கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒப்புதல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவு, ஐகோர்ட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான வழக்கை, நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்து வருகிறது. வழக்கறிஞர்களின் வாதம் நடந்து வருகிறது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் வழக்கறிஞர் ரீட்டா சந்திரசேகர் ஆஜராகி, கடந்த மாதம் 23ம் தேதி, வாரியம் பிறப்பித்த அறிவிப்பாணையை தாக்கல் செய்தார்.

நிபந்தனை: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும், தண்ணீர் பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு சட்டம், காற்று பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும், அந்த அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது. உரிய ஆய்வு நடத்தி, அதில் திருப்தியடைந்த பின், அணுமின் நிலையம் திட்டம் செயல்படுவதற்கு, இந்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக, வழக்கறிஞர் ரீட்டா சந்திரசேகர் தெரிவித்தார். மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், "1989ம் ஆண்டே இந்த அணுமின் நிலையம் திட்டம் துவங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. திட்டம் தொடர்பான பல்வேறு விஷயங்களை நிபுணர்கள் குழு ஆய்வு செய்துள்ளது. போதிய விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது' என வாதாடினார். அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளீடர் இன்பதுரை, "பேரிடர் மேலாண்மை பயிற்சி, நக்கநேரி கிராமத்தில் நடத்தப்பட்டது. அதை அணுசக்தி ஒழுங்கு முறை வாரியம் கண்காணித்தது. அதில் திருப்தியும் அடைந்தது' என்றார்.

நீடிப்பு: மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதில் மனுவில், "பயன்படுத்தப்பட்ட எரிபொருளை, அணுக்கழிவு எனக் கூற முடியாது. அது ஒரு ஆதாரம். புளுட்டோனியம், யுரேனியத்தைப் பிரிப்பதற்கு அது பயன்படும். 1988ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, ரஷ்யாவுக்கு அணுக்கழிவை திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால், 1998ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தில், அணுக்கழிவை இந்தியாவே வைத்திருக்கலாம். இதனால், இந்தியாவுக்கு பலன் கிடைக்கும். அணுக்கழிவைப் பாதுகாப்பாக கொண்டு செல்ல, சர்வதேச விதிமுறைகள் பின்பற்றப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது. அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் சார்பில் வழக்கறிஞர் ஆர்.சுரேஷ்குமார், மனுதாரர் சுந்தரராஜன் சார்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதாடினர். வழக்கறிஞர்களின் வாதம் இன்றும் தொடர்கிறது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velmurugan Subramanian - kudankulam,யூ.எஸ்.ஏ
02-ஆக-201209:46:20 IST Report Abuse
Velmurugan Subramanian வட இந்தியாவில் ஏற்பட்ட மின் தடை, உலகிலேயே மிகப் பெரியதாம் decentralized power generation in small units definitely have a lot of advantage in countries like India that is very poor on the infrastructure management. 1. We can reduce the transmission loss. 2. Theft can be easily tracked and traced not only the power theft but also corruption. 3. We can definitely avoid single point of failure like this one. 4. It will not become nobody&39s job when something fails too big. One cant point fingers on others in a cycle. 5.It demands accountability and responsibility from authorities. They cant be negligent. 6.Individual politicians(MLA, MPs) can be weighed at a granular level. Now, we weigh at a macro (state or CM) level today. And it takes a long cycle to see how a CM has screwed up. We need much more shorter cycle about how a district or a taluk has developed. 7. We would not need monsters like nuclear plants.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்