E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
முதல் நாளே களைகட்டியது "தினமலர்' கண்காட்சி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

02 ஆக
2012
00:41
பதிவு செய்த நாள்
ஆக 01,2012 22:29

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று துவங்கிய தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஆக., 6ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில், சலுகை விலையில் பொருட்கள் வாங்கலாம்; ஜாலியாய் உணவருந்தி பொழுது போக்கலாம்.

கலெக்டர் அன்சுல் மிஸ்ரா இக்கண்காட்சியை துவங்கி வைத்தார். "தினமலர்' இணை ஆசிரியர் கி.ராமசுப்பு வரவேற்றார். காலை 10.30 மணிக்குத் துவங்கிய கண்காட்சிக்கு, 9.30 மணிக்கெல்லாம் பார்வையாளர்கள் குவியத் துவங்கினர். "குளுகுளு' அறையில் 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், பார்வையாளர்களை பரவசப்படுத்தின. "கரண்டி முதல் கார்' வரை, வேண்டியதை தெளிவான விளக்கத்துடன் வாங்கும் வாய்ப்பு, இக்கண்காட்சியின் கூடுதல் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் புதிய பரிணாமம் காணும், "எலக்ட்ரானிக்ஸ்' பொருட்கள் இம்முறையும் குவிந்துள்ளன. "ரிமோட்' வசதி கொண்ட தோரண விளக்குகள், வித்தியாசத்தை விரும்பும் பிரியர்களுக்கு, "விந்தை' விருந்து.


"3டி' அரங்கு :
ஒளிக்காட்சியை கண் முன்னே கொண்டு வரும் "3டி' அரங்கிற்கு, முதல் நாளே அமோக ஆதரவு கிடைத்துள்ளது. சமையல் பாத்திரங்களின் நவீன வரவுகள், பெண்களை வெகுவாகக் கவர்ந்தன. உலகத் தரம் வாய்ந்த "பர்னிச்சர்' பொருட்கள், பார்வையாளர்களுக்கு "எதை வாங்குவது' என்ற குழப்பதை ஏற்படுத்தின. அழகுக்கு மெருகூட்டும் அழகு சாதனப் பொருட்கள், இளம்பெண்களை சுண்டி இழுத்தன. அறிவுப் பசியைப் போக்க, அரிய புத்தகங்கள் ஸ்டால்களில் இடம் பெற்றுள்ளன. புதுமை நிறைந்த, "சிடி'கள் விற்பனைக்கு வந்துள்ளன. இலவச மருத்துவப் பரிசோதனையும் உண்டு. "எச்சில் ஊறச் செய்யும் ஊறுகாய் வகைகள், பாட்டி வைத்திய புகழ் "சுக்கு காபி,' எண்ணெய் பாதிப்பில்லாத பதார்த்தங்கள், வடமாநில தின்பண்டங்கள்,' ஸ்டால்களை கடந்து செல்வோரை, சுண்டி இழுத்தன. திருப்தியுடன் வெளியே வருவோரை, அறுசுவையில் திக்குமுக்காட வைத்தது, "புட் கோர்ட்!' உலக பிரசித்தி பெற்ற 18 வகையான ஸ்டால்களின் உணவுப் படைப்புகள், "ஆர்டர்' செய்யும் போதே, நாவூறச் செய்தது. ரசித்து உண்ண வசதியாக, ரம்மியமான சூழலில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டால்களை சுற்றிப் பார்த்த அனுபவத்தை, இங்கு அமர்ந்து சுவைத்த படி கலந்துரையாடலாம். காலை 10.30 மணி முதல், இரவு 8 மணி வரை நடக்கும் இக்கண்காட்சியில், ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 ரூபாய் கட்டணம்.

