Advertisement
இலங்கை தமிழர்களின் காயங்களுக்கு மருந்து தான் டெசோ மாநாடு: கருணாநிதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2012,23:21 IST
மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 02,2012,23:58 IST

சென்னை: "இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும், மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


அவரது அறிக்கை: வரும், 12ம் தேதி, இலங்கைத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு ஆய்வரங்கம், எனது தலைமையில் தி.நகரில் நடைபெறவுள்ளது. ஆய்வரங்கத்தில் கருத்துகள் பரிமாற்றம் நடைபெறும். மாலையில் நடைபெறவுள்ள பொது மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் நம்முடைய கோரிக்கைகள், வேண்டுகோள் என்னென்ன என்பதைப் பற்றியெல்லாம், அந்த ஆய்வரங்கில் கலந்து பேசி தீர்மானிக்கப்படும். மாலை 4 மணிக்கு, ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., திடலில் பொது மாநாடு நடைபெறவுள்ளது. இலங்கையில் தொடர்ந்து வாழ வழியில்லாமல், உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் குடியேறி, புலம் பெயர்ந்த தமிழர்கள் என்ற பெயராலும், அகதிகள் என்ற பெயராலும் அல்லாடிக் கொண்டிருக்கும் தமிழ் இனத்தவர் மீண்டும் இலங்கை திரும்ப வேண்டும். அங்கு அமைதியானதும், உரிமையுடன் கூடிய வாழ்க்கை முறையை மேற்கொள்ளுவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச நிறுவனங்களின் மூலம் என்னென்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியும், இந்த மாநாட்டின் ஆய்வரங்களில் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். நம்மால் முடிந்த வரை, நம்முடைய குரல் இலங்கைத் தமிழர்களுக்காக ஒலிக்கும், ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும். இலங்கையில் சிங்களவர்களின் ஆதிக்க வெறியினால் ஏற்பட்ட கலவரங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கும், அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட துன்ப துயரங்களுக்கும், மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (168)
Srithar Thamizhan - Mumbai (Bombay),இந்தியா
06-ஆக-201210:53:47 IST Report Abuse
Srithar Thamizhan உழ வேண்டிய காலத்தில் ஊருக்கு போய்விட்டு, அறுவடை நாளில் அருவளோடு வந்தவன் கதை...(சுயநல)டெசோ மாநாடு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Karthik Elango - Jersey City,யூ.எஸ்.ஏ
03-ஆக-201202:10:52 IST Report Abuse
Karthik Elango புதிய மருந்து கண்டுபிடித்த டாக்டர் கலைஞர் வாழ்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கனல் கங்கு - Dallas,யூ.எஸ்.ஏ
03-ஆக-201201:36:33 IST Report Abuse
கனல் கங்கு இறந்து போனவர்களுக்கு மருந்து போடும் புண்ணியவான் கருணாநிதி அவர்களே, நீங்க அன்னிக்கு ஊத்தின பாலே போதும். மருந்து ஒன்றும் வேண்டாம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Senthil Kalidas - Tindivanam,இந்தியா
03-ஆக-201201:36:23 IST Report Abuse
Senthil Kalidas உரிமை இழந்தோம் .. உடமையும் இழந்தோம். உணர்வை இழக்கலாமா... உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா... தோல்வி நிலையென நினைத்தால்.. மனிதன் வாழ்வை நினைக்கலாமா... வாழ்வை சுமையென நினைத்து.. தாயின் கனவை மிதிக்கலாமா... விடியலுக்கில்லை தூரம் ... விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்.. உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் .. ஈழம் மலரும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Kartheesan - JEDDAH,சவுதி அரேபியா
02-ஆக-201218:47:53 IST Report Abuse
Kartheesan மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷயங்களான ஈழ தமிழர்கள், முல்லைபெரியார், காவேரி, கிருஷ்ணா நதி நீர் பங்கீடு விஷயங்களில் உங்களுக்குள் ஏன் ஒற்றுமை இல்லை. இது கட்சி சார்ந்த விஷயம் அல்ல, அனைத்து மக்கள் சார்ந்த விஷயம். முதலில் மக்கள் ஒன்றே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு நமது தமிழ் நாட்டில் இருக்கும் ஈழ தமிழர்களை நல்லபடியாக கவனிக்க தெரியாத இவர்கள், இவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்று தரமுடியாத இவர்கள் ஈழத்தில் இருக்கும் நமது உறவுகளுக்கு என்ன விதமான உதவிகளை செய்து விட முடியும். மக்கள் மட்டுமே நிலைமையை நன்றாக புரிந்து அமைதியாக இருக்க வேண்டும். அனைத்து விஷயங்களுக்கும் காலம் நேரம் பார்த்து செய்து பழகிய தமிழர்கள் இன்று அமைதியிழந்து அழிகிறார்கள். இது பொதுவான விஷயம், என்று அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஒற்றுமையாக ஒரே ஒருநாள் அமைதியாக கூட்டம் நடத்தட்டும், அந்த கூட்டத்தில் அவர்கள் போராளிகளை போல போடும் கூச்சல்கள் வேண்டாம். அமைதியாக காலை முதல் மாலை இருந்தால் போதும். உலகம் நம்மை நோக்கி திரும்பும். அடுத்து நடக்க போவது என்ன என்று உற்று பார்க்கும். செய்திக்கு தரும் முக்கியத்துவத்தை தவிர உங்களது கருத்துக்களும் பல லட்சம் மக்களை சென்றடைகிறது தினமலர் மூலமாக. நாம் ஒன்றுபட்டு ஒரு குடையின் கீழ் வரவேண்டும், அதற்கு தமிழன் என்று இன உணர்வு வேணும். ஒற்றுமையாக இருங்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Naga - Chennai,இந்தியா
02-ஆக-201218:02:42 IST Report Abuse
Naga எல்லா தலைவர்களுக்கும் சமாதி கட்டிய பெருமை ஒரு தமிழின தலைவரைசேரும். இப்போது ஒரு இனத்துக்கு சமாதி கட்டிவிட்டு , காயத்துக்கு மருந்து போடுகிறேன் என்று கூப்பாடு போடுகிறார்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
rajesh - tirupur,இந்தியா
02-ஆக-201217:49:11 IST Report Abuse
rajesh ஆளே இல்ல இதுல பெல்லு( bell ) வேற ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Yogananth Rajendran - RAK,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-201215:44:39 IST Report Abuse
Yogananth Rajendran யாருப்பா அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது? பாருங்க மருந்து போடுறேன்னு கெளம்பிட்டார். எல்லாம் பத்துக்கோங்க நானும டாக்டர்தான்... நானும டாக்டர்தான் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vengadesan - Digdaga, Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஆக-201218:47:42 IST Report Abuse
VengadesanI accept your comment...MK is a cheater.........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
SUKUDE SUKUDE - kumari,இந்தியா
02-ஆக-201215:40:32 IST Report Abuse
SUKUDE SUKUDE அகில உலக தமிழ் மருத்துவர் Dr கருணாநிதி அவர்களே எத திண்ணா பித்தம் தெளியும்னு அலைகிறீர்களே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
singaravelu - thiruvarur ,இந்தியா
02-ஆக-201215:30:40 IST Report Abuse
singaravelu காமராஜரால் கல்வி பெற்றவர்கள், கருணாநிதியால் வாழ்வு பெற்றவர்கள்... இவர்கள் இவர்கள் பெற்றதை இழக்க தயாராகி விட்டவர்கள் காப்பாற்றுவதென்பது கடினம்தான்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.