Getting angry is my style: Vijaykanth | கோபப்படுவது என் "ஸ்டைல்': தேனியில் விஜயகாந்த் பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோபப்படுவது என் "ஸ்டைல்': தேனியில் விஜயகாந்த் பேச்சு

Updated : ஆக 04, 2012 | Added : ஆக 03, 2012 | கருத்துகள் (55)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தேனி: ""கோபப்படுவது தான் என் ஸ்டைல்'' என்று தேனியில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார். தேனியில் தே.மு.தி.க., சார்பில், வறுமை ஒழிப்பு தின விழா நடந்தது. நாட்டுப்புற கிராமிய கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சி தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: ஆட்சியில் உள்ளவர்கள் மக்கள் வரிப்பணத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள். நாங்கள் தொண்டர்களின் சொந்த பணத்தில் உதவிகள் செய்கிறோம். ஏழை மக்கள் வறுமையில் வாடும் போது, கொடநாட்டில் முதல்வர் ஓய்வெடுக்கிறார். வெறும் அறிக்கையில் ஆட்சி நடத்துகிறார்கள். கேரள மருத்துவ கழிவுகளை, குமுளியிலும்,பொள்ளாச்சியிலும் கொட்டுகின்றனர். இதை கேட்க ஆள் கிடையாது. நான் ஆட்சிக்கு வந்தால் போலீசார் லஞ்சம் வாங்க முடியாது. படித்த போலீஸ் அதிகாரிகள், பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

முல்லை பெரியாறு அணை பிரச்னை தீர்க்கப்படாததால், 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக முதன்முதலில் போராடியவன் நான்.தண்ணீர் கொள்ளை, கனிம வளம் கொள்ளை, எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம். விலைவாசி உயர்ந்துள்ளது. ஐந்து லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளனர். இதில் ஒரு லட்சம் பேருக்காது வேலை கொடுக்க முடியுமா. விஜயகாந்த் கோபப்படுகிறான், என்று சொல்கிறார்கள். ""கோபப்படுவது தான் என் ஸ்டைல்''. லஞ்சம் வாங்குவது உங்கள் ஸ்டைல். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும். விஜயகாந்த் எதற்கும் பயப்பட மாட்டான். எதிர்த்து பேசினால் என்ன செய்வீர்கள். சிறை செல்லவும் தயார். வருகிற எம்.பி., தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும். நில அபகரிப்பு என்று கைது செய்கிறீர்கள். நாளை இந்த சட்டம் உங்களுக்கும் திரும்பும். இதற்காக 2016 வரை காத்திருக்க வேண்டாம். 2014 ல் நாம் தனியாக ஆட்சியை பிடிப்போம். 16 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு குறித்து கலெக்டர் சகாயத்தின் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன. இவ்வாறு பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sanjeevi joseph - Chennai,இந்தியா
04-ஆக-201200:03:52 IST Report Abuse
sanjeevi joseph When a person loses his temper and becomes angry he is considered weak and stupid and if he shows his frustration on others he is desperate. Vijayakanth is never the right option to get rid of the known crooks. .At the of the day we Tamilians continue to put real rogues on the seat of power.
Rate this:
Share this comment
Cancel
சாமி - மதுரை,இந்தியா
03-ஆக-201216:59:46 IST Report Abuse
சாமி இதற்காக 2016 வரை காத்திருக்க வேண்டாம். 2014 ல் நாம் தனியாக ஆட்சியை பிடிப்போம். பார்லிமென்ட் தேர்தலோடு சேர்த்து சட்டமன்ற தேர்தலும் வரப்போகுதா, அடுத்த தடவை தேனிக்கு வரும் போது நல்லா ஹோம் ஒர்க்பன்னிட்டு வாங்க..
Rate this:
Share this comment
Cancel
Ganesh - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஆக-201215:45:21 IST Report Abuse
Ganesh இந்த ஆட்சிக்கு விஜயகாந்தின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க விரும்பவில்லையா அல்லது பதில் கொடுக்க முடியவில்லையா
Rate this:
Share this comment
Cancel
MOHAMED GANI - MADURAI,இந்தியா
03-ஆக-201215:34:43 IST Report Abuse
MOHAMED GANI கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்று கூறும் விஜயகாந்த் பொது இடங்களில் வயது, பொறுப்பு இவற்றைப் பார்க்காமல் அசிங்கமாகத் திட்டுவதும், அடிப்பதும் அழகா? இரண்டு கழகங்களுக்கு மாற்றாக வருவீர்கள் என்று நீங்கள் கூறியதை நம்பிய தொண்டர்களை ஏமாற்றி, கடந்த தேர்தலில் அ.தி.மு.க விடம் அடகு வைத்தார். அ.தி.மு.க வுடன் தகராறு என்றதும் மீண்டும் தொண்டர்களையும், மக்களையும் ஏமாற்ற ஏதேதோ சொல்கிறார். இவர் சொல்வதை எல்லாம் நம்புவதற்கு தமிழக மக்கள் ஏமாளி அல்ல .
