This is also a treatment: Girl sexually abused by doctor in Madurai | "இதுவும் சிகிச்சைதான்' என மாணவியை கற்பழித்த டாக்டர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

"இதுவும் சிகிச்சைதான்' என மாணவியை கற்பழித்த டாக்டர்

Updated : ஆக 02, 2012 | Added : ஜூலை 31, 2012 | கருத்துகள் (123)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

மதுரை: மதுரை பைபாஸ் ரோடு சொக்கலிங்கநகரில், தன்னிடம் சிகிச்சை பெற்ற பிளஸ் 2 மாணவியை கற்பழித்த டாக்டர் சங்கரநாராயணன்,55, கைது செய்யப்பட்டார். "சபலத்தில் செய்துவிட்டேன்' என போலீசிடம் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி, பிளஸ் 2 படிக்கிறார். (இவர் செக்கானூரணி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படிப்பதாக முதலில் தெரிவித்தனர். ஆனால் அவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்). ஜூலை 27ல், காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, சகோதரியுடன், சொக்கலிங்கநகரில் உள்ள டாக்டர் சங்கரநாராயணனின் கே.கே. மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதித்ததில் "டைபாய்டு' இருப்பது தெரிந்தது. தொடர்ந்து "குளுகோஸ்' ஏற்ற வேண்டும் என்றுக்கூறி, மாடி அறையில் டாக்டர் சிகிச்சை அளித்தார். நேற்று முன் தினம் மாலை 4.30 மணிக்கு, மாணவியின் உறவினர்கள் இல்லாத சமயத்தில், அவரது அறைக்கு டாக்டர் வந்தார். "வயிற்றில் புண் உள்ளதா என பார்க்க வேண்டும்' என "சில்மிஷத்தில்' ஈடுபட்டு, வலுக்கட்டாயமாக கற்பழித்தார். "இதை வெளியே சொல்ல வேண்டாம்' எனவும் மாணவியை மிரட்டினார். கதறி அழுத மாணவி, நர்ஸ் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையறிந்த டாக்டர், மாணவியிடம் "இதுவும் ஒரு வகை சிகிச்சைதான்' என சமாதானப்படுத்தி, "வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம்' என காலில் விழுந்தார். இரவு 7 மணிக்கு, தகவல் அறிந்த உறவினர்கள், டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களது காலிலும் விழுந்து டாக்டர் மன்னிப்பு கேட்டார். இதை ஏற்காத அவர்கள், போலீசிற்கு தகவல் கொடுத்தனர். இதனால் பயந்த டாக்டர், மருத்துவமனையையொட்டி உள்ள தனது வீட்டில் பதுங்கிக் கொண்டார். அவரது குடும்பம் சென்னையில் இருந்தது, டாக்டருக்கு வசதியாக இருந்தது. அவர் தப்பிச் செல்லாமல் இருக்க, மருத்துவமனையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மருத்துவமனைக்கு வந்து துணை கமிஷனர் திருநாவுக்கரசு விசாரித்தார். பின், உதவிகமிஷனர் கணேசன் தலைமையில் போலீசார், ஒவ்வொரு கதவாக "உடைத்து' வீட்டினுள் சென்றபோது டாக்டர் சிக்கவில்லை. ஸ்டோர் ரூம் அறையில் உடைத்த போது, பதுங்கியிருந்தார். "சபலத்தில் செய்துவிட்டேன்' என்று போலீசிடம் கெஞ்சினார். கற்பழிப்பு, மிரட்டல், அடைத்து வைத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் அவரை போலீசார் கைது செய்தனர். டாக்டரின் உள்ளாடை மற்றும் மாணவிக்கு சிகிச்சை அளித்த மருந்து, ஊசியை பறிமுதல் செய்தனர்.

