புதுடில்லி : ஊழலுக்கு எதிராக தொடர்ந்து 4வது நாளாக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரே, நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தான் போராடி வருவதாகவும், வலுவான லோக்பால் மசோதா அமையும் வரை பிரதமர் உள்ளிட்ட யாரையும் தான் சந்திக்க தயார் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்குதல், ஊழல் கறைபடிந்த அமைச்சர்களை விசாரிக்க தனியாக சிறப்பு குழு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி சமூக சேவகர் அன்னா ஹசாரே மீண்டும் தனது போராட்டத்தை தொடங்கியுள்ளார். டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்து வரும் இப்போராட்டம் கடந்த எட்டு நாட்களாக நடந்து வருகிறது. இவர்களுடன் சேர்ந்து, அன்னா ஹசாரேயும், கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
பிரதமரை சந்திக்க தயார் இல்லை : போராட்டத்தின்போது கூட்டத்தின் மத்தியில் பேசிய ஹசாரே, எங்களுடன் பேச்சுவார்த்தை யாரையும் அனுப்பபோவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எங்களுடன் யாரும் வந்து பேச வேண்டாம். எந்த அமைச்சர்களுடனும் நாங்கள் பேச தயாராக இல்லை. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் தொடரும். இதுதொடர்பாக பிரதமரை பேச தயாராக இருந்தாலும் நான் தயார் இல்லை.
பத்மபூசன் விருதை திருப்பி அளிக்கிறேன்: வேண்டுமானால் மத்திய அரசு எனக்கு கொடுத்த பத்மபூசன் விருதை திருப்பி கொடுக்க தயாராக இருக்கிறேன். எனக்கு விருது வேண்டும் என்று நான் கேட்கவில்லை. பத்மபூசன் விருதை காட்டிலும் மக்கள் எனக்கு மிகப்பெரிய விருது கொடுத்துள்ளனர். நாட்டில் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று நான் போராடி வருகிறேன். ஊழல் ஒழியும் வரை தொடர்ந்து நாட்டுக்காவும், நாட்டு மக்களுக்காவும் போராடுவேன் என்று கூறியுள்ளார்.
சாகும் வரை போராடுவோம் : கடந்த எட்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும், அரவிந்த் கெஜ்ரிவால், கோபல் ராய் ஆகியோர், மிகவும் சோர்ந்து போய் உள்ளனர். இதையடுத்து அவர்களை, மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும்படி, மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இருவரும், இதை ஏற்க மறுத்து விட்டனர். இதுகுறித்து, கெஜ்ரிவால் கூறுகையில், ""சாகும் வரை போராடுவோம். ஊழலை ஒழிப்பதற்காக உயிரை விடவும் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
நாங்கள் சாகனும்! பிரசாந்த் பூசன் : எங்களுடன் பேச மத்திய அரசு தயாராக இல்லை என்று கூறியுள்ளது. இதிலிருந்தே தெரிகிறது நாட்டு மக்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பது தெரிகிறது. மத்திய அரசை பொறுத்தவரை ஹசாரே, கெஜ்ரிவால், போன்றவர்கள் சாக வேண்டும். அப்போது இன்னும் நாட்டை கொள்ளையடிக்க முடியும் என்பது அவர்கள் எண்ணம் என்று கூறியுள்ளார் பிரசாந்த் பூசன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அண்ணா ஹசாறேவின் போராட்டம் மற்றும் நோக்கம் நல்லது தான். கட்சி சாயம் மத சாயம் இல்லாமல் இவர் போராட்டம் நடத்தினால் நிச்சயம் நாடு மக்கள் அனைவரும் இவருக்கு ஆதரவு கொடுப்பார்கள். ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தார். இப்போது சற்று நடு நிலை இல்லாமல் நடகிறாரோ என சிலருக்கு அதிருப்தி உண்டு.இதை சரி செய்தால் நல்லது
50 வருஷத்துல ஒரே ஒரு நல்ல தலைவன கொண்டு வந்தோம், அடல் பிஹாரி வாஜ்பாய்ன்னு பேரு அவருக்கு, உடனே அவரே தொரத்தி அடிச்சுட்டோமே. காங்கிரஸ் போட்ட 125 வருஷ குப்பய சுத்தம் செய்ய 6 வருஷம் இல்ல இன்னொரு 20 வருஷம் வேணும்.... காங்கிரஸ் சனியன் . காங்கிரஸ் கட்சிக்கு நான் கேட்கிறேன் 50 வருசமா என்னடா செஞ்சிங்க?
மத சண்டை உருவகுனது மட்டும் தன உன்னோட வேலை .
இன்னும் இரண்டு மூன்று நாள் சென்றபின் அவர் கேட்டுக்கொண்டார், இவர் கேட்டுக்கொண்டார் என்று சொல்லி ஒரு ஹரிஜன சிறுமியையோ அல்லது இந்தத் தடவை வித்தியாசமாக ஒரு நக்ச்ளைட்டையோ கூட்டிவந்து பழச்சாறு கொடுக்கச் சொல்லி உண்ணும் விரதத்தை ஆரம்பித்து விடாமல், இந்தத் தடவையாவது சொன்ன சொல் மாறாமல், எடுத்த முடிவில் இருந்து சிறு துரும்பும் விட்டுக் கொடுக்காமல், பிடிவாதமாக கடைசி மூச்சு உள்ள வரையில் உண்ணா விரதத்தைத் தொடர்ந்து, காங்கிரஸ் காரனுக்கு வரும் தேர்தலில் ஒரு பெரிய ஆப்பு வைத்து, தாங்கள் எப்பாடு பட்டாவது நமது மோடி பிரதமராக வர ஆவன செய்ய உங்கள் காலைத் தொட்டுக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். ஜெய் பிஜேபி
இந்த ஹசாரே சும்மா கடக்க மாட்டாரா உண்ணா விரதம் புண்ணாக்கு விரதம் என்று தன்னை சுற்றிலும் அல்லக்கைகளை வைத்து கொண்டு கபட நாடகம் ஆடும் இந்த ஹசாரே முகத்தை இந்த அரசு இரும்பு கரம் கொண்டு கிழிக்கவேண்டும் அது எப்போது நடக்கும் என்று ஆர்வமாக மக்கள் இருக்கிறார்கள் . இந்த நாட்டை ஆண்ட பிஜேபி காரர்கள் செய்த ஊழலை இந்த ஹசாரே தன் வாயால் என்னைக்காவது சொல்லி இருப்பாரா இல்லை இவர் ஒரு பிஜேபி அல்லக்கை . இன்னும் இந்த மக்கள் இவரை நம்பி இவர் பின்னால் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அனைவரும் பிஜேபி மற்றும் ஆர் எஸ் எஸ் கை கூலிகள் தான் இந்த ஹசாரே புண்ணாக்கு விரதத்தில் இருப்போர்கள் . காதியவாதி என்று இந்த ஹசாரே சொல்லுவதர்ற்கு என்ன தகுதி இருக்கிறது இவரிடம் . பாபா ராம்தேவ் ஒரு கூட்டத்தில் இவர் ஒரு பெண்ணின் சுடிதாரை அணிந்து வேளியேறி இருக்கிறார் இவர் வரும்போது ஒரு ஆடை ஆனால் இவர் போகும்போது ஒரு பெண்ணின் ஆடை இதை உங்களுக்கு சொல்லி தெய்ரியவேடியதில்லை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் இப்படி பட்ட கூடம் தான் இந்த ஹசாரே பின்னால் இருக்கும் கூட்டம் .
கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஒரு வசனம் வரும்: "தேச பக்தி தான் இல்லை துரோக புத்தியவது இல்லாமல் இருக்ககூடாதா?" என்று கேட்பதுபோல. அதுபோல, போராட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை.
போராட்டத்தை பற்றி தவறாக பேசாமலாவது இருக்கட்டும். இவர்கள் யாருக்காக போராடுகிறார்கள் என்பதை கூட அறிந்துகொள்ளும் மன பக்குவம் இல்லாதவர்கள் வேறு என்ன சொல்லுவார்கள்?...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.