திருச்சி: திருச்சி காவிரி ஆற்றுக்குள் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் தண்ணீரில், "காக்கா குளியல்' குளித்து, பறிக்கப்பட்ட பள்ளத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரில் சடங்குகளை செய்து மக்கள் ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகமின்றி கொண்டாடினர்.
திருச்சியை பொறுத்தவரை பரந்து விரிந்து, கடல் போல கரை புரண்டோடும் காவிரி, மணல்வெளியாக கிடப்பதால், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில், திருச்சி மாநகராட்சி சார்பில் காவிரி ஆற்றுக்குள் நீண்ட பள்ளம் தோண்டி, போர்வெல் மூலம் அதில் தண்ணீர் விடப்பட்டது. படித்துறையில் அமைக்கப்பட்டிருந்த, "ஷவர்' மற்றும் பள்ளத்தில் தண்ணீர் விடும் போர்வெல் குழாயில் பொதுமக்கள், "காக்கா குளியல்' குளித்தனர். படித்துறை அருகே குட்டை போல தேங்கியுள்ள தண்ணீரில் புதுமண தம்பதிகள் மாலைகளை விட்டு காவிரித்தாயை வணங்கினர். தோண்டப்பட்ட பள்ளத்தின் கரையில் பெண்கள், காதோலை, கருகமணி, மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப்பொருட்கள், பழங்கள் படைத்தனர். சுமங்கலி பெண்கள், படைக்கப்பட்ட மஞ்சள் கயிற்றை ஆண், பெண் வேறுபாடுகள் இன்றி கட்டிவிட்டனர். காவிரியில் தண்ணீர் இல்லாததால் வழக்கத்துக்கு மாறாக ஆடிப்பெருக்கு தினத்தில், காவிரி ஆற்றுக்கு வரும் மக்கள் கூட்டம் வெகு குறைவாக இருந்தது. வழக்கமான உற்சாகமின்றி விழா கொண்டாடப்பட்டது. மாலை நேரத்தில், காவிரி பாலத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
தஞ்சை சோகம்: "தமிழகத்தின் நெற்களஞ்சியம்' எனப்படும் தஞ்சை மாவட்டத்தில், வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி, காவிரி என, ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் திருவையாற்றில் ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால், திருச்சியை போலவே, திருவையாற்றிலும் போர்வெல் மூலம் கொண்டாடப்பட்டது. தஞ்சை நகரத்தில், வீடுகளில் உள்ள கிணறுகள், அடி பைப்புகள், குழாய்களில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது.
ஏமாற்றம்: சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் ஆடிப்பெருக்கு நாளில் மேட்டூர் காவிரியாற்றில் நீராடுவர். இதனால், ஆடிபெருக்கு நாளில் அணை முனியப்பன் கோவில் அருகிலுள்ள, எட்டு கண் மதகு கால்வாயில் கூடுதல் நீர் திறக்கப்படும். நேற்று, பல ஆயிரம் பக்தர்கள் மேட்டூரில் குவிந்த நிலையில், அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால், எட்டு கண் மதகு கால்வாயில் கூடுதல் நீர்திறக்கவில்லை. இதனால், மேட்டூரில் ஆர்ப்பரித்து செல்லும் காவிரி தவழ்ந்து சென்றது பக்தர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. வறட்சி, விலைவாசி உயர்வு, பஸ் கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஆண்டை விட நேற்று மேட்டூருக்கு குறைவான பக்தர்கள் வருகை தந்தனர்.
கோவிலில் பூஜை: திருமூர்த்திமலை பாலாற்றில் தண்ணீர் இல்லாததால், ஆற்றங்கரையோர சிறப்பு வழிபாடுகள் கைவிட்டு, அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.போதிய நீர் இல்லாததால் திருமூர்த்தி அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், விவசாயிகளுக்கு ஆடிப்பெருக்கு, உற்சாகம் தரவில்லை. மேலும், திருமூர்த்திமலை பாலாறு, தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்ததால், ஆண்டுதோறும் ஆற்றங்கரையில் நடக்கும் சிறப்பு பூஜைகள், நேற்று நடக்கவில்லை. பருவமழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த சிறப்பு பூஜையில் விவசாயிகள், பக்தர்கள் குவிந்தனர். பஞ்சலிங்க அருவி மற்றும் பாலாறு வற்றியதால், பக்தர்களுக்கு சோதனையாக, திருமூர்த்திமலையில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. லாரிகள் மூலம், 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கலைஞர் ஆட்சியின் போது இது போல நடக்க அனுமதித்ததுண்டா?அவர் நாத்திகராக இருந்தாலும் மக்கள் பண்டிகைகள் கொண்டாட கர்நாடகாவிடம் பேசி கொஞ்சமாவது அன்றைய தினத்திற்கு ஏற்பாடு செய்திருப்பார்....அங்கு நடப்பது அம்மாவின் "இயற்கை கூட்டணி" பிஜேபியின் ஆட்சி தானே?ஒரு நடவடிக்கையும் இல்லை...கொடநாட்டில் ஒய்வு மட்டுமே நடக்கிறது..மக்களுக்கு பண்டிகை இல்லை..காலரா வுண்டு...மின்வெட்டு மீண்டும் உண்டு...
குளிப்பதற்கு ஓர் குளம் இருந்தால் குளித்துவிடலாம் ஆனால் இருப்பதோ Corporation பைப், என் செய்வது. மூச்சிக்கு முன்னூறு தரம் மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லும் அரசியல் கட்சிகள். அடிகடி போராட்டம், மாநாடு என்று கட்சியின் தொண்டர்களை ஒன்று சேர்க்கும் கட்சி தலைமை என்றாவது கட்சி தொண்டர்களை ஒன்று திரட்டி குளம், வாய்க்கால், ஆறு போன்றவைகளை தூர் எடுத்தது உண்டா???. தெருக்களை சுத்தம் செய்ததுண்டா?? . பொது நலன் செய்தது உண்டா???. ஒரு கட்சி செய்தாலே அடுத்த கட்சிகள் போட்டிக்கு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தப்படும். மக்களுக்கு நல்லதுதானே.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.