உ.பி.யில் மகன் நடத்தும் ஆட்சியில் அப்பாவுக்கு திருப்தியில்லையாம்!

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

லக்னோ : உ.பி.யில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி பொறுப்பேற்று கிட்டத்தட்ட 6 மாதம் ஆக போகிறது. ஆனால் இன்னும் உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை என்று தனது மகனும், முதல்வருமான அகிலேஷ் மீது அதிருப்தியில் இருக்கிறார் முலாயம் சிங்.

உ.பி.யில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கட்சியின் தலைவர் முலாயம் சிங், தனது மகன் அகிலேஷை முதல்வராக நியமித்தார். அகிலேஷூம் ஆட்சி பொறுப்பேற்று கிட்டத்தட்ட 5 மாதங்கள் முடிந்து, 6வது மாதம் துவங்க இருக்கிறது. இந்நிலையில் முலாயம் சிங், தனது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். முதல்வர் அகிலேஷின் இல்லத்தில் நடந்த இந்த கூட்டத்தில் முதல்வர் அகிலேஷ் உட்பட கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

மகன் மீது அதிருப்தி: அப்போது கட்சியினருடன் பேசிய முலாயம் சிங், கட்சி‌ எம்.எல்.ஏ.க்களை எச்சரித்துள்ளார். ஆட்சி பொறுப்பேற்று 6 மாத காலம் ஆக போகிறது, ஆனால் இதுவரை எந்த ஒரு காரியமும் உருப்படியாக செய்யவில்லை. தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளும் அப்படியே கிடக்கிறது. உடனடியாக அனைவரும் விரைந்து செயல்பட்டு ‌கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். மேலும் மாநிலத்தில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கிறது. அதற்குள் அரசு விரைந்து செயல்பட்டு மக்களுக்கு தே‌வையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார். அரசுக்கு ‌கெட்ட பெயர் எடுத்து கொடுக்கும் வகையில் யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். முலாயம் சிங்கின் இந்த பேச்சு மாநிலத்தில் முதல்வராக இருக்கும் தனது மகன் அகிலேஷ், சரியாக ஆட்சி நடத்தவில்லை என்பதையும், அவர் மீதான அதிருப்தியையுமே காட்டுகிறது.

