சட்ட விரோதமாக, கட்டணம் செலுத்தாமல் எடுத்த கற்களையும், "டாமின்' சுரங்கத்தில் திருடி, தனியார் இடங்களில் குவித்து வைத்துள்ள கற்களையும் பொது ஏலத்தில் விடவேண்டும்.
* கிரானைட் கற்களை "டாமின்' நிறுவனமே நேரடியாக எடுத்து விற்பனை செய்தால், தனியார் நிறுவனங்களால் ஏற்படும் பல கோடி ரூபாய் இழப்பு தடுக்கப்படும்.
* நேர்மையான அலுவலர்களை கொண்ட பறக்கும் படை அமைத்து, கிரானைட் சுரங்கங்களை தணிக்கை செய்ய வேண்டும்.
* "டாமின்' கிரானைட் உரிமம் உள்ள பகுதியில், குறைந்தபட்சம் 200 மீட்டருக்குள்ளாக தனியார் குவாரிகளை அனுமதிக்கக்கூடாது.
* பெரும்பாலான சுரங்கங்களில் "ரெக்கவரி' குறைத்தே காட்டுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, "ரெகவரி'யை துல்லியமாக காட்ட வேண்டும்.
* "டாமின்' நிறுவனம், கனிம வள அதிகாரிகள் துணையின்றி அரசுக்கு நிதிஇழப்பு செய்திருக்க முடியாது. எனவே, விரிவான விசாரணை நடத்தி, அதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கிரானைட் சுரங்கத்தில் உள்ள பயனற்ற கற்களை, வருவாய் துறையிடம் ஒப்படைத்து, அப்போதைக்கு அப்போதே விற்பனைக்கு கொண்டு வரவேண்டும்.
* சுரங்கங்களில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு அபாயம் உண்டு என்பதால், கூடுதல் எண்ணிக்கையிலான போலீசாரை பணியமர்த்த வேண்டும்.
* மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் கற்கள் திருட்டுத்தனமாக கடத்தப்படுவதையும், வருவாய் இழப்பை தடுக்கவும் அனைத்து தீவிர நடவடிக்கைகளையும் எடுக்க, மாவட்ட நிர்வாகம் எந்நேரமும் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சொன்னதை கேட்கும் அதிகாரிகள் மட்டுமே முக்கிய இடங்களில் அமர்த்த படுகிறார்கள் ,நேர்மையான மற்றும் திறமையான அதிகாரிகள் உதிரி பதவிகளில் தூக்கி எரிய படுவது தான் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக இருந்து வருகிறது. இருந்தாலும் தைரியமாக இந்த அறிக்கையை கொடுத்ததற்காக திரு சகாயம் அவர்களை பாராட்டலாம். அவருக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சகாயத்தை தொடர்ந்து இன்னும் பல அதிகாரிகளை அரசு நலனையும் மக்கள் நலத்தையும் கருதி இது போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
Mr Sahayam IAS, has done his preliminary work. Further to pursue, it may be difficult, as he is still holding official post. Both parties, during their espective regimes, did show little will. So, would it be a right idea, if any local resident in Madurai or a lawyer takes it up to court and seek directives.
கிரானைட் குவாரிகளால் கடந்த தி.மு,க ஆட்சியில் அரசியல்வாதிகள் பயன்பெற்றார்கள் என்றே அ.தி.மு.க அரசு கூறிவந்தது. தற்போது திரு. சகாயம் கூறுவதைப் பார்த்தால் தற்போதும் கொள்ளை தொடர்வதுபோல் தெரிகிறது. இல்லையெனில் சகாயத்தை ஏன் மாற்றவேண்டும்? இந்த ஆட்சியில் அதிகாரிகள் எல்லை மீறுவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதனை முளையிலேயே கிள்ளி எறிந்தால் அரசுக்கு நல்லது.
மம்மியும் அதை வாங்கி அவங்க சீட்டுக்கு அடியிலே போட்டுட்டு இவரை இன்னொரு துறைக்கு மாற்றல் பண்ணி விடுவார்.. கிரானைட்காரன் கிட்டே வசூல் பண்ற மாதிரி, அங்கேயும் புதுசா ஏதாவது வருமானம் வர வழி இருக்கான்னு மம்மி பாக்குறாங்க... அதுக்குத் தான் சகாயம் அவர்களை அனுப்பியதே.. பாவம் இந்த மனுசனும் சளைக்காமே இதைச் செய்றாரு.. அதனாலே பலன் என்னமோ மம்மிக்குத் தான்......
திரு சகாயம் IASயை மதுரையில் இருந்து தூக்கியதற்கு முக்கிய காரணம் குவாரி முதலாளிகள் தான், நிலைமை இப்படி இருக்க, நம்ம தொழில் துறை மந்திரி கோவிந்தம்பாளையம் தங்கமணி, கடந்த திமுக ஆட்சியில் தான் இந்த முறைகேடுகள் நடந்தது தங்கள் அம்மா ஆட்சியில் இல்லை என்று சப்பைக்கட்டு கட்டுறார், அப்புறம் என்ன இதுக்கு திரு சகாயத்தை தூக்கி டம்மி போஸ்டில் போடிங்க உங்க அம்மா, அதன் காரணத்தை கொஞ்சம் உங்க அம்மா கிட்ட கேட்டு சொல்றிங்கள கொவிந்தம்பாளையத்தாரே... உங்களுக்கு உங்க சின்ன சம்மந்தி மூர்த்தியோடு கூட்டு போட்டு கொல்லையடிபதற்கே நேரம் சரியாக இருக்கிறது அப்புறம் எப்படி இதையெல்லாம் பார்க்க நேரம்....
திரு சகாயம் அய்யா அவர்களே, உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். உங்களின் அறிக்கையை மிக தெளிவாக தெரிவித்துள்ளீர்கள். தமிழக அரசு உடனடியாக தலை இட்டு TNPSC போர்டு இக்கு திரு.நடராஜ் அவர்களை நியமித்த மாதிரி Minerals TAMIN தலைமை அதிகாரி யாக ungalai நியமித்து ungalin வழி காட்டலை செவி சாய்த்து தமிழ்நாடு உருப்பட முதல்வர் நல்ல முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும். தமிழன் எங்கும் அடிபட்டு சாகிறான், போதாத குறைக்கு நம் தமிழனும் நம்மை ஏமாற்றுகிறான். முதல்வரே நீங்கள் இந்த மாதிரி நல்லது செய்தால் மட்டுமே MGR மாதிரி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க முடியும். எப்பொழுதும் நீங்களே வெற்றி பெறுவீர்கள், DMK கட்சி காணாமல் போக வாய்ப்பு உள்ளது. பெஸ்ட் ஒப் sucess into your hard journey. JAI HIND.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.