மீனாட்சி மதுரையில் மீன்களின் காட்சி : தினமலர் கண்காட்சியில் அரிய வாய்ப்பு : மனசை லேசாக்கி, ரத்த அழுத்தத்தைக் குறைத்து, பல்வேறு நோய்களும், "வரும் முன் காக்கும்' அருமருந்தாக அலங்கார மீன்கள் விளங்குகின்றன என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இப்போதெல்லாம், ஆளாளுக்கு, "ஆ... ஊ...' என்றால் ரத்தக் கொதிப்பு வந்து விடுகிறது. இதயம், மூளை, சிறுநீரகம் போன்றவற்றை தாக்கி, பல்வேறு நோய்களுக்கும், "ராஜபாட்டை' அமைத்துக் கொடுக்கிறது இந்த ரத்தக் கொதிப்பு. இதற்கு மூல காரணமே, "டென்ஷன்' தான். "டென்ஷன்' குறைந்தால், ரத்தக் கொதிப்பு சொல்லாமலே ஓடிவிடும். "டென்ஷனை' குறைக்க பல வழிகள் இருந்தாலும், துள்ளி விளையாடும் வண்ண மீன்களை கண்கள் குளிர பார்த்து ரசித்தால், மனசு லேசாகி, "டென்ஷன்' குறைவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
அத்தனை மீன்களையும் எங்கு காண்பது என ஏங்குவோர், உடனே செல்ல வேண்டிய இடம், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும், "தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சிக்கு. நேற்று துவங்கிய இக்கண்காட்சியில், விதம் விதமான வெளிநாட்டு, உள்நாட்டு பல வண்ண கடல் மீன்களை பிரத்யேகமாக வரவழைத்து, தனி கண்காட்சி அமைத்துள்ளனர்.

இங்கு இடம் பெற்றுள்ள விசேஷ மீன் வகைகள்: பிளட் ஷிஸ்ரிம்ப் : நாம் உண்ணும் இறாலைப் போல காட்சி அளித்தாலும், அதைவிட, "பிளட் ஷிரிம்ப்' அளவில் சிறியது. ஆனால், இதன் வண்ணம், கண்ணைப் பறிக்கும் சிவப்பு நிறம். இந்தோ பசிபிக் நாடுகளில் கிடைக்கும் இம்மீன்கள், அரிதானவை. ஒன்றின் விலை ரூபாய் 2500

மூரிஷ் ஐடால்: இதுவும், இந்தோ பசிபிக் நாடுகளில் காணப்படும் மீன். இதை வளர்ப்பது கடினம். இருப்பினும், நாம் வளர்க்கத் துவங்கியதும், உணவை உண்ணத் துவங்கினால், தொடர்ந்து வளர்ந்து விடும் என்ற நம்பிக்கையை தருகிறது. "அலங்கார மீன்களின் அரசி' என, இது அழைக்கப்படுகிறது. ஒன்றின் விலை ரூபாய் 300

பயர் கோபி:
பிஜி, மாத்தீவுகளில் காணப்படும் இம்மீன்கள், கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகளை உண்ணக் கூடியவை. வெள்ளை, ஆரஞ்ச் வண்ணங்கள் கலந்து, பார்ப்போரை பரவசப்படுத்துகிறது.

ரீகல் ஏஞ்சல்:
தாய்லாந்து பகுதியில் காணப்படும் இம்மீன்கள், ஏகப்பட்ட வண்ண கோடுகளுடன் அலங்கார தொட்டியையே அழகாக்குகிறது. ஒன்றின் விலை, அதிகம் இல்லை ஜென்டில்மேன்... ரூபாய் 6000 தான்!

மஞ்சள் டேங்க்: கடல் அலங்கார மீன்களில் வகைகளை சிறப்பானது என்கின்றனர் நிபுணர்கள். அவை, எல்லோ டேங்க், ரீகல் டேங்க், மெரூன் குளோன், ஜூவைனல் எம்பரர், ஏஞ்சல் மீன்கள். இதில் ஒரு வகை தான் மஞ்சள் டேங்க். முழுக்க, முழுக்க மஞ்சள் நிறத்தில், கண்ணாடி போல் காணப்படும் இம்மீனைப் பார்ப்பது, கொள்ளையோ கொள்ளை அழகு. பாசி, சிறு உயிர்களை உண்ணும் இம்மீன்கள், பிலிப்பைன்ஸ், மாலத்தீவு பகுதிகளில் காணப்படுகிறது.