இதனிடையே முலாயம் சிங்கின் கருத்துக்கு பதிலளித்து இருக்கும் அகிலேஷ், கட்சியின் தலைவர் அவர். அவர் என்ன சொன்னாரோ அதன்படி, நாங்கள் நடப்போம் என்று கூறியுள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (17)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh rajan - hyderabad,இந்தியா
02-ஆக-201215:13:52 IST Report Abuse
suresh rajan நீங்கள் எல்லாம் சினிமாவில் நடிக்க போகலாம்
Rate this:
Share this comment
Cancel
Muthurasu - Singapore ,சிங்கப்பூர்
01-ஆக-201219:20:46 IST Report Abuse
Muthurasu கோல, கொழ்ழை, கற்பழிப்பு, எல்லாம் நடக்கலன்னு சூசஹம சொல்றாரு.
Rate this:
Share this comment
Cancel
haris jayaraj - perambalur,இந்தியா
01-ஆக-201219:10:09 IST Report Abuse
haris jayaraj அது வேறோன்றுமில்லைங்க மத்தியில ஆட்சி பிடிக்க பார்த்தார். அந்த காரியம் அவரால் இனி நிறைவேறாது என்பது தெளிவாகிவிட்டதால் மாநிலத்திலாவது அதிகாரத்தில் உட்காரலாமென்று தான் இவ்வாறு கூறி வருகின்றார். எனவே தான் மகனை வீழ்த்தி விட்டு முதல்வர் ஆகலாம் என்று முயற்சித்து வருகின்றார். ஆனால் மகன் தந்தைக்கு விட்டு கொடுப்பாரா?
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
02-ஆக-201210:19:45 IST Report Abuse
villupuram jeevithanகருணா எவ்வளவு உஷார் பார்டி பாருங்கள். இதெற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லையே ?...
Rate this:
Share this comment
Cancel
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
01-ஆக-201218:31:57 IST Report Abuse
மும்பை தமிழன் தன்னை மாதிரி சரியாக திருட தேரியவிலையோ என்னவோ ... அருள் மும்பை
Rate this:
Share this comment
Cancel
sumugan - bangalore,இந்தியா
01-ஆக-201217:48:15 IST Report Abuse
sumugan one more karnataka scene devagowda and his son
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
01-ஆக-201217:10:40 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar உ.பி. மக்களை காப்பாற்ற தேசிய கட்சிகள் நல்ல தலைவரை நியமனம் செய்யவேண்டும் உ- ம்., காங்கிரஸ் சார்பில் திரு.ராகுல் காந்தி அதுபோல் அங்கு மாநில கட்சிகள் சரிஇல்லை இதனால் மற்ற மாநிலம் வளர்ச்சி குன்றி வருகின்றன மத்திய ஆட்சி ஒரு பொம்மை ஆட்சி நிர்வாகக்மாக காணபடுகிறது MBA வல்லுனர்கள் IAS மற்றும் IPS பணிகளுக்கு தம்மை தயார் செய்து கொள்ள வேண்டும் மேலும் MLA மற்றும் MP பதவிகளுக்கு போட்டி இடவேண்டும் அப்போதுதான் நமது பாரதம் நிர்வாகத்தில்..., ராணுவ வலிமை பெறும் ஜெய் ஹிந்த் பூபதியார்
Rate this:
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
01-ஆக-201218:40:08 IST Report Abuse
A R Parthasarathyநல்ல தலைவர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு யார் அதரவு தருகிறார்கள்? அதனால் நல்லவர்கள் அரசியலுக்கு வர அச்ச்சபடுகிரார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Pachaitamizhan Indian - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஆக-201216:24:21 IST Report Abuse
Pachaitamizhan Indian அவர் என்ன வெச்சுகிட்டா வஞ்சனை பண்றார்? தந்தையின் அரசியலை பார்த்து கத்துகிட்டது அவ்வளவுதான். ஏழை MLA களுக்கு கார் திட்டம் அறிவிச்சார்.பாவம் அதையும் எல்லோரும் கண்டிச்சதால் பின்வாங்கினார். கொஞ்ச நாள் மு.க கிட்ட அனுப்பி வையுங்க. அவரும் சும்மாதான் இருக்கார். பிரித்தாளுதல், திசைதிருப்புதல், பொதுவான கொள்கை, அப்பப்போ கொள்கை, இலவசத்திட்டம், பலிகடா திட்டம் , ஆரிய மாயை கொள்கை, ஊழல் பல்டி சிறுபான்மை கூச்சல், தாழ்த்தப்பட்டவர் வேஷம் போன்றவற்றில் முனைவர் பட்டம் வாங்கியவர்.
