கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட, முன்னாள் எஸ்.பி., அபிஷேக் தீட்சித் பணியில் இருந்த போது, மாதம் தோறும் கிரைம் மீட்டிங் என்ற பெயரில், போலீசாரிடம் இருந்து மாமூல் பணம், எஸ்.பி.,யின் உறவினர்கள் வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட, எஸ்.பி.,யாக அபிஷேக் தீட்சித் பணிபுரிந்த போது, அதிக அளவில் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதனால், சென்னை கமாண்டோ படை எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
சோதனை: எஸ்.பி., அபிஷேக் தீட்சித் மீது வந்த புகார் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார், கடந்த 30ம் தேதி கிருஷ்ணகிரியில் எஸ்.பி., தங்கியிருந்த பங்களா மற்றும் அவரது சொந்த ஊரான கான்பூரில் உள்ள வீடு, எஸ்.பி.,யிடம் நெருக்கமாக இருந்த எஸ்.ஐ., ராமச்சந்திரனின், பர்கூர் வீடு ஆகியற்றில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இதில், கான்பூர் வீட்டில் ஏராளமான தங்க நகைகள், தங்க காசுகள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கைப்பபற்றப்பட்டன. எஸ்.ஐ., ராமச்சந்திரன் வீட்டில், 2 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி ஆகியவை கைப்பற்றறப்பட்டன. விசாரணைக்காக, 30ம் தேதி கிருஷ்ணகிரி வந்த எஸ்.பி., அபிஷேக் தீட்சித், அவரது மனைவி பாவனா மற்றும் எஸ்.ஐ., ராமச்சந்திரன் ஆகியோரிடம் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மூன்றாவது நாளாக நேற்று எஸ்.பி., தங்கியிருந்த பங்களாவில் தீவிர விசாரணை நடந்தது. கிருஷ்ணகிரி எஸ்.பி., அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்கும் கிரைம் மீட்டிங் நடத்தப்படும். இவ்வாறு அபிஷேக் தீட்சித், கிருஷ்ணகிரியில் பணியாற்றிய போது ஒவ்வொரு மாதமும் கிரைம் மீட்டிங் நடந்த அடுத்த நாள், கான்பூரில் உள்ள, எஸ்.பி.,யின் உறவினர்கள் வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகை கிருஷ்ணகிரியில் இருந்து போடப்பட்டுள்ளது. இதனால், பெயர் அளவுக்கு கிரைம் மீட்டிங் வைத்து, போலீசாரிடமே எஸ்.பி., பணம் வசூலித்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாதந்தோறும் யார் யார் எவ்வளவு பணம் எஸ்.பி.,க்கு கொடுத்தார்கள் என்ற விவரத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சேகரித்து வருகின்றனர். கான்பூர் வீட்டில் கைப்பற்றப்பட்ட கிருஷ்ணகிரி கடைகளில் வாங்கிய தங்க காசு மற்றும் நகைககளை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கிருஷ்ணகிரிக்கு எடுத்து வந்து, எஸ்.பி.,யிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
கைது எப்போது? அபிஷேக் தீட்சித் லஞ்சம் வாங்கியது உறுதியான நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியது: இது வரை நடந்த விசாரணையில், அபிஷேக் தீட்சித் லஞ்சம் வாங்கியது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஐ.பி.எஸ்., அதிகாரியை நீதிமன்றத்தில் நிற்க வைக்கும் போது, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானதாகவும், உறுதியானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்து வகையிலும் ஆதாரங்களை திரட்டி வருகிறோம். ஐ.பி.எஸ்., அதிகாரியை கைது செய்ய, மேலிடத்தில் அனுமதி வாங்க வேண்டும். அதன் பிறகு தான் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். அபிஷேக் தீட்சித், இந்தியாவை விட்டு எங்கும் தப்ப முடியாது. காரணம் அவர் தற்போது பணியில் உள்ளார். அதனால், தற்போதைக்கு அவர் மீது கைது நடவடிக்கை இருக்காது. எஸ்.பி., மகன் பிறந்த நாள் வீடியோவை வைத்து அந்த நாளில் மட்டும், அவருக்கு யார் யார் அன்பளிப்பு வழங்கியுள்ளனர் என்பதையும், அன்பளிப்பு என்ற பெயரில் அவர் லஞ்சம் பெற்றதையும் நிரூபிக்க போதிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம். இவ்வாறு கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எதிர் காலத்தில் என் மகன் நன்றாக வாழ வேண்டுமென்றால் கட்டாயம் போலீசில் சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் இப்போது தலை தூக்குகிறது &39ஏனென்றால் இந்த அதிகாரி வழக்கில் சிக்கினாலும் நீண்ட காலம் வழக்கு நடக்கும்இவரது சஸ்பென்சன் ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கி ஏதாவது ஒரு இடத்தில் பதவியில் தொடருவார் கேஸ் சிறிது காலத்தில் நீர்த்து விடும்சரியான ஆதாரங்கள் இல்லைஎன்று விடுவிக்க பட்டு விடிவார் அதை செய்ய இவரிடம் ஏராளமான செல்வம் இருக்கிறதே ஏழைகளுக்கு தான் இந்த சட்டங்கள் கடுமையாக இருக்கும்அரசியல் வாதிக்கோ ,லஞ்ச அதிகாரிகளுக்கோ அல்ல
லஞ்ச ஒழிப்பு துறையின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கவை. தமிழ்நாட்டு காவல் உயர் அதிகாரிகள் நேர்மையானவர்கள் என்றும் கீழ் உள்ள அதிகாரிகள் தவறு செய்தால் விளைவு என்ன என்பதையும் இந்த செய்தி கூறுகிறது. இதுபோல் ஒவ்வரு மாவட்டத்திலும் பணிபுரியும் காவல் உயர் அதிகாரிகள் ( இன்ஸ்பெக்டர் முதல்) அவர்களை தேடி வரும் உறவினர்கள்,சொந்த ஊர், மனைவி, மகள், மாப்பிள்ளை போன்றோரின் சொத்துக்களையும் கண்காணித்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும். இடமாறுதல் பெரும் காவல் உயர் அதிகாரி பணியில் சேரும்போது அந்தந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வசம் சொத்து கணக்கை சமிர்பிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்.
When lower level employee is enquired ,they are susped immediately.To make enquiry fare and unbiased,the accused shuould be susped and conducted by an official senior than accused.from recent happenings ,it can be inferred that corruption at higher lavel are more and high in amount.This is not good for a developing country like India. It should be curtailed by severe punishment including seizing their assets.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.