Anna Hazare warns supporters against violence | நிருபர்களை தாக்கினால் போராட்டத்தை ரத்து செய்வேன்: ஹசாரே எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நிருபர்களை தாக்கினால் போராட்டத்தை ரத்து செய்வேன்: ஹசாரே எச்சரிக்கை

Updated : ஆக 02, 2012 | Added : ஜூலை 31, 2012 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

புதுடில்லி: அன்னா ஹசாரே ஆதரவாளர்கள், ஊடகங்களைச் சேர்ந்த நிருபர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதை அடுத்து, இதற்காக, ஹசாரே வருத்தம் தெரிவித்துள்ளார். "இதுபோன்ற வன்முறைகளை தொடர்ந்தால், லோக்பால் மசோதாவுக்காக நடத்தி வரும் போராட்டத்தை ரத்து செய்து விடுவேன்' என, தன் ஆதரவாளர்களை எச்சரித்துஉள்ளார்.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற வலியுறுத்தி, அன்னா ஹசாரேயும், அவரின் ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சரவையில் உள்ள, 15 பேர் மீது, ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், ஹசாரேயின் ஆதரவாளர்களான அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா, கோபல் ராய் ஆகியோர், கடந்த எட்டு நாட்களாக, டில்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

தாக்குதல்: இவர்களுடன் சேர்ந்து, அன்னா ஹசாரேயும், கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஹசாரே ஆதரவாளர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன், நேற்று முன்தினம் பேசுகையில், "உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய செய்திகளை சரியாக வெளியிடாமல், ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், பாரபட்சமாக செயல்படுகின்றனர் ' என புகார் கூறினார். இதைத் தொடர்ந்து, அன்றிரவு, உண்ணாவிரத பந்தலில் இருந்த ஊடகங்களின் நிருபர்கள் மீது, ஹசாரே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒளிபரப்பு ஆசிரியர் சங்கம் (பி.இ.ஏ.,) இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம், விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, இதற்காக அன்னா ஹசாரே, நேற்று வருத்தம் தெரிவித்தார்.

வருத்தம்: முன்னதாக, நேற்று காலை அன்னா ஹசாரே, மேடைக்கு வந்தபோது, அங்கு கூடியிருந்தவர்கள், ஊடகங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, ஹசாரே பேசியதாவது: ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அகிம்சை இயக்கத்தில், வன்முறைக்கு இடமில்லை. இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபட்டால், மத்திய அரசு, இரண்டு நாட்களில், நம்மை அடியோடு அழித்து விடும். மத்திய அரசின் கைகளில் அதிகாரமும், சட்டமும் உள்ளது என்பதை, நாம் உணர வேண்டும். எதிர்காலத்தில், இதுபோன்ற வன்முறைகளில் ஈடுபட்டால், இந்த போராட்டத்தையே ரத்து செய்து விடுவேன். இதுபோன்ற செயல்களை ஏற்க மாட்டேன். ஊடகங்களைச் சேர்ந்தவர்களை, அவர்களது பணியைச் செய்ய அனுமதிக்க வேண்டும். அவர்கள் என்ன செய்கின்றனர் என்பது குறித்து, நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. நம் போராட்டத்தை, ஊடகங்கள் சரியாக ஒளிபரப்பவில்லை என்றால், அதற்காக அவர்களை குறைகூறக் கூடாது. அதற்கு என்ன காரணம் என்பதை சுய பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