Rate this:
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
01-ஆக-201218:18:03 IST Report Abuse
A R Parthasarathyஅகிலேஷ் ஒன்னும் மு க கிட்ட பாடம் கத்துக்க வேண்டாம். அவருடைய அப்பவே மு க வை மிஞ்சகூடியவர்தான். இதெல்லாம் சும்மா. இன்னும் இரண்டு மதத்திலே மாநிலத்திற்கு தேர்தல் வருகிறது. மக்கள் ஓட்டளிக்க வேண்டும் அல்லவா? அதற்க்ககதான் இந்த நாடகம். நான் அடிபதுபோல அடிக்கிறேன் நீ அழுவது போல அழு மக்கள் பரிதாப பட்டு ஓட்டலிதுவிடுவார்கள் என்ற திட்டம் தான். ஆமாம். இப்போதுதானே பொது தேர்தல் நடந்தது அகிலேஷ் ஆட்சி பொறுப்பு ஏற்றார்? இப்போது என்ன தேர்தல்? உள்ளாட்சி தேர்தலா? உள்ளாட்சி தேர்தல் என்றால் அங்கங்கே செல்வாக்கு உள்ளவர்கல்தானே வெற்றிபெறுவார்கள்? அதற்க்க்காகதான் தயார் செய்கிரார்போளிருகிறது....
Rate this:
Share this comment
Cancel
krishsampath - coimbatore,இந்தியா
01-ஆக-201215:49:34 IST Report Abuse
krishsampath ஒரு ஜனாதிபதி தேர்தலில் ஒழுங்கா ஓட்டு கூட போட தெரியாதவனுக்கு ஒரு கட்சி அந்த கட்சியில அவனுக்கு தலைவர் பதவி அவனுக்கு கீழ அடி பொடிகள், அல்லகைகள். யப்பா இவனுங்க இம்ச தாங்க முடியலைடா சாமி.
Rate this:
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
01-ஆக-201218:20:32 IST Report Abuse
A R Parthasarathyஇது போன்ற தலைவர்கள் தான் இந்திய அரசியலை வழி நடத்துகிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel
THIRUMALAI BHUVARAGHAVAN - chennai,இந்தியா
01-ஆக-201215:17:16 IST Report Abuse
THIRUMALAI BHUVARAGHAVAN சொத்தை பிரித்து கொடுத்த பிறகும், அதை பேணிக்காக்கும் தந்தையை தான் இதில் காண்கிறேன்.
Rate this:
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
01-ஆக-201218:26:44 IST Report Abuse
A R Parthasarathyசொத்தை ஒன்னும் பிரித்து கொடுக்கவில்லை. மாநிலத்தில் சொத்தை பாதுகாக்கத்தான் அகிலேஷை நியமிதிருகிறார். அவர் ஜனாதிபதி தேர்தலில் தன்னுடைய பங்கை செலுத்துவதர்க்க்காகவும், மத்தியில் மந்திரி பதவியில் அமர்வதர்க்ககவும் திட்டமிட்டு டெல்லியில் முகாமிட்டுள்ளார். அந்த சமயத்தில் மாநிலத்தை கோட்டை விடுவிடகூடாதே என்ற அக்கரையில்தான் இந்த எச்சரிக்கை. அரசியல்வாதிகளுக்கு மக்கள் சேவை எப்போதுமே இரண்டாம் பட்சம்தான்....
Rate this:
Share this comment
Goram - Chennai,இந்தியா
01-ஆக-201218:44:11 IST Report Abuse
Goramயார் வீட்டு சொத்தை யார் பிரித்து கொடுப்பது Thirumalai அவர்களே ... எல்லாம் அரசியல் நாடகம்......
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
01-ஆக-201215:04:43 IST Report Abuse
Thangairaja இளம் தலைமுறையினரால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அனுபவமின்மையால் மடிந்து போகிறது. சில அனுபவசாலிகளும் ஆணவத்தால் சாதிக்க முடியாமல் போகிறது.
Rate this:
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
01-ஆக-201218:32:50 IST Report Abuse
A R Parthasarathyஇளம் தலைமுறையினரால் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கை மடியவில்லை. அகிலேஷிர்க்கு பூரண சுதந்திரம் அளித்து மாநில ஆட்சியில் தலையிடுவதை முலாயம் நிறுத்திக்கொள்ளட்டும். அப்புறம் பாருங்கள். அனுபவசாலி களின் ஆணவம்தான் இங்கு அகிலேஷிர்க்கு தடையாக இருக்கிறது. அகிலேஷ் முதல்வராக இருந்தாலும், மற்ற அமைச்சர்கள் முலாயம்சிங்கின் ஆதரவாளர்களே முன்னாள் ஊழலுக்கு துணை போனவர்களே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்