சென்னை: "ஜூலை மாதத்தில் இருந்து, மின் தடை இருக்காது' என, தமிழக அரசு அறிவித்த போதும், நகர்ப் பகுதிகளில் ஐந்து மணி நேரமும், கிராமப் பகுதிகளில் எட்டு மணி நேரமும் மின் தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. மின் தடையில் இருந்து தப்பித்தோம் என, நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள், மீண்டும் விரக்திக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த, தி.மு.க., ஆட்சியில், தொடர் மின் தடை இருந்து வந்தது. அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியபோதும், மின் தடைக்கு தீர்வு காணப்படவில்லை. தமிழகத்தில், ஆட்சி மாற்றத்துக்கு மின் தடையும் ஒரு காரணமாக அமைந்தது. புதியதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க., அரசு, மின் தடையைப் போக்கும் என, பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், 10 மணி நேரம் என்றளவில் மின் தடை நீடித்ததால், தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.
ஏமாற்றம்: எப்போதும் இல்லாத அளவில், எட்டு மாதமாக பொதுமக்களை வாட்டியெடுத்தது. காற்றாலை மின்சாரம் குறைந்ததே, மின் தடைக்கு காரணம் எனக் கூறப்பட்டு வந்தது. அக்னி நட்சத்திரக் காலத்திலும், மின் தடையை சகித்துக் கொண்டு நாட்களை மக்கள் கடத்தினர். சிறு, குறு தொழில்கள் பாதிப்படைந்ததால், தொழிலாளர்கள் பலர் வேலையிழந்து தவிப்புக்குள்ளாகினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, "ஜூலை மாதம் முதல் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்' என, அறிவித்தார். நம்பிக்கையுடன் இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேட்டூர், எண்ணூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்தால், மின் வினியோகம் மேலும் மோசமடைந்தது. மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு உரிய மின்சாரம் வழங்கப்படுவதில்லை என, முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதி வந்தார். சில நாட்களுக்கு முன், காற்றாலை மூலம், அதிகபட்சமாக, 3,000 மெகாவாட் அளவில் மின் உற்பத்தி கிடைத்தது. இதனால், எந்தவித தடையுமின்றி, வீடுகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் மின் வினியோகம் வழங்கப்பட்டது. நிம்மதி பெருமூச்சு விட்ட மக்களுக்கு, மீண்டும் இடியாக வந்துள்ளது, ஐந்து மணி நேர மின் தடை. தற்போது, பகல், இரவு வேளைகளில், அனைத்து மாவட்டத்திலும், ஒரு மணி நேரம் மின் தடை அமல்படுத்தபட்டு வருகிறது. காலை, 6 முதல் 7 வரையிலும், மதியம், 12 முதல் 2 வரையிலும், இரவு, 7 முதல் 8 வரையிலும், இரவு, 10 முதல் 11 வரையிலும், அவ்வப்போது நள்ளிரவிலும் மின் தடை ஏற்படுத்தப்படுகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இங்கு கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் கலைஞரையும் திமுகவையும் கண்மூடித்தனமாக வசை பாடும் கூட்டம், குறைந்த பட்சம் செய்தியையாவது படித்தார்களா என்பது கேள்விக்குறி. செய்தி சொல்வது என்ன? "இன்று வரை தனியார் பள்ளிகளில் மட்டுமே முதன்மை பெற்று வந்த ஆங்கில வழி பயிற்று மொழியை, தற்போது தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் கொண்டு வர முயன்று வருகிறது." இதைக்கூட புரியாமல் ஒரு திமுக வசவாளர் கேட்கிறார். திமுக ஆட்சியில் இந்த சவுண்டு விடுகிற ஆட்கள் எங்கே போனார்கள் என்று?
மின் துறை அதிகாரிகள் தங்கள் குளறுபடிகளை மறைக்க எல்லாவித நிகழ்வுகளையும் தமக்கு சாதகமாக்கி மின் தடையை அறிவிக்கிறார்கள். இதற்கு ஆட்சியாளர்கள் ஒத்து ஊதுகிறார்கள். ஏனெனில் அதிகாரிகளின் லஞ்சலாவன்யங்களால் மின் தடை நீக்கம் என்பது தமிழ் நாட்டில் என்றைக்கும் இருக்கப் போவதில்லை. சில பல மேல் தட்டு அதிகாரிகளை மின் துறை ஊழலுக்காக கைது செய்தாலன்றி வேறு எதுவும் நல்லது நடக்க வாய்ப்பில்லை. மின் துறை மந்திரிக்கும், முதல்வருக்கும் இது நல்லாவே தெரியும் ஆனாலும் ஏதோ ஒரு காரணம் தடுக்குது.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.