உயிரை விட தயார்: கெஜ்ரிவால் உருக்கம்: கடந்த எட்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும், அரவிந்த் கெஜ்ரிவால், கோபல் ராய் ஆகியோர், நேற்று மிகவும் களைப்பாக காணப்பட்டனர். இதையடுத்து அவர்களை, மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும்படி, மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இருவரும், இதை ஏற்க மறுத்து விட்டனர். இதுகுறித்து, கெஜ்ரிவால் கூறுகையில், ""சாகும் வரை போராடுவோம். ஊழலை ஒழிப்பதற்காக உயிரை விடத் தயார். மருத்துவமனைக்குச் செல்ல மாட்டோம். மீடியாக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக, மன்னிப்புக் கோருகிறேன். இந்த நேரத்தில், ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள். நாட்டு நலனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமா அல்லது அரசுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமா என்பதை, நீங்களே முடிவு செய்யுங்கள். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shiva Sk - Bangalore,இந்தியா
02-ஆக-201213:47:34 IST Report Abuse
Shiva Sk சரியாக சொனீங்க பிரகாஷ்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
01-ஆக-201217:07:43 IST Report Abuse
Nallavan Nallavan இவர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை விமர்சிக்கிறார்கள் அது தவறுதான் அப்படியென்றால் யாருக்குத் தட்டிக் கேட்கும் அதிகாரம் உள்ளது???? வாக்களிக்கும் நமது கடமையைப் பொறுப்புடன் சிந்தித்து நல்ல பிரதிநிதிகளை நாம் தேர்ந்தெடுத்திருந்தால் இவர்களுக்கு என்ன அவசியம்????
Rate this:
Share this comment
Cancel
sivakumar - Chennai,இந்தியா
01-ஆக-201215:36:32 IST Report Abuse
sivakumar இந்த கும்பல் அராஜக கும்பல். எதேச்சதிகாரமாக செயல் படுகிறது. பாராளுமற்ற நடைமுறைகளில் தலையிடுகிறது. இந்த கும்பலின் கோரிக்கைக்கு அரசு அடிபணிந்தால் நாளை வேறு ஒரு கும்பல் இன்னொரு கோரிக்கையோடு அரசை மிரட்டும். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Goram - Chennai,இந்தியா
01-ஆக-201219:14:19 IST Report Abuse
Goramஅது சரி தான் ... இவர்களுக்கு புரியவில்லை போலும்... இந்த மாதிரி அற போராட்டம் பண்ணாமல் நாலு MPகளை அல்லது மந்திரிகளை கடத்தி இருந்தா உடனே லோக்பால் நிறைவேறி இருக்கும் .... இந்த மாதிரி காரியத்த சாதிச்ச எத்தனை கும்பலை பார்த்திருக்கிறோம் ... ஐயா சிவகுமார் அவர்களே ... அவர்கள் ஒன்னும் சுய லாபத்துகாக போராட்டம் செய்யல .. நமக்கும் நம் சந்ததிக்காகவும் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள் .... அவர்கள் யாருக்கும் தொந்தரவு தராமல் அற வழியில் செல்கின்றனர் ... தூற்றாதீர்கள் ......
Rate this:
Share this comment
Cancel
vijay raj - chennai,இந்தியா
01-ஆக-201213:42:26 IST Report Abuse
vijay raj இந்த வயதிலும் போராடும் அவருடன் நாமும் முடிந்தால் போராடலாம் அல்லது சும்மா இருக்கலாம் அவரை குறை கூறுவதைவிட. உண்மைஎலேய நம்முள்ளும் உழலை ஒழிக்கும் எண்ணம் இருந்தால் நம் குறைந்தது உழளுக்கு துணை போகாமல் இருப்பது நல்லது மற்றவர்களை குறை சொல்வதைவிட. நிச்சியம் அன்ன ஹசாரே ஒரு நாள் வெற்றி பெறுவார்
Rate this:
Share this comment
Cancel
periya gundoosi - Tabuk,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஆக-201213:26:58 IST Report Abuse
periya gundoosi "ஊழல்" 10 அன்னா ஹஸாரே வந்தாலும் இந்தியாவிலிருந்து ஒருக்காலும் ஊழலை ஒழிக்க முடியாது இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் குறையலாம். இவருக்குப் பின்னால் இருப்பவர்கள் அனைவரும் சங்பரிவார் கும்பல்தான். தேர்தலில் நின்று ஒரு வேளை ஆட்சியைப் பிடித்தாலும் இவர்களும் ஊழல் செய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
natarajan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஆக-201211:54:54 IST Report Abuse
natarajan இன்றைய இந்திய நாட்டில் நூற்றுக்கு 90% உடகங்கள் (மீடியா) பணத்தை வாங்கிக்கொண்டு வேலை செய்கிறது. 10% மட்டுமே ஒழுங்காக மக்களிடையே செய்திகளை கொண்டு செல்கிறது. முதலில் இவர்களை சரிசெய்தல் எல்லாம் சரியஹும். அன்ன ஹசாரே அவர்கள் இதை கருத்தில் கொண்டு கொஞ்சம் மீடியாவையும் கண்டிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
g.muthuvel - dindigul,இந்தியா
01-ஆக-201211:31:53 IST Report Abuse
g.muthuvel ஊடகங்களை தாக்குவது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது அதைவிடுத்து போராட்டம் வெற்றி பெற என்ன செய்யவேண்டும் அதற்க்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும் இதுவே என் பிறார்தனை
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
01-ஆக-201205:18:00 IST Report Abuse
Samy Chinnathambi ஏங்க தாத்தா நாங்க எத்தனை சினிமா பத்து இருப்போம். எல்லா சினிமாவுலயும் வில்லன்கள் எல்லாம் அடியாட்களை அனுப்பி இப்படிதான் கூட்டத்துல குழப்பம் பண்ணுவாங்க. கடைசியா கூட்ட குழப்பதுலயே போராட்ட தலைவரை தீர்த்து கட்டிடுவாங்க.
Rate this:
Share this comment
01-ஆக-201206:56:57 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் கார்டன் சும்மா தவராஎழுதாதீங்க. சுதந்திரப் போராட்டத்தின்போதும் வன்முறை வெடித்தது. அதற்க்காக காந்தி செய்தது போராட்டையே நிறுத்திவைப்பேன் என மிரட்டிடியது. உண்ணாவிரதமுமிருபேன் எனக் கூறியது. உங்களால் முடிந்தால் ஆதரியுங்கள். அல்லது .....க்கொண்டிருப்பது அதனினும் சிறந்தது...
Rate this:
Share this comment
vidhuran - Hastinapur,இந்தியா
01-ஆக-201211:12:26 IST Report Abuse
vidhuranஓ சுதந்திரப் போராட்டக்காலத்திளிருந்தே இந்த மெழுகு வர்த்தி கும்பல் இருந்திருக்கிறதா???...
Rate this:
Share this comment
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
01-ஆக-201212:50:34 IST Report Abuse
Samy Chinnathambiஏப்பா அறிவாலயம், நீ என்ன சொல்ல வர்ற. உங்க தலைவரு மாதிரியே குழப்பமா பேசுறியே. அதற்கும் அத்தனை தம்ப்ஸ் அப். அப்போ காங்கிரஸ் அண்ணா ஹஜாரேயை போட்டு தாக்க போறதை ஆதரிக்க சொல்றியா? நான் யாரை வில்லன்னு சொன்னதை கூட புரிஞ்சுக்காம எத்தனை பேறு தம்ப்ஸ் டவுன் போட்டு இருக்கறதை பாத்தீங்களே மக்களே. இவங்களை எல்லாம் எவனும் திருத்த முடியாது....
Rate this:
Share this comment
saravanan - Dares Salaam,தான்சானியா
01-ஆக-201214:17:53 IST Report Abuse
saravananஆம் விதுரா..... அந்த மெழுகுவர்த்தி கும்பல்தான் இந்தியாவை அடிமைத்தனத்திலிருந்து மீட்டது........ அது பிடிக்காமல்தான் நீ அமேரிக்கா சென்று மீண்டும் அடிமையாக வாழ்கிறாய்..... ரத்தத்தில் ஊறி விட்டதை மாற்ற முடியவில்லை போலிருக்கிறது........
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
01-ஆக-201202:12:04 IST Report Abuse
NavaMayam பாவம் இவர்கள் , லோக் பாலை ஊத்திட வேண்டியதுதான்..
Rate this:
Share this comment
Cancel
Abu Faheem - Riyadh,சவுதி அரேபியா
01-ஆக-201201:38:18 IST Report Abuse
Abu Faheem அண்ணா ஹாசரே எனும் குதிரையும் கேஜ்ரிவாலும் சகாக்களும் நன்கு நடிக்கின்றனர், இவர்களின் பின்னல் பொதுமக்கள் எனும் போர்வையில் இருப்பது பாசிச பயங்கர வாதிகளும் குண்டர்கலுமே, அண்ணா ஹாசரே தனது போராட்டம் குறித்த வரவு செலவு கணக்குகளை மக்கள் மன்றத்தில் சமர்பிக்க தயாரா? அப்போது தெரிந்துவிடும் இவர்களுக்கு பண உதவி புரிவது எந்த முதலாளிஎன்று
Rate this:
Share this comment
Global Citizen - சென்னை,இந்தியா
01-ஆக-201207:59:29 IST Report Abuse
Global Citizenஇந்த வயதில் அவருக்கு நாட்டின் மீது இருக்கும் அக்கறை உன்போன்றோற்கு இல்லாதது துரதிர்ஷ்டமே. நாட்டிற்காக ஒருத்தர் போராடுகிறார் என்றால் முடிந்தால் ஆதரவு தாருங்கள்...
Rate this:
Share this comment
Goram - Chennai,இந்தியா
01-ஆக-201210:36:17 IST Report Abuse
Goramமிக சரியாக சொன்னீர்கள் பாலமுருகன் .... அவருடைய வயதில் நம் நாட்டு மக்கள் சந்தோசமாக வாழ வேண்டும் என்றால் ஊழலை ஒழித்திட வேண்டும் ... அதற்காக தான் திரு ஹசாரே அவர்கள் முயற்சிக்றார்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை