சின்னசேலம்: சின்னசேலம் அருகே பாண்டியங்குப்பத்தில் கோவில் தேரோட்டம் நிறுத்தப்பட்டு, சாமிகளை கோவில் கருவறைக்குள் கொண்டு சென்றதால், மக்கள் கதறி அழுதனர். விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த பாண்டியங்குப்பம் கிராமத்தில் சோலையம்மன், கருப்பையா, அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 27ம் தேதி துவங்கி நடந்து வந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடக்க இருந்தது. அப்போது, தேர் வடம் பிடிப்பது தொடர்பாக இரண்டு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டது. விழுப்புரம் போலீசார் இரு தரப்பினரை அழைத்து நடத்திய பேச்சு வார்த்தையில் சுமுக தீர்வு ஏற்படாததால், தேரோட்டம் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவியதால், டி.எஸ்.பி., சரவண குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தேரோட்டம் நிறுத்தப்பட்டு, திருவிழா நின்று போனதால் நேற்று, ஆற்றங்கரை கோவிலில் இருந்து சோலையம்மன் மற்றும் கருப்பையா, அய்யனார் சாமிகளுக்கு பூஜைகள் செய்தனர். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் கோவில் கருவறைக்குள் உள்ள பாதாள அறையில் வைக்க ஊர்வலமாக சாமி சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இதைப் பார்த்து, கிராம மக்கள் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.