அரசியல் கட்சி துவக்கப்போகிறார் சமூக சேவகர் அன்னா ஹசாரே?
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: அன்னா ஹசாரே குழுவினரின் ஊழலுக்கு எதிரான போராட்டம், அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. நாட்டில் ஒட்டு மொத்த புரட்சியை ஏற்படுத்துவதற்கு இது தான் சரியான நேரம் என்றும், மாற்று அரசியலை ஏற்படுத்துவதற்காக, அரசியல் கட்சியை துவக்கப் போவதாகவும், வரும் 2014ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகவும், இந்த குழு அறிவித்துள்ளது.

பலமான லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற வலியுறுத்தி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் உள்ள, 15 பேரை நீக்க வலியுறுத்தியும், அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வலியுறுத்தியும், கடந்த மாதம் 24ம் தேதி, ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா, கோபால் ராய் ஆகியோர், டில்லி, ஜந்தர் மந்தரில், காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவக்கினர்.

கடிதம்: இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 29ம் தேதி, ஹசாரேயும், காலவரையற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்றார். போராட்டம் துவங்கி, பல நாட்கள் ஆன நிலையில், ஹசாரே குழுவினருடன், இதுகுறித்து எந்த விதமான பேச்சுவார்த்தையையும் துவங்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, நேற்று முன்தினம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர், ராணுவ முன்னாள் தலைமை தளபதி வி.கே.சிங், முன்னாள் தேர்தல் கமிஷனர் லிங்டோ, உட்பட பலர் கையெழுத்திட்டு, ஹசாரே குழுவினருக்கு கடிதம் எழுதினர். அதில்,"போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, மத்திய அரசு தயாராக இல்லாத சூழ்நிலையில், நாட்டின் அரசியல் அமைப்பு முறையில் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான கடமை, அன்னா ஹசாரே குழுவுக்கு உண்டு. எனவே, உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்' என, கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, உண்ணாவிரதத்தை கைவிட, ஹசாரே குழுவினர் முடிவு செய்தனர்.

திரண்ட மக்கள்: உண்ணாவிரதத்தின் கடைசி நாளான நேற்று, ஜந்தர் மந்தர் மைதா னத்தில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். மாலை 5 மணிக்கு, ராணுவ முன்னாள் தளபதி வி.கே.சிங், உண்ணாவிரத பந்தலுக்கு வந்தார். அவர் பேசுகையில்,"ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரே குழுவுக்கு, என் வாழ்த்துக்கள். மக்களுக்கான அரசியல் அமைப்பு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும், ஹசாரே குழுவின் முயற்சிக்கு, என் ஆதரவு உண்டு'என்றார்.

இயக்கம்: இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால், பேசவந்தார். மிகவும் சோர்ந்த நிலையில் காணப்பட்ட கெஜ்ரிவால், நாற்காலியில் அமர்ந்தபடி பேசியதாவது: நாட்டில் ஒட்டு மொத்த புரட்சியை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. லோக்பால் மசோதாவை நிறைவேற்றாத அரசை, கவிழ்ப்பதற்கு இது தான் நேரம். நம் போராட்டம், முதல் கட்டத்திலிருந்து, அடுத்த கட்டத்துக்கு செல்லவுள்ளது. பார்லிமென்ட்டுக்கு உள்ளேயும், வெளியிலும் போராட வேண்டும். இதற்காக, ஒரு இயக்கத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த இயக்கம் சார்பில், வரும் 2014ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். இது அரசியல் கட்சி அல்ல. இயக்கம். இதில், மேலிடம், தலைவர்கள் என யாரும் இருக்க மாட்டார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள், தேர்தலில் நிறுத்தப்படுவர். இயக்கத்துக்கான பெயரையும் மக்களே தேர்வு செய்வர். மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் நிதி, இதற்கு பயன்படுத்தப்படும். லோக்பால் மசோதாவை நிறைவேற்றினாலோ, மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் சட்டத்தை இயற்றினாலோ, இந்த இயக்கத்துக்கு வேலை இல்லை. ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காக, இந்த இயக்கத்தை துவக்கவில்லை. அதிகார பரவலாக்கத்தை உறுதி செய்வதற்காகவே துவக்கியுள்ளோம். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

அன்னா ஹசாரே பேசுகையில்,"என் குழுவினரின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். தேர்தலுக்குள், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே என் நோக்கம். ராணுவ முன்னாள் தளபதி வி.கே.சிங் போன்றவர்கள், எங்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளது, எங்களுக்கு மிகப் பெரிய உந்து சக்தியை ஏற்படுத்தியுள்ளது' என்றார்.