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
03-ஆக-201215:18:25 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ முல்லை பெரியாறு அணை பிரச்னை தீர்க்கப்படாததால், 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக முதன்முதலில் போராடியவன் நான். ////
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
03-ஆக-201215:02:27 IST Report Abuse
Rangarajan Pg கரெக்டு தான் "விஷயகாந்த்". நீங்கள் கொபபடுவதிலும் விஷயம் இருக்கிறது. நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மையே, தமிழகத்திற்கு நன்மையே. நீங்கள் அடுத்த முதல்வராக வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. மக்கள் இந்த இரு திராவிட கட்சிகள் மேல் வெறுப்பாக உள்ளனர். மாற்று இல்லாமல் ஒருவர் மாற்றி ஒருவர் ஆட்சி செய்து தமிழகத்தை குட்டி சுவர் ஆக்கி விட்டார்கள். நீங்கள் தான் தற்போது பிரகாசமான NATE CHOICE ஆக தெரிகிறீர். உங்களை விட்டால் அடுத்த இடத்தில யாருமில்லை. அதனால் இந்த சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள். தமிழக முதல்வராக வாருங்கள். பொது வாழ்வில் கோபம் இருக்க கூடாது. நீங்கள் இந்த காரணங்களுக்காக கோபப்பட்டு பிறகு நீங்கள் ஆட்சி அமைக்க நேர்ந்தால் இதே போல நடந்தால் நீங்கள் உங்கள் மீதே கோப பட வேண்டி இருக்கும். எந்த ஆட்சியாளரும் 100 சதவிகிதம் உண்மையான ஆட்சி கொடுக்க முடியாது. ஒருவருக்கு நல்லது செய்தால் அது இன்னொருவருக்கு தீங்கானதாக தான் இருக்கும். நீங்கள் ஆட்சி அமைத்தாலும் இது தான் நடக்கும். ஆகவே எல்லாவற்றிற்கும் கோபபடாமல் நிதர்சனத்தை உணர்ந்து பேசுங்கள். எங்களை பொறுத்த வரை ஜெயாவின் கடந்த ஆட்சிக்காலத்தை விட தற்போது அவரின் ஆட்சி மெச்சத்தக்க வகையிலேயே இருக்கிறது. கருணாவின் ஆட்சியை விட நூறு சதவிகிதம் நன்றாக தான் இருக்கிறது. குறைகள் இருக்கலாம். ஆனால் நல்ல போக்கில் செல்வதாகவே படுகிறது. ANYWAY , இந்த ஜனநாயக நாட்டில் யாரும் அரசியல்வாதி ஆகலாம்,, முதல்வராகலாம். நீங்கள் ஆசைபடுவதிலும் நியாயமிருக்கிறது. வாழ்த்துக்கள். வறுமையை ஒழிக்கிறோம் என்று கூறி சும்மா மக்களுக்கு பணம் பொருள் என்று கொடுத்து உதவி கொண்டிருந்தால் அது மக்களை சோம்பேறிகளாக தான் ஆக்கும்.
Rate this:
Share this comment
vramanujam - trichy,இந்தியா
03-ஆக-201216:46:07 IST Report Abuse
vramanujamஆசைபடுவது நியாயம் தான் ..ஆனாலும் மக்கள் ஓட்டு போடவேண்டுமே .டெபொசிட் வாங்கினால் மட்டும் போதாது ..அம்மாவின் ஆட்சி சிறப்பாக நடக்கிறது. அவருக்கு குடும்பம் கிடையாது அவர் உண்மையாகவே திருந்தி விட்டார். மனிக்கபடுவார்..அவரை வெல்வது முடியாத காரியம்....
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
03-ஆக-201214:41:36 IST Report Abuse
T.C.MAHENDRAN மக்கள் கோபப்பட்டால் அவர்களின் ஸ்டைல் என்னவென்று உங்களுக்கு தெரியுமா மிஸ்டர் செங்கண்ணன் ?.
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
03-ஆக-201214:29:53 IST Report Abuse
T.C.MAHENDRAN டயலாக் எழுதி கொடுத்தது யாருப்பா ?. செங்கண்ணன் அவர்களே உங்களின் சுயபுத்தியையும் கொஞ்சம் உபயோகப்படுத்தவும் .
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
03-ஆக-201213:38:54 IST Report Abuse
Snake Babu மொதல்ல பொறுப்ப சட்டசபைல எதிர்கட்சியா செயல்படுங்க..........அப்புறம் சினிமாவ விட்டு வெளியே வாங்க.....திராவிட கட்சிகள் மேல வெருப்ப இருக்கோம்...... அத பயன்படுதிகொங்க.........
Rate this:
Share this comment
babu - tiruchi,இந்தியா
04-ஆக-201200:26:25 IST Report Abuse
babuதிராவிட கட்சிகளால் தமிழ் இருக்கிறது இல்லை என்றால் என்றோ தமிழ் இனம் தமிழகத்திலும் அழிந்து போய் இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
Gopinath raman - Mumbai,இந்தியா
03-ஆக-201213:09:09 IST Report Abuse
Gopinath raman waste your time
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை