அலகாபாத்: "உ.பி., மாநிலத்தில் மருத்துவமனையை நடத்துவதும், நிர்வகிப்பதும் மிகவும் கடினம்' என, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் தெரிவித்துள்ளார்.
அலகாபாத்தில் உள்ள கமலா நேரு நினைவு மருத்துவமனை, கடந்த 1941ல் துவங்கப்பட்டது. மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் போன்றவற்றால் இம்மருத்துவமனை மிகவும் பிரசித்திப் பெற்றது. குழந்தைகளுக்கான புற்று நோய்க்கும் இம்மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் பெயரில் நேற்று இம்மருத்துவமனையில் துவங்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு புற்றுநோய் மருத்துவப் பிரிவை, காங்., பொதுச் செயலர் ராகுல் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், உ.பி.,யில் மருத்துவமனையை நடத்துவதும், நிர்வகிப்பதும் அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆனால், பல்வேறு இடர்ப்பாடுகளைக் கடந்து, இந்த கமலா நேரு மருத்துவமனை தற்போது இந்த நிலைக்கு உயர்ந்துள்ளது குறித்து நான் பெருமைப்படுகிறேன். புற்றுநோயைப் பொறுத்தவரையில் மிகவும் மோசமான நோய். ஏழைகளுக்கு இந்த நோய் வந்தால், அது தான் அவர்களுக்கு மரண தண்டனை. ஆனால், புற்றுநோயை முற்றிலுமாகக் குணப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில், ஏழை எளிய மக்களுக்கு கட்டணமின்றி துவங்கப்பட்ட இந்த அறக்கட்டளை மருத்துவமனையின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது. இவ்வாறு ராகுல் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
"உ.பி.,யில் மருத்துவமனை நடத்துவது கடினம், தமிழ்நாட்டில் நதிநீர்ப்பிரச்சனை (காவேரி ++) தீர்ப்பது கடினம். நமது இந்தியாவில் ஊழலை ஒழிப்பது கடினம் ??? அப்போ ராகுல் ஜி பிரதமராவது சுலபமோ?????.......
An optimist Always see the possibilities in the difficulties butt he pessimists will Always see the difficulties in the possibilities
\\\\ இந்த கமலா நேரு மருத்துவமனை தற்போது இந்த நிலைக்கு உயர்ந்துள்ளது குறித்து நான் பெருமைப்படுகிறேன். //// கவனிக்கவும், சோனியாவின் பெயரோ, ராஜீவின் பெயரோ கூட வைக்கப் படவில்லை காரணம் பழைய (தியாகங்கள் என்று கருதப்பட்ட) விஷயங்களைப் பேசியே ஒட்டு வாங்கும் காங்கிரசின் இனமான குணம் நாம் நேரு, கமலா ஆகிய பெயர்களை மறப்பதை இவர்கள் விரும்பவில்லை மறக்க வேண்டியது நேதாஜி, பகத் சிங் போன்றோரே

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.