முடிவு: மாலை 7 மணிக்கு, ராணுவ முன்னாள் தளபதி வி.கே.சிங், அன்னா ஹசாரேக்கு, இளநீர் கொடுத்து, உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இதன்பின், அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா, கோபால் ராய் ஆகியோருக்கும், இளநீர் கொடுத்து, உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (57)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Chennai,இந்தியா
04-ஆக-201219:36:46 IST Report Abuse
Kannan " அப்பழுக்கற்ற உத்தமர் கட்சி " என்று பெயர் வைப்பது நல்லது. அப்பொழுது தான இந்த கட்சியில் சேர்பவர்கள் அனைவரும் தங்களை தாங்களே உத்தமர் தானா? என்று கேள்வி கேட்டுக்கொண்டு சேர முடியும். சேர்ந்த பின்பும் உத்தமர்களாகவே இருக்க முடியும். பதவிக்கு வந்த பின்பும் கை சுத்தத்துடன் பனி ஆற்றிட முடியும். சொன்னதை செய் செய்ததை சொல் என்கின்றபடி பணியாற்றிட முடியும். யாராவது ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டினால் கூட தலை வணங்கி ஏற்று, தண்டனை பெற்று இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்திடல் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Kalimuthu Muthaiah - chennai,இந்தியா
04-ஆக-201218:19:00 IST Report Abuse
Kalimuthu Muthaiah காங்கிரஸ் ஓட்டை பிரிப்பார் பி ஜெ பி ஓட்டை பிரிப்பார் என்று கேலி பேசிகொண்ட இருங்கள் வருங்காலத்தில் வருங்கால சந்ததிகள் வாழ் வழி இல்லாம்மல் போகட்டும்.சாராயம் விற்பது அரசாங்கம் கல்வி நிலையங்கள் நடத்துவது தனியார் இது ஏன்? இன்ஜினியரிங் காலேஜ் ல் 35 % எடுத்tha அனைவரையும் சேர்த்தும் இன்னும் காலிடங்கள்.நாட்டின் வளர்ச்சி பற்றி அரசியல்வாதிகளுக்கு கவலை இல்லை.இப்பொழுது நமக்கு தேவை நல்ல ஆட்சியாளர்கள் அவர்கள் vallavarkalaka இல்லம்மல் இருக்கட்டும் paravaillai . ஆதரிப்பர் அன்ன ஹசாரே முயற்சிக்கு.
Rate this:
Share this comment
Cancel
kalan - chennai,இந்தியா
04-ஆக-201217:39:27 IST Report Abuse
kalan இப்போவே கபில் சிபல், திக்விஜய் சிங்க், வாசன், இளங்கோவன் மற்ற காங்கிரஸ் காரங்க உளற ஆரம்பித்து விட்டனர். அண்ணா ஹசாரே அவர்களுக்கு குறுகிய எண்ணமாம். எல்லா மாநிலங்களிலும் தோற்றது போல மத்தியிலும் உங்கள் காங்கிரஸ் தோற்பது உறுதி. இங்கு காங்கிரஸ் அல்லக்கைகளும் மற்றவர்களும் கூச்சல் போடுகிறார்கள் . ஏன் இந்த உதறல் ? முதலில் எல்லோரும் வோட்டு போட வேண்டும் என்று உறுதி கொள்வோம். பின்பு மக்களிடம் விழிப்புணர்ச்சி கொண்டு வரவேண்டும். இதற்கு இளைங்கர்களை தயார் செய்யவேண்டும். இந்தியாவில் அனைவரும் பணம் வாங்கி வோட்டு போடுவதில்லை. முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். வாழ்க பாரதம்.