போலீசார் கூறுகையில், ""மாணவி தன்னை காப்பாற்றிக் கொள்ள கடுமையாக போராடியுள்ளார். ஆனால், அதையும் மீறி டாக்டர் வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக, மாணவி தெரிவித்தார். ஊசி மருந்தில், ஏதேனும் மயக்க மருந்து கலந்து கொடுத்தாரா எனவும், வேறு யாரிடமும் இதுபோல் "சில்மிஷத்தில்' ஈடுபட்டாரா எனவும் விசாரிக்கிறோம்,'' என்றனர். நேற்று காலை அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட் அனுமதி பெற்று, டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பின், பெற்றோரிடம் மாணவி ஒப்படைக்கப்படுவார்.

"ஏ' வகுப்பு கேட்ட டாக்டர்: கைதான டாக்டர் சங்கரநாராயணனை, ஆக.,14 வரை "ரிமாண்ட்' செய்து, ஜே.எம். கோர்ட் 5 ன் மாஜிஸ்திரேட் (பொறுப்பு) மாரீஸ்வரி உத்தரவிட்டார். நேற்று மாலை அரசு மருத்துவமனையில் டாக்டருக்கும், மாணவிக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. பின், மதுரை சிறையில் டாக்டர் அடைக்கப்பட்டார். முன்னதாக, வருமான வரி செலுத்தும் தனக்கு, சிறையில் "ஏ' வகுப்பு ஒதுக்க வேண்டும் என டாக்டர் மனு செய்தார். ஆனால், இதை கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது.