குரான் ஏஞ்சல்: வண்ண, வண்ண வளையங்களுடன் வளைய வரும் இம்மீன்களின் வாலில், அரபு மொழியில் குரான் வாசகம் போல் காணப்படுவதால், இப்பெயர் வந்தது. இந்தியாவில் காணப்படும் இம்மீனின் ஒன்றின் விலை, ரூபாய் 1500

ஜூவைனல் எம்பரர்:
நீல நிற வளையங்களுடன் துள்ளித் திரியும் இம்மீன்கள், நமது ராமேஸ்வரம், தூத்துக்குடி பகுதியில் காணப்படுகிறது. ஒன்றின் விலை ரூபாய் 3500
புளூ ஏஞ்சல்: பிஜி தீவுகள், பிலிப்பைன்ஸ் பகுதி கடலில் காணப்படும் இம்மீன்கள் அழகோ அழகு. ஒன்றின் விலை ரூபாய் 5000

குளோன்: "சீ அனிமோன்' எனப்படும் ஒரு வகை கடல் விலங்குடன் இவை ஒத்து வாழ்கின்றன. இம்மீன்களைத் தவிர, வேறு மீன்களை, "சீ அனிமேன்' அண்ட விடுவதில்லை. மற்ற மீன்கள் வந்தால், அவற்றை பிடித்து, "சீ அனிமோன்' கபகளீரம் செய்து விடும். இந்தியாவில் காணப்படும் இம்மீன் ஒன்றின் விலை ரூபாய் 750 இவை தவிர, பல வண்ண கார்பெட் அனிமோன், பைஜாமா கார்டினல், பர்பிள் பிளேம் கோபி, எல்லோ பாக்ஸ் பேஸ், ரீகல் டேங்க், கிளீனர் ஸ்ரிம்ப், குட்டி சுறா, நத்தையின் கூட்டுக்குள் சென்று குடியிருக்கும் ஹெர்மிட் நண்டு ஆகியவற்றையும் பார்த்து மகிழலாம். எங்கே கிளம்பிட்டீங்க... தமுக்கம் மைதானத்துக்கா?

"மெகா' கோழி முட்டை; பசங்களுக்கு பிடிக்கும் "பக்" :
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வரும் "தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள, "மெகா' தீ கோழி முட்டையும், "பக்' வகை நாய்கள் மற்றும் சாகச கலைஞர்களின் நிகழ்ச்சிகள் சிறுவர்களை வெகுவாய் கவர்ந்தன. கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு நிறைவான அனுபவம் தர, பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒரு பகுதியாக, நாய்கள், பறவைகள் பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. நாய்கள் கண்காட்சியில் , லட்சங்களுக்கு விலை போகும், கேரவன் ஹவுன்ட், டாபர்மேன், கிரேட்டேன், லாப்ரடார் ரெட்ரீவர், ராட்வெல்லர், பக் வகை நாய்கள் உங்கள் பார்வைக்கு வந்துள்ளன. அரிய வகை பறவைகள் படக் கண்காட்சியில், தீக்கோழியின் மெகா சைஸ் முட்டை, ஈமு, வாத்து, பிரம்மா கோழி, கின்னிக் கோழி, புறாவின் நிஜ முட்டைகள் இடம் பெற்றுள்ளன. விலங்களுக்கான பிரத்யோக சேனல்களில் மட்டுமே பார்த்த இது போன்ற முட்டைகளை, "தினமலர்' காட்சியில் நேரடியாக பார்க்கலாம்.

சாகசம்:
மெல்லிசைப் பின்னணியில் சாகச கலைஞர்களின் அரங்கேற்றம், "ஷாப்பிங்' முடித்து வெளியே வருவோருக்கு, பிரமிப்பை தருகிறது. மொத்தத்தில், இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்ல, சிறுவர்களுக்கும் சிறந்த கேளிக்கை சிம்மாசனமாய் திகழ்கிறது, "தினமலர்' கண்காட்சி. பிறகென்ன, உங்க "குட்டீஸ்'களுடன் கிளம்புங்க; கண்காட்சி ஆக.,6 வரை தான்.

"வியந்தேன், விரும்பினேன்,வாங்கினேன்' : "தினமலர்' கண்காட்சியில் திகைத்தவர்கள் சொன்னது

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கிய, "தினமலர்' கண்காட்சியில் பங்கேற்ற, வெளியூர் வாசிகள், பார்வையிட்ட பின், "வியந்தேன், விரும்பினேன், வாங்கினேன்' என அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக, மதுரையில் மக்கள் கூடும் பெருவிழா, தினமலர், "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி. மக்களின் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின், நேற்று கோலாகலமாய் தொடங்கிய கண்காட்சிக்கு, முதல் நாளே ஏக வரவேற்பு. வெளியூரிலிருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் திரண்டு வந்து, கண்காட்சியை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

மனநிறைவுடன் வெளியே வந்த சிலரிடம், கண்காட்சி அனுபவங்களை கேட்ட போது அவர்கள் கூறியது:

ஸ்ரீதீபலட்சுமி,மதுரை:
ஆண்டு தோறும், "தினமலர்' கண்காட்சிக்கு வருகிறேன். சுற்றிப்பார்த்த பின் வெளியே செல்ல மனமில்லை. "ஜில்' என்ற சூழலில் ஸ்டால்களை சுற்றிப் பார்ப்பதால், களைப்பு தெரியவில்லை; எனக்கு முழு மனநிறைவு.

சசிகலா,மதுரை: "தினமலர்' கண்காட்சி தொடங்கிய காலத்திலிருந்து வருகிறேன். முதலில், எங்கள் வீட்டு பெண்கள் வந்து பார்வையிட்டு செல்வோம். பின், ஞாயிறு அன்று கணவருடன் வந்து, பொருட்களை வாங்கி செல்வோம்.
டாக்டர் மாலதி,திண்டுக்கல்: வெளியில் வெயில் கொளுத்தியது, "எப்படி "பர்சேஸ்' செய்யப்போகிறோம்' என்ற கவலையில் வந்தேன். உள்ளே வந்தால், வியந்து விட்டேன். சொந்த வீடு கட்டும் எண்ணம் இருந்தது. இங்குள்ள பொருட்களை பார்க்கும் போது, விரைவில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

மகேஸ்வரி,உத்தமபாளையம்: முதன் முறையாக கண்காட்சியில் பங்கேற்கிறேன். எப்படி இருக்கிறது என பார்க்க வந்தேன். பார்ப்பவை அனைத்தும் விரும்பும் படியாக உள்ளது. நடுத்தர குடும்பங்கள் முதல், பணம் படைத்தவர்கள் வரை வாங்கும் வகையில் பொருட்கள் உள்ளன.

நாச்சம்மாள், சிவகங்கை: கண்காட்சியில் நுழைந்ததுமே, "குளுமையான' மனநிலை ஏற்பட்டது. உடனே என் கண்ணில் பட்ட "ஏர்கூலர்' ஒன்றை, "ஆர்டர்' செய்துவிட்டேன். ஊர் கடந்து வந்து, "ஷாப்பிங்' செய்திருந்தாலும், மகிழ்ச்சியுடன் ஊர் திரும்புகிறேன். இவ்வாறு அவர்கள் கூறினர். நீங்களுக்கும் மதுரை தமுக்கத்தில் சங்கமித்து, இது போன்ற அனுபவத்தை பெறலாம்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.