Rate this:
Share this comment
Cancel
maha - bangalore,இந்தியா
04-ஆக-201215:01:04 IST Report Abuse
maha அண்ணாவுக்கு இருக்கும் பெரும்பான்மை ஆதரவு மகிழ்சி அளிக்கிறது .அவர்க்கு மிக பெரிய சவாலாக இருக்க போவது பணம் . இன்று ஒரு mp தொகிதிக்கு பெரிய கசிகளால் 25 கோடி வரை செலவு செய்ய படுகிறது . எல்லாம் கருப்பு பண முதலைகள் கொடுப்பது . காங்கிரசின் வருவாயில் பெரும் பங்கு , முகவரி அற்ற நபர்களிடம் இருந்துதான் வருகிறது , இதற்கு சரியான ஆய்வு இல்லை
Rate this:
Share this comment
Elango Natesan - kovai ,இந்தியா
04-ஆக-201216:03:28 IST Report Abuse
Elango Natesanதேர்தல் நிதிக்கு தனிப்பட்ட / சாதாரண மக்களிடமிருந்துதான் செலவிற்கான தொகையைப் பெறவேண்டும். நிறுவனங்களிடமிருந்தோ, பணக்காரர்களிடமிருந்தோ நிதி பெறக்கூடாது. அவ்வாறு பெற்றால் காங்கிரஸ், பிஜேபி, DMK, AIADMK, போன்ற கட்சிகளின் பாதையையே பின்பற்ற வேண்டியிருக்கும். கடைசியில் நோக்கம் வெற்றி பெறாது, இப்படித்தான் நடக்கும் காங்கிரஸ் எதிர்பார்க்கிறது, அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்பார்க்கின்றன. அன்னா ஹசாரே குழுவினரின் பயணம் மிகக்கடுமையாக இருக்கப்போகின்றது, நிறைய டிராமக்களை / தகிடு தத்தங்களை அரசிடம் மற்றும் அரசியல் வாதிகளிடமிருந்து ஒவ்வொரு கணமும் எதிர் கொள்ளவேண்டிவரும். இந்த இயக்கத்தின் நோக்கத்தினை, நாட்டின் நல்ல எதிகாலத்தினை கருத்தில் கொண்டு, தினமலர் போன்ற நல்ல பத்திரிகைகள் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும், வெற்றி பெற உதவிடவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Iniyan - chennai,இந்தியா
04-ஆக-201214:47:10 IST Report Abuse
Iniyan மொக்கை மற்றும் J JEX கருத்தும் முற்றிலும் உண்மை. இந்த அண்ணா ஹசாரே காங்கிரசின் கை கூலி. காங்கிரசிற்கு எதிரான வோட்டை பிரிக்க சோனியாவின் நாடகம்தான் இந்த அண்ணா ஹசாரே கும்பலின் அரசியல் கட்சி. மக்கள் விழித்து எழ வேண்டும். பத்திரிகைகளும் மீடியா களும் செய்யும் பொய் பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Rajan - singapore,சிங்கப்பூர்
04-ஆக-201213:42:43 IST Report Abuse
Rajan இவர் ஒன்னும் செயமுடியது , அது தான் நடக்கபோகுது , கடைசியல் , இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று தலை முழுக போகிறார்
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
04-ஆக-201213:08:24 IST Report Abuse
saravanan அவசரப்பட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது...... இதுவரை அவர் நடத்திய போராட்டங்கள் எல்லாமே நகர்ப்புறவாசிகளையும், படித்த சில இளைஞ்சர்களையும் ஈர்த்திருக்கிறதே தவிர, சாமான்ய மக்களிடமும், எதையும் எதிர்பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கும் கிராமத்து விவசாயிகளிடமும் இவரின் போராட்டங்கள் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை...... தில்லி, மும்பை, சென்னை என பெருநகரங்களில் வாழும் படித்த இளைஞ்சர்கள் அவருக்கு தரும் ஆதரவு மட்டுமே முழு இந்தியாவின் ஆதரவு ஆகிவிட முடியாது..... முதலில் அவர் இந்தியா முழுக்க பயணிக்க வேண்டும், ஏழை மற்றும் பாமர மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.... எவனோ பணம் கொடுக்கிறான், அதை வாங்கி கொண்டு ஓட்டு போடுவதில் என்ன தவறு என நினைத்துக் கொண்டிருக்கும் மக்களிடம் அந்த பணத்தின் ஊற்றுக்கண் ஊழல்தான் என்பதை புரிய வைக்க வேண்டும்.......ஊழல் என்ற ஒற்றை வார்த்தை இவ்வளவு பெரிய இந்திய நாட்டையும், அதன் பண்பாடு, சமூகம் மற்றும் அனைத்து அந்தஸ்துகளையும் எவ்வாறு அழித்துக் கொண்டிருக்கிறது என்பதை எடுத்து சொல்ல வேண்டும்...... சாமான்ய மக்களின் எதிர்காலமும், அவர்கள் சந்ததியினரின் வருங்காலமும் எவ்வாறு ஊழலால் இருண்டு கிடக்கிறது என்பதை புரிய வைக்க வேண்டும்........... படித்தவர்களின் ஆதரவு என்பது வெறும் ஏட்டளவில் நின்று போகக் கூடியது..... இன்று கருத்து பரிமாற்றமும், கேள்விக் கணைகளும் தொடுக்கும் எத்தனை பேர் தேர்தல் நாளில் ஓட்டு சாவடிக்கு சென்று ஓட்டளிக்க தயாராக இருக்கிறார்கள்...... எடுத்துக்காட்டாக, இங்கு கருத்து பதிவு செய்யும் அத்துணை பேரும் ஏதாவது ஒரு கட்சியை சார்ந்தவர்களாகவே உள்ளனர்.... இப்போதைக்கு அவர்கள் ஹசாறேவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், தேர்தல் என்று வரும்போது அவர்கள் சார்ந்துள்ள கட்சிக்கோ அல்லது கட்சியின் கூட்டணிக்கோ தான் ஓட்டு போடுவார்கள்...அந்த நேரத்தில் ஹசாரே அவர்களுக்கு மறந்து போவார்...... ஹசாறேவும், அவரது ஆதரவளர்களும் நகரங்களில் கூட்டம் போடுவதாலும், உண்ணாவிரதம் இருப்பதாலும் மட்டும் இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வரமுடியாது.......... இன்றுவரை குடித்துக் கொண்டிருக்கும் கூழும், கஞ்சியும் கூட நாளை பறிபோக வாய்ப்பிருக்கிறது என்பதை ஏழை ஒருவனுக்கு புரிய வைப்பதில்தான் வெற்றி இருக்கிறது.......வாழ்க நற்றமிழ், வாழ்க பாரத மணித்திருநாடு.
Rate this:
Share this comment
Cancel
pasupathi - muscat,ஓமன்
04-ஆக-201212:18:39 IST Report Abuse
pasupathi அது எல்லாம் சரி ஆனால் இங்குமட்டும் திமுக அல்லது அதிமுக வுடன் கூட்டணி வைத்துவிடுங்கள்.. மதியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எங்களின் தத்துவம் ஒருபொழுதும் பொய்க்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
04-ஆக-201212:02:31 IST Report Abuse
villupuram jeevithan மயிலே, மயிலே இறகு போடு என்றால் போடாது
Rate this:
Share this comment
Cancel
bala - Fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஆக-201212:01:16 IST Report Abuse
bala பத்தோடு பதினொன்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்