No water in Cauvery: People subject to celebrate Aadi Perukku in empty cauvery | ஆடிப்பெருக்கு கொண்டாட முடியாமல் மக்கள் ஏமாற்றம்: மழை இன்றி தமிழகம் முழுவதும் ஆறுகள் வறண்டன| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (87)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

ஆடிப்பெருக்கின் போது கரை புரண்டோடும் காவிரி ஆறு, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல்வெளியாகக் காட்சியளிப்பது, காவிரி கரையோர மக்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. காவிரி மட்டுமல்லாமல், தமிழகத்தில் எந்த ஆறுகளிலும் தண்ணீர் இல்லாததால், ஆடிப்பெருக்கு பண்டிகையை இன்று, மக்கள் வழக்கமான கோலாகலத்துடன் கொண்டாட முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். கர்நாடகாவின் குடகுமலையில், "ஆடு தாண்டும்' அளவுக்கே உள்ள சிறிய இடத்தில் இருந்து உருவாகும் காவிரி, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் மழை நீர், பல்வேறு கிளை ஆறுகளின் உபயத்தால் பிரவாகமாக உருவெடுக்கிறது. மரபு: "காவிரி என்ற பெண் ஆடியில் பெருக்கெடுத்து (வாலிபமடைந்து), சமுத்திர ராஜனான கடலை அடைகிறாள்' என்ற ஐதீகத்தின் அடிப்படையில், தங்களுக்கு வளங்களை வழங்கும் காவிரிக்கு மங்கலப்பொருட்களை மக்கள் சீராக வழங்குவது, தொன்று தொட்டு மரபாக இருக்கிறது. திருச்சியை பொறுத்தவரை, ஆடிப்பெருக்கன்று பரந்து விரிந்து கடல் போல கரை புரண்டோடும் காவிரியின் கரையோரங்களில் பெண்கள், காதோலை, கருகமணி, மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப்பொருட்கள், பழங்கள் படைத்து ஆற்றில் விடுவர். சுமங்கலி பெண்களின் கைகளால் மஞ்சள் கயிற்றை ஆண், பெண் வேறுபாடு இன்றி கட்டிக்கொள்வர். குறிப்பாக, புதுமணத் தம்பதிகள், "சீரும் சிறப்பாக வாழ வேண்டும்' என்று திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, காவிரியை வணங்குவர். ஆடிப்பெருக்கு விழா, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். அன்று, ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காவிரித் தாய்க்கு சீர் கொடுக்கும் வைபவம் வெகு பிரசித்திப் பெற்றது. செயற்கை காவிரி: தற்போது தண்ணீர் வற்றி மணல்வெளியாக காவிரி ஆறு காட்சியளிப்பதால், ஆற்றுக்குள் பள்ளம் தோண்டி, "போர்வெல்' மூலம் தொடர்ந்து தண்ணீர் விட, திருச்சி மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. "செயற்கை' காவிரிக் கரைகளில் பெண்கள் தங்களது சம்பிரதாய சடங்குகளை செய்து கொள்ளலாம். வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி, காவிரி என ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் திருவையாற்றில்,

ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். சோழர்கள் காலத்தில் இருந்தே ஆடிப்பெருக்கு விழா, தஞ்சையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக செவி வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. விஜயநகர அரசர்கள் காலத்தில், தஞ்சை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா மிகச்சிறப்பாக நடந்ததாக சரித்திரக் குறிப்புகள் காணப்படுகின்றன. தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள், ஆடிப்பெருக்கு நாளில், "காவிரி கல்யாணம்' என்ற நாட்டிய நாடகத்தை திருவையாற்றில் நடத்துவது மரபாக வைத்திருந்தனர். இத்தகைய சிறப்புமிக்க விழா, திருவையாற்றில், "போர்வெல்' மூலம் கொண்டாடப்படுகிறது. ஆற்றில் பொட்டுத்தண்ணீர் கூட இல்லாததால், வீடுகளில் உள்ள கிணறுகள், அடி