மின் திருட்டில் சிக்கியவர்: கடந்த 2004ல், இவரது மருத்துவமனையை, மின்திருட்டு தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் கொண்டல்ராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில், ரூ.2 லட்சத்திற்கு மின்சாரத்தை திருடியது தெரியவந்தது. தான் கைது செய்யப்படலாம் என பயந்த டாக்டர், உடனடியாக அத்தொகையை செலுத்தி தன்னை காப்பாற்றிக் கொண்டார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivakumar - chennai,இந்தியா
05-ஆக-201208:14:37 IST Report Abuse
sivakumar அய்யா சாமிகள இந்த பெண்கள் என்ன பவம் செய்தார்கள். சாமியார்கள் தான் இப்படி என்றால் இப்போது உயீர் காக்கும் மருத்துவர்களும் இதில் அடக்கமா?
Rate this:
Share this comment
Cancel
Iyyappan Kalyanasundaram - Higashimatsuyama,ஜப்பான்
04-ஆக-201206:26:56 IST Report Abuse
Iyyappan Kalyanasundaram டாக்டருக்கு தண்டனை தருவது ஒருபுறம்,வயது வந்த அந்த பெண்ணை அவள் பெற்றோர்கள் எப்படி தனியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற விடலாம். யாராவது ஒருவராவது துணைக்கு இருந்திருந்தால் இந்த அசம்பாவிதம் நிகழாமல் இருந்திருக்குமே.நமது அறியாமையும், நம் ஏற்படுத்தி கொடுக்கும் சந்தர்பமும் இதற்கு கரணம் தானே?
Rate this:
Share this comment
Cancel
Thamizhan - CHENNAI,இந்தியா
02-ஆக-201217:39:25 IST Report Abuse
Thamizhan இவருக்கு நிச்சயம் தகுந்த தண்டனை கிடைக்கவேண்டும், இதுதான் இந்தியா ,இங்கு இதுவும் நடக்கும் எதுவும் நடக்கும் ,கேவேலமான மக்களை கொண்ட நாட்டில் நல்லவைகள் எப்படி நடக்கும் ,
Rate this:
Share this comment
Cancel
Karthi Keyan - madurai,இந்தியா
02-ஆக-201212:00:54 IST Report Abuse
Karthi Keyan கடவுளின் மறு உருவம் என்று நாம் நினைக்கும் உயர்ந்த சேவை துறையில் இவரைபோன்ற மனித மிருகங்களும் இருகின்றபோது மனித நேயம் எங்கே? சு.கார்த்திகேயன் மதுரை
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
01-ஆக-201223:40:59 IST Report Abuse
muthu Rajendran ஒரு டீக்கடை வைப்பதற்கு கூட இரண்டு லைசென்ஸ் வேண்டும். ஆனால் ஒரு மருத்துவமனை நடத்த எந்த அனுமதியும் தேவை இல்லை. ஏற்கனவே தனியார் நர்சிங் ஹோமே மற்றும் மருத்துவமனை நடத்த அனுமதி வாங்க வேண்டும். அங்கு பணிபுரிபவர்கள் விபரம் பதிய பட வேண்டும் என்றெல்லாம் சட்டம் இயற்ற நடவடிக்கை துவங்க பட்டது. பிறகு ஏனோ அது தூங்கி விட்டது. அந்த நடவடிக்கையை தூசி தட்டி இப்போதாவது எடுக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Sirajudeen...M - Tamil Nadu,இந்தியா
01-ஆக-201222:09:07 IST Report Abuse
Sirajudeen...M நீயெல்லாம் ஒரு.....தூ..............................
Rate this:
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
01-ஆக-201222:08:56 IST Report Abuse
v.sundaravadivelu ஏய்யா எம்.பி.பி.எஸ் பெயரை இப்படி எல்லாம் ரிப்பேர் பண்றீங்க?.. அப்டி சபலம்னா "போயிட்டு" வர வேண்டியது தானே?.. உன்னை நம்பி உன்னோட டிஸ்பென்சரி வந்த ... ஒரு அப்பாவி நோயாளியை இப்படி கொடுமை செஞ்சிருக்கியே.. . அனேகமா இது உன்னோட எத்தனாவது லீலை?.. கேட்டாக்கா, வியாக்கியானமா .."சத்தியமா இதாம்பா மொதலு" ன்னு பொய் சொல்லுவீக..இந்த லட்சணத்துல ஏற்கனவே கரண்ட் திருடி இருக்கே... முடி கூட டோப்பா மாதிரி தெரியுது... வெளிய தெரியாம லஞ்சம் கொடுக்கறே.. மன்னிச்சுக்கோங்கோ ன்னு கால்ல விழறே... அடங்கோப்பா சாமி.. நீ எப்படி ராசா இம்மாம் பெரிய படிப்பை அஞ்சு வருஷமா படிச்சு கிழிச்சே?.. கண்டிப்பா நீ பிட் அடிச்சுதான் பாஸ் ஆகியிருப்பே... லஞ்சம் கொடுத்து தான் டாக்டர் ஆகியிருப்பே... போலி டாக்டரைக் கூட நம்பலாம்.. உன் மாதிரி உண்மையா முடிச்சுட்டு வந்து அட்டூழியம் செய்யற காப்மாறிப் பசங்களை சும்மா உடவே கூடாது .. போட்டு மாட்டுங்கடோய் இவனை...
Rate this:
Share this comment
Cancel
usha - kumbakonam,இந்தியா
01-ஆக-201221:57:17 IST Report Abuse
usha மருத்துவம் என்பது ஒரு புனிதமான தொழில். ஒரு உயிரை காப்பாற்ற வேண்டியவரே இப்படி செயல் பட்டால் என்ன செய்வது. டாக்டரிடமும் வக்கீலிடமும் உண்மை சொல்ல வேண்டும் என்பர். இப்படிப்பட்ட டாக்டர்கிட எப்படி செல்வது. இவரது லைசென்சை உடனடியாக ரத்து செய்து மக்களை காப்பாற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
varatha rajan - Tirupur,இந்தியா
01-ஆக-201221:41:07 IST Report Abuse
varatha rajan இவன் டாக்டர் இல்ல..... இவன் வெளியே வரமுடியாத அளவுக்கு தண்டனை கொடுக்கனும்
Rate this:
Share this comment
Cancel
Velumani Madasamy - Ar Riyadh,சவுதி அரேபியா
01-ஆக-201221:31:39 IST Report Abuse
Velumani Madasamy என்ன நடக்குது நாட்டால ? அங்க ஏற்கனவே பெண் நர்ச் வேலை செய்கிறாங்கள். இதுல இந்த டாக்டர்ருக்கு +2 மாணவி ஒரு கேடா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை