E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
திருவாரூர் அருகே சோழர் காலத்து சிவன் கோவிலில் கி.பி., 912ம் ஆண்டு கல்வெட்டுகள் கண்டெடுப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2012
23:39

திருவாரூர்: திருவாரூர் அருகே, 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, மூன்று கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. திருவாரூர் மாவட்டம், சீதக்கமங்கலம் கிராமத்தில், மிகப் பழமையான சோழர் காலத்து சிவன் கோவில் சிதிலமடைந்து உள்ளது. இக்கோவில் இடிந்து தரைமட்டமாகிக் கிடந்ததால், அப்பகுதியினர், கோவில் பக்கம் செல்ல அச்சப்பட்டு வந்தனர். கோவிலைப் புதுப்பிக்க, முன்னாள் ஊராட்சித் தலைவர் ராமலிங்கம், சிவராமன் உள்ளிட்ட குழுவினர் முயற்சித்தனர். முதற்கட்டமாக, நேற்று முன்தினம் முட்புதர்களை அகற்றி, பழைய கற்களை சரி செய்தனர். அப்போது, பள்ளம் தோண்டியதில், மூன்று கல் தூண்கள் கிடைத்தன.

ஆய்வு : இதுகுறித்து, கல்வெட்டு ஆய்வறிஞர் குடவாசல் பாலசுப்ரமணியனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வறிஞர் பாலசுப்ரமணியன், தமிழ்ப் பல்கலைக் கழகக் கண்காணிப்பாளர் டாக்டர் ஜெம்புலிங்கம் அடங்கிய ஆராய்ச்சிக் குழுவினர், கல் தூணை ஆய்வு செய்தனர். ஆய்வறிஞர் பாலசுப்ரமணியன் கூறுகையில், "இக்கல்வெட்டு கி.பி., 912ம் ஆண்டைக் குறிக்கிறது. அதில், அவ்வூரின் பழமையான பெயர் ஸ்ரீதொங்கமங்கலம் என்னும் அபிமான சதுர்வேதி மங்கலம் என குறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டான நிலைக்கால் ஒன்று, ராஜராஜனின் 27ம் ஆட்சியாண்டில் (கி.பி., 1,012)ல் பொறிக்கப் பெற்றது. அந்த சாசனத்தில் அவ்வூரின் இரு பெயர்கள் பதிக்கப்பட்டு உள்ளன. ஸ்ரீதுங்கமங்கலம் என்றும் அபிமான பூஷண சதுர்வேதி மங்கலம் என குறிக்கப்பட்டு உள்ளது. அபிமான பூஷணன் என்பது ராஜராஜனின் பட்டப் பெயர். நாகப்பட்டினத்தில் கடாரத்து (மலேசியா) அரசன் கட்டிக் கொண்டிருந்த பவுத்த விகாரத்துக்கு மாமன்னன் ராஜராஜன் 97 வேலி நிலத்தை தானமாகக் கொடுத்து, அதை செப்பேட்டில் சாசனமாகப் பதிவு செய்துள்ளான். அதில், கையொப்பமிட்ட துர்பில் ஸ்ரீதரப்பட்டன் என்பவர் ஸ்ரீதுங்கமலங்கலத்தை சார்ந்தவன் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1,100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலைப் புதுப்பிக்க முயன்ற மக்களைப் பாராட்டுகிறேன்' என்றார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.