பைப்புகள், குழாய்களில் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் கொண்டாட இருக்கின்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், காவிரி ஆற்றுக்குள் ஊற்று தோண்டி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நாகை மாவட்டம் மயிலாடுதுறை - பூம்புகார் வழியாக காவிரி, கடலில் கலக்கிறது. ஆடிப்பெருக்கின்போது தண்ணீர் இல்லாத காவிரியைப் பார்த்து, மக்கள் கண்ணீரில் கரைகின்றனர். இதே நிலை தான், தமிழகம் முழுவதும் எல்லா ஆறுகளிலும் உள்ளது. ஆறு மற்றும் நீர் நிலைகளில் ஆடிப்பெருக்கை கொண்டாட முடியாமல், மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தவிப்பு: உடுமலை திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆடிப் பட்டம் சிறக்க ஆண்டுதோறும்,

Advertisement

இப்பகுதி விவசாயிகள், இங்கு சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம். மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அருவிகள், பாலாறாக மாறி திருமூர்த்தி அணைக்கு, அமணலிங்கேஸ்வரர் கோவில் வழியாகச் செல்கிறது. இந்த ஆற்றில், ஆடிப்பட்டத்துக்கு பயன்படுத்தப்படும் விதைகளை வைத்து, ஆடிப்பெருக்கன்று சிறப்பு பூஜை நடத்துவர். இது போல், புதுமணத் தம்பதியினரும், தாலிக்கயிற்றை இந்த ஆற்றங்கரையில் மாற்றி, பூஜைகள் நடத்துவது வழக்கம். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை பெய்யாததால், மலையிலுள்ள பஞ்சலிங்க அருவி மற்றும் திருமூர்த்தி அணைக்கு வரும் பாலாறு உட்பட ஆறுகள் முற்றிலுமாக வறண்டுள்ளன. இதனால், விவசாயிகள் மற்றும் பக்தர்கள், ஆடிப் பெருக்கையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடத்துவது கேள்விக்குறியாகியுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (87)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poornima - Singapore,சிங்கப்பூர்
03-ஆக-201200:12:56 IST Report Abuse
Poornima மணலை திருடி கொள்ளை லாபத்துக்கு விக்கலாம். ஏரியை பிளாட் போட்டு அடுக்கு மாடி கட்டலாம். மரத்தையெல்லாம் வெட்டலாம், விவசாயம் நிலமெல்லாம் அழிச்சு பெரிய காலேஜ் கட்டலாம். எல்லாம் மனுஷனால முடியும். ஒரு கைப்புடி மணலைத் தயாரிக்க முடியுமா.. ஒரு ஆற்றை உருவாக்க முடியுமா? நினைச்சவுடனே மழை பெய்ய வைக்க முடியுமா? தவிச்ச வாய்க்கு ஒரு சொட்டு தண்ணீர் இல்லேன்னா நாளைக்கு எல்லாரும் என்ன பண்ணுவோம்னு யோசிச்சு பார்க்கணும். மணல் கொள்ளையை மக்கள் துணிந்து எதிர்க்கணும். காடுகளை அழிப்பதை தடுக்கணும். நம் வருங்கால சந்ததியின் நல்வாழ்வு நம்ம கையில தான் இருக்கு. இந்த அரசியல்வாதிகளை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை. இலவசம், டிவி, ஆடு, கணினி, டாஸ்மாக் யோசிக்கத்தான் அரசுக்கு நேரம் இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Amalraj Penigilapati - Castries,செயின்ட் லூசியா
02-ஆக-201219:29:26 IST Report Abuse
Amalraj Penigilapati உள்ளூர் எம்.எல்.ஏ யாருப்பா?
Rate this:
Share this comment
Cancel
vclingam - tirunelveli,இந்தியா
02-ஆக-201218:45:27 IST Report Abuse
vclingam இங்க நடக்குற ஊழல் அநியாயம் அக்கிரமம் எல்லாத்தையும் பார்த்து காவிரி தாய் மட்டும் சும்மா இருப்பாளா வேற இடம் பார்த்து போயிருப்பா
Rate this:
Share this comment
Cancel
k.rajendran - LA,யூ.எஸ்.ஏ
02-ஆக-201218:02:02 IST Report Abuse
k.rajendran அத்தனை கடிதங்களும் அருமை .சென்னை விஸ்வநாதன் .M.அவர்கள் கடிதம் தமிழர்கள் கவனம் கொள்ள வேண்டிய கருத்துடையது..
Rate this:
Share this comment
Cancel
Govindarajur Rajarethinam - Tiruchirappalli,இந்தியா
02-ஆக-201216:55:40 IST Report Abuse
Govindarajur Rajarethinam காவிரி தாய் இந்த மன சாட்சியற்ற மணல் கொள்ளையர்களின் அக்கிரமத்தால் உருக்குலைந்து போய்விட்டாள். அழகான காவிரியை கண்டு ஆண்டாண்டு காலம் ரசித்த கண்கள் இன்று காவிரியின் நிலையினை கண்டு உள்ளத்தில் உதிரம் கொட்டுகிறது. இவர்களின் செயல்களுக்கு தண்டனை பெரும் பாக்கியம் படைத்தவர்கள் விவசாயிகள்தான். இந்த மணல் மூலம் கிடைக்கும் செல்வத்தின் மூலம் எதனை இந்த மனிதர்கள் சாதிக்க போகிறார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Goram - Chennai,இந்தியா
02-ஆக-201216:37:26 IST Report Abuse
Goram மழை பொய்த்தது என்று கூறுவதைவிட ... மக்களின் மனம் பொய்த்தது என்று சொல்வது சால சிறந்தது... குறிப்பாக நம் நாட்டு அரசியல்வியாதிகளின் மனம் பொய்த்து விட்டது ... மணல் கொள்ளை, ஏரி, குளம் கொள்ளை, வனம்கள்/காடுகள் அழித்தல், மரம்களை வெட்டுதல் போன்ற இயற்கைக்கு எதிரான செயல்களே இதற்கு காரணங்கள் ஆகும்.. மக்களே தயவு செய்து இயற்கைக்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து குரல் கொடுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Anand Babu - Tiruchirapalli (Trichy),இந்தியா
02-ஆக-201215:51:49 IST Report Abuse
Anand Babu பட்ட மரத்தை வெட்டினாலும் பதிலுக்கு பக்கத்தில் 10 மரம் நடு என பழமொழி உண்டு .ஆனால் இன்று பச்சை மரத்தை வெட்டினாலும் ஒரு செடி கூட நடுவதில்லை. எப்படி வரும் மழை ? எப்படி வரும் ஆற்றில் தண்ணீர் ? ஏன் வராது நமது கண்களில் கண்ணீர்
Rate this:
Share this comment
Cancel
Balasubramanian - Southampton,யுனைடெட் கிங்டம்
02-ஆக-201215:23:19 IST Report Abuse
Balasubramanian இன்னும் ஐந்து ஆண்டுகளில் ஆறுகளே இல்லாமல் போகுமளவுக்கு தவறுகளை செய்துவிட்டு, இன்று ஆற்றில் தண்ணீர் இல்லை என்று கவலைபடுகிறோம் நாம் என்னா வெகுளித்தனம்
Rate this:
Share this comment
Cancel
mathankumar - chennai,இந்தியா
02-ஆக-201214:38:14 IST Report Abuse
mathankumar நம்ம கரண்ட் தரோம் இன்னும் பல பொருட்கள் வாரி வழங்குகிறோம் நம் அண்டை மாநிலத்திற்கு ஆன அவனுங்க தண்ணி நமக்கு தர மறுக்கிறார்கள் இதை நம்ம முதல்வர் ஒரு முடிவிற்கு கொண்டு வரனும்.....
Rate this:
Share this comment
Cancel
kuccoo - Salem,இந்தியா
02-ஆக-201214:37:58 IST Report Abuse
kuccoo "ஆடி பதிநெட்டாம்பெருக்கன்று சோழ நாட்டு நதிகளெல்லாம் வெள்ளம் இருகரையும் தொட்டுக்கொண்டு ஓடுவது வழக்கம். அந்த நதிகளில் இருந்து தண்ணீர் பெறும் ஏரிகளும் பூரணமாக நிரம்பிக் கரையின் உச்சியை தொட்டுக்கொண்டு அலைமோதிக் கொண்டிருப்பது வழக்கம். வடகாவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று பொது மக்களாலும் வழங்கப்பட்ட நதியிலிருந்து வடவாற்றின் வழியாக தண்ணீர் வந்து வீர நாராயண ஏரியில் பாய்ந்து அதை ஒரு பொங்கும் கடலாக ஆக்கியிருந்தது. அந்த ஏரியின் எழுபத்து நான்கு கணவாய்களின் வழியாகவும் தண்ணீர் குமுகுமுவென்று பாய்ந்து சுற்றுபக்கத்தில் நெடுந்தூரத்துக்கு நீர்வளத்தை அழித்துக் கொண்டிருந்தது." இப்படி படித்து திருப்தி அடைந்தால்தான் உண்டு. பொன்னியின் செல்வன் தந்த கல்கிக்கு நன்றி.
Rate this:
Share this comment
Murugesan - Bangalore,இந்தியா
02-ஆக-201217:38:59 IST Report Abuse
Murugesanஅப்பொழுது கர்நாடக வில் டேம் (கண்ணம்பாடி) இல்லை .அதனால் வெள்ளம் கரை புரண்டோடியது அனால் இப்போது .....அங்கு விவசாய நிலங்கள் அதிகமாகி அவர்களுக்கே தண்ணி இல்